ஒளி 222 கிராம்: பகுதி 5

ஒளி 222 கிராம்: பகுதி 5

ஸ்ரீ ராம கிருஷ்ண மடம்.   எப்பொழுதுமே விவேகானந்தரின் பிறந்தநாளை அவனது பள்ளி வெகு விமரிசையாக கொண்டாடும். இனிப்புகள். பானங்கள். நிகழ்ச்சிகள். நாடகங்கள். இன்னும் எத்தனையோ. அந்த வருடம் அவனது பள்ளிக்கு ஒரு அழைப்பு வந்திருந்தது. ராம கிருஷ்ண மடத்திலிருந்து. அவ்வருட விவேகானந்தர் ஜெயந்தி அன்று அவனது பள்ளியில் இருந்து மாணவ மாணவியர் குழு ஒன்று வந்து நாடகம் ஒன்றை அரங்கேற்ற வேண்டும் என்பதே அழைப்பு. அழைப்பை தொடர்ந்து நாடகத்திற்கான வேலைகள் தொடங்கின. முதலில் கதை தயாராகியது. பின்னர் நாடகத்தில் நடிக்க ஆள் எடுக்கும் வேலை தொடங்கியது. எட்டாம் வகுப்பிலிருந்து ஐந்து பேர் தேவை. இரண்டு மாணவிகள் மூன்று மாணவர்கள். தேர்ந்தெடுக்கும் குழு அவனது வகுப்பிற்கு வந்தது.   இரண்டு மாணவர்கள். இரண்டு…

Read More Read More

ஒளி 222 கிராம்: பகுதி 4

ஒளி 222 கிராம்: பகுதி 4

  ’என்ன இது காடு மாதிரி இருக்குது’   உண்மையில் அந்தக் கார் காட்டிற்குள் செல்வதைப் போல் தான் இருந்தது. ஆனால் பாலாவும் ஹஸனும் சென்று கொண்டிருப்பதோ தாங்கள் வேலை செய்யும் இடத்திற்கு. முன்னால் பாலாஜியின் கார் செல்ல மெதுவாக அவனைப் பின் தொடர்ந்து கொண்டிருந்தான் ஹஸன்.  கண்ணுக்கெட்டிய தூரம் வரை எதுவும் பெரிய கட்டிடங்கள் தென்படவில்லை. முற்றும் புல்வெளிகள். மரங்கள். செடிகள். சில விலங்குகள். பறவைகள்.   காட்டிற்குள்ளே என்ன வேலை? ஹஸன் இங்கு வேலைக்கு வந்த கதை மிக வித்தியாசமானது. அவன் இது நாள் வரை எதற்காக ஒதுக்கப்பட்டு வந்தானோ அதுவே இங்கு அவனை கொண்டு வந்து சேர்த்திருந்தது.   ஆக்ராவை தெருத்தெருவாக சுற்றிய பிறகு ஒரு லாரியில் ஏறி…

Read More Read More

ஒளி 222 கிராம்: பகுதி 3

ஒளி 222 கிராம்: பகுதி 3

  What is desert? பாலைவனம் என்றால் என்ன?   Formal Definition in book: Desert is a dry place where rainfall is scarce. Ex. Thar Desert, India. அதிகாரப்பூர்வமான  புத்தக பதில்: பாலைவனம் என்பது மிகவும் குறைவான மழை பெய்யக்கூடிய வரண்ட நிலப்பரப்பைக் குறிக்கும். எ-டு தார் பாலைவனம், இந்தியா.   ’நீ மனசில என்ன நினைச்சுக்கிட்டிருக்க. என்ன எழுதிவச்சிருக்க? பாரு. இதுக்கு மார்க்கா? போ இங்கிருந்து.’   A desert is one area like us. There rain is low. Heat is high. Food is low. Dust is high. Camel is high. Cactus is high….

Read More Read More

ஒளி 222 கிராம்: பகுதி 2

ஒளி 222 கிராம்: பகுதி 2

  ’என் ரூமுக்கு வந்தாங்களே அவுங்க பேர் என்ன?’   ‘ரைஹானா. ஏன்? எனி ப்ராப்ளம்?’   ’ரைஹானாவா. இல்ல பாலா. அப்டிலாம் இல்ல. சும்மா தான் கேக்கிறேன்’   லண்டன் ஐ. உண்மை தான். இந்தக் கண்ணின் உதவியால் லண்டனையே பார்த்துவிடலாம். பாலாதான் இங்கு கூட்டிவந்தான், லண்டனைப் பார்க்க ரம்மியமான இடம் என்று.   லண்டன் நகரம். இங்கிருந்து கிளம்பிய கம்பெனிப் படை தான் உலகெங்கும் சூரியன் மறையா சாம்ராஜ்ஜியத்தை நிறுவியது. தான் பேசும் மொழியை உலகப் பொது மொழியாக்கியது. கைக்கு எட்டா உலகை சர்வதேச கிராமமாக்கியது.  இன்னும் செய்ய இயலாதவற்றை, செய்யக் கூடாதவற்றை எல்லாம் செய்தது. ஆடி அடிங்கியது. ஒளிரி ஓய்ந்தது.   தன் பொழிவை எல்லாம் செவ்விந்திய கண்டத்திற்கு…

Read More Read More

ஹிந்தி டீச்சர் வாரணசி

ஹிந்தி டீச்சர் வாரணசி

சரியாக ஒரு வருடத்திற்குப்  பின் இத்தளத்தில் பதிவேற்றப்படும் பதிவு இது. ஆங்கிலத்தில் தொடர்ந்து பதிவுகள் எழுதி வந்தாலும் தமிழை நான் தவிர்த்தேன். தமிழில் பொதுத் தளத்தில் எழுதுவதை மட்டுமே தவிர்த்தேனே தவிர முழுவதுமாய் அல்ல. திரைக்குப் பின் தமிழில் சில படைப்புகள் உருவாகிக் கொண்டிருந்தன. பொதுத் தளத்தில் தமிழ் புழங்கப்படாததற்கு பல்வேறு காரணங்கள் இருந்தன. தொடர்ந்த பயணங்களும், வாழ்க்கைத் தேடலும், மூன்று வருடத்திற்கு முன் துவங்கிய தமிழ் நாவல் படைப்பும் என் நேரத்தை பிடித்துக் கொண்டன. இருந்தும் வட்டம் தமிழ் கடந்து பரவியதால் ஆங்கிலப் பிரவேசம் எடுக்க வேண்டியிருந்தது. தற்போது திரும்பிவிட்டேன். தமிழிலும் இனிப் பதிவுகள் தொடரும். எங்கும் மறைந்து  விடவில்லை. நாவல் வேலை இரண்டு மாதத்திற்கு முன் முடிந்தது. நாவல் பற்றி…

Read More Read More

ஒளி 222 கிராம்: பகுதி 1

ஒளி 222 கிராம்: பகுதி 1

  ’தம்பி பாத்து போய்ட்டுவாப்பா’   பதில் ஏதுமின்றி சிறிய தலை அசைவுடன் விடைபெற்றான். முதல் கவுண்ட்டரில் பாஸ்போர்ட், டிக்கட்டைக் காட்டி போர்டிங் பாஸை வாங்கினான். லக்கேஜை அவர்களிடம் கொடுத்துவிட்டுக் கைப்பையுடன் இரண்டாம் கவுண்ட்டருக்குள் நுழைந்தான். போர்டிங் பாஸ் சரிபார்க்கப்பட்டது. சில நிமிட பாதுகாப்பு சோதனைக்குப் பின் காத்திருப்போர் அறைக்குள் அனுமதிக்கப்பட்டான்.   ஓமன் ஏர். இரவு பதினொன்று மணிக்கு ஃப்ளைட். போவோர் வருவோரை வேடிக்கை பார்த்தபடி அமர்ந்தான்.   வாழ்க்கை காத்திருப்புகளால் மெருகேற்றப்படுகிறது. காத்திருக்கத் துணியாதவன் வாழத் தகுதியற்றவன்.   இரண்டு மூன்று ஆண்டுகள் இருக்கும். கோயம்புத்தூர் ரயில் நிலையத்திற்கு தனியே வந்திருந்தான். இன்று அவன் செய்யும் பயணத்திற்கும் அன்று அவன் செய்த பயணத்திற்குமான வேறுபாடு மிக வலியது. வலி மிகுந்தது….

Read More Read More

தலைவலி (சிறுகதை)

தலைவலி (சிறுகதை)

தலைவலி பாபா பகுர்தீன் அன்றுகாலைஎழுந்ததில்இருந்தேதலைவலி. கடந்தசிலநாட்களாகமயக்கம்போல்தென்பட்டஏதோஓர்விசித்திரநோய்தற்போதுதலைவலியாய்தலையெடுத்திருப்பதைமட்டும்தெளிவாகஉணரமுடிந்தது. நான்எப்பொழுதும்அப்படித்தான். உடல்நிலைசரியில்லைஎன்றால்நேரேமருத்துவரிடம்போய்நிற்கும்பழக்கம்பிறந்ததில்இருந்துகிடையாது. காய்ச்சல்வந்தால்குளுரும்நீரில்குளித்துவிட்டுநேரேசென்றுநாலைந்துஐஸ்க்ரீம்களைவிழுங்கிவிட்டுவரும்மிகச்சிலரில்நானும்ஒருவன். இந்தத்தலைவலிஎன்னைஎன்னசெய்துவிடும்?. அலட்சியம்மேலோங்கவலியும்மேலோங்கிதொல்லைகொடுத்தது. என்னசெய்யலாம்இப்போது? கண்ணைமூடு. தூங்கிவிடுவோம். ’ம்ஹூம். யோசனைசெய். உனக்கானஅனைத்துபதிலும்உனக்குள்ளேயேஉறங்கிக்கிடக்கிறது.’ ஏதோஒருபெரியமனிதர்சொன்னசொல்லைமனம்வெளியிட்டுக்காட்டியது. ‘உள்ளுரபயணம்மேற்கொள். எல்லாத்துன்பத்திற்கும்மனம்தான்காரணம். ஆம்இந்தத்தலைவலிக்கும்’. ’ஐயாதயவுசெய்துஆளைவிட்டுவிடுநான்தலைவலிக்கானகாரணத்தைசிந்திக்கிறேன்’ எனகெஞ்சிக்கூத்தாடிதத்துவம்பேசிக்கொண்டிருந்தமனதைஒருசமன்பாட்டுக்குகொண்டுவந்துவிட்டுசிந்திக்கத்துவங்கினேன். இரண்டுநாட்களுக்குமுன்னால்நிகழ்ந்தசிலநிகழ்வுகள்நினைவுக்குவந்தன. ஒருவேளைஅவற்றால்தான்இருக்குமோ? எனசிந்திக்க, மனம்பதிவுகளைதுலக்கத்துவங்கியது. இரண்டுநாட்களுக்குமுன். ’வாங்கவாங்க. உங்களஎங்கலாம்தேடுறது. நாங்கஒருநிகழ்ச்சிநடத்தப்போறோம். தேடல்–ன்றபேரில. ஏற்கனவேசொல்லிருக்கேனே. அதுக்குநாங்கஎடுத்திருக்கவீடீயோக்ளிப்ஸுக்குகொஞ்சம்டயலாக், ஸ்க்ரிப்ட்எல்லாம்எழுதித்தறனும். அதான்கூப்பிட்டேன்.’ ‘அதுக்கென்ன. க்ளிப்ஸபோட்டுகாட்டுங்க. எழுதிடுவோம். நான்என்னமோபெரிசாபயந்துக்கிட்டேன்’ பயங்கரமானஎஃபக்டுகளுடன்விருதுகள்வல்லியநிறபிண்ணனியில்தோன்றும்படியானவீடியோக்ளிப்ஒன்றுஓடியது. ‘யாருக்குங்க. விருதுகுடுக்கப்போறிங்க? தேடல்ன்றதுஏதோதொழில்முனையும்இளைஞர்களுக்கானநிகழ்ச்சினுதானசொன்னிங்க?’ ‘ஆமாம். இந்தப்ரோகிராம்லஏற்கனவேபிஸினஸ்லஇறங்கிஜெயிச்சவங்களுக்குஅவார்ட்கொடுக்கப்போறோம். இப்புடிசெய்றதுயூத்ஸுக்குஒருஎன்கரேஜ்மெண்டாஇருக்கும்னுநெனைக்கிறோம்.’ ‘ரைட்ரைட். அப்பஇந்தவீடியோநீங்கவிருதுகொடுக்கறதுக்குமுன்னாடிபோடுவிங்க. புதியதலைமுறைதமிழன்விருதுகள்மாதிரி’ ‘கரெக்ட். நீங்கஇப்பஇதுக்குவொர்டிங்ஸ்கொடுக்கனும்’ ‘வொர்டிங்ஸ்எப்புடிஇருக்கனும்? கவிதைமாதியாஇல்லசும்மாகேட்சியாவா?’ ‘கவிதை’ ‘ஓ.கே’ மணிசரியாகபத்தைத்தொட்டிருந்தது. நான்யோசிக்கஅவர்எடிட்டிங்வேலையைதொடர்ந்துகொண்டிருந்தார். லேஸ், சாக்லேட்எனஅரைமணிநேரஅரவைக்குப்பின்ஒருகவிதை அகப்பட்டது. ‘பார்பிறழும்அந்நிமிடம் சார்பொடியும்அத்தருணம் தோன்றும்இஃது நின்உறங்கும்புதைதிறன்சுட்டி நாம்அறியாநம்மைஇனம்காட்டும். தேடல்’ ’எப்டிங்கஇருக்கு?’ ‘என்னங்கஇதுஒன்னுமேபுரியல. கொஞ்சம்எக்ஸ்ப்ளைன்ப்ளீஸ்’ ’அதாவதுஇந்தகவிதைதேடல்னாஎன்னஎப்புடிஇருக்கும்னுஉணர்த்துரவகையிலஇருக்கு.’ ‘சரி’ ’எல்லாருக்கும்வாழ்க்கையிலஒருநிமிஷம்வரும். அந்தநிமிஷம்நாமநமக்குனுகற்பனசெஞ்சுவச்சிருக்கஉலகத்ததலகீழாதிருப்பிடும். அதுக்குத்தான்பார்பிறழும்அந்நிமிடம். அதேமாதிஅந்தநிமிஷம்நாமசார்ந்திருக்கஎல்லாதையும்எல்லாரையும்பொய்னுகாட்டிஉண்மையஒடைக்கும். அதுக்குதான்சார்புஉடையும்அத்தருணம். உங்களுக்குள்ளதூங்கிக்கிட்டிருக்கபுதஞ்சுகிடக்கிறசக்தியஎழுப்பிவிட்டு, உங்களுக்கேநீங்கயார்னுஅடையாளம்காட்டும். இதத்தான்இங்கசொல்லவந்தேன்.’ ‘ம்….

Read More Read More

விஸ்வரூபம்: எழுச்சியும் தடுமாற்றமும்

விஸ்வரூபம்: எழுச்சியும் தடுமாற்றமும்

விஸ்வரூபம்: எழுச்சியும் தடுமாற்றமும் இந்தப்படத்தின் நோக்கம் எண்டெர்டெய்ன்மெண்ட் மட்டுமே, கருத்து சொல்வதல்ல என்பது கமல் தன் படம் பற்றி தெரிவித்துள்ள கருத்தாகும். இதனை நினைவில் கொள்ளுங்கள். விமர்சனத்தை துவங்குவோம். முதன்முதலில் படத்தை பார்க்கும் எவருக்கும் முதலில் ஒரு பேரதிர்ச்சி ஏற்படும். தமிழ் படமா இது என. அந்த அளவிற்கு தொழில்நுட்ப ரீதியில் தமிழ் சினிமாவில் இருந்து  மிகப் பெரிய பாய்ச்சலாய் விஸ்வரூபம் அமைந்துள்ளது. காமெடிக்கு தனி ட்ராக்ட், பாடலுக்கு தனி ட்ராக்ட், காதலுக்கு தனி ட்ராக்ட் என்றெல்லாம் இல்லாமல் பாடல்கள், நகைச்சுவைகள் என எல்லாம் காட்சிகளுடன் பிண்ணிப் பிணைந்திருக்கிறன. இது தமிழ் சினிமாவை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அதேபோல் இப்படத்தின் மிக முக்கிய பங்கு கமலுக்குரியது….

Read More Read More

யூ ஆர் க்ரேட் (சிறுகதை)

யூ ஆர் க்ரேட் (சிறுகதை)

யூ ஆர் க்ரேட் –     பாபா பகுர்தீன் ’டாக்டர் எப்ப வருவாங்க?’ ’இன்னும் ஒரு மணிநேரம் ஆகும்’. கேள்வி முடியும் முன்பே எரிச்சலுடன் அந்த நர்ஸிடம் இருந்து பதில் வந்தது. ’ஒருமணி நேரமா?’ என் வாய் பிளந்தது. இந்த பல்சர் 150cc வந்ததில் இருந்து இப்படித்தான். மாதத்திற்கு ஒருமுறையாவது விழுந்தெழுவது அண்ணனுக்கு வழக்கம் ஆகிவிட்டது. அப்படி அடிபடும் போதெல்லாம் வீட்டிற்குச் சொல்வதற்கு முன் என்னிடம் சொல்லிவிடுவது இயல்பு. அதே முறையில் இன்று மதுரையிலிருந்து தூக்குக்குடி செல்லும் பைபாஸில் அருப்புக்கோட்டை அருகே விழுந்துகிடப்பதாக தகவல் சொன்னான். கூட்டம் கிளப்புவது அவனுக்கு பிடிக்காது. அதனால் தனியொருவனாக கிளம்பி சில பேருந்துகள் மாறி ஒருவழியாக அவ்விடத்திற்குச் சென்று சேர்ந்தேன். இம்முறை சற்று கோரமான அடி. முகம் தேய்ந்து…

Read More Read More

பா பித்து

பா பித்து

பல வருடங்களாகவே வெண்பாக்களின் மீது தீராத ஈர்ப்பு உண்டு. கம்பனது இராமாயனத்தின் சொல்லாடலைக் கண்டு வியந்திருக்கிறேன். அதைவிட சிலேடை வெண்பாக்கள் இன்னும் ஓர் படி மேல். எப்படி தான் இப்படியெல்லாம் எழுதுகிறார்களோ என யோசித்திருக்கிறேன். வெண்பாக்களின் தொடர்ந்த வாசிப்பு பித்துப் பிடிக்க வைத்துவிட்டது. விளைவு, வெண்பா எழுதத் துணிந்தது தான். இன்று எழுதிய இரண்டு சிலேடை வெண்பாக்களை இங்கே பகிர்ந்துள்ளேன். வெண்பா எழுதத் துணியும் முதல் முயற்சி இது. பல இடங்களில் நிச்சயம் பிழைகள் இருக்கும். பிழை பொறுக்க வேண்டுகிறேன். சிலேடை வெண்பா என்றால் உங்களுக்கு என்னவென தெரிந்திருக்கும் என நம்புகிறேன், இருந்தாலும் இன்னோரு முறை. ஒரே பா இரண்டு விதத்தில் பொருள்படும் விதம் இயற்றப்படுவது சிலேடை எனப்படும். எடுத்துக்காட்டாக, “வெள்ளை மழை”…

Read More Read More