Browsed by
Category: தமிழ்

ஒளி 222 கிராம்: பகுதி 15 இறுதி

ஒளி 222 கிராம்: பகுதி 15 இறுதி

 

’ஹவ் கம் யூ ட்ரீட் ட்ரீம்ஸ் அண்ட் டெஸ்ட்டினி?’ கனவுகளையும் விதியையும் நீங்க எப்படி மதிக்கிறீங்க

 

‘ஒன்ஸ் ஆர் பீப்பிள் ஹாட் ட்ரீம் ஆஃப் ஹோம்லேண்ட். நவ் வீ ஹோல்ட் இட். திஸ் இஸ் ஹவ் வீ ட்ரீட் டெஸ்ட்டினீ. டெஸ்ட்டினீ இஸ் ஜஸ்ட் அன் அவுட்கம் ஆஃப் ஆர் ட்ரீம்ஸ்’ எங்களுக்குச் சொந்தமா தாய்நாடு வேணும்றது ஒரு காலத்தில எங்களுக்குக் கனவா இருந்தது. இப்ப நிஜம். இப்படித்தான் நாங்க கனவையும் விதியையும் மதிக்கிறோம். விதின்றது கனவோட வெளிப்பாடு.’

 

’ஆனா உங்க கனவு பலபேரோட கனவ குழி தோண்டி பொதச்சிருச்சே’

 

‘பொதைக்கவல்லாம் இல்ல. இட்ஸ் மேட்டர் ஆஃப் டைம். காலம் பதில் சொல்லும்’

 

‘இது மழுப்பல். நீங்க மத்தவங்களோட கனவுகளப் பொதைக்கிறது சத்தியம். ஏன் செய்யிறீங்க’

 

‘லெட் அஸ் சேஞ்ச் த டாப்பிக்’

 

‘தஹ்ர். டோண்ட் டேக் மீ ராங். நீங்க தப்பான பாதையில நடக்கிறீங்க. அது தப்பான பாதையினு நல்லாத் தெரிஞ்சே.’

 

‘மே பீ’

 

‘உண்மைய ஒத்திக்கலைனாலும் பரவாயில்ல. ஒரு பொய்ய உண்மையா சொல்றீங்க’

 

‘தென்’

 

‘உங்களுக்கு கோபம் வருது. கவனிச்சீங்களா? நீங்க எல்லாரும் இப்டிதான் இருக்கீங்க. உங்களுக்கு பாலஸ்தீன் பத்தி பேசினா கோபம் வருது. உங்களுக்கே தப்புனு தெரிஞ்சிருந்தும் அத சரினு சொல்லி முரண்டு புடிக்கிறீங்க’

 

‘தென் ப்ரூவ் இட்’

 

’திஸ் இட்செல்ஃப் இஸ் அ க்ரேட் ப்ரூஃப். நீங்க இந்தியாவுக்கு வரதே மிகப்பெரிய ப்ரூஃப். தப்பான வேல செய்றவனுக்குத் தான் பாதிப்பு இருக்கும்’

 

‘எக்ஸ்ப்ளைன் ப்ளீஸ்’

 

‘ஒரு எடுத்துக்காட்டு. இங்க இண்டியால ஏ டி எம்-ல ஒரு அம்மாவ ஒருத்தன் வெட்டிக் கொன்னான். சரியா இத ஏடிஎம்ல இருந்த கேமரா படம் பிடிச்சது. இதில இன்வால்வ் ஆகிறது மூனு பேர். கொல்லப்பட்டவங்க. கொன்னவன். அதப் பாக்கிறவன். ஒரு கேள்வி. இதில யார் ரொம்ப பாதிப்புக்கு உள்ளானவங்க?’

 

‘வாட்ஸ் ராங் இனிட். த ஒன் காட் கில்ட். கொல்லப்பட்டவன் தான் அதிக பாதிப்புக்கு உள்ளானவன்’

 

‘நான் இல்லன்றேன்’

 

‘தென்?’

 

‘கொன்னவன் தான் அதிகமா பாதிக்கப்படுவான். ரெண்டாவது பாத்தவன். மூனாவது தான் கொல்லப்பட்டவன்.’

 

‘ரியலி வியர்ட்’

 

‘உண்மை. கொல்லப்பட்டவன் இறந்து போயிடறான். ஒரே ஒரு தடவ தான் வலி. கொன்னவனுக்கு அப்படி இல்ல. அவனோட அந்தச் செயல் அவன நிம்மதியா விடாது. திரும்பத் திரும்ப உணர்ச்சிப்பூர்வமா அந்த செயல் வந்து தொந்தரவு கொடுக்கும். மனரீதியா பயங்கரமான எஃபெக்ட் இருக்கும். டூ யூ அக்ரி’

 

‘அப்ஸ்லூட்லி. இதில இருந்து என்ன சொல்ல வறீங்க?’

 

‘நிறைய. நீங்க, இஸ்ரேலியர்கள் என்ன நிலைமைல இருக்கீங்கன்னு தெரியுமா?’

 

‘…..’

 

‘அந்தக் கொன்னவனோட நிலைமைல தான். நீங்க அந்த வேலைய தான் செய்யறீங்க. உங்களவிட பாதிக்கப்பட்ட பாலஸ்தீயர்கள்கிட்ட மனத் தொந்தரவு நிச்சயம் கம்மி தான்’

 

‘வேர்ல்ட் வார் காலத்தில நாங்க பாதிக்கப்பட்டது உங்களுக்குத் தெரியும்?’

 

‘தெரியாம இல்ல. உங்களத் தொறத்தின ஐரோப்பாவ விட்டுட்டு வரவேத்த பாலஸ்தீனியர்கள்கிட்ட நீங்க வாங்கினத எல்லாம் திரும்பி குடுக்கிறது எந்த வகையில சரி?’

 

‘ஹஸன் அது எங்க இடம். எங்க முன்னோர்கள் வாழ்ந்த இடம். எங்களுக்கு எங்க இறைவன் கொடுத்த இடம். அத அவங்க பிடிங்கிக்கிட்டாங்க நாங்க திரும்பி பிடிங்கிக்கிட்டோம்’

 

‘ஆமா. நாலாவது நூற்றாண்டு ரோமானியர்களுக்குப் பயந்து ஓடின உங்கள அவங்க தான் தொறத்தி விட்டாங்க பாருங்க. நீங்களும் அந்த இடத்துக்கு வந்தேரிகள் தான். உலகத்தில எந்த இடமும் யாருக்கும் பூர்வீகம் கிடையாது. எல்லாரும் எங்கிருந்தோ வந்தவங்க தான்.’

 

‘சரி இவ்ளோ சொல்றீங்கல்ல. இறைவன் அந்த இடத்த எங்களுக்குக் கொடுக்கலைனா எப்படி எங்களால அந்த இடத்த ஜெயிக்க முடிஞ்சது. இப்ப எப்பிடி நிம்மதியா வாழ முடியுது? இறைவன் எங்க பக்கம்னு இதில இருந்து தெரியலையா?’

 

‘நிலம் கிடச்சதுன்னு சொல்லுங்க. நிம்மதி கிடச்சதுன்னு சொல்லாதிங்க. நீங்க யூரோப்ல இருந்த நிம்மதியில கூட இங்க இல்ல. கட்டாய ராணுவ சேவை செஞ்சு நாட்டத் தக்கவைக்க வேண்டி இருக்கு. ஐரோப்பால ஒடுக்கப்பட்ட உங்களுக்கு இறைவன் கை கொடுத்தான். வாய்ப்புக் கொடுத்தான். ஆனா அத என்ன பண்ணிரிக்கங்கன்றது உங்களுக்கே தெரியும். தப்பு செஞ்சவன் சைக்காலஜிக்கலா பாதிக்கப்படறான். அதத் தொலைக்க நிம்மதியத் தேடி அலையறான். நீங்க ஆன்மீகம்னு சொன்னாலும் மனசுக்குள்ள போதையத் தேடித் தான் வறீங்க’

 

‘இப்ப என்ன பண்ண சொல்றீங்க. எங்கள காலி பண்ண சொல்றீங்களா?’

 

‘நீங்க செஞ்ச தப்பவே நான் எப்டி திரும்ப செய்யச் சொல்வேன்.’

 

‘தென்?’

 

’சேர்ந்து வாழச் சொல்றேன்’

 

‘நாங்களும் அதத்தான் விரும்புறோம்’

 

‘விரும்பினா மட்டும் பத்தாது. பதிவு செய்யனும். உங்களோட கருத்தப் பதிவு செய்யனும். இத இஸ்ரேல் அராங்கம் மட்டுமில்ல சுத்தி இருக்க மத்த அரபு நாட்டு அரசும் விரும்பாது. இது தான் என்னைக்கும் ட்ரெண்ட். மக்கள் என்னிக்கும் ஒன்னா இருக்கத் தான் விரும்புறாங்க. அவங்க கோபம் ஒன்னு ரெண்டு நாளுக்குத்தான். ஆனா அத வச்சு குளிர் காயறது அரசாங்கங்கள் தான்’

 

‘எப்படி?’

 

‘தெரியல. எனக்கு இன்னும் தெரியல. ஆனா ஒரு நாள் சொல்வேன். இன்ஷா அல்லாஹ்’

 

‘ஈன்ஸாஆலா’

 

 

 

‘அப்டித்தான்யா. மொதல்ல இந்த முக்காலில இருந்து ஏறுங்க. அப்பறம் நேரா ஏறிப் பழகலாம்.’

 

‘இடக்கால இடது கால்மாட்டில சொருகி வலக்கால வலக்கா தூக்கிப் போட்டு ஒக்காருங்க. பாத்து சாணத்தில ஒக்காருங்க குதிரைக்கு வலிக்காம.’

 

‘ம் அப்டித்தான். முன்னாடி குதிச்சுக் குடுங்க. குதிரையோட முன்னங்கால்கள உங்க காலால அழுத்திக் குடுங்க புரிஞ்சுக்கும்’

 

‘கடிவாளத்த மெல்லமா வலிக்காம இழுத்து பின்னாடி பைய குதிச்சு குடுத்தீங்கனா பிள்ள நிண்டிடும். வலக்க திரும்ப இடக்காலால பைய அழுத்தி வலக்கையால தடவிக் குடுங்க புரிஞ்சிக்குவான்.’

 

‘ஒன்ன மனசுல வச்சுக்கோங்க. எப்பவும் உங்க எடைய கால்மாட்டில தான் முழுசா குடுக்கனும், எக்காரணங் கொண்டும் கடிவாளத்த குடுக்கக் கூடாது.’

 

’நான் முன்னங்கால்னு சொல்றது இங்க குதிரையோட முன்னங்கால் கம்முக்கூட. கிச்செல்லாம் வராதுயா தைரியமா அழுத்துங்க பையன் துடுக்கா ராஜ்பாட் நடை போடுவான்’

 

‘குதிச்சு நடக்கும் போது ரெண்டு ஆட்டம் குடுப்பான். மேல தூக்கித் தூக்கிப் போட்டு தான் போவான். வேகம் கூடக் கூட மேல கீழ ஆட்டம் அதிகமா இருக்கும். எப்பவுமே வேமா போவும் போது சாணத்தில உக்காரக் கூடாது. ரெண்டு கால்மாட்டிலயும் எடையக் குடுத்து நிக்கனும். நிக்கனும்னா நட்டமா இல்ல. அப்டி நின்னா தூக்கி எறிஞ்சிடும். ஒரு மாதிரி குனிஞ்ச மாதிரி ஒக்காராம நிக்கனும். சரியாப்பு?’

 

’குதிரைய சாணம், கடிவாளம் இல்லாமயும் சவாரி செய்யலாம். ஆனா அதுக்கு நெறைய திறம வேணும். கவனம் வேணும். எங்க பாட்டன் முப்பாட்டன்லாம் அப்டிதான்’

 

‘மார்வாடி, கத்தியவாரின்னு இந்தியக் குதிர நிறைய இருக்கு. வளக்கிறதுக்கு இதுதான் சவுரியமாப்படும். வெளிநாட்டுக்குதிர அரபிக்குதிரனு போனா வெல அதிகம். அரபிக் குதிரையோட கால் யானைக்காலாட்டமிருக்கும். கொழம்படிச்சத்தம் விண்ணப் பெளக்கும். அது ராசா காலத்தில போர்ல கொண்டு போனது. இப்பலாம் தேவை இல்ல. வெள்ளக்காரங்க காலத்தில இங்க நிறைய வகை குதிர கொண்டு வரப்பட்டதாம். கொடைக்கானல்ல தெரு நாய் கூட வெளிநாட்டு நாயாட்டம் இருக்கும் பார்த்திருப்பீக. எல்லாம் அவக விட்டுப்போனதோட மிச்சம் தான். குதிரையும் அப்டித்தான். நிறைய வகையில காட்ல திரியும் பாக்கலாம்’

 

 

 

காட்டிற்குள் தனியே செல்வது அதிகாலைப் பழக்கமாகிவிட்டது. ஓடும் ஓடைகளின் சலசலப்பு ஒரு வகையான புல்லரிப்பைத் தருகிறது. தனிமை தான். ஆனால் தனிமை அல்ல. மனிதர்களிடமிருந்து தனிமைப்படுதல் எனக் கொள்ளலாம். இது கொஞ்சம் அழுத்தமான தனிமை. அமையல்லாத அமைதி. ஒன்றும் கேட்காத சூன்யம் அல்ல இது. சுற்றிலும் ஏதோ கேட்டுக்கொண்டுதான் இருக்கிறது. இருக்கும் நிலையில் இல்லாத நிலை. சற்று குழப்புகிற நிலை. கண்களை மூடிச் சிறிது நேரம் கவனித்தால் அதில் கரைந்து விடுவோம். இருப்பு நிலை அற்றுப் போகும். அதன் பின் மனம் உள்நோக்கிப் பயணிக்கத் துவங்கும். அது மிகக் குழப்பமான பயணம். தலை சுற்றும் பயணம். எந்த நோக்கமும் இல்லாமல் கட்டுக்கடங்காமல் தன் வழியே செல்லும் ஒரு வகைப் பயணம். பலர் இதனைத் தூக்கத்திற்கு முன் மனம் அடையும் குழப்ப நிலை எனக் கொண்டு அதனைப் பொருட்படுத்துவதில்லை.

 

உண்மை என்ன தெரியுமா? இது தான் ஆழ்மனம். இதற்கு அடிபணிந்து பழக்கம் இராது. பலரும் அதைக் கண்டுகொள்ளாமல் விடுவாதால் தான்தோன்றியாய் திரிந்து பழக்கப்பட்டது. அதனை அடையும் அந்த நிலை தான் உண்மையில் சுய நிலை. நம் சுய நிலை. நம்மை, நம் மனதை நாம் பார்க்க விரும்பாத ஒரு உண்மை நிலை அது. எழுத்துக்களால் உணரச் சற்றுக் கடினம். எழுத்துக் கூட்டிப் படித்துக் கொண்டிருப்பவர்களால் இங்கே இருக்கும் அந்த உணர்வை உணர முடியாது. எழுத்துக்களினூடே மிதந்து செல்லும் மனங்களுக்கு எளிதாய் புரியும், அவை உணர்வதால்.

 

மூச்சைக் கவனித்துக் கொண்டே இந்நிலைக்குச் சென்று விடலாம். சென்று சற்று நேரம் ஆழ்மனதின் இரைச்சலுக்கு உட்பட தெளிவு கிடைக்கும். தெளிவு என்று இங்கே சொல்வது, பொது உலகில், பொது மொழியில் சொல்லும் தெளிவு அல்ல. அது ஒரு வகையான தெளிவு. தெளிவற்ற தெளிவு. உண்மையில் இந்த மனதின் சமாச்சாரத்திற்கு நாம் பேசும் மொழியில் வார்த்தைகள் இல்லை. அமைதியற்ற அமைதி, தனிமையற்ற தனிமை போல் இது தெளிவற்ற தெளிவு. மனதின் இரைச்சலுக்குப் பழகிப்போக அதன் மீதான புரிதல் வளரும். இந்த மனதை பழக்கத் தெரிந்தவுடன் எதை வேண்டுமானாலும் உள்ளே செலுத்தலாம். மறுப்பின்றி உடனே எடுத்துக் கொள்ளும். எடுத்துக் கொண்டதை நோக்கி நம்மை இழுத்துச் செல்லும். எடுத்துக் கொண்டதை நிறைவேற்ற சூழலை வளைத்துக் கொடுக்கும். எடுத்துக் கொண்டதை நித்தமும் நினைவில் கொண்டிருக்கும். எடுத்துக் கொண்டதை அடைய விதி விரைவு கொண்டிருக்கும்.

 

தனிமையற்ற தனிமை, அமைதியற்ற அமைதி, இரைச்சலற்ற இரைச்சல், குழப்பமற்ற குழப்பம், தெளிவற்ற தெளிவு. தெளிவாகச் சொல்வதா? ஒரு நிமிடம். தெளிவு என்பது என்ன? மனிதனின் இயல்பு தெளிவு தானா?

 

உண்மையில் எதையும் நேராகத், தெளிவாகச் சொல்வது இயற்கையின் இயல்பில் இல்லாதது. வந்தார் போனார் என எதையும் இயற்கை தெளிவாய் சொல்வதில்லை. இறைவன் இயற்கைக்கு உண்மையில் கொடுத்த மொழி தெளிவு கிடையாது. அது தெளிவற்ற தெளிவு. நம் மூளை தெளிவற்ற தெளிவில் தான் சிந்திக்கிறது. நாம் அதன் போக்கில் போகாமல் நாம் தெளிவெனக் கருதுவதை அதனுள் திணிக்கப் பார்க்கிறோம். நமக்கு அதன் மொழி புரியவில்லை என்பதற்காக அதனைக் குழப்பம் என்கிறோம்.

 

தெளிவென நாம் கருதுவது தெளிவல்ல. சதுரமும், செவ்வகமும், வட்டமும் நமக்குத் தெளிவான உருவங்கள். இயற்கையின் இயல்பில் இவ்வுருவங்கள் தெளிவானதல்ல. அவை அதற்கு புதிது. தெளிவற்ற உரு தான் இயற்கையின் இயல்பு. மனிதனாகட்டும் மரமாகட்டும் விண்ணாகட்டும் ஏதுவும் சதுரம் செவ்வகமென மனிதன் தெளிவெனக் கருதும் உருவில் இல்லை. அவை தெளிவற்ற தெளிவில் தான் இருக்கிறது. உலகம் நமக்குக் கதை சொல்லிக் கொண்டு தான் இருக்கிறது, தெளிவற்ற தெளிவில். நாம் தான் அதனைப் புரிந்து கொள்ள மறுக்கிறோம்.

 

ஒரு குழந்தையிடம் பென்சிலைக் கொடுங்கள். என்ன செய்யும்? கிறுக்கும். எதையாவது கிறுக்கும். அதன் மனமும் அப்படித்தான். தெளிவற்ற தெளிவு நிலை. இயற்கையை புரிந்து கொள்ள நாம் நம் முறையில் தெளிவென்ற ஒன்றால் அக்குழந்தைக்கு கற்பிக்கிறோம். தெளிவு என்ற பெயரில் இயல்பை விடுக்க நாம் கற்றுக் கொடுக்கிறோம். பின்னர் அதை இயல்பெனக் கொண்ட மனிதர்கள் உருவாகி வாழ்ந்து மரிக்கிறார்கள். உண்மையில் இயற்கையின் அந்த இயல்பை அனைவரும் உணர்ந்து கொள்வதில்லை. உணர்பவன் புரட்சியாளனாய், சிந்தனையாளனாய், தலைவனாய், குருவாய் உருப்பெறுகிறான். தெளிவை இயல்பெனக் கொண்டவன் பின் தொடர்கிறான்.

 

தூக்கத்திற்கும் விழிப்பிற்கும் இடையேயான நிலை. விழிப்பற்ற விழிப்பு நிலை. மனம் சில நாட்களாவே பயம் தொற்றிக் கொண்டதைப் போல் செயல்படுகிறது. என்ன பயமென்று தொடர்கையில் பயம் மிகைக்கிறது. பயத்தை பின் தொடர பயமாக இருக்கிறது. பயத்தைப் போக்கி விடலாம் என அமர்ந்தால் இயலவில்லை. பயம் மீண்டும் பின் தொடர்கிறது. ஏதோ ஒரு வெடிப்பு நிகழப் போவதை மனம் உணர்த்துகிறது. புரிந்து கொள்ளத்தான் பயமாக உள்ளது. அதற்காகவெல்லாம் விட முடியாது. போராடித்தான் ஆக வேண்டும்.

 

தெளிவற்ற தெளிவில் எங்கே மனம் சென்றாலும் அந்தக் கண்களில் சென்று முடிகிறது. படாரெனத் திறக்கும் கண்கள் அவை. ஒளிபடைத்த கண்கள். ஒளியை உள்ளிழுத்து உமிழும் கண்கள். கணவுகளில் மிரட்சியைக் கொடுக்கும் கண்களாகத் துவங்கி பரிணமித்து வெண் தாடிகளினூடே புதைந்து தற்போது தெளிவற்ற தெளிவிலும் மையம் கொள்ளத் துவங்கிவிட்டது.

 

உள்ளே கண்கள் விரிகிறது. கூடுதலாக ஒரு மூச்சிரைப்பை உணர முடிகிறது. தற்போது மிரட்சி பெரிதாய் இல்லை. மனம் பயத்திற்குப் பக்குவப்படத் துவங்கியுள்ளது, ஆனால் பயத்தில் ஏதும் குறைவில்லை. சலனமற்ற சலனம். கண்கள் திறக்க வெண் தாடி முகத்தில் படுகிறது. மனதைக் கவனித்தால் பயம் தெரிகிறது. பதற்றம் இல்லை. நெடுங்கோடுகளுடைய கண்கள் தெரிகிறது. அது மனிதனின் கண்கள் இல்லை. அது தாடியும் இல்லை.

 

குதிரை. வெள்ளைக் குதிரை. ஹஸனது கண்களில் எதையோ கண்வைத்து தேடிக் கொண்டிருந்தது. பிடரி மயிர் அவன் முகத்தில் பட்டு எழுப்பியிருக்க வேண்டும். எழுந்து நின்றான். சலனம் இல்லை. அதன் கண்கள் அவனை ஊடுருவின. அவன் கண்கள் அதன் கண்களை ஊடுருவின. மொழியற்ற பரிமாற்றத்திற்குப் பின் அதன் மீதேறினான். திமிறவில்லை. கால்கள் ஏதோ அதன் காலில் தடவி கட்டளையிட்டன. கைகள் பிடரியை வருடி வழி சொல்லின. குதிரை நகர்ந்தது. நடந்தது. கடந்தது. பரிந்தது. எதுவும் கேட்கவில்லை. ஒரு நிலை. ஒரு தாவல். ஒரு எறி. அவன் வானில். பறந்து கொண்டிருந்தான்.

குதிரை அவனைத் தூக்கி எறிந்திருந்தது. விண்ணில் பறந்து கொண்டிருந்தான். எந்த ரேகையும் அவன் முகத்தில் இல்லை. அது மிதமாய் இருந்தது. கட்டிலில் படித்திருபதைப் போல். கைகால் அசைவின்றி விண்ணிலிருந்து கீழ் வீழ்ந்த பின்னும் அது சலனமின்றியே இருந்தது. கண்கள் முழுவதுமாய் திறந்திருந்தன.

 

 

 

’அதெல்லாம் எனக்கு ஒன்னும் தெரியாது. நான் இந்த நிலைமையில என்னிக்கும் இருந்தது கெடையாது. இது மறக்க முடியாத நிலைம’

 

என்னால் எல்லாவற்றையும் தெளிவாக நினைவு கொள்ள முடிகிறது. ஆனால், அழுது துடித்துக் கத்திக் கதற வேண்டிய நிலைமையில் நான் சிரித்துக் கொண்டிருக்கிறேன். நகரக் கூட முடியவில்லை. கை கால்கள் இருக்கின்றனவா என்றே தெரியவில்லை. உணர முயற்சித்தும் பயனில்லை. சிரித்தாலும் தெரியவில்லை. கண்கள் அசைகிறது. மனம் வேலை செய்கிறது. வலிகள் தெரியவில்லை. மரத்துள்ளது. கண்களைத் திறந்தேன். எதிரே வெண் பிடரியுடன் ஒளிமிக்க கண்கள் தெரிந்தது. என்னை அழைத்தது. மறுக்க முடியா அழைப்பு. சென்றேன். மேலே என்றது. ஏறினேன். சென்றது. வானை முத்தமிட மேல் நோக்கித் தூக்கி எறிந்தது. எந்தப் பதட்டமும் இல்லை. விண்ணைப் பிடிக்க இயாலா நான் கீழ் விழுந்தேன். தற்போது தரையில் கிடக்கிறேன். அசைவின்றிக் கிடக்கிறேன். ஆனால் சிரிக்கிறேன். இன்புறுகிறேன். ஒளி தெரிகிறது. நான் தேடிய ஒளி தெரிகிறது. என்னுள்ளிருந்து ஒளி தெரிகிறது. கண்கள் திறந்துவிட்டது. திறந்தே விட்டது.

 

இனி நடிக்க அவசியமில்லை. பள்ளிப் பருவத்தில் எடுத்த ஹஸன் வேடம் இனி எனக்குத் தேவை இல்லை. நான் நானாக இருந்தேன். என்னை  மாற்றினர். நான் இன்று மீண்டும் நானாகிவிட்டேன். ஒளியில் இருந்த நான் ஒளியை விட்டு வெளியேறி ஒளியில் நுழைகிறேன். தீவிரவாதியாக வருவேன் என என் மேம் அடிக்கடி கூறுவார். நான் முஸ்லிமாகப் பிறந்ததைக் குறை என்பார். எனக்கே தெரியவில்லை நான் இப்படி மனதை ஒளியை தீவிரமாகத் தேடி அலையும் தீவிரவாதி என்று. உண்மை தான் சொல்லியிருக்கிறார். இஸ்லாம் என்னுள் எப்படி வந்ததென்று தெரியவில்லை. மிக இயல்பாகப் படுகிறது. இன்று முஸ்லிமாக இருப்பதில் பெருமை கொள்கிறேன். அமைதியை அழுத்தமாக இஸ்லாம் மொழிகிறது.

 

மரணம் என்னை பயம் கொள்ளச் செய்யவில்லை. வரவேற்கும் நிலையின் உச்சத்தில் நான் நிற்கிறேன். என் கடந்த காலங்களின் புள்ளிகளை இங்கு இணைத்து கோடாக்க முடிகிறது. அது தெளிவான கோடல்ல. ஆனால் தெளிவற்ற அத்தெளிவு என்னை ஊக்கப்படுத்துகிறது. தொடரும் உத்வேகம் அளிக்கிறது.

 

அன்னையும், தந்தையும், ஸ்மிர்தியும், ஜோஆனும், என் மாயமும், தஹ்ரும், மேக்ஸும், ரஞ்சித்தும், க்ரீனியும், தஞ்சாவூரும், டெல்லியும், லண்டனும், இஸ்ரேலும், ஃபாலஸ்தீனும், இஸ்லாமும், வேதாந்தமும், முஹம்மதும், புத்தரும், கம்யூனிசமும், தியானமும், நாத்திகமும், தீவிரவாதாமும், அமைதியும், தெளிவும், குழப்பமும், கிழக்கும், வடக்கும், தெற்கும், மேற்கும், இருளும், ஒளியும் இன்னும் விடுபட்டவையும், நினைவிலிருந்து மறைந்தவையும் ஒன்று சேருமா?

 

தொங்கும் கதாப்பாத்திரங்களாய் அங்கொன்றும் இங்கொன்றுமாய் எதற்காகவோ எப்போதோ வாழ்க்கையில் வந்த நிகழ்வுகளும் நபர்களும் எனக்கு கதை சொல்கிறார்கள். இது எதிர்காலத்தின் கதை. என் குறிக்கோள் ஒளிர்விடுகிறது. செய்ய வேண்டியவை தெளிவற்ற தெளிவில் தெரிகிறது. என்னால் வாசிக்க முடிகிறது, உணர்ச்சியால். இவ்வளவு காலம் ஏமாந்திருக்கிறேன். தெளிவான ஒளி எங்கும் இல்லை. இதோ கிடைத்துவிட்டது. ஒளியற்ற ஒளி. இத்தனை நாளாய் நான் தேடிக் கொண்டிருப்பது.

 

என்னால் இதற்கு மேல் கதை சொல்ல முடியவில்லை. ஆட்கள் தெரிகிறார்கள். இவர்களைக் கண்டவுடன் திடீரென மனம் தூக்கம் கொள்கிறது. இவ்வளவு நேரம் இதற்காய் காத்திருப்பதைப் போல் பாவனை செய்கிறது. நான் எழுந்துவிடுவேன். என் கையில் எண்ணங்களும், கண்களில் கனவுகளும் ஒளியுடன் ஒன்றிணைந்து ஒன்றை எனக்குக் காட்டுகிறது. நான் தயாராகிவிட்டேன்.

 

நாம் தேடித் திரியும் ஒளி உண்மையில் உள்ளே இருக்கிறது. தேடித் திரிந்தால் மட்டுமே கிடைக்கும் அது. உள்ளேயும் வெளியேயும் ஒளி வெளிப்படும் வரை தேடித் திரியுங்கள். பின், அது உங்களை வழி நடத்தும். நடந்து செல்லுங்கள். என் கதை இங்கு துவங்குகிறது. நான் எழுந்தபின் ஒளியை ஏந்திச் செல்வேன். உலகிற்கு காண்பிப்பேன். உங்களால் கற்பனை செய்ய முடியுமாயின் செய்து கொள்ளுங்கள். இது துவக்கத்தின் கதை. என் கதை சொல்லும் மீதியை நான் இறக்கையில். மீண்டு வந்து மீதம் சொல்கிறேன். இது தொடக்கமற்ற தொடக்கம். முடிவற்ற முடிவு.

 

 

What the hell are you doing here man? Get up and head towards Gaza following your light. Two hundred and twenty two grams of light. That’s Max’s order.

ஒளி 222 கிராம்: பகுதி 14

ஒளி 222 கிராம்: பகுதி 14

 

‘ஹஸன் என்ன இது? ஆளே மாறிட்டிங்க? நாமக்கல்ல ஸ்கூல்ல டையக் கழட்டி கயறா மாத்தி செவர் ஏறிக் குதுச்சு வெளிய போயி வாத்துக்கறிய தின்ன கிழிஞ்ச பேண்ட்டோட போன ஹஸனா இது?’

 

‘நீங்க வேற ரஞ்சித். உங்களுக்கு வேறெதுவும் நினவிருக்காதா?’

 

’ஆமா காம்ரேட். இப்ப எதுக்கு மதுரைக்கு வந்தீங்க?’

 

‘உங்கள பாக்குறதுக்குத் தான்னு வச்சுக்கங்களேன்’

 

‘இல்ல நீங்க சொல்லித் தான் ஆகனும். துபாய்ல இருந்து திடீர்னு நான் வரேன்னு சொன்னிங்க. நானும் ஏர்போர்ட் வந்துட்டேன். ஏன் எதுக்குனு ஒரு வார்த்த கூட சொல்ல’

 

’ரஞ்சித், ப்ளீஸ் எங்கிட்ட அதப்பத்தி கேக்காதீங்க. தலவலினு வச்சுக்கங்களேன். மனசே சரியில்ல’

 

‘என்ன உங்களுக்குமா? ரைட் நான் கேக்க மாட்டேன். நான் இனி கேக்கவே மாட்டேன். ஆனா நீங்க ஏன்கூட வரனும்’

 

‘எங்க?’

 

‘நான் சொல்ல மாட்டேன். ஏன்னா எனக்கே தெரியாது. இனிமே தான் முடிவு பண்ணனும். எனக்கும் தலவலி. ஒரு ஆட் வீடியோவ கஷ்டப்பட்டு ராப்பகலா தூங்காம வேல பாத்து எடிட் பண்ணி அனுப்பி விட்டா அது நொட்ட இது சொட்டனு சொல்றாய்ங்க. மனுஷனுக்கு எவ்வளவு டென்ஷன். வாங்க எங்கயாவது ஓடிருவோம்’

 

‘எங்க?’

 

‘அட வாங்க ஹஸன். நமக்கு இதென்ன புதுசா? என்னைக்கோ வரும்னு நம்பி அந்த ஒளிய துரத்தரப்ப இதல்லாம் ஒரு மேட்டரா?’

 

 

 

ரஞ்சித். ஹஸனும் ரஞ்சித்தும் நாமக்கல்லில் பள்ளித் தோழர்கள். வாங்க போங்க என மரியாதை கொடுத்துக் கூப்பிடும் வழக்கம் அன்றிலிருந்தே தொடர்ந்து வருகிறது. ஹஸனும் ரஞ்சித்தும் ஒன்றைத் தான் தேடிக் கொண்டிருந்தனர். அதை ஒளியென்றே ஒருமையாய் அழைத்தனர். பாதை வேறானாலும் தேடுவது ஒன்றைத்தான். ஒளியைத்தான்.

 

’ஹஸன் நீங்க பூட்டி அடிப்பீங்களா?’

 

’பூட்டினா?’

 

’ஸ்டஃப்?’

 

‘ஸ்டஃப், ட்ரிங்க்ஸா?’

 

‘அடப்போங்க. கஞ்சா. அடிப்பிங்களா?’

 

‘இல்ல.’

 

‘பழக்கமில்லையா? விருப்பமில்லையா?’

 

‘ரெண்டும் தான்’

 

‘ஒரு இழு இழுக்கிறீங்களா?’

 

‘எதுக்குங்க? தேவையே இல்ல’

 

அழகான வடிவமைப்பில் இருந்தது அந்த மண் குழாய். பெரிய சுருட்டின் அளவு. சில்லம் அதன் பெயர். அதனுள்ளே காய வைத்துக் கசக்கிய கஞ்சா. இனிமேல் கஞ்சா இல்லை பூட்டி. வீட்டு மாடியில் பத்தவைத்து இழுத்துக் கொண்டிருந்தார்.

 

’சும்மா அடிச்சுப் பாருங்களேன். ஒரே ஒரு பஃப்’

 

‘இல்லங்க. எனக்கு வேணாம். இதெல்லாம் தேவையில்லாதது.’

 

‘தேவையில்லாததா. யார் சொன்னா? ஒரு தடவ இழுத்துப் பாருங்க அருமை தெரியும்.’

 

‘எனக்கு இதெல்லாம் சுத்தமா பிடிக்காதுங்க. ட்ரிங்கிங், ஸ்மோக்கிங் எதும் எனக்கு ஆகாது.’

 

‘இத தண்ணினு யாரு சொன்னா? ம். ட்ரிங்க்ஸுக்கும் இதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு’

 

’அடப் போங்க நீங்க வேற’

 

’உண்மைல தாங்க. இதுக்கும் ட்ரிங்க்ஸுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு’

 

’அட நீங்க வேற’

 

‘ச்சும். உண்மைல தாங்க. இப்ப தண்ணியடிச்சிங்கனா மண்ட கழண்டு லூசாட்டம் ஏதாவது ஒளறிக்கிட்டே இருப்பிங்க. என்ன பண்றோம்னு நமக்கே தெரியாது. ஆனா பூட்டி அப்டி இல்லங்க. என்ன பண்றோம்ன்றது தெளிவா தெரியும். பூட்டியடிச்சிட்டு செய்ற ஒவ்வொரு செயலையும் அப்டியே ரசிச்சு ரசிச்சு செய்வோம். வாழ்றதுக்கே ஒரு புது அர்த்தம் கிடைக்கும். இப்ப பூட்டியடிச்சிட்டு பைக் ஓட்றிங்கனு வச்சுக்கங்க. ஆக்ஸிலரேட்டர திருவும் போது கூட ஒரு ஹாப்பி ஃபீலிங் கலந்த உணர்ச்சி இருக்கும். இதத்தான் பேரானந்த நிலைனு சொல்வாங்க.’

 

‘ரஞ்சித் ஜீ. போதும். பேரனந்தம் ப்ரேமானந்தம்னு எதையாவது எது கூடையாவது கோர்த்து விடாதீங்க’

 

’அட நம்புங்க. நாம ஸ்கூல்ல படிக்கும் போது நீங்க நிறைய யோகா தியானமெல்லாம் பண்ணுவீங்க நினைவிருக்கா?’

 

‘இப்பவும் தான் பண்றேன்.’

 

‘சரி அப்டி செய்றதனால உங்களுக்கு என்ன பலன்?’

 

‘மனசு பேசுறத கேக்க முடியும். மனச ஆள முடியும். ’

 

‘சரி. அது ஒரு பெரிய ஆனந்தமான நிலைனு சொல்ல வறீங்க?’

 

‘ஆமா அத பேரானந்த நிலைனு தான் சொல்வாங்க’

 

’நீங்க தியானம் பண்றது மூலமா மூளையோட சில பகுதிகள தட்டிவிட்டு விதவிதமான நிலைகள கடக்கிறீங்க. சரிதானே?’

 

‘ஆமா’

 

‘அப்டி தாங்க போதையும். ஆல்கஹால், பூட்டி, அபின், ஈதர், ஆஸிட்னு ஒவ்வொன்னும் ஒவ்வொரு நிலைக்கு நம்மள கூட்டிட்டுப் போகும். நம்ம மூளையோட பேரானந்தம் தர பகுதிகளத் தட்டிவிடும். நீங்க கஷ்டப்பட்டு கண்ணமூடி காதக்கட்டி போற அதே பேரானந்த நிலைக்கு நாங்க பூட்டி மூலமா போறோம். அவ்ளோதான் வித்தியாசம்’

 

‘ஆனா இதுல உங்களால மனச அடக்க முடியாதே.’

 

‘உங்கள யாரு அடக்க சொன்னா? இப்ப ஒரு கொழந்த சேட்ட பண்ணிக்கிட்டே இருக்கு. நாமலும் சொல்லிப் பாக்குறோம் அப்பறம் நாலு அடியப்போட்டு அடக்கிப் பாக்குறோம் அடங்குமா?’

 

‘நீங்க ஏதோ முடிவோட தான் இருக்கிங்க. நீங்களே சொல்லுங்க’

 

’சத்தியமா அடங்காது. அத அது போக்கில விட்டுட்டு கொஞ்ச நேரம் அப்டி எக்கா ஒக்காந்திருங்க. அதுவா ஆடி அடங்கி ஓடி ஓஞ்சு பக்கத்தில வந்து ஒக்காந்திரும். அப்டி தாங்க பாஸ் மனசும். பூட்டியப் போட்டு மனச அது போக்கில விட்டுட்டா கொஞ்ச நேரத்தில எல்லாம் முடிஞ்சு ஃப்ரீ ஆயிடும். நீங்க இப்படியும் பேரானந்த நிலைய அடையலாம். என்னோட தியரி என்ன தெரியுமா?’

 

‘சொல்லுங்க.’

 

‘மைண்ட் ஸ்ட்ரெஸ் ஆகிறதுக்கும் மனசு வலிக்கிறதுக்கும் ஒலகத்தில ரெண்டு மருந்து ஒன்னு தத்துவம், ஞானம், தியானம்னு சொல்ற எல்லாருக்கும் இப்பலாம் ஒத்துவராத சமாச்சாரம் இன்னொன்னு போதை, பொண்ணு, பாட்டு, பூட்டி, கீட்டினு ஏழைக்குக் கூட ஈஸியாக் கிடைக்கிற ரெண்டாவது சமாச்சாரம். காசில போய் பாருங்க. கஞ்சா அடிச்சிட்டு எப்டி பேரானந்த நிலையில உங்க யோகிகள் உக்காந்திருக்காங்கனு.’

 

‘நிச்சயமா இல்ல ரஞ்சித். போதையால ஒடம்பு பாதிக்கும். நீங்க என்ன பண்ணாலும் அது மத்தவங்களப் பாதிக்கும். தியானம் அப்டி இல்ல.’

 

‘அட எல்லா வெங்காயமும் ஒன்னு தான். வெங்காயத்த லேயர் லேயரா பிரிச்சுப் பாருங்க உள்ள ஒன்னுமே இருக்காது. அது தான் வாழ்க்கையோட தத்துவம். புரியுதா?’

 

’எனக்குப் புரியல’

 

‘புரியலையா. நான் கஞ்சால இருக்கும் போது ரொம்பத் தெளிவாத் தான் இருப்பேன். சரி அப்ப நீங்க இன்னும் அந்தப் பக்குவத்துக்கு வரல. இன்னொன்னு தெரியுமா?’

 

‘என்ன?’

 

’எனக்குத் தெரிஞ்ச ஒரு வெள்ளக்காரரு. பெரிய ஆளு. பேர் என்னமோ வில் ஸ்மித் படம் மாரி இருக்கும். காக், ஹேண்டுன்னு.’

 

’ஹாஹா’

 

‘நான் அசிங்கமா சொல்லலங்க. உண்மையிலேயே தான்.’

 

‘ஹேன்காக்கா?’

 

‘ஆங். ஹேன்காக். ஸ்டீஃபன் ஹேன்காக். தெரியுமா உங்களுக்கு அவர?’

 

‘ம். அட்லாண்டிஸ் பத்தியும் லெமூரியா பத்தியும் நான் கோயம்புத்தூர்ல படிச்சப்போ வச்ச உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில ஒரு செஷன் குடுத்தாரு.’

 

‘ம். அவரே தான். அவர் உலகத்தில இருந்த நாகரீகமெல்லாம் போதையால தான் தோனுச்சுனு ஒரு தியரி சொல்றாரு. தெரியுமா?’

 

‘தெரியாது’

 

‘உண்மையிலயே தான். மேஜிக் மஷ்ரூம் பத்தி நிறையப் பேசினாரு’

 

‘எங்க?’

 

’நெட்ல ஏதோ ஒரு சைட்ல’

 

‘அப்டியா?’

 

‘ஆமாங்க. உங்களுக்கு எதுக்கெடுத்தாலும் சந்தேகம்.’

 

’……’

 

‘மேஜிக் மஷ்ரூம்னோன தான் நினவு வந்துச்சு. நாம இன்னைக்கு நைட்டு கொடைக்கானல் கெளம்வுறோம்.’

 

‘கொடைக்கானலா? எதுக்கு?’

 

‘எதுக்குன்லாம் கேக்கக் கூடாது. இன்னைக்கு நைட் ஓகே?’

 

‘இப்ப நைட் ஒன்பது மணி. இனி எந்த நைட் போறோம்’

 

‘ஆமால. நைட் ஆச்சோ. அப்ப வாங்க கிளம்புவோம்.’

 

‘இப்பவா?’

 

‘இப்பவே தான் வாங்க’

 

‘ரஞ்சித் உங்க நிலைம சரியில்ல. காலைல போவோமே’

 

‘இல்ல நான் ரொம்பத் தெளிவா இருக்கேன். வாங்க கிளம்புவோம்’

 

’எதில. இப்ப பஸ் இருக்குமா?’

 

‘பஸ்லலாம் மனிதர்கள் போறதுக்கு? நம்ம வண்டீல தான்’

 

‘மனிதர்களா? அப்ப நாம?’

 

’ஏலியன்ஸ்னு வச்சுக்குவோம். வாங்க வண்டியக் கெளப்புவோம்’

 

’எந்த வண்டிய சொல்றீங்க?’

 

‘நம்ம ஸ்கூட்டர தான்’

 

‘இந்தக் ஸ்கூட்டர்லயா? கியர் கூட இல்லாத ஸ்கூட்டர்லயா. விளையாடாதீங்க மலை ஏறாது’

 

‘அந்த சூச்சுமமெல்லாம் உங்களுக்குத் தெரியாது வாங்க போலாம்’

 

‘சரி சொன்னா கேக்கவா போறீங்க. வாங்க. இங்க வாழ்ந்து ஒன்னும் பெரிசா செய்யப் போறதில்ல. சாகனும்னு எழுதியிருந்தா செத்துத்தான் ஆகனும்’

 

 

 

மதுரையில் இருந்து வாடிப்பட்டி வழியாக கொடைக்கானல் செல்ல ஸ்கூட்டரில் மூன்று மணி நேரம் பிடித்தது. பராவாயில்லை. பூட்டியில் இருந்தாலும் வண்டி ஒரு இடத்தில் கூட தள்ளாடவில்லை. தெளிவாக, மிதமாக வந்திறங்கியது. வழியில் எங்கும் நிறுத்தாமல் வந்ததால் இஞ்சின் தன் முழு பலத்தையும் திரட்டி கோபத்தில் அனலை உமிழ்ந்து கொண்டிருந்தது. ஒரு கடை இல்லை. எட்டுமணிக்கே தூங்கிவிடுமாம் இந்த ஊர். சரி எங்கே செல்கிறது பாதை?

 

‘ரஞ்சித் எங்க போறோம்?’

 

‘எதோ ஒரு பேரு சொன்னாய்ங்க’

 

‘யாரு?’

 

‘என் தோஸ்த் ஒருத்தன்’

 

‘என்ன பேரு? எதுக்கு?’

 

’இல்ல இப்ப நாம போற ஊருக்குப் பேரு ஏதோ வட்டைப் பாறையோ வால் பாறையோ சொன்னாங்க ஆன்’

 

‘வால்பாறை இங்க இல்லிங்க.’

 

‘இல்ல கொடைக்கானல் பக்கம் தான். ம். வட்டக்கானல். டால்பின் நோஸ் இருக்கே அந்த வட்டக்கானல்’

 

‘அங்க எதுக்கு?’

 

‘அங்க தான் அந்தக் காளான் கெடைக்கிதாம்’

 

‘காளானா என்ன காளான்?’

 

‘மேஜிக் மஷ்ரூம். ஹான்காக் சொன்னாரே அதே ஒளியத் தர்ர மஷ்ரூம். மாஜிகல் மஷ்ரூம்’

 

’அதுக்காகவா இந்த நேரத்தில இங்க வந்தோம். என்னங்க நீங்க’

 

‘பாஸ். வாழ்க்கைனா அப்டித்தான். நாம தேடி ஓடலைனா அதுவாத் தேடி வரும். ஐயையோ மாத்தி சொல்லிட்டனோ. நாம தேடி ஓடலைனா அதுவா தேடி வராது. நாம தான் தேடி லங்கு லங்குனு ஓடனும்’

 

‘இதுக்கும் அதுக்கும் சம்பந்தமே இல்லையேங்க.’

 

‘சம்பந்தம் இல்லைனா சம்பந்தம் உருவாக்கிக்கிவோம். சரி இப்ப இங்க ஒரு பக்கி கூட இல்லையே. நடுரோட்ல பேயாட்டம் தனியா நின்னு பேசிட்டிருக்கோமே. சரி இப்ப எப்டி வட்டக்கானல் போறது’

 

‘எங்கிட்ட கேட்டா?’

 

‘எதாவது யோசனை வருமேன்னு தான்’

 

’என் போன்ல பாப்போமா’

 

‘அடக் கொடுமையே குடுங்க இங்க’

 

‘இப்படியே நேரா போறோம். ஒரு ஆர்ச் வரும். அங்க இருந்து மல மாதிரி ஒரு ரோட் ஏறும். எக்காரணம் கொண்டும் அதுல ஏறக் கூடாது. நம்ம வண்டி தாங்காது. அதுனால சுத்தி வளச்சு பஸ் ஸ்டாண்டுக்கு போறோம். அங்கிருந்து உட் வைல் ரோட் வழியா போய் க்ளப் ரோட்ல சேரனும். சூப்பர்ங்க உங்க போன். இதுக்குத் தான் சொல்றது’

 

போன் திசை கூற வண்டி தொடர்ந்தது. சர்ச் ரோட்டில் ஒரு சர்ச். இரண்டு வழிகள் எதைத் தேர்ந்தெடுக்க? போனும் எதுவும் சொல்லவில்லை. ரோட்டில் புகைவிட்டுக் கொண்டே ஒருவர் வருவது தெரிந்தது. விரைக்கும் பனி.

 

’அண்ணே வட்டக்கானல் எங்க இருக்கு?’

 

‘அப்டியே நேரா போங்க. மொத கட்டிங் போயி அடுத்த லெஃப்ட் கட்டிங். ஒத்தையடி காட்டுப் பாதை. அதுக்குள்ள போனா ஃபால்ஸ். அங்கிருந்து லெஃப்ட். நேரா வட்டக்கானல். காட்டு மாடு வரும் பத்திரம்’

 

‘காட்டு மாடல்லாம் ஒரு பொருட்டான்ணே. அதெல்லாம் இந்த ரஞ்சித் நிறைய பாத்திருக்கான்’

 

தூர்தர்ஷன் ஒளிபரப்பு நிலையத்தில் வேலை பார்த்துவிட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த அந்த நபர் வீட்டில் இறக்கிவிடப்பட்டார்.

 

’மொத கட்டிங் போயிருச்சு. ரெண்டாவது கட்டிங். என்னாதிது? கட்டிங்னாரு இது எதோ காட்டுக்குள்ள போற பாதையாட்டம் இருக்கு. மரமட்டையெல்லாம் பச்சை பச்சை பாசம் புடுச்சு சொறிப் புடுச்சுக் கெடக்கு. இதுக்குள்ள தான் போகனுமா?’

 

’ஆமாமா அப்டி தான் சொன்னாரு’

 

வண்டி நேரே சென்று கொண்டிருந்தது. அருவி கொட்டும் சத்தம் காற்றைச் சலசலத்துக் கொண்டிருந்தது. எதோ சருகு மிதிபடும் சத்தம் கேட்டது. சத்தம் பெரிதானது. மா என மாடுகள் கத்தும் சத்தம். ஏதோ ஒரு காட்டெருமைக் கூட்டம் நெருங்குவது தெரிந்தது. கணித்தது சரி. வழியை மறித்துக் கொண்டு வந்து நின்றன. ஒவ்வொன்றும் யானையளவு இருந்தன. கன்றுக்குட்டிகள் ஒவ்வொன்றும் பசுமாட்டளவு. கொம்புகளும் கண்களும் வெறித்துப் பார்த்தன.

 

’ஹஸன். மாடு’

 

ரஞ்சித் திடீரென ப்ரேக் அடித்து இரண்டு கைகளையும் விட்டார். வண்டி முன்னெழும்பி நின்றது.

 

‘ஹஸன் மாடு. ஆடாதீங்க அசையாதீங்க. நம்மள எப்டி குரு குருன்னு பாக்குதுன்னு பாருங்க’

இதுக்கு முன்னாடி இங்க வந்திருக்கிங்களா ரஞ்சித்?’

 

‘கொடைக்கானல் வந்திருக்கேன். இங்க வந்ததில்ல. சத்தமா பேசாதிங்க மாடு வந்திரும். ஆனா நிறைய தடவ மாடப் பாத்திருக்கேன். அசையாம இருந்தா அதுவே போயிடும்’

 

’அப்டியா. நான் இதுவரைக்கும் கொடைக்கானல் வந்ததில்ல. இப்டித் தான் ஒரு தடவ கோயம்புத்தூர்ல இருந்து ஊட்டி போனப்ப அப்டி தான் ரஞ்சித் ஒரு யானை துரத்துச்சு’

 

‘யானையா? ஏங்க நீங்க வேற இந்த நேரத்தில யானை கீனைனு என்ன பயமுறுத்துறீங்க. பேசாமா இருங்க அந்த ஆம்பள மாடு நம்மளையே தான் பாக்குது’

 

ஒரு மணிநேரம் எங்கங்கோ பேச்சு சென்று வந்தது. அந்த மாடுகளுக்கு பிடித்துவிட்டது போல. எங்கும் நகரவில்லை. நேரே நோக்கியபடியே இருந்தன.

 

‘ரஞ்சித் கல்லவிட்டு எறிவமா?’

 

‘ஏங்க இதென்ன தெரு நாயா? மாடுங்க. ஒரு குத்து குத்தி தூக்கினா சோழி முடிஞ்ச்சு. பேசாமா இருங்க’

 

‘வாங்க செஞ்சு தான் பாப்போமே. போற ஊயிரு போனாப் போது’

 

‘என்ன உங்களுக்கு உயிர்னா அவ்வளவு கேவலமாப் போச்சா? எப்பப்பாரு உயிர மயிரளவு கூட மதிக்க மாட்டீன்றய்ங்க. எனக்கு உயிர் முக்கியம்’

 

‘அடப் போங்க. நான் கல்லெடுக்கத் தான் போறேன்’ கீழே கிடந்த கல் ஹஸன் கையில்.

 

‘நோ நோ நோ. இங்க எந்த முடிவா இருந்தாலும் நான் தான் எடுப்பேன்’

 

‘ஏன்?’

 

‘கப்பல்ல யார் சொல்றது கடைசி?

 

’கேப்டன்’

 

‘ஃப்ளைட்லயும் அப்டித் தான். வண்டிய ஓட்றவங்க தான் எப்பவும் கேப்டன். அவங்க சொல்றதத் தான் நாம கேக்கனும். புரிதா. இங்க நான் தான் வண்டி ஓட்றேன். நான் தான் கேப்டன்’

 

‘கார் ஓட்ற ட்ரைவருக்கெல்லாம் கேப்டன் பதவி கொடுக்க முடியுமா?’ கையில் இருந்த கல் குறி பார்க்கப்பட்டது.

 

’நோ நோ நோ. நான் தான் இங்க எதா இருந்தாலும் செய்வேன். இவளோ பெரிய கல் வேணாம். ஒரு கைப்பிடி மண்ண எறிவோம்’

 

‘எதாவது செய்ங்க’

 

’ஓம் சிவோகம். தென்னாடுடைய சிவனே போற்றி. அடுத்தென்ன தெரில இது போதும். சிவனோட வாகனம் எருமை தானே. ஓடிடு செல்லம்’ மண் விழுந்த அடுத்த நொடி மாடுகள் விரண்டு ஓடின. ஒரு மணிநேரக் காத்திருப்பை ஒரு கைப்பிடி மண் உடைத்தது. ஒரு மண் பிடிக்கு மிரளும் மாடுகளுக்கு சிவ நாமம் எல்லாம் சற்று அதிகம் தான்.

 

’பாத்திங்களா சிவனோட மகிமைய?’

 

’மண்ணாங்கட்டி’

 

‘ஆமாம் அதோட மகிமையும் தான்’

 

வண்டி நேரே கிளம்பி மற்றொரு முச்சந்தியில் நின்றது. இரண்டு பாதை. வலமா இடமா. போன் வலம் செல்லச் சொல்லியது. அந்த மனிதரோ இடம் சொல்லியிருந்தார். ஸ்மார்ட் போனுக்கு முதல் மரியாதை. வலப்புறம் இருந்த ஒரு வேலியின் இடைவெளியில் புகுந்து வண்டி சென்றது. உள்ளே சாணம் ஆங்காங்கே.

 

‘இருங்க ரஞ்சித் ஏதோ வண்டிச் சத்தம் கேக்குது. உள்ள போக வேணாம். அவங்கட்ட கேப்போம்’

 

‘ஓகே. பர்மிஷன் க்ராண்ட்டட்’

 

வெள்ளை ஓம்னி வந்து கொண்டிருந்தது. இடையில் நிறுத்தப்பட்டது.

 

‘அண்ணா. வட்டக்கானல் எப்டிப் போனும்?’

 

‘வட்டக்கானலா. அங்க தான் தம்பி நாங்களும் போய்கிட்டிருக்கோம். பின்னாலயே வாங்க’

 

ஸ்கூட்டருக்கு சிக்னல் கொடுக்கப்பட்டது.

 

‘ஹஸன் வண்டிக்குள்ள பாத்திங்களா?’

 

‘என்ன ரஞ்சித்’

 

‘பொம்ம மொம்மயா இருக்கு பாருங்க’

 

‘பொம்மையா? நீங்க வேற’

 

‘நல்லாப் பாருங்க’

 

‘ஆமாங்க. வெள்ளக்காரங்க’

 

‘வாவ். வெள்ளக்காரங்களா? நான் பொம்மைனு நினச்சேன்’

 

‘ஏன்?’

 

’இங்க தான் பூட்டி இருக்கும். கன்ஃபார்ம். என்ன ஆனாலும் இங்க தான் நாம இருக்கப்போறோம்’

 

ஒம்னியும் ஸ்கூட்டரும் பல நெளிவு சுழிவுகளைக் கடந்து ஒரு ஊருக்குள் சென்று நின்றது. ஊரின் துவக்கத்தில் நட்சத்திரம் தொங்கும் தேவாலயம் வரவேற்றது. அந்த நட்சத்திரம் எங்கோ பார்த்தது போல் இருந்தது. வண்டிக்குள்ளிருந்து பொம்மைகள் இறங்கின. அத்தனையும் ஆண்கள். இறங்கியவுடன் அவை பொம்மைகளைப் போல் இல்லை. ஒவ்வொருவனும் ஆறரை அடிக்கு குறைச்சல் இல்லை. தின்னமான தோள்களைத் தாங்கிய உடல். முறுக்கேறிய நரம்புகள் பொதிந்த கை கால்கள். ராணுவத் தோற்றம். நிச்சயம் ஐரோப்பியரோ அமெரிக்கர்களோ இல்லை.

 

’பாஸ். இங்க கொஞ்சம் வந்து இவங்ககிட்ட கொஞ்சம் பேசுங்க. கழுத்தறுக்கிறானுங்க’

 

ஓம்னி ட்ரைவர் அவர்களுடன் பேரம் பேசிக் கொண்டிருந்தார். ஐந்து கிலோ மீட்டருக்கு ஐநூறு கேட்டார். அவர்கள் விடவில்லை. வலுகட்டாயமாக பேசி வசூலித்துவிட்டார். பின்னர் அவர்களை அழைத்துச் செல்ல யாரோ இருவர் வந்தனர். அவர்களுக்குள் ஏதோ ஒரு மொழியில் பேசிக் கொண்டு அங்கிருந்து ஒரு வீட்டை நோக்கிச் சென்றனர். எங்கோ கேட்ட மொழி போல் தெரிந்தது. அவர்கள் யாருடனும் பேசவில்லை. பேச அனுமதிக்காத இறுகிய முகத் தோரனை அனைவருக்கும்.

 

‘ஹஸன் இவனுங்க என்ன மொழி பேசறானுங்க. இங்லிஷ் ரொம்ப கேவலமா இருக்கு’

 

‘தெரியல. ஆனா எங்கயோ கேட்ட மாதிரித் தோணுது. சரி நடு ராத்திரி ஆயிடுச்சு. எங்க தங்கப் போறோம்?’

 

‘வாங்க தேடிப் பாப்போம். தேடினா கிடைக்கும்.’

 

சிறிது தொலைவு நடந்து செல்ல, மலைச் சரிவின் கீழ் நோக்கி ஒரு கற்பாதை சென்றது. ஏதோ வெளிச்சம் தெரிந்தது. அதிலிருந்து ஒரு குடும்பம் ஏறி வந்தது. தகப்பன், தாய், ஓர் அழகிய இளம் பெண்.

 

‘இங்க தங்குறதுக்கு எங்கங்க இடம் இருக்கு?’ ரஞ்சித் அந்தப் பெண்ணிடம் போய் கேட்டார்.

 

‘தமில் நய் மாலும். நீச்சே ஜாவ் நீச்சே ஜாவ்’  திடுமென தகப்பன் பதில் கொடுத்தார். இந்த ஊரில் தமிழே எங்கும் இல்லை.

 

அந்த நிலையிலொரு போஸ்ட்டர் கண்ணில் பட்டது. இருளில் கூர்ந்து கவனிக்க, கடைகள் தென்பட்டன. கடைகளின் பலகைகளில் வேறேதோ மொழியில் ஒரு எழுத்துக் கூட்டம் தென்பட்டது. கட்டம் கட்டமாக வலமிருந்து இடம் எழுதப்பட்ட எழுத்துக்கள். ஏதோ ஒரு நாணயத்தில் பார்த்த நினைவு. அப்பாதையின் கீழிறங்கி ஒளியை நோக்கிக் கால்கள் சென்றன. ஒளி தெரிந்த கடை முன் நின்றன.

 

‘அக்கா. தங்க இங்க இடம் கிடைக்குமா?’, ரஞ்சித் தொடங்கினார்.

 

‘தமிழா? எங்கிருந்து வறீங்க?’

 

‘மதுரைல இருந்து’

 

‘அட நம்ம மதுரையா?’

 

‘ஆமாக்கா’

 

‘நல்ல வேளை. இப்ப தான் கடைய மூட எல்லாத்தையும் எடுத்து வச்சிட்டு இருந்தோம். எதுக்க வந்த ஹிந்தி ஃபேமிலி சொன்னாங்களா?’

 

‘ஆமாமா’

 

’அவங்களும் எங்க வீட்ல தான்  தங்கி இருக்காங்க. மேல இருக்க ரெஸ்டாரண்ட் அவங்கது தான். அவங்களுக்கு எதிர் ரூம்ல தங்கிக்கங்க’

 

’சரிங்கக்கா. எவ்ளோ?’

 

‘எண்ணூறு தம்பி’

 

‘என்னக்கா. ரொம்ப ஜாஸ்தியா இருக்கு. நாங்க ரொம்ப நாள் தங்கனும். ஒரு வாரம் கிட்ட’

 

‘சரி உங்களுக்காக ஐநூறு’

 

‘இன்னும் கொறைங்களேன். கொடைக்கானல்ல இது தான் சீசன் டைம் இல்லைல’

 

‘கொடைக்கானல்ல இல்ல தம்பி. வட்டக்கானல்ல இது சீசன். எங்கங்க இருந்தோ இந்த இஸ்ரேல் பக்கிக இங்க வரும். ரூம் ரேட்லாம் ரொம்ப அதிகம்.’

 

இஸ்ரேல். டேவிட் ஸ்டார். வலமிருந்து இடம். கட்டம் கட்டமான எழுத்துகள். ஹிப்ரூ. கட்டாய ராணுவச் சேவை.

 

 

‘நான் ஒரு கத சொல்லவா?’

 

‘ஹஸன். அவன் சொல்ற கதைய நீங்க கண்டிப்பாக் கேட்டே ஆகணும். ஹா ஹா’

 

‘டேய் என்ன சிரிக்கிற? என் கத ஒன்னும் அவ்வளவு கேவலம் கிடையாது. நீங்களே கேட்டுட்டு சொல்லுங்க ஹஸன்’

 

‘சரி. சொல்லுங்க கேக்கிறேன்.’

 

’நம்ம படத்தோட டைட்டில் பறவை’

 

‘ஏது அதிசயம் இருக்கே அந்தப் பரவையா. ஹா ஹா ஹா’

 

‘ரஞ்சித் நோ லூஸ் கமண்ட்ஸ். உனக்கு பூட்டி அதிகமாயி லூசு புடிச்சுடுச்சு. நீங்க கேளுங்க ஹஸன்’

 

‘நம்ம கதையோட டைட்டில் பறவை’

 

‘என்ன பறவை’

 

‘ஏதோ பறவை. காக்கானு வச்சுக்குவோமே. காக்கா நல்லா இருக்கே. இப்போ இருந்து நம்ம டைட்டில் காக்கா. சோக்கா?’

 

‘சோக்கு இல்ல ஜோக்கு ஹா ஹா ஹா’

 

‘எதுக்கு இப்ப நீ சிரிச்சிட்டே இருக்க? கொஞ்சம் அமைதியா இருடா. என் கதையச் சொல்ல விடுடா’

 

‘சொல்லுங்க டைரக்ட்டர் ப்ரொட்யூஷர் கிட்ட ஹா ஹா ஹா’

 

‘சரி. ஹஸன். காக்கா நம்ம டைட்டில். காக்காவ வச்சு தான் கதையே. நம்ம படத்தோட ஸ்டார்ட்டிங்ல அப்டியே ஒரு காக்கா அண்ணாநகர்ல இருந்து ஒரு பொட்டலத்தத் தூக்கிட்டு தெப்பக்குளம், கீழவாசல், தெற்குவாசல், பெரியார், ரைல்வே ஸ்டேஷன், நேதாஜி ரோட், மீனாச்சி அம்மன் கோயில், சிம்மக்கல், கோரிப்பாளையம், தமுக்கம், தல்லாகுளம், நீதிமன்றம், மாட்டுத்தாவணினு மதுரையோட எல்லா எடத்தையும் சுத்திட்டுத் திரும்பி அண்ணா நகர்ல கிளம்பின வீட்டுக்கே வருது. அதுக்குள்ள நம்ம டைட்டில் போட்டு முடிக்கனும்’

 

‘என்ன மானாக்குடா இந்த சுத்தல் ஹா ஹா’

 

‘அது அப்டிதான் ஹஸன் உங்களுக்கு புரிதில’

 

‘ம். சொல்லுங்க’

 

’அப்படியே ஒரு சாங். ரெண்டு காக்கா. அன்பான காக்கா. புருஷன் பொண்டாட்டிக் காக்கா. ஜாலியா பாடி ஒன்னு சேந்து ஒரு குட்டி போடுது. குட்டி போட்டு சந்தோஷம வாழுது. திடீர்னு ஒரு நாள் ஒரு பாம்பு வந்து அந்த குட்டியச் சாப்பிட வருது’

 

‘குட்டி இல்லடா குஞ்சு ஹா ஹா ஹா’

 

‘இப்ப அதா முக்கியம். கதையக் கேளுடா பக்கி. சரியா அந்த க்குஞ்ச காப்பாத்த அந்த அம்மா காக்காவால முடியல. கத்தி கத்திப் புருஷன் காக்காவக் கூப்பிடுது. அதுவும் வந்து பாம்போட சண்டை போடுது. முடியல. அம்மா காக்கா அப்பா காக்காகிட்ட குஞ்ச தூக்கிட்டு பறக்க சொல்லுது’

 

‘ஹா ஹா ஹா’

 

‘எதுக்குடா சிரிக்கிற?’

 

‘உண்மை விளங்க சிரிப்புத் துலங்கும். ஜெய் போலேநாத். ஹா ஹா ஹா’

 

‘அம்மா காக்கா, அப்பா காக்காகிட்ட குஞ்ச தூக்கிட்டு பறக்க சொல்லுது. குட்டியத் தூக்கிட்டு பறக்க சொல்லுது. அந்த காக்காவும் தூக்கிப் பாக்குது. முடியல. எப்டியோ பல்லக் கடிச்சு தூக்கிருச்சு’

 

‘காக்காவுக்கு ஏதுடா பல்லு? ஹா ஹா இறைவா’

 

‘பீக்க கடிச்சு தூக்கிட்டு ரெண்டு எட்டு தான் பறந்திருக்கும்’

 

‘ரெண்டு எட்டு. பதினாறா? ஹா ஹா’

 

‘இடியட். கதைய கேளு. ரெண்டு தடவ தான் கைய அசச்சு பறந்திருக்கும். அதால முடியல. குட்டிய கீழ போட்டிருச்சு. அவ்ளோதான் அம்மா காக்காவோட இதயமே வெடிச்சிருச்சு. உண்மையிலேயே இதயம் வெடுச்சு, கண் சிவந்து மூக்கு வாய் வழியா ரத்தம் ஒழுகி செத்துசுருச்சு’

 

‘அப்ப அப்பன் காக்கா? ஹா ஹா ஹா’

 

‘ஆமால. அப்பன் காக்கா ஏற்கனவே ஹார்ட் பேஷண்ட். இன்னுமா உயிரோட இருக்க போது. அது அல்ரெடி கான்.’

 

‘வாட் அ ட்ராஜடி வாட் அ ட்ராஜடி. ஹா ஹா ஹா. எனக்கு அழுகையா வருது ஆனா சிரிப்ப அடக்க முடியல’

 

‘டோண்ட் ஃபீல். அம்மா அப்பா எறந்தத கண் முண்ணால பாத்துக்கிட்டே அந்த குட்டிக் காக்கா கீழ அப்டியே அழுதுக்கிட்டே விழுது. ஸ்லோ மோஷன்ல அதக் காட்றோம். கீழ விழுந்து என்ன ஆகும்னு எல்லாரும் எதிர் பார்க்கிறப்ப அந்தக் காக்காவோட கண்ணீர், காய்கறி வாங்கிட்டு அந்தப் பக்கமாப் போற ஒரு அம்மா மேல உழுகுது. அப்டியே பதறிப்போய் அந்தக் காக்காவ காய்கறி கூடையில கேட்ச் பிடிச்சு வீட்டுக்குக் கொண்டு போறாங்க. இங்க ஒரு பாட்டு. சின்னத் தாயவள் ரேஞ்ல.’

 

‘ச்சுசுச்ச். ஹா ஹா ஹா. கலைஞன் டா நீ’

 

‘மச்சி பாராட்றதெல்லாம் அப்பறம். லிஸ்டன் மீ’

 

‘டன்’

 

’அந்தக் காக்காவையே தன் பிள்ளையா நினச்சு அந்த அம்மா வளக்கிறாங்க. அப்ப அவங்களுக்கு ஒரு கொழந்த பிறக்குது. அந்தப் பாட்லையே அந்த பையனும் காக்காவும் ஒன்னா வளர்றாங்க. ஒரே டப்ல குளிக்கிறாங்க. ஒரு தட்டில சாப்டறாங்க. ஒரே ஸ்கூல்ல படிக்கிறாங்க. அந்தப் பையன் பெரியவனா வளர்றான். ஒரு நாள் ஒரு காம்ப்காக கொடைக்கானல் வர்றான். காளான்னு சொல்லி எதையோ அவனும் காக்காவும் புடிங்கி ஜாலியா சமைக்கிறாங்க. அவனும் காக்காவும் சாப்பிடறாங்க’

 

’காளானா? மேஜிக் மஷ்ரூமா? ஆமாமா. டேய் நாளைக்கு எனக்கு வேணுண்டா. ஏமாத்திறாத. ஹா ஹா ஹா’

 

’கரெக்டா கண்டுபிடிச்சிட்டியா. நல்ல குடிமகனுக்கு இதுதான் அழகு ரஞ்சித். இப்ப கதையக் கேட்டாதான் உனக்கு மஷ்ரூம். இப்ப அவங்க கதைக்கு வருவோம். நல்லா சாப்பிட்றாங்க. அவங்க தாத்தாபாட்டினு ஆரம்பிச்சு உலகம் முடியரவரைக்கும் கலர்கலரா ஏதோதோ கதை ஓடுது. நிம்மதியா தூங்கிறாங்க. காலைல எந்திருச்சுப் பாத்தா எல்லாம் மறஞ்சிடுது. காளானத் தேடித் தேடி கண்டுபிடிச்சு அவன் சாப்பிடறான். அந்த நேரத்தில அவனுக்கு நம்ம தஹ்ர் மாதிரி ஃப்ரெண்ட் சிக்குறான்’

 

‘ஹா ஹா. தஹ்ர் ஹீ இஸ் மாக்கிங் யூ’

 

‘தேர் இஸ் நோ மாக்கிங். நோ ஹாக்கிங். நோ லைஃப். நோ டெத். ஐம் எட்டர்னல். ஹர் ஹர் மஹாதேவ். ஐம் காட்’

 

’இஸ்ரேல்ல எங்கயோ ஒரு மூலையில பிறந்து, நம்ம என்ன பேசறோம்னு கூட தெரியலைனாலும் பூட்டியப் போட்டு தெரிஞ்ச மாதிரி அமைதியா பக்கத்தில ஒக்காந்து நம்ம தஹ்ர் மாதிரி ஒரு ஃப்ரெண்ட் அவனுக்கும் கெடைக்கிறான். இவன் அவனுக்கு காளான் குடுக்க அவன் இவனுக்கு பூட்டி, இடிக்கி கோல்ட், ஹெராய்ன், ஓபியம்னு ஒரு பெரிய வெரைட்டியவே அறிமுகப்படுத்தி வைக்கிறான். மூனு பேரும் காக்காவையும் சேத்து தல நிறைய முடி வளத்திட்டு ஹிப்பியா ரெண்டு வருஷம் வட்டக்கானல், ஹம்பி, இமயமலைனு வலம் வராங்க. அப்ப தான் அந்த யோசனை அவனுக்கு வருது. பிசினஸ் ஆரம்பிக்கறான். பூட்டி பிஸினஸ். ஹெராய்ன், அபின், கொகைன், பூட்டி, ஆசிட், ஈதர் எல்லாம். ஈதர் கொஞ்சம் கஷ்டம் தான். அதுவும் காக்காவ வச்சு. போலிஸ் தொல்ல இல்லாம. இனி தான் கத ஆரம்பிக்கிது. அவ்ளோ தான் சொல்ல முடியும்’

 

பலத்த கைதட்டல். ஹஸன், சிகரெட் சுருளுக்குள் கஞ்சா இலையை கசக்கிச் சொருகி இழுத்துக் கொண்டிருக்கும் மூவரால் சூழப்பட்டிருந்தான்.  ரஞ்சித், தஹ்ர் மற்றும் கதை சொல்லி. கதை சொல்லி வட்டக்கானல் தான். ரஞ்சித்துடன் மதுரையில் அனிமேஷன் படித்தவன். தற்போது வட்டக்கானலிலேயே தங்கி வியாபாரம் செய்து வருகிறான்.

 

வட்டக்கானலை சிறு இஸ்ரேல் என்றே அழைக்கலாம். நவம்பர் தொடங்கி மார்ச் வரை இங்கு இஸ்ரேலியர்கள் குவிகிறார்கள். இவர்களைக் குறிவைத்து வியாபாரம் சூடு பறக்க நடக்கிறது. முக்கியமாக நம் கதை சொல்லி போன்ற போதை வியாபாரிகள் காட்டில் மழை தான். இஸ்ரேலியர்கள் தங்கள் நாட்டின் கட்டாய ராணுவச் சேவையில் பணிபுரிந்து பாலஸ்தீனியர்களை அடக்கியாளும் வேலையால் மனப்புழுக்கம் ஏற்பட்டு அதைத் தொலைக்க இங்கே குவிகிறார்கள். போதையும் ஆன்மீகமும் அவர்களை இந்தியா நோக்கி இழுத்து வருகிறது. வியட்நாம் போரின் போது அமெரிக்க ஹிப்பிக்கள் எடுத்த தடத்தை இவர்கள் தொடர்கிறார்கள்.

 

மார்ச்சுக்குப் பின்னர் இஸ்ரேலியர்கள் ஹம்பி மற்றும் இமயமலைப் பகுதிக்கு சென்று விடுகின்றனர். வார இறுதிகளில் பெங்களூர் ஐ.டி.க்காரர்கள் வந்து விடுகின்றனர். இது தான் வட்டக்கானல்.

 

 

அந்தக் கண்கள்.

 

மிரட்சி தரும் அந்தக் கண்கள் கனவிலும் வரத் துவங்கிவிட்டன. முன் பின் பார்க்காத கண்கள் அவை. சுற்றி மையிடப்பட்டு கருமையில் தெளிவாகத், தனியாக மிதக்கும் கண்கள் அவை. ஒளிபடைத்த கண்கள். பெண்ணின் கண்ணா? இல்லை ஆணின் கண்ணா? நிச்சயமாகத் தெரியவில்லை. கணிப்பது கடினம். அது ஆன்மாவை நேரடியாக ஊடுருவி மிரட்சியளித்தது. சுற்றிலும் இருள் அதில் அந்தக் கண்கள் மட்டும் திடீரென திறப்பது போல் நினைவில் இருக்கும் போதும், கனவில் இருக்கும் போதும் மீண்டும் மீண்டும் காட்சியாய் வந்தது. கண்ணா? இல்லை கண்களா? ஒற்றைக் கண்ணா? இரண்டு கண்ணா? நிச்சயம் பிடிபடவில்லை. நினைவில் வர மறுத்தன. கண். ஒன்றா? ஒரு ஜோடியா? நிச்சயம் நினைவுக்குக் கொண்டு வர இயலவில்லை. எவ்வளவு முயற்சித்தும் பயனில்லை. முன் பின் பார்க்காத கண்கள் மீண்டும் மீண்டும் வருவது மிரட்சியை மிச்சம் விட்டுச் சென்றன.

 

 

 

’அக்கா ஏதாவது தாங்கக்கா குளிர் தாங்க முடியல’

 

அந்தக் காலையில் குளிர் சற்று அதிகமாக இருந்தது. பல் விலக்கும் பொறுமை இல்லாமல் ரஞ்சித் அக்கா கடைக்கு இழுத்துச் சென்றார். கேட்ட நொடியில் சட்டியில் எண்ணெய் உற்றி காயவைக்கப் பட்டது. இங்கு எண்ணெய் திரவ நிலை கடந்து திடநிலை கொண்டிருப்பதால் காய்வதற்கு நேரம் பிடிக்கும். குடைமிளகாயைக் கடலை மாவில் துவட்டிக் கொதிக்கும் எண்ணெய்க்குள் குளிக்கவைத்துத் செய்தித்தாளின் துண்டொன்றில் கொடுத்தார். பகலுணவு. கணக்கெல்லாம் பார்க்காமல் உள்ளே சென்று கொண்டிருந்தது. உரைப்பிலும் கொதிப்பிலும் குளிர் குறைந்தது. கடைக்கு முன் கூட்டம் சேரத் துவங்கியது.

 

சற்று முன் கண்ட கண்கள் ஹஸனை விட்டுச் செல்ல மறுத்தன. சிந்தனை முழுவதும் அங்கே இருந்தது. கடை கூட்டம் கூட ஹஸன் சற்று விலகி ஒரு பாறை மீது அமர்ந்தான். நினைவுகளின் சிறையில் இருந்தான். மீண்டு வர விருப்பமில்லை. அனுமதித்தான். இஸ்ரேலியர்களும் டால்பின் முனைக்குச் செல்லும் கூட்டமும் முன்னும் பின்னும் நடந்தவண்ணம் இருந்தனர். எதுவும் அவனைக் கலைக்கவில்லை. எண்ணங்கள் அதன் போக்கில் சென்று கொண்டிருந்தது. அவற்றைக் கவனித்தவனாய் அமர்ந்திருந்தான். எப்படியாயினும் எண்ணங்களின் போக்கு முடியும் இடம் கண்களாக இருப்பது புலப்பட்டது. எதிரே அக்கண்கள் அவனை வெறித்துப் பார்த்தபடி இருப்பதாய் உணர்ந்தான். உணர்ச்சி மேலோங்கிக் கொண்டே போனது. வெறித்த கண்களை உணர முடிந்தது. உள்ளிருந்து கண்களை எதிரே உயர்த்தினான்.

 

இரண்டு கண்கள் வெறித்த வண்ணம் இருந்தது. கண்களுக்கு கீழ் மையிடப்பட்டிருந்தது. கண்கள் இருந்த முகம் முழுவதையும் அடர்ந்த வெண் தாடியும் மீசையும் ஆக்கிரமித்திருந்தன. உடல் வெள்ளுடை உடுத்தியிருந்தது. இரண்டு நொடிகள் வெறித்த கண்களையுடைய அந்த உருவம் அவனைக் கடந்து சென்றது.

 

வியர்த்துக் கொட்டி மயக்கம் தழுவியது.

 

 

’போவோமா?’

 

‘எங்க?’

 

‘பெட்ரோல் போட?’

 

‘பெட்ரோலா. வாங்க போவோம்’

 

வட்டக்கானலில் பெட்ரோல் பங்க் கிடையாது. கொடைக்கானலுக்குத் தான் செல்ல வேண்டும். அந்த பங்க்கையும் இரவில் விரைந்து மூடிவிடுவார்கள். அதனால் மாலையிலேயே சென்று அடுத்த நாளைக்குத் தேவையான பெட்ரோல் நிரப்பிவிடுவது அவர்கள் வழக்கம்.

 

மாலைப் பனியைக் கிழித்துக் கொண்டு சென்று பெட்ரோல் வாங்கிவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தனர். வழியில் ஒருவர் சென்று கொண்டிருந்தார். இருவரும் பின்னால் இருந்து பார்த்தனர்.

 

’பாவம். பனியில எப்படி நடந்து போறாருன்னு பாத்திங்களா? வயசானவரா வேற தெரியிறாரு’

 

’ஆமாமா’  ஹஸனது சிந்தனை நிச்சயம் அங்கில்லை.

 

ரஞ்சித் வண்டியை விரட்டிச் சென்று அந்த முதியவரின் முன் நிறுத்தினார். முகம் முக்காடிடப்பட்டிருந்தது.

 

’ஐயா, ஏன் இந்தப் பனியில இப்படி கால் கடுக்க நடக்கிறீங்க? வண்டீல ஏறுங்க நான் இறக்கிவிடறேன்.’

 

‘இல்லங்க தம்பி உங்களுக்கு எதுக்குச் சிரமம். நான் இப்படியே நடந்து போயிடறேன்’

 

பெரியவர் தலையை உயர்த்திப் பதிலளித்தார். ஹஸனுக்கு வியர்த்துக் கொட்ட ஆரம்பித்தது.

 

இரண்டு கண்கள் வெறித்த வண்ணம் இருந்தது. கண்களுக்குக் கீழ் மையிடப்பட்டிருந்தது. கண்கள் இருந்த முகம் முழுவதையும் அடர்ந்த வெண் தாடியும் மீசையும் ஆக்கிரமித்திருந்தன. உடல் வெள்ளுடை உடுத்தியிருந்தது. அதே பெரியவர்.

 

‘எங்க போனும்?’ ரஞ்சித் தொடர்ந்தார்.

 

‘உங்களுக்குத் தெரியுமா எங்க போகனும்னு?’

 

‘என்ன கேக்கிறீங்க? நாங்க வட்டக்கானலுக்கு’

 

‘புரியலையா. விடுங்க. நானும் அங்க தான் போனும்’

 

‘சரி ஏறிக்கங்க. ஹஸன் கொஞ்சம் இறங்கி அவர நடூல விட்டுட்டு நீங்க பின்னாடி உக்காந்துக்கோங்க. வயசானவரு.’

 

‘ஆமாமா ரொம்ப வயசானவன். பாத்துப்பா’

 

அனைவரும் ஏறிக்கொள்ள வண்டி கிளம்பியது. ஹஸனது தொடையில் கை வைத்து பெரியவர் அமர்ந்திருந்தார்.  ரஞ்சித் மொபைல் ஒலித்தது. ஹெட்போனை எடுத்துக் காதில் திணித்தார். மதுரையிலிருந்து யாரோ. வண்டியுடன் சேர்ந்து பேச்சு மும்முரமாகச் சென்று கொண்டிருந்தது.

 

‘உங்க பேரென்ன தம்பி?’

 

‘…..’

 

‘உங்களத்தான். உங்க பேரென்ன?’ கேள்வி தனக்கென தொடை அழுத்தத்தில் புரிந்துகொண்டான்.

 

‘ஹஸன்’

 

‘முழுசா?’

 

‘முஹம்மத் ஹஸன்’

 

’தேடிற ஒளி கெடச்சிருச்சா?’

 

வியர்க்கத் துவங்கி ஒரே நொடியில் உப்பை நாவில் உணர முடிந்தது.

 

‘ஒளி கெடச்சிருச்சா? உங்களத்தான்’

 

‘எப்படி உங்களுக்குத் தெரியும்’

 

‘பொதுவாத் தான் கேட்டேன்’

 

சில சந்தர்ப்பங்கள் பேசுவதற்கல்ல, கேட்பதற்கு. இது கேட்பதற்கு. பேசி ஒன்றையும் நிறுவிவிட இயலாது. நழுவவும் முடியாது.

 

‘சரி, சொல்லுங்க. ஒளி கெடச்சிருச்சா இல்லையா?’

 

‘தெரியல’

 

‘இது என்ன பதில்?’

 

’உண்மையிலேயே தெரியல.’

 

‘உனக்குள்ளயே பதில் இருக்கு.’

 

‘இருக்கலாம்’

 

‘என் கண்கள பாத்து ஏன் பயப்படற?’

 

‘தெரியல. இப்பலாம் கண்களப் பாத்தா பயம் வருது. கனவுல எல்லாம் வந்து மிரட்டுது.’

 

’உனக்குக் கண்கள் திறக்கப் போது. ஒளிய உணர கண்கள் அவசியம்’

 

‘புரியல’

 

‘உன் கண்ண ஏன் நான் வெறிச்சு பாத்தேன் தெரியுமா? அது யோகியின் கண்கள்’

 

‘புரியல’

 

‘புரியும். ரொம்ப சீக்கிரமாவே’

ஒளி 222 கிராம்: பகுதி 13

ஒளி 222 கிராம்: பகுதி 13

 

ஸபாஹ் அல் ஃகைர்

 

ஸபாஹ் அந்நூர்

 

இன்றைய காலை நல்ல காலையாக அமையட்டும் என ‘குட் மார்னிங்’  சொன்னால் உங்கள் காலை ஒளி பொருந்தியதாக அமையட்டும் என மறுமொழி அளிக்கிறார்கள் இந்த ஊர் மக்கள். ஒளியைத் தேடித் தேடித் துவண்ட நெஞ்சங்களுக்குத் தான் ஒளியின் அருமை தெரியும். ஒரு நாள் இங்கு வந்து பாருங்கள் இருளின் கருமை உங்கள் கண்களைக் குருடாக்கும். இந்தக் கட்டுரையில் நான் உங்களுக்கு காஸாவின் அழுகைகளைக் காட்டப் போவதில்லை. இணையத்தில் ஆயிரம் பக்கங்கள் இருக்கின்றன. அதற்குக் கொஞ்சம் நேரம் ஒதுக்கினால் காஸாவின் அழுகுரல் உங்கள் மனதை உலுக்கிவிடும். நான் இங்கே நூரைப் பற்றி பேச வருகிறேன். ஒளியைப் பற்றி.

 

உலகின் மிகக் கடினமான ஆனால் மிகவும் தேவைப்படும் ஒரு செயல் இருக்கிறது. ஒளி அளிப்பது. தேவைப்பட்டவர்களுக்கு ஒளி அளிப்பது. ஒளியை கையில் எல்லாம் எடுத்துக் கொடுத்துவிட முடியாது. தான் கண்ட ஒளியைப் பிறர் அடைய உதவுவலாம். வழி காட்டலாம். அவ்வளவுதான். ஆனால் இந்த வேலையை அவ்வளவு எளிதில் ஒளிகண்ட யாரும் செய்ய முன்வரமாட்டர். பிறர் ஒளி தெரியாமல் தட்டுத்தடுமாறி இருளில் தடுமாறும் நிலையை ஏளனத்துடன் இறுமாப்புடன் ரசித்துக் கைகொட்டுபவர்களாகத் தான் ஒளியில் நுழைந்தவர்கள் அனைவரும் இருக்கின்றனர். இவர்கள் உண்மையில் ஒளி கண்டவர்கள் இல்லை. இவர்கள் கண்டதை இவர்களும் பொது உலகும் ஒளி எனக் கருதுகிறது. அவ்வளவுதான். மிகச் சொற்ப மனிதர்களே தாங்கள் கண்ட ஒளியைப் பிறரிடம் எடுத்து வைக்கின்றனர். உண்மையில் இவர்கள் தான் ஒளியைக் கண்டவர்கள். மற்றவர்கள் ஒளியென நினைத்து ஏதோ ஒன்றில் தங்களை இழந்தவர்கள். ஒளி தன்னை வெளிப்படுத்தத் துடிக்கும். அது தான் உண்மையான ஒளி. ஒளிபொருந்திய ஒளி. அவற்றை உடையவர்களே உண்மையில் ஒளிவுடையவர்கள். மற்றோர்கள் ஒளியில் இல்லை. பார்ப்பவரின் பிழை அது. ஒளிவுடையவர்கள். அவர்களாக நாம் இருக்கவேண்டும் என்பது தான் என் கனா.

 

முதலில் ஒளி என்பதை என்னவென்று வரையறுத்துக் கொள்வோம். இன்னதென குறிப்பிட்டுக் கூறாமல் தேவை இருக்கும் ஒன்றை ஒளி எனக் கூறலாமா? கூறலாம் ஆனால் ஒரு நிபந்தனை. தேவை இருப்பது மட்டும் ஒளியல்ல. தேவை இல்லாததாய் தெரிந்தாலும் சிலவை ஒளியாக இருக்கிறது. அதனை நாம் ஒளி என்று தேடிச் செல்லாமல் இருந்தாலும் அவை நம் வாழ்க்கைக்கு அவசியமாய் இருப்பன. அது நமக்கே தெரியாது. ஆனால் அவையும் வேண்டும். ஒளி என்பது இன்னதென ஒளியில் வைத்து சோதித்துப் பார்த்து தெரிந்து கொள்ள முடியாத ஒன்று. கரைந்து கடக்கும் ஒன்று. ஆனால் எல்லோரும் உணரக் கூடியது. எல்லோர் மனதும் அதை நோக்கிப் பாயக்கூடியது. ஒரு வகையில் அனைவரும் அதை நோக்கிப் பாயும் வகையில் தான் வடிவமைக்கப் பட்டுள்ளோம். வளர்ந்து வந்துள்ளோம்.

 

வாழ்கையில் பல்வேறு சூழ்நிலையிலும் சமயத்திலும் ஒளியைப் பற்றிய நம் கருத்து மாறுபட்டுக் கொண்டே வந்துள்ளது. வருகிறது. வரும். வேலை, பணம், பதவி, காதல், மணம், விடுதலை என்பன போன்றவை பல சமயங்களில் பலருக்கு ஒளியாய் தெரிந்து மரித்திருக்கின்றன. உண்மையில் ஒளி மாறவில்லை. ஒளி பற்றிய நம் கண்ணோட்டம் தான் மாறிக் கொண்டே வருகிறது. ஒளியைப் புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம். முடியவில்லை என்பதே உண்மை. ஒளியைத் தேடுபவனும் அதனை அடைந்தவனும் மற்றொரு ஒளியைத் தேடிச் சென்று கொண்டு தான் இருக்கிறான். இது ஒரு வகையில் முடிவற்றதாய் தெரிகிறது. அந்த ஒளியைத் தான் நானும் தேடிக் கொண்டிருக்கிறேன். ஒளி என்று நேற்று வரை பணத்தை நினைத்தேன். இன்றில்லை. புரிந்துவிட்டது. இப்போதைக்கு சொந்தக் காலில் நிற்பது எனக்கு ஒளியாய் படுகிறது. அதாவது சுயம். சுயமாக இயங்கும் தன்மை.

 

அதைத் தான் நான் காஸாவிற்கு என் சார்பாக அளிக்க விரும்புகிறேன். ஒளியின் வாசலை திறக்க விரும்புகிறேன். எல்லோரும் செய்வதைப் போல் ஒரு பள்ளியையோ கல்லூரியையோ துவங்குவதில் எனக்குத் துளியும் உடன்பாடில்லை. நான் பிறரைப் போல் என்றும் இருந்ததில்லை. தனித்துவம் என்றும் என்னிடமிருந்து வெளிப்படும். தி க்ரீனும் அப்படித்தான் என்று இன்று வரை எண்ணி வருகிறேன்.  என் எண்ணத்தை வெளிப்படையாக சொல்வதில் எனக்கு எந்தத் தயக்கம் இல்லை.

 

வெளிப்படையாகவே சொல்கிறேன் எனக்கு பள்ளி கட்டும் யோசனை பிடிக்கவில்லை. இங்கு டிகிரி முடித்துவிட்டுக் கார் ஓட்டும் பலரைக் காணமுடிகிறது. தேவை கல்வி அல்ல. வேலை. அதைவிட சுதந்திரம். நம்மால் சுதந்திரம் வாங்கிக் கொடுக்க முடியாது. வேலைவாய்ப்பு கொடுக்க முடியும். தன் காலில் சுயத்தில் நிற்கக் கற்றுக் கொடுக்க முடியும். என்னால் எப்படி என்று தெளிவாகக் கூற இயலவில்லை. இதைச் செய்ய வேண்டும் என நினைக்கிறேன். ஆனால் அதை எப்படி, எந்த விதத்தில் நிறைவேற்றுவது என்பது மட்டும் தெரியவில்லை. அதற்கான திட்டத்தையும் வழியையும் வகுக்க எனக்குச் சிலரது உதவி தேவை. நிச்சயம் என்னால் செய்ய முடியும். நான் தினமும் இங்கு அழுகிறேன். என்றைக்கும் என்வாழ்வில் இப்படி அழுததில்லை. அவ்வளவு வேதனையாக இருக்கிறது.

 

இவர்களின் ஊடாக என் தேசத்தின் நிலை சுதந்திரம் வாங்குவதற்கு முன் எப்படி இருந்திருக்கும் என ஊகிக்கிறேன். சுதந்திரத்திரத்திற்கான ஏக்கம் எப்படிப்பட்டதென்று என்னளவில் நான் உணர்ந்தாலும் நாடளவில் என்னால் உணர முடியவில்லை. ஒரு தனி மனிதன் தான் சார்ந்திருப்பதை விலக்கிச் சுதந்திரமாக ஒளியில் பிரவேசிக்க ஏங்கும் அந்த நிலையை விட இது கொடுமையாய் இருக்கிறது. ஒரு நாடே ஒளிக்கு ஏங்கிக் கிடக்கிறது. வீரியம் வலி கொடுக்கிறது. இவர்களால் என் தேசத்தை நான் அதிகமாக நேசிக்கத் துவங்கியுள்ளேன். என் தேசம் அமைவதற்கு என் முன்னோர்கள் இப்படித்தானே ஏங்கி இருப்பார்கள். அவர்களது ஏக்கம் தானே இன்று நம்மை ஒருங்கிணைத்துள்ளது. என் தேசம் சுதந்திரமடைந்த பிறகு தன் காலில் நிற்க எப்படி திணறியதென்பதையும் இன்று எப்படி உலகின் முக்கிய நாடுகளின் வரிசையில் நிற்கிறது என்பதையும் நான் அறியாமல் ஒன்றும் இல்லை. தன் நாட்டையும் மக்களையும் மட்டும் நேசிப்பவனை விட அனைத்து நாடுகளையும் மக்களையும் நேசிப்பவனே உண்மையில் தன் நாட்டை அதிகம் நேசிக்கிறான்.  இது சொல்லால் புரியாது, சற்று உணர்வூட்ட வேண்டும்.

 

இப்போது இதனை எழுதும் போது என்னுள் பல்வேறு உணர்ச்சிகள் எழுந்து வீழ்கின்றன. திடீரென்று புல்லரிக்கிறது, கண் கசிகிறது, மூச்சுத் தடுமாறுகிறது, நெஞ்சம் படபடக்கிறது. எவ்வளவு உளப்பூர்வமாய் இந்த ஊர் என்னைப் பாதித்திருக்கிறது. எண்ணிப் பார்த்தால் மெய் சிலிர்க்கிறது. சிலவை நம்மை அறியாமலே நமக்குள் புகுந்து கொள்கின்றன. நல்ல செய்தியை உங்கள் பக்கத்திலிருந்து எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.

 

 

 

We are not obliged to answer a question which questions itself whether it bears quality to  question.

 

தான் கேள்வி தானா என சந்தேகிக்கும் கேள்விக்கு பதிலளிப்பது எங்கள் மீது கடமை இல்லை. உங்கள் கேள்வி அப்படித் தான் உள்ளது. எங்கள் கேள்விக்கு பதில் தேட உங்களைப் பணிக்கிறோம். உங்கள் மெய்லில் எழுதியுள்ளது போல் ஒளி ஒளி என்று எங்களால் பேச முடியாது. இங்கு தத்துவங்களுக்கு வாய் கிடையாது. அவற்றால் பேச முடியாது. என்ன செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும் எனத் தெளிவாக இங்கே பேசுவது அவசியமாகிறது. உங்கள் பார்வையில் இருந்து சொல்வது சரியாகக் கூட இருக்கலாம். ஆனால் அவற்றை செயல்படுத்த தெளிவான முடிவுகள் எங்களுக்குத் தேவை. அது இருந்தாலே போதும் வேறொன்றும் தேவை இல்லை. அது உங்களிடம் குறைபடுகிறது. புரிந்து கொள்ளுங்கள்.

 

காஸாவின் நிலையை தாங்கள் முன்பு அனுப்பியிருந்த ரிப்போர்ட்டில் இருந்து கண்டோம். உங்களுக்கு எங்கள் நன்றியும் வாழ்த்துக்களும். அவை மிக ஆழமான கவனிப்பாகத் தன்னை வெளிக்கட்டுகிறது. மகிழ்ச்சி. தங்கள் ரிப்போர்ட்டிங் எங்களை மெய் சிலிர்க்கச் செய்கிறது. அதில் எந்த சந்தேகமும் இல்லை. அதேபோல் நிறுவனத்தின் முடிவுகள் தவறெனக் கூறி திருத்துவதிலும் தவறில்லை. ஆனால் அதற்கு முன் தெளிவான முடிவொன்றை நீங்கள் அடைந்திருக்க வேண்டும். இல்லையேல் அது நிறுவனத்தின் முன் வாதிடாது.

 

எதுவாயினும் தெளிவான முடிவுடன் எங்களை அனுகவும். இப்போதைக்கு தாங்கள் காஸா சென்ற வேலை முடிந்துவிட்டதால் அங்கிருந்து கிளம்பும்படி அறிவுறுத்தப்படுகிறீர்கள். உங்களுக்காக ஐக்கிய அமீரகம் காத்திருக்கிறது. இந்த மெய்லுடன் அதற்கான ஆவணங்களும் அனுமதிச்சீட்டுகளும் இணைக்கப்பட்டுள்ளது. கிளம்பவும்.

 

 

கண்கள் அதனை நம்ப மறுத்தன. காஸாவைவிட்டுக் கிளம்பு. அது கட்டளையாய் தொனித்தது. சமரசமற்ற கட்டளை. எல்லாம் ஆயத்த நிலையில் எடுத்துக் கொடுக்கப்பட்ட பின் பேசி எந்தப் பயனும் இல்லை. யாரையும் உதவிக்கும் அழைக்க தயாராய் இல்லை. தன்னுள் கேள்வி கேட்டுக்கொண்டான்.

 

உண்மைதான். தெளிவான முடிவில்லாமல் எப்படி ஒன்றை அனுகுவது? யார் தான் ஒப்புக் கொள்வார்கள்? வாழ்க்கையில் ஒவ்வொரு அடியையும் தெளிவான முடிவுடன் தான் அனுகுகிறோமா? இல்லை தான். தெளிவாகத் தெரிந்தால் அது வாழ்க்கையே இல்லையே. அப்படி இருக்கையில் அதெப்படி தெளிவான முடிவு என்று ஒன்று இருக்கும்? வாய்ப்பே இல்லை. இருந்தாலும் இவர்கள் இப்படித்தான். உலகம் இப்படித்தான். நடிக்க வேண்டும். தெளிவாகத் தெரிந்தாற் போல் நடிக்க வேண்டும். அல்லது உண்மையிலேயே திரைக்கு அப்பால் நோக்கும் பார்வை கொண்டிருக்க வேண்டும். இரண்டும் இல்லை என்றால் இப்படித்தான். உண்மையைப் பேசினால் இப்படித்தான். அவர்கள் கூறுவதில் என்ன தவறு? அவர்கள் தெளிவான முடிவை எதிர்பார்ப்பது இயற்கை தான். அவர்களுக்கு அந்த யோசனையால் என்ன விழையும் எனத் தெளிவாகத் தெரிந்தால் தானே துணிந்து இறங்க முடியும். இது தனி மனிதன் சார்ந்ததல்லவே. முடிவுகளில் தெளிவு வேண்டும். இதை எதிர்பார்ப்பதில் எந்தத் தவறும் இல்லை.

 

ஒன்று தெளிவாகத் தெரிந்தாற் போல் நடிக்க வேண்டும் இல்லை உண்மையிலேயே திரைக்கு அப்பால் தெளிவாக நோக்கும் பார்வை கொண்டிருக்க வேண்டும்.

 

 

 

ஐக்கிய அரபு அமீரகம். அதே இனம். அதே மொழி. அதே மதம். ஆனால் வாழ்க்கை வேறு. ஒரு கண்ணில் வெண்ணெய். மறு கண்ணில் சுண்ணம். காஸாவைக் கண்ட கண்களுக்கு அமீரகம் இப்படித் தான் தெரியும். தொடும் பொருட்கள் எல்லாவற்றிலும் ஒரு உச்சத்தை, ஒரு உன்னதத்தை இங்கே காண முடியும். அனைத்திலும் இங்கே மிதமிஞ்சி வழிவது எண்ணெய், கண்ணீர் அல்ல.

 

தன் நினைவுகளின் சுழியில் சிக்கி உலக நினைவின்றிப் பித்தனைப் போல் விமான நிலையம் விட்டு வெளியே வந்திருந்தான். கால்கள் அமைதியான இருட்டுப் பகுதியை நோக்கி தானாய் நடந்தன. ஒளியற்ற இடத்தில் தன் ஒளியற்ற மனதை ஒன்றிணைத்து ஓர் ஓரத்தில் இருந்த திட்டில் அமர்ந்தான். நேரம் தற்போது சார்பில் இல்லை. தன்னை அவன் கண்டுகொள்ளாவிட்டாலும் அது ஒருபுறம் அதன் போக்கில் ஓடிக்கொண்டிருந்தது.

 

வாழ்க்கை ஏன் என்னை காஸாவிற்குள் கொண்டு சென்றது? அதைப் பார்க்காமல் இருந்திருந்தால் நிம்மதியாக இருக்குமே? நிம்மதிக்காக பொய்யில் வாழ முடியாது. இறந்தாலும் மெய்யில், ஒளியில் இறக்க வேண்டும், எத்தனை வலிய வேதனையை அது கொடுத்தாலும் சரி.

 

தெளிவில்லாத மனதை இங்கேயும் ஹஸன் கொண்டு வந்திருந்தான். காஸாவிற்குள் என்று நுழைந்தானோ அன்றே மனம் குழப்பத்திலும் தெளிவின்மையிலும் வலியிலும் சிக்கத் தவிக்கத் துவங்கியது. உண்மைகள் என்றும் அப்படித்தான். தன்னைத் தாங்கக் கூடிய மனங்களுக்கு விடுதலையையும், தாங்க இயலா மனங்களுக்கு விடுதலை அடைவதற்கான பக்குவத்தையும் அளிக்கும். இங்கேயும் பண்படுதல் நிகழ்ந்து கொண்டிருந்தது. வலியும் வேதனையும் தெளிவின்மையும் மனதை எதற்காகவோ தயார் படுத்திக் கொண்டிருந்தது. எதிலிருந்தோ விடுதலை கொடுக்க ஆயத்தமாக்கிக் கொண்டிருந்தது. இருளுக்குப் பின்னே ஒளி. ஒளி வேண்டும். இருள் சூழ்ந்தவனுக்கு ஒளி வேண்டும். ஒளி வேண்டும்.

ஒளி தேடியவனின் மேல் ஃப்ளாஷ் லைட்டின் ஒளி வந்து விழுந்தது. நிமிர்ந்து பார்ப்பதற்குள் ‘ஹஸன் ஆர் யூ ஹியர்?’ என ஒலி வந்து சேர்ந்தது.

 

வாழ்க்கையில் எங்கோ, தெரியாத, முன்பின் அறிமுகமில்லாத இடங்களில் தனியாய் தனக்குள் சென்று கொண்டிருக்கும் வேளையில் இப்படி ஒரு சத்தம் வருவதென்ப்பது வருணிக்க முடியாதது. நிமிர்ந்த நொடி மனம் பதறியது.

 

ரைஹானா.

 

’ஹஸன். வாட் ஆர் யூ டூயிங் ஹியர்?’

 

கனவுகள் இப்படித்தான் அடிக்கடி நடுவில் வந்து நம்மை குழப்பும். நாம் எதிர்பார்க்காத நபரை நாம் எதிர்பார்க்காத சூழலில் நம்முடன் கோர்த்துக் கதை நகர்த்தும்.

 

‘ஹஸன். ஆர் யூ ஆல்ரைட். ஹியர் ஆர் மை பேரண்ட்ஸ். நாங்க உங்கள எங்கலாம் தேடறது?’

 

கனவுகள் இப்படித்தான். யார் வேண்டுமானலும் எந்த மொழி வேண்டுமானலும் பேசலாம். இங்கே எந்த வரையறைகளும் கிடையாது. அனைத்தும் தான் தோன்றிகள் தான். எண்ணங்கள் விடுதலையடையும் நேரம் கனவுகள் தோன்றும்.

 

’அஸ்ஸலாமு அலைக்கும். எப்டி இருக்கீங்க?’ ரைஹானாவுக்குப் பின் ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒருவரிடமிருந்து. அவருடன் அவர் வயதுப் பெண் ஒருத்தியும் இருபது வயதுப் பெண்ணும் ஹிஜாப்புடன் நின்றிருந்தனர். அவர்களிடமிருந்து தமிழ் வந்தது அவனை ஒரு உலுக்கு உலுக்கியது. இது கனவல்ல நிஜம் என வேர்வையால் நனைத்து நினைவுபடுத்தியது.

 

‘வ ஆலைக்குமஸ்ஸலாம்’ எழுந்து நின்றான்.

 

’எங்கள தெரிதா?’

 

‘இல்ல?’

 

‘இவள?’

 

‘தெரியும். ரைஹானா. நான் இவங்க கம்பெனில தான் வேல பாக்குறேன்’

 

‘இவ கம்பெனி இல்ல. நம்ம கம்பெனி தான். உங்க கம்பெனி தான்.’

 

‘புரியல’

 

‘இப்ப ஒன்னும் அவசரமில்ல. போகப் போக புரியும்’

 

‘நீங்க?’

 

‘நெஜமாவே எங்கள தெரியலையா?’

 

‘இல்ல.’

 

‘நான் ரைஹானாவோட அப்பா, இவங்க அம்மா, அவங்க தங்கச்சி’

 

’தமிழா?’

 

‘ஆமாம்’

 

‘ரைஹானா நீங்க முஸ்லிமா? தமிழா?’

 

‘ஆமாம். இட் மே பீ ஷாக்கிங் ஃபார் யூ. இஸிண்ட் இட்?’

 

‘…..’

 

‘ஆமாம், அவ லண்டன்ல படிச்சிட்டுருக்கா. ’தி க்ரீன்’ல நாமும் ஷேர் ஹோல்டர்ஸ். அதான் அவள அப்படியே பாத்துக்க சொல்லி அப்பாய்ண்ட் பண்ணி இருந்தேன்’

 

’இண்டரஸ்டிங்’

 

‘உங்க அத்தா எங்களப் பத்தி எதுவும் சொன்னதில்லையா?’

 

‘அவரா? அவர் எதுக்கு சொல்லனும்?’

 

‘ரிலாக்ஸ். மாம் டாட் லெட்ஸ் லீவ். மத்ததெல்லாம் வீட்ல பேசிக்கலாம்’

 

 

’நீங்க? அவருக்கு தெரிஞ்சவங்களா?’

 

‘யாருக்கு?’

 

‘எங்கப்பாவுக்கு?’

 

‘தெரிஞ்சவங்களா? ஹஹா’

 

‘…….’

 

’நான் உங்கத்தா கடையில தான் வேல பாத்தேன் தெரியுமா?’

 

‘……’

 

‘நீ அப்ப பிறக்கல. உங்க அத்தாவுக்கே அப்ப கல்யாணம் ஆகல. என்ன எப்பவுமே அவர் வேலை பாக்கிறவனாவே பாத்தது கிடையாது. என்ன மட்டுமில்ல அவர்கிட்ட வேலை பாத்த எல்லாரையுமே அவர் அப்டித்தான் பாத்தாரு. ஆனா என்கிட்ட அவருக்குத் தனிப் பிரியம்.’

 

‘……’

 

‘அவர் தங்கச்சியையே எனக்கு கட்டிக் கொடுத்தாரு.’

 

‘……’

 

‘நாங்க அங்க இருந்தப்போ நிறைய பிரச்சன. ரைஹானா அங்க தான் பிறந்தா. உன்னவிட ரெண்டு வயசு மூத்தவ. அவ பிறந்து கொஞ்ச நாள்ல சில பிரச்சனையால நான் அங்கிருந்து சவூதிக்கு வந்துட்டேன். அங்க அஞ்சு வருஷம் பெட்ரோல் பல்க்ல வேல பாத்தேன். அந்த ஓனருக்கு என் மேல அவ்ளோ நம்பிக்க. என்னைய அவருக்கு சொந்தமா இருந்த எண்ணை கம்பனிய நிர்வாகம் பண்ணச் சொன்னாரு. நிர்வாகம்னா, கம்பெனிக்குத் தேவையான ஆட்கள நியமிக்கிறது தான் வேல. அத அப்படியே செய்ய முடியாது. ஏஜென்ஸி ஆரம்பிச்சு செய்யனும். ஏஜென்ஸி ஆரம்பிக்க ரொம்ப செலவாகும். என்ன செய்றதுன்னே தெரியாம இருந்தேன்.’

 

‘……’

 

’அத்தாகிட்ட வேலை செய்யலைனாலும், எதா இருந்தாலும் அவர்கிட்ட கலந்துக்கிறது என் வழக்கம். இதப் பத்தி நான் அவர்கிட்ட பேசினேன். ஒடனே ஊருக்கு கிளம்பி வரச்சொன்னாரு. நானும் போனேன். அவர் ரொம்பக் கஷ்டப்பட்டு சம்பாதிச்சது எல்லாத்தையும் அவர் தங்கச்சி பேர்ல எழுதி வச்சிட்டாரு. நாங்க எவ்ளோ சொல்லியும் கேக்கல. இதப்பத்தி யார்கிட்டயும் அவர் கலந்துக்கல. நான் குடும்பத்தோட வந்துட்டேன். நீலாம் அப்ப சின்னப் பையன்.  அதுக்கப்பறம் அவர் பெரிசா எதுவும் சம்பாதிக்கல.’

 

‘…..’

 

‘நான் அதுக்கப்பறம் சம்பாதிச்சதெல்லாம் அவரால தான். இன்னிக்கு இந்த நிலைமையில இருக்கதுக்கு காரணம் அவர் தான். இந்த விசயம் ஊர்ல யாருக்கும் தெரியாது. உங்க அம்மாக்குக் கூட தெரியாது. அம்மா ரொம்ப வெகுளி எதைச் சொன்னாலும் அவ்வளவு சீக்கிரம் புரியாது. நாங்க அதுக்கப்பறம் அங்க வரவே இல்ல. இங்கயே எங்க காலம் போயிடுச்சு. எங்களப்பத்தி அங்க உங்கத்தாவத் தவற யாருக்கும் தெரியாது ஆனா உங்களப் பத்தி எங்களுக்கு நல்லாவே தெரியும். அங்க என்ன நடக்குதுன்னு நல்லாவே தெரியும். ஒன்னு தெரியுமா? நீ டெல்லிக்கு வேலைக்கு போறதுக்கு முன்னாடியே உனக்கு இங்க வேலை ரெடியாய்டுச்சு. அத்தா தான் உங்கிட்ட சொல்ல வேணாம்னுட்டாரு’

 

’இப்ப நான் இங்க எதுக்கு வந்திருக்கேன். தி க்ரீன் ஏன் என்ன இங்க வரச் சொல்லனும்?’

 

‘ஓ ஆமா. உனக்கு எதுவும் சொல்லவேணாம்னு அத்தா தான் சொன்னாரு. அதான் கம்பெனில இருந்து மெய்ல் அனுபினாங்க. நாளைக்கு ரைஹானாவுக்கு நிச்சயம் பண்ணப்போறாங்க. உங்க குடும்பம் அல்ரெடி இங்க வந்துட்டாங்க. வீட்ல தான் இருக்காங்க. உன்கிட்ட சொல்ல வேணாம்னு தான் சொன்னாங்க ஆனா என்னால மறைக்க முடியல’

 

‘அப்ப எனக்கு வேலை கிடச்சது உங்களால. சரிதானே?’

 

‘அப்டி இல்ல. உனக்கும் தெறம இல்லாம இல்ல.’

 

‘நான் கேக்கிறது புரியும்னு நினைக்கிறேன். எனக்கு உங்க கம்பெனில வேலை கிடச்சதுக்கு நான் காரணம் இல்ல, அத்தா தான் காரணம் இல்ல?’

 

‘இல்ல. உன் தெறமை தான்’

 

‘போதும் என் தெறமைய பத்தி எனக்கு நல்லாத் தெரியும்’

 

‘உங்க அத்தா குடுத்த பணம் தான் இது எல்லாம். அப்டி பாத்தா உன் கம்பெனி தானே. ’

 

‘இப்ப ரொம்ப கரெக்ட்டா சொன்னீங்க. அவர் பணம். ரொம்ப சரி. ரொம்ப சரி. கொஞ்சம் கார நிறுத்திறீங்களா’

 

‘என்ன?’

 

‘கார ஓரமா நிறுத்துங்க நான் இறங்கிக்கிறேன்.’

ஒளி 222 கிராம்: பகுதி 12

ஒளி 222 கிராம்: பகுதி 12

 

’கீஃபக் ஹஸன்’

 

‘பார்டன். ஐ டோண்ட் ஸ்பீக் அரபிக்’

 

‘இஸிட். யூ வேர் ப்லேப்பரிங் உம்மா’

 

‘உம்மா. இல்ல அம்மா. மீன்ஸ் மாம் இன் மை மதர் டங். எனக்கே தெரியல. ஐ வாஸ் அனவேர். மயக்கதில உளறீருப்பேன். டாக்டர்.’

 

‘இஸிட். வீ டூ கால் ஆர் மாம் உம்மா. அரபில அம்மாவ உம்மானு கூப்பிடுவோம். அதான் உங்களுக்கு அரபி தெரியுமோனு நினச்சுட்டேன். ஐம் டெரிப்ளி சாரி. வீ கான் டாக் இன் இங்லிஷ்.’

 

’ஸ்யூர். எவ்ளோ நேரமா நான் மயக்கமா இருக்கேன்.’

 

‘அஞ்சு மணிநேரம். ஃபைவ் ஹார்ஸ் விதவுட் கான்ஸைன்ஸ்.’

 

‘அஞ்சு மணிநேரமா? என்ன சொல்றீங்க? அதெப்படி?’

 

‘யா. யூ வேர்.’

 

‘எனக்கு என்ன ஆச்சுனு சொல்ல முடியுமா? வில் அ கேஸ் ஆஃப் தட் கேர்ள் கேன் டூ சச் மேஜிக்?’ இரண்டாம் கேள்வியை சற்று குறைந்த சத்தத்தில் கூறினான்.

 

‘கேர்ள்? கேஸ்? மேஜிக்? பெண்? பார்வை? மாயம்? ஆர் யூ ஆல்ரைட்?’

 

‘யா. ஐம் ஆல்ரைட்.’

 

‘தென். ஏன் உளர்றீங்க?’

 

‘உளர்றனா? எனக்கு அப்பறம் எப்டி இப்டி ஆச்சு?’

 

‘யல்லாஹ். யூ வேர் ஃபுட் பாய்ஸண்ட்.’

 

‘ஃபுட் பாய்ஸனா?’

 

‘ஆமாம். இன்னிக்கு நீங்க காலைல இருந்து என்ன சாப்ட்டீங்க?’

 

‘நத்திங்?’

 

‘நத்திங். அப்பறம் இந்த மீன் எல்லாம் எங்க இருந்து வந்தது?’ ஹஸனை வாந்தி எடுக்க வைத்து வெளியில் எடுக்கப்பட்ட அந்தத் திரவங்கள் இருந்த வாளியை நோக்கி கை காட்டினார்.

 

’யாயா. நான் காலையில கடல் பக்கம் போனேன். தேர் ஐ ஹேட் ஃபுட். ஒரு மீன்பிடிக்கிறவர்கிட்ட தான் சாப்பிட்டேன்’

 

’உங்களுக்கு அந்த மீன் ஒத்துக்கல. ஸம் பேட் ப்ரோட்டீன் தேர். உங்களுக்கு ஃபுட் பாய்ஸன் ஆயிடிச்சு. அதான் மயக்கம் வந்து கீழ விழுந்துட்டீங்க.’

 

’உங்களுக்கு அவங்கள முன்னாடியே தெரியுமா? இங்க வந்திருக்கீங்களா? அரபிலாம் பேசறீங்க’

 

’யேஹ். திஸ் இஸ் மை ஃபோர்த் விஸிட். அரபி கத்துக்கிட்டேன். அப்பறம் அவங்கனா யாரு?‘

 

‘நாலு தடவையா? ஏன் சொல்லவே இல்ல. அவங்கனா அன்னைக்கு ஸ்கூல்ல போய் பாத்தோமே அவங்க. உங்களக் கூட பக்கதில வந்து பாத்தாங்களே அவங்க. மாயம், மந்திரம், விடியல் அவங்க’

 

’அவங்கள எனக்கு காஸாக்கு வரதுக்கு முன்னாடியே தெரியும். ஸி இஸ் அன் இங்லிஷ் டிச்சர் ஹியர். அண்ட் உனக்கு ஒன்னு தெரியுமா? அவங்க பார்ஷியலி ப்ளைண்ட். அதான் பக்கத்தில வந்து என்னைய பார்த்தாங்க.’

 

’பார்ஷியலி ப்ளைண்ட்னா?’

 

‘அதாவது கொஞ்சம் கண் தெரியாது. ரொம்ப பக்கத்தில வந்து பார்த்தாத் தான் தெரியும். ஒருமாதிரி எல்லாம் அழிஞ்ச மாதிரி ப்ளாட்டட்டா தெரியும்’

 

‘ஓ. அப்டியா? எதனால இப்படி ஆச்சு அவங்களுக்கு?’

 

‘அது ஏதோ கேஸ் பட்டு வந்த பிரச்சனை. அவங்களுக்கு ஒன்பது பத்து வயசு இருக்கும் போது நடந்த போர்ல ஏதோ கேஸ் பட்டு அப்டி ஆயிடுச்சி’

 

‘மை காட். பாவம்.’

 

‘அவங்களுக்கு ஸிம்பதிலாம் பிடிக்காது. ஷீ லைக் டு பி ட்ரீட்டட் நார்மல்’

 

‘ஓகே. நேத்து அவங்கள எதுக்குப் போய் பாத்தோம்? நாம இங்க என்ன வேலையாத் தான் வந்திருக்கோம்?’

 

’இங்க யூ.என் சார்பா ஒரு ப்ராஜக்ட் பண்ண வந்திருக்கோம். இங்க இருக்க நிலைமைய அனலைஸ் பண்ணி அத வச்சு எதாவது ப்ராஜக்ட் ஸ்பான்ஸர் பண்ணலாம்னு நம்ம கம்பெனி முடிவெடுத்திருக்கு. அதான் இங்க வந்தோம்.’

 

‘அது தெரியும். இப்ப நாம என்ன பண்ணப்போறோம்?’

 

’டோண்ட் கெட் ரஷ் பேபி. வீ வில் டூ இட். இன்னும் மூனு நாள்ல ரமதான் ஃபாஸ்டிங் தொடங்கிடும். எஜுகேஷனல் இன்ஸ்ட்டிட்யூட்ஸ் வில் பீ சம்வாட் ஃப்ரீ. அப்ப நாம ஆரம்பிப்போம். ஒகே.’

 

‘ஓ.கே.’

 

‘அதுவரைக்கும் கொஞ்சம் உடம்ப பாத்துக்கோ. யார்கிட்டயாவது எதையாவது வாங்கி சாப்பிட்டு எதையாவது வரவழச்சுக்காத.’

 

 

 

’ஐ ஹெர்ட் யூ ஸ்பீக்கிங் டிஃப்ரண்ட் லாங்குவேஜஸ். உங்களுக்கு மொத்தம் எத்தின மொழி தெரியும்?’

 

‘வாட் ஷால் ஐ ஸே. எனக்கு தமிழ் மதர்டங். தமிழ் தெரியுமா?’

 

‘நோ’

 

‘ஓ.கே. ரொம்ப பழமையான மொழி. இட்ஸ் ஓல்டர் தான் அராபிக்’

 

‘இஸிட். இந்தியன்ஸ் ஹிந்தில பேச மாட்டீன்களா?’

 

‘இல்லங்க. எங்க நாடு ஒன்னும் காஸா மாதிரி சின்ன ஏரியா கிடையாது. நூறு கிலோமீட்டருக்கு வேற மொழி, வேற கலாச்சாரம், வேற மக்கள்’

 

‘ஆ ஹான். ஐ கெட் இட். இத ஒன்ஸ் நான் கேள்விப்பட்டிருக்கேன்.’

 

‘அப்டியா? எங்கிருந்து?’

 

‘ஹிந்தி மூவிஸ்ல இருந்து’

 

‘யா. நீங்க முன்னாடியே சொல்லி இருக்கீங்களே. இங்க வேறென்ன ஃபில்ம்ஸ் எல்லாம் பாப்பீங்க’

 

‘ஹாலிவுட், அராபிக், ஹிந்தி’

 

‘ஹிந்தில உங்களுக்கு பிடிச்ச படம் எது?’

 

‘ம். தேர் ஆர் மெனி. ஆனா நினைவில்ல. எனக்கு மொழி தெரியாதில்ல அதனால மறந்துடுவேன்’

 

’ம் ஓகே’

 

‘உங்களுக்கு முஹம்மத் அஸத் தெரியுமா?’

 

‘யார் அது?’

 

‘இந்த வருஷம் ஈஜிப்ட்ல நடந்த அராப் ஐடல்ல டைட்டில் வின் பண்ண பர்ஸன். ஹீ இஸ் ஃப்ரம் காஸா. ஃப்ரம் ரஃபா ரெஃப்யூஜி காம்ப்’

 

‘அதென்ன அராப் ஐடல்?’

 

‘இட்ஸ் லைக் அமெரிக்கன் ஐடல்’

 

‘ம் புரிது. சிங்கிங் ரியாலிட்டி ஷோ?’

 

’யெஸ். யூ ஆர் கரெக்ட்’

 

‘ம்’

 

‘அஸத் ரொம்ப ஸ்மார்ட். ஃபைனல் ரவ்ண்ட்ல ஆலி கெஃபிய்யான்ற பாட்ட பாடி ஃபிலிஸ்தீனுக்கு பெருமை சேர்த்தார்’

 

‘ஆலி கெஃபிய்யா?’

 

‘ஆங். ரைஸ் தி கெஃபிய்யா. கெஃபிய்யா உயரட்டும்’

 

‘கெஃபிய்யா?’

 

‘ஹெட் க்ளாத். யாஸர் அராஃபத் தலையில போட்டிருப்பாரே’

 

‘ஓ. யா ஐ கெட் இட். ஹஜ்ஜுக்கு போய்ட்டு வாங்கிட்டு வருவாங்களே அதான.’

 

’எக்ஸாக்ட்லி. இட்ஸ் அ கைண்ட் ஆஃப் பாட்ரியாட்டிக் ஸாங் ஹியர். அஸத் இஸ் தெ டாக் ஆஃப் தி அராப் வேர்ல்ட். கேர்ள்ஸ் ஆர் க்ரேஸி அபௌட் ஹிம். பொன்னுங்களோட ஓட்டு அவருக்குத்தான். அவர் தான் ஃபலஸ்தீனோட சார்பா நியமிக்கப்பட்டிருக்க தூதர்’

 

’ஒஹோ. எங்க ஊர்ல ஏ.ஆர். ரஹ்மான்னு ஒருத்தர் இருக்காரு. ஹி காட் ஆஸ்கார் டூ யூ நோ’

 

‘ஆ ஹான்.’

 

‘நீங்க நிறைய பாட்டு கேப்பீங்க போல இருக்கு’

 

’யெஸ். டூ யூ நோ அனதர் திங்?’

 

’என்ன?’

 

‘ஐம் அ ஹாஃபிதா டூ’

 

‘ஹாஃபிதா?’

 

‘நான் குர்ஆன முழுசா மனப்படம் பண்ணி இருக்கேன்’

 

’ஹாஃபிதா யெஸ். குட். கீபிட் அப்’

 

’நிச்சயமா’

 

‘ஓகே. யூர் மதர்டங் இஸ் தமிழ். தென்?’

 

‘தமிழ், இங்லிஷ், ஜெர்மன் மூனும் சொந்தமா எழுதிற அளவுக்கு தெரியும். ஹிந்தி, மலையாளம் பேசுவேன். மத்த மொழிலாம் ஓரளவுக்கு புரிஞ்சுக்குவேன். நான் இதுவரைக்கும் கேட்டதே இல்லாத மொழியக் கூட என்னால ஓரளவுக்கு புரிஞ்சுக்க முடியும்’

 

‘ஃபாபுலஸ். யூ மஸ்ட் ஹாவ் பீன் கிஃப்டட் டு பீ பார்ன் இன் ஸச் கண்ட்ரி. இங்க பாருங்க நாங்க ரொம்ப கஷ்டப் பட்றோம்.’

 

‘உண்ம தான். ஆனா நான் முன்னாடியே சொன்ன மாதிரி நீங்க எலெக்ட்ரிசிடி பிரச்சனையையும், மத்த அரபு நாடுகளப் போலவும் இருக்க முடியலையேன்ற பிரச்சனையையும் பிரச்சனையாவே நினைக்காதிங்க. எங்க நாட்ல இதவிடப் பிரச்சனை இருக்கு.’

 

’வல்லாஹ். நான் அதல்லாம் பத்தி பெரிசா சொல்ல வரல. கொஞ்சம் பாருங்க. எங்க நாட்ல அனெம்ப்ளாய்மெண்ட் எப்டி இருக்குனு. டிகிரி முடிச்சவங்கள்ள 90% ட்ரைவராதான் வேலை பாக்குறாங்க. பல பேர் ஃபேஸ்புக்ல ஆளுக்கொரு பேஜ் ஓபன் பண்ணி இங்க நடக்கிற விஷயத்த வெளியுலகத்துக்கு சொல்றேன்ற பேர்ல ஏதோ செஞ்சிட்டுருக்காங்க. எப்படியாவது அட்லீஸ்ட் ஜர்னலிஸ்ட்டாவாச்சும் வேலை கிடச்சிடாதானு ஒரு ஆசை. மனசு உடஞ்சு பல யூத்ஸ் போர்ன் ஃபில்ம்ஸ் பக்கமும், ட்ரக்ஸ் பக்கமும் போறத கண்கூடா பாக்க முடியுது. தேர் இஸ் நோ ஜாப் ஆப்பர்ச்சூனிடி ஹியர். நாங்க அன்னனிக்குசெலவுக்கு சம்பாரிக்கிறதுக்கே பெரும்பாடு படறோம்.’

 

‘யே ஆஃப் கோர்ஸ். நான் உங்க நாட்ல ஒரு விஷயத்த கவனிச்சேன். நீங்க யாரும் அவ்வளவு பெரிசா சேவிங்ஸ் சேமிப்பு இன்வெஸ்ட்மெண்ட்னு எதிலையும் கவனம் செலுத்திற மாதிரித் தெரியல. கன்ஸ்யூமரிஸம்ன்ற நுகர்வு மனப்பான்மை உங்ககிட்ட அதிகமா தெரிது. நீங்க தெரிஞ்சோ தெரியாமலோ உங்க நடை உடை பாவனை எல்லாத்தையும் வெஸ்டர்ன் கண்ட்ரீஸ் போல அமச்சுக்கிறீங்க. வாட் ஐ மீன் டு ஸே இஸ் தோ யூ ஸீ இஸ்ரேல் அஸ் எனிமி ஸ்டேட், யுவர் மாடல் இஸ் இன்க்ளைண்ட் டுவர்ட்ஸ் தெயர் வே ஆஃப் லைஃப். நீங்க என்ன தான் இஸ்ரேல எதிரி நாடுன்னு சொன்னாலும். உங்களோட வாழ்க்கை முறை மேற்கத்திய ஸ்டைல் பக்கம் தான் சாயுது. தெரிஞ்சோ தெரியாமலோ இஸ்ரேல் மாதிரி இருக்கனும்னு ஆசப்படறீங்க’

 

‘நோ. அப்டிலாம் இல்ல. நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க. எங்கள ஆள்ற கோர்ன்மண்ட் அப்டி. அதான் எங்க நாட்டு யூத்ஸ் நாட்ட விட்டு எப்டியாவது வெளியேறனும்னு ஆசப்படறாங்க.’

 

‘யூ மீன் ஹமாஸ்.’

 

‘யெஸ். ஹமாஸுகு எங்கள ஆளத் தெரியல அவங்க ரொம்ப ரிஜிடா இருக்கதனால தான் எங்களோட நிலம இப்டி இருக்குனு நிறைய பேர் ஃபீல் பன்றாங்க’

 

’இருக்கலாம். ஆனா இந்த நெருக்கடிலயும் ஹமாஸ் தன்னோட மக்கள வச்சிருக்க நிலைமை எனக்கு ஆச்சரியத்த தான் தருது. எங்க நாட்ல அஞ்சு வருசத்துக்கு ஒரு தடவை மாறிற கவர்ண்மண்ட் சிஸ்டம் இருந்தாலும் எங்க நிலைமை இதவிட மோசம் தான்.’

 

’நோ. ப்ராப்பப்ளி நீங்க இன்னும் ரெஃபூஜி காம்ப்ஸ் பக்கம் போனதில்லனு நினைக்கிறேன்’

 

‘ஸாரி. நான் போனேன். அகதிகள் முகாம்ல இருக்கிற நிலைமைய பார்த்தா எனக்கு ரொம்ப பரிதாபமா தான் இருந்தது. ஆனாலும் எங்க நாட்ல இதவிட அதிகமானவங்க இதவிட ஏழ்மையில வாழத்தான் செய்றாங்க. அவங்களுக்கு ரீலீஃப் கொடுக்க எந்த அகதி மூகாமும் கிடையாது கவனிச்சுக்க கவர்ன்மண்ட்டும் கிடையாது தெரியுமா?’

 

‘பட் வீ ஹாவ் வார் ஆன் தி அர்ஜ் ஹியர்’

 

’ஆமாம் அத நான் ஒத்துக்கிறேன். இப்டிப்பட்ட போர் சூழல்ல வாழ்றது ரொம்ப கஷ்டம்ன்றத நான் ஒத்துக்கறேன்.’

 

‘ஐ வாஸ் அபௌட் டூ ஆஸ்க் யூ. ஷால் ஐ’

 

‘ஸ்யூர்’

 

‘இல்ல இந்தியால டவ்ரியா ப்ரைடுக்கு ஹஜ்ஜ குடுப்பாங்களாமே?’

 

‘புரில. தெளிவாச் சொல்லுங்க’

 

‘இல்ல. இண்டியால பொண்ணுங்களுக்கு டவ்ரியா மாப்பிள்ள வீட்ல இருந்து ஹஜ்ஜுக்குக் கூட்டிப்போறதா வாக்குறுதி குடுப்பாங்களாமே.’

 

‘அப்டியா? எந்த மடையன் சொன்னான் உங்களுக்கு?’

 

‘இல்ல. நான் கேள்விப்பட்டேன். ஆம் ஐ ராங்’

 

‘இந்தியால கல்யாணம் ஆகப் பொண்ணுக்கு மாப்பிள்ள டவ்ரி கொடுக்க மாட்டாங்க. மாப்பிள்ளைக்கு தான் பொண்ணு டவ்ரி கொடுப்பாங்க.’

 

‘யல்லாஹ். ஏன்? திஸிஸ் அன் ஃபேர்.’

 

‘காஸா-ல பொண்ணுக்கு மாப்பிள்ள டவ்ரி குடுத்து மாரேஜ் பண்ற மாதிரி இண்டியால மாப்பிள்ளைக்கு டவ்ரி குடுத்து மாரேஜ் பண்ணுவாங்க’

 

‘ஈவன் முஸ்லிம்ஸ்’

 

‘யெஸ். கிட்டத்தட்ட எல்லாரும். இப்ப தான் கொஞ்ச கொஞ்சமா மாறிட்டு வருது’

 

‘வாட் டூ யூ திங்க் அபௌட் திஸ்’

 

‘ஐ ஸே திஸிஸ் அப்ஸ்லூட்லி அ ப்ளண்டர். உங்களுக்குத் தெரிய வாய்ப்பில்ல. எங்க நாட்ல இந்த டவ்ரியால பாதிக்கப்பட்ட பொண்ணுங்களோட வாழ்க்கை ரொம்ப அதிகம். நிறைய பொண்ணுங்க ஏழ்மையால கல்யாணம் ஆகாம இருக்காங்க. ஆனாலும் பிறந்த வீட்ல போய் அத வாங்கிட்டுவா இத வாங்கிட்டு வானு சொல்லி அடிச்சு கொடுமைக்கு உள்ளாகிறவங்களா இருக்காங்க. கணவன், மாமியார், நாத்தனார்னு கொடுமை, தீக்குளிப்புனு டெய்லி ந்யூஸ்ல வந்திட்டே இருக்கும்’

 

’முஸ்லிம்ஸும் அப்டித் தானா? இறைவன் சொன்னத அவங்க ஏன் ஃபாலோ பண்ண மாட்றாங்க’

 

‘ஆமாம். இட் இஸ். இந்தியன் முஸ்லிம்ஸ்கிட்ட  இந்தியாவோட நிறைய கஸ்டம்ஸ் இருக்கும். இந்த வரதட்சணை கொடுமைன்றது இந்தியால காலகாலமா நடந்து வர சம்பரதாயம் எல்லாம் கிடையாது. இப்ப தான் கொஞ்ச நூற்றாண்டா தான் இந்தப் பிரச்சனை இருந்து வருது. இது ஒரு சின்ன சமுதாய நோய் அவ்ளோதான். இட்ஸ் ஜஸ்ட் அ சோஸியல் டிஸீஸ். போகப் போக சரியாகிடும்.’

 

‘யூ ஸே முஸ்லிம்ஸ் டூ டூ த ஸேம். வை?’

 

‘ஆமாம். இந்தியன் முஸ்லிம்ஸ் அப்டி செய்றாங்க தான். நான் இல்லனு சொல்லல. அவங்களுக்கு இஸ்லாம் தெரியாம இல்லை இருந்தாலும் எல்லாரும் செய்றதனால இத செய்யறாங்க. தட்ஸ் ஹ்யூமன் நேச்சர். இது இந்தியால மட்டும் இல்ல எல்லா எடத்திலையும் இருக்கு.’

 

’நோ. அப்டிலாம் இல்ல. பட் திஸ் கஸ்டம் இஸ் ஸோ பேட்’

 

‘அப்டிலாம் இல்லனா? என்ன சொல்லவறீங்க?’

 

‘நோ. அந்த மாதிரி எல்லாம் இங்க கெடையாதுன்னு சொல்லவரேன்.’

 

‘வரதட்சணை மேட்டர்லயா?’

 

‘நோ. எல்லாத்திலையும். எல்லா இடத்திலையும் இது காமன்னு நீங்க சொன்னீங்கள்ல. நான் அப்டி இல்லனு சொல்ல வரேன்’

 

‘மீன்ஸ். நீங்க பர்ஃபக்ட், உங்க சொசைட்டி பர்ஃபக்ட், உங்க கண்ட்ரி பர்ஃபக்ட்னு சொல்லவறீங்களா?’

 

‘நோ. தப்பா எடுத்துக்காதீங்க. நான் அப்டி சொல்ல வரல.’

 

‘அப்பறம் என்ன சொல்ல வறீங்க?’

 

’எங்க கண்ட்ரீல இஸ்லாம முஸ்லிம்ஸ் பர்ஃபக்ட்டா ஃபாலோ பண்றாங்கனுதான் சொல்ல வரேன்’

 

‘அப்டியா? இஸ்லாம நீங்க பர்ஃபக்ட்டா ஃபாலோ பண்றீங்களா? யார் சொன்னா? நீங்களா சொல்லிக்க வேண்டியது தான். உங்க மாரேஜஸ்ல நீங்க நபி சொன்ன எளிமைய ஃபாலோ பண்றீங்களா? நோ. யூ ஆர் நாட். உங்களோட பெர்ஸ்பெக்டிவ்ல இருந்து பாத்தாலும் அது ஆடம்பரம் தான். இன்னிக்கு காஸா போர் சூழல்ல இருக்கதனால வெளியில இருக்கிற அராப் கண்ட்ரீஸ விட ரொம்ப சிம்பிளா இருக்கலாம். நான் சொன்ன மாதிரி இந்தியால டவ்ரி கொடுக்க முடியாம கஷ்டப்படற பொண்ணுங்களோட நிலைமை இங்க சில அராப் கண்ட்ரீஸ்ல பசங்களோட நிலைமயா இருக்கு. அவங்களால பொண்ணு கேக்கிற அளவுக்கு டவ்ரி கொடுக்க முடியல. இந்தியால மாப்பிள்ளை கார், ஃப்ளாட்னு கேக்கிற மாதிரி அங்க பொண்ணுங்க கேக்கறாங்க. அவ்ளோ தான் வித்தியாசம்.’

 

’பட். குர்ஆன்ல பொண்ணு கேக்கிறத மாப்பிள்ளை குடுக்கனும்னு சொல்லி இருக்கே’

 

‘ஆமா. நபியோட காலத்தில எங்கயாவது இப்பக் கேக்கிற மாதிரி பெரிசு பெரிசா ஏதாவது கேட்றிங்காங்களா? நபி மாரேஜ்ஜ எவ்ளோ சிம்பிளா வச்சுக்க முடியுமோ அவ்வளவு சிம்பிளா வச்சுக்கச் சொன்னார். ஏன்னா மாரேஜ் ரொம்ப காம்ப்ளக்ஸா ஆக ஆக தப்பான வழில போறது பெரிகிடும்.’

 

’பட் வீ டோண்ட் ஹாவ் தட் மச் க்ராண்ட் மாரேஜஸ்’

 

‘ஐம் அக்ஸப்ட்டிங். பட் யூ ஆர் நாட் ஃபாலோயிங் ப்ராஃபட். நீங்க உங்க மாரேஜ்ல ஃபாலோ பண்ற பார்ட்டில இருந்து, கார்ல கூட்டிட்டுப்போற வரைக்கும் எல்லாமே அப்டியே வெஸ்டர்ன் ஸ்டைல்ல இருக்கு. இந்தியன் முஸ்லிம்ஸ் எப்படி இந்தியன் கல்ச்சர அல்லது ஹிந்தூஸோட கல்ச்சர பின்பற்றாங்களோ அதே மாதிரி நீங்க வெஸ்டர்ன் கல்ச்சர அல்லது க்ரிஸ்டியன், ஜ்யூஸோட கல்ச்சர்ஸ ஃபாலோ பண்றீங்க.’

 

‘நோ. இங்க நீங்க டாபிக்கையே டைவர்ட் பண்றீங்க. குர்ஆன்ல பெண்ணுக்கு மணப்பரிசு குடுத்து மாரேஜ் பண்ணுங்கனு சொல்றது ’ஃபர்த்’. அதாவது கடமை. குர் ஆன்ல இறைவன் சொன்னா அது கண்டிப்பா கடைபிடிக்க வேண்டியது. ஆனா நபி சொன்னது ‘சுன்னாஹ்’. அத ஃபாலோ பண்றதும் பண்ணாததும் தனிப்பட்ட விருப்பம். நான் கேக்கிறது உங்களுக்குப் புரிதா?’

 

‘கொஞ்சம் தெளிவாக் கேளுங்க.’

 

‘இங்க பொண்ணுங்க நிறைய டவ்ரி கேக்கிறதும், மாரேஜ்ஜ வெஸ்டர்ன் கல்ச்சர்ல செய்றதும் எந்த வகையிலும் குர்ஆனுக்கு எதிரா இல்ல. ஆனா உங்க நாட்டில முஸ்லிம்ஸ் வெளிப்படையா குர்ஆனுக்கு அகைன்ஸ்ட்டா போறாங்க. குர்ஆன் பெண்ணுக்கு ஆண் மஹர் கொடுத்து மாரேஜ் பண்ண சொல்றப்ப அவங்க ஏன் அதுக்கு மாறா போறாங்க. இட்ஸ் மச் பேட். அதத் தான் நான் சொல்லவரேன்’

 

’காட் தி பாய்ண்ட். நீங்க மஹர்னு சொல்லவும் தான் எனக்கு ஞாபகம் வருது. இந்தியன் முஸ்லிம்ஸ் மஹர் குடுக்க மாட்டாங்கனு யார் சொன்னா? பெண்ணுக்கு மாப்பிள்ளை மஹர் குடுப்பார் ’

 

‘அப்பறம் இப்ப தான் சொன்னீங்க பெண் தான் மாப்பிள்ளைக்கு டவ்ரி குடுப்பாங்கனு’

 

‘அது டவ்ரி, வரதட்சணை. இது மஹர், மணப்பரிசு அல்லது மணப்பணம்’

 

’டவ்ரி, மஹர், மணப்பரிசு எல்லாம் ஒன்னு தான்’

 

‘இல்ல இந்தியால மாரேஜ் ஆகும் போது மாப்பிள்ளை குர்ஆன் சொல்றபடி பெண்ணுக்கு மஹர் குடுப்பாங்க. அதுக்குப் பின்னாடி பெண்ணா விருப்பப்பட்டு கொடுக்கிற மாதிரி நகைகளும் பணமும் வாங்குவாங்க. இப்ப ஆயிரம் ரூபாய் மஹர் கொடுக்கிற மாதிரி கொடுத்துட்டு இரண்டு லட்ச ரூபாய் வரதட்சணை வாங்குவாங்க. இந்த ஜுவல்ஸ்ஸ மாப்பிள்ளை வச்சுக்கமாட்டார். அந்தப் பெண் தான் மாரேஜ்ஜுக்குப் பின்னாடியும் வச்சிருப்பாங்க. இந்த வரதட்சணைக்கு பெண்கள் தான் முழுக் காரணம்னாலும் சரி தான்.’

 

‘இஸிட்’

 

‘ஆமாம். நீங்க கேக்கிற மாதிரி குர்ஆன் சொல்றத சரியாத் தான் நிறைவேத்துறாங்க. ஆனா எக்ஸ்ட்ரா கொஞ்சம் சேத்துக்கிறாங்க. எல்லாம் ஒன்னு தான். எல்லா நாட்டிலையும் ஏமாத்திறவங்க இருக்கத் தான் செய்றாங்க. மனுஷன் அப்டிப்பட்டவன் தான். இதில ஆச்சரியப்பட ஒன்னுமில்லை.’

 

‘நோ. எங்க இஸ்லாம் அப்டி இல்ல’

 

‘இன்னொன்னும் உங்ககிட்ட சொல்லவா. ஆனா நீங்க தப்பா எடுத்துக்கக் கூடாது.’

 

‘சொல்லுங்க’

 

‘நான் இந்த விஷயத்த எல்லா அராப் பீப்பிள்கிட்டயும் பாக்குறேன்.’

 

’என்ன?’

 

‘இஸ்லாம் பத்தி அவங்ககிட்ட பேசினா அவங்க சரியா விவாதம் செய்றதில்ல. அதுவும் அராப் இல்லாத முஸ்லிம் பீப்பிள் அவங்ககிட்ட இஸ்லாம் பத்தி விவாதிச்சா சுத்தமா அவங்க சொல்றத காதிலையே வாங்கிறதில்ல. தங்களுக்கு எல்லாம் தெரிஞ்ச மாதிரி நடந்துக்கிறாங்க. தங்கள் மொழியில தான் குர்ஆன் வந்ததனால அத ஒரு பெருமையா எடுத்துக்கிறாங்க. அதனால தங்கள் மொழியில இருக்கிற புத்தகத்த மத்த மொழிக்காரங்கள விட தாங்க தான் நல்லா புரிஞ்சவங்கனு நினச்சுக்கிறாங்க. அராப்ஸ்ட்ட நிறைய நல்ல குணம் இருக்கலாம். ஆனா இந்த பெருமை ரொம்ப அதிகமா தெரிது. அதனால தான் பேசும் போது நடுல ‘எங்க இஸ்லாம்’ ‘எங்க நபி’ ‘எங்க கல்ச்சர்’னு சுயநலமான செண்டன்ஸ்லாம் வருது.’

 

‘நோ. அப்டிலாம் இல்ல.’

 

‘வைட். நான் சொல்றத மொதல்ல கேளுங்க. இன்னொன்னு ஷஹாதா சொல்லுங்க’

 

‘ஷஹாதா?’

 

‘யேஹ். விட்னஸ். முஸ்லிமா இருக்கறவங்க ஏதுக்கவேண்டிய ப்ளட்ஜ் உறுதிமொழி’

 

‘ஐ நோ. டூ யூ வாண்ட் மீ டு ஸே’

 

‘எஸ்’

 

‘லா இலாஹ இல்லல்லாஹ். முஹம்மத் ரசூல் அல்லாஹ்’

 

‘இதுக்கு எனக்கு மீனிங் சொல்லுங்க’

 

‘லா இலாஹ-னா இல்லை இறைவன். இல்லல்லாஹ்-னா இறைவனைத் தவிரனு மீனிங். முஹம்மத் ரசூல் அல்லாஹ்னா முஹம்மத் இறைவனோட தூதர்னு அர்த்தம். அதாவது, ஒரே இறைவனைத் தவிர வேறு இறைவன் இல்லை. முஹம்மத் இறைவனின் அடிமையும் தூதருமாய் இருக்கிறார் என்று மீனிங்’

 

’இந்த ஒரு வரிக்குள்ள பெரிய தத்துவம் எல்லாம் அடங்கிக் கிடக்கு. ஒவ்வொருத்தவங்களும் ஒவ்வொரு மாதிரி அத விளங்க முடியும். இதில நான் ஒரு விஷயத்த உங்களுக்கு சொல்றேன்.’

 

‘சொல்லுங்க’

 

‘அராப் பீப்பிள் எதையும் சொன்னவுடனே ஏத்துக்க மாட்டாங்க’

 

‘நோ’

 

‘நோ. இல்லை. லா. அப்டீன்றது தான் அவங்களோட ரிப்ளய்யா இருக்கும். ஒத்துக்கிறீங்களா?’

 

‘நோ’

 

‘இப்ப நீங்க சொன்ன நோ-வ மட்டும் கணக்கு பண்ணிப்பாருங்க. நான் சொல்லவறது புரியும்’

 

‘ம்’

 

‘நல்ல வேளை மாத்திக்கிட்டீங்க. சரி விஷயத்துக்கு வருவோம். குர்ஆனும் இஸ்லாமும் உங்களுக்கு மட்டும் தான் சொந்தமா?’

 

‘இல்ல. உலகத்தில இருக்கிற எல்லாருக்கும் தான்’

 

’அப்பறம் ஏன் இறைவன் அராப் முஹம்மத் கிட்ட இஸ்லாம எடுத்து சொல்ல வைக்கனும்?’

 

‘மே பீ அராப்ஸ் வேர் மெர்சண்ட்ஸ். அதனால உலகத்தோட நிறைய தொடர்பு இருந்திருக்கும். அதனால இருக்கலாம். அல்லாஹு ஆலம். காட் நோ த பெஸ்ட்’

 

’அதென்னவோ. ரொம்ப மோசமான சொசைட்டியா அன்னிக்கு உலகத்தில அராப்ஸ் இருந்ததும் ஒரு காரணம் தான். டூ யூ அக்ஸப்ட் திஸ்’

 

‘யெஸ்’

 

‘அராப்ஸ் எதையும் அவ்ளோ சீக்கிரத்தில ஏத்துக்க மாட்டாங்க. எதுக்கெடுத்தாலும் இல்ல. அப்டிலாம் இல்லனு தான் பதில் வரும். இல்ல-ன்றத அரபில எப்டி சொல்வீங்க?’

 

‘லா’

 

‘லா இலாஹ இல்லல்லாஹ். இப்ப புரியுதா ஏன் ’லா’ அப்டீன்ற வார்த்தை ஷஹாதால முதல்ல இருக்குனு. எந்த லாங்குவேஜ்லயும் இப்டி எழுதினா ஒரு மாதிரி குழப்பும். இட்ஸ் இன் அ ப்ரேஸ் விச் யூ குட் அண்டர்ஸ்டாண்ட் மச் ஈஸிலி. அராப்ஸுக்கு புரிற நடையிலயே இருக்கு பாருங்க’

 

‘ம்’

 

’உலகத்தில இருக்கிற எல்லாரும் எல்லா சமூகமும் நல்லது கெட்டதால ஆனது தான். நாங்க மட்டும் தான் நல்லவங்க. நாங்க செய்றது தான் சரினு யாரும் அவ்ளோ ஈஸியா சொல்ல முடியாது. இஸ்ரேல் உங்கள நாட்ட விட்டு வெளிய அனுப்பிடுச்சு. உண்மை தான். திரும்பி அவ்வளவு சீக்கிரத்தில உங்களுக்கு இழந்த பகுதியத் தரப் போறதில்ல.எகிப்துக்கு என்ன ஆச்சு? நீங்களும் உங்க பக்கத்து நாடும் இஸ்லாம உண்மையிலேயே ஃபாலோ பண்றதா இருந்தா இங்க காஸால கஷ்டப்படற உங்கள எகிப்து தன்னோட சினாய் பகுதில குடியமர்த்தி உதவி செய்யலாமே? ஹமாஸ் ஒரு காரணமா? மக்கால இருந்து அகதியா வந்த நபியோட தோழர்களுக்கு எப்படி மதீனா உதவுச்சு. அகதிகளுக்குத் தன்னோட சொத்தப் பாதியாப் பிரிச்சு கொடுத்துச்சு. இது தாங்க நாம அகதிகள் விஷயத்தில காட்ட வேண்டிய தன்மை. இந்தியப் பிரிவினையின் போதும் சரி இப்பவும் சரி முஸ்லிம்ஸ் மறந்து போன எடுத்துக்காட்டு’

 

‘மே பீ. ஆனா ஈஜிப்ட் எங்களுக்கு முடிஞ்சளவு உதவிட்டு தான் இருக்கு. காஸாவோட பொருளாதாரமே ஈஜிப்ட்ல இருந்து உள்ள டனல் வழியா கடத்திவரப்படற பொருட்கள்ல தான் இருக்கு’

 

‘டனல்?’

 

‘ஆமாம் சுரங்கம். ஈஜிப்ட்டோட சினாய் டெரிடரிஸ்ல இருந்து சுரங்கம் வழியா தான் காஸாவுக்கு பெரும்பாலான பொருட்கள் கடத்தி வரப்படுது.’

 

‘கடத்தியா?’

 

‘ஆமாம். இஸ்ரேல் எங்க மேல வச்சிருக்க தடையால எங்களுக்கு வேற வழி இல்லை. இந்த டனல் வழியா ஒரு அம்யூஸ்மண்ட் பார்க் கட்றதுக்கு தேவையான பொருட்களையே கொண்டு வந்திருக்காங்கனா பாத்துக்கோங்க’

 

‘ஓ. எகிப்து தடை விதிக்கலையே?’

 

‘ஆமாம். பட் ஈஜிப்ட் சேஞ்சஸ் வித் கோர்ன்மெண்ட்ஸ். ஜாஸ்மின் ரெவலூஸன்ல ஜெய்ல்ல உடச்சு பிரதர்ஹுட் லீடர்ஸ காப்பாதினதா ஹமாஸ் மேல ஈஜிப்ட்ல ஒரு கேஸ் இருக்கு. இப்ப மூர்ஸி இருக்க வரைக்கும் நோ ப்ராப்ளம். பட் மூர்ஸி போய்ட்டா அவ்ளோதான். ஹமாஸ் ஈஜிப்ட்டோட எதிரி ஆகிடும். ஈஜிப்ட் ஆர்மி டனல்ஸ தேடித் தேடி அழிக்கத் தொடங்கிடும்’

 

‘யே ஐ ஹியர்ட். இட்ஸ் பேட்’

 

‘நாங்க என்னிக்குத் தான் இஸ்ரேல் மாதிரி ஆவோமோ?’

 

‘உங்கள அறியாமலேயே உங்களுக்குள்ள இஸ்ரேலோட வெஸ்ட்டோட கல்ச்சர் தான் உசந்ததுனு நினைக்கிறீங்க. இது உங்க நாட்ல மட்டும் இல்ல எங்க நாட்லயும் தான் இருக்கு. ஒரு வெற்றிகரமான சொசைட்டியோட கலாச்சாரம் மத்த கலாச்சரத்தின் மீது தாக்கம் உண்டாக்கிறது இயற்கை தான். ஏதும் அதனால தப்பில்லை. ஆனா அந்த வெற்றிகரமான கலாச்சாரத்தோட நல்ல விஷயங்களை எல்லாம் விட்டுட்டு கேக் வெட்றதையும் கேஎஃப்ஸி போறதையும் ஃபாலோ பண்றது கேணத்தனம்’

 

ஐ அக்ஸப்ட் அண்ட் அனதர் திங். மே ஐ?’

 

‘ஸ்யூர்’

 

‘நீங்க இஸ்லாம ஃபாலோ பண்ணலைனு சொன்னீங்க. எப்டி உங்களால குர் ஆன்லயும் ஹதீத்லயும் இருந்து ரெஃபரன்ஸ் காட்ட முடியுது?’

 

‘முஹ்ம்மத்த நான் எக்ஸாம்ப்பிள்ளா ஏத்துக்கிறேன். ஆனா அதுக்காக என்னால கடவுள ஏத்துக்க முடியாது’

 

‘ஏன்?’

 

‘என்ன பெத்தவங்க சொன்னாங்க பூசணிக்கா சொன்னாங்கனு எதையும் என்னால நம்ப முடியாது. நல்லா ஆராஞ்சு தான் ஏத்துக்க முடியும்.’

 

‘நீங்க முதல் வரில இருக்கீங்க. இல்லை இறைவன். சீக்கிரம் ரெண்டாவது வரி புரிய இறைவன வேண்டறேன்’

 

‘ஒன்னு சொல்லவா? நான் இவ்ளோ நேரம் உங்கக்கிட்ட வாதாடினாலும் நான் பார்த்த கேட்ட மக்களோட தன்மையவிட உங்க நாட்டு மக்கள் உண்மையிலேயே ரொம்ப தன்மை மிக்கவங்களாதான் இருக்காங்க. நூறு சதவிகிதம் இல்லைனாலும். பசிச்சாலும் யாரும் யார் கிட்டயும் கையேந்திறதில்ல. அந்த ஒரு தன்மையே ரொம்பப் பெருசு.’

 

 

 

‘ஹாலோ’ இந்தியாவில் இருந்து அழைப்பு.

 

‘ஹலோ. ஹஸன்?’

 

‘ம் சொல்லுமா’

 

‘எப்டி இருக்க?’

 

’ம் நல்லா இருக்கேன். நீ?’

 

‘இருக்கேன். ஏண்டா போனே பண்ணமாட்ற?’

 

‘ஏன்னு உனக்கே நல்லாத் தெரியும்’

 

’எதையும் மறக்க மாட்டியா?’

 

‘மறக்கிற மாதிரி நீ என்ன பெத்திருக்கலாமே. பத்து நாள் பேசலைனா அதுக்கு ஒரு பஞ்சாயத்தா?’

 

’சரி. எங்க இருக்க? நான் தான் உன்ன கூப்பிட வேண்டியதா இருக்கு. நீ வெளிய போனா எல்லாத்தையும் எல்லாரையும் மறந்திட்ற’

 

‘போன் பண்ணலைனா மறந்திட்டேன்னு அர்த்தம்னு நீ நினச்சா நினச்சுக்க. அதுக்கு நான் ஒன்னும் பண்ண முடியாது.’

 

‘அப்பா. உங்கிட்ட பேசி ஜெயிக்க முடியுமா? இப்ப எங்கடா இருக்க கழுத?’

 

‘காஸா. பாலஸ்தீன்.’

 

‘அப்டியா இப்ப நீ லண்டன்ல இல்லியா?’

 

‘இப்ப விளக்கமா சொன்னா உனக்கு புரியவா போது?’

 

‘எங்கப்பா. எங்க அப்பன் என்னையப் படிக்க வைக்கலையே’

 

‘நீ படிச்சிருந்தா படிக்கவச்சிருப்பாங்க. நீ போய் சும்மா உக்காந்து எந்திரிச்சு வந்திருப்ப’

 

‘போடா எருமை. உனக்கென்ன தெரியும். நான் தான் எங்க க்ளாஸ்ல பர்ஸ்ட் வருவேன்’

 

‘அப்ப உங்க அண்ணனுங்களையும் அப்பனையும் போய் கேளு ஏன் படிக்க வைக்கலைன்னு, எங்கிட்ட கேட்டா?’

 

‘சரி. ஊர் எப்டி இருக்கு. உடம்பு எப்டி இருக்கு’

 

‘ம் எல்லாம் நல்லாத்தான் இருக்கு.’

 

‘குரல் ஒரு மாதிரி இருக்கே. என்ன ஆச்சு. உடம்பு முடியலையா?’

 

’அதெல்லாம் ஒன்னுமில்லம்மா. நல்லாத் தான் இருக்கேன்.’

 

‘இல்லையே ஏதோ மாதிரி இருக்கே.’

 

‘அங்க இருந்து போன் பண்றைல அதான் அப்டித் தெரியும்’

 

‘சரி. ஒழுங்கா ஒடம்பப் பாத்துக்கோ. ’

 

‘சரி. சாப்ட்டியா?’

 

‘என்ன சாப்ட்ட?’

 

‘மக்லூபா. புரிதா?.’

 

‘கக்லாமாவா? அப்டினா’

 

‘இந்த ஊரு பிரியாணினு வச்சுக்க’

 

‘வெள்ளக்கார ஊர்ல பிரியாணிலாமா கெடைக்குது?’

 

‘இது வெள்ளக்கார ஊர் கிடையாதுமா. சௌதி பக்கத்துல இருக்கு’

 

‘அப்டியா. என்னமோ. நல்லா சாப்டீல?’

 

‘ம்’

 

‘அப்பறம்’

 

‘ஒன்னுமில்ல’

 

’அவர்கிட்ட பேசமாட்றேனு ரொம்ப கவலப்பட்றாரு’

 

‘எவர்?’

 

‘அவர் தான்.’

 

‘அவர்னா?’

 

‘உங்க அத்தா’

 

‘உன் புருஷனா?’

 

‘ஆமாம். அவர் கூட நான் எதுக்குமா பேசனும்? பேச என்ன இருக்கு?’

 

’என்ன இருந்தாலும் எங்களுக்கு நீ ஒரே பையண்டா. எங்களுக்கு பின்னாடி எல்லாம் உனக்குத் தான். அவர் ஏதோ கோபத்தில பேசிட்டாரு’

 

‘அதுக்காக சூடு சொரணை இல்லாம இருக்கச் சொல்றியா? அம்மா அவர் கோபத்தில பேசல. நல்லா மனசுல வச்சுக்கோ. அன்னிக்கு மனசில இருக்கிற எல்லா உண்மையையும் உளறீட்டாரு. நல்லதாப் போச்சு.’

 

‘அத மறந்திடேன். இப்ப ஒழுங்காத் தான் இருக்காரு. அதுக்கப்பறம் நிறைய திருந்திட்டாரு. எப்பவும் உன்னப் பத்தி தான் பேசீட்டிருக்காரு.’

 

‘அம்மா. நான் அவர் பேசினத மட்டுமில்ல, அவரையும் சேத்துத் தான் மறக்க நினைக்கிறேன். ஆனா நீ தான் அடிக்கடி அவர நினவு படுத்தி மறக்கவிடாம செய்ற. என்னால ஒருத்தவங்கள மறக்காம அவங்க பேசினத மறக்க முடியாது.’

 

‘அவர் முன்ன மாதிரி இல்ல. புரிஞ்சுக்கோ.’

 

‘எல்லாம் நடிப்பு. உள்ள ஒன்னு வச்சு வெளிய ஒன்னு பேசறாரு.’

 

‘சரி பரவாயில்ல. அவர்கிட்ட கொஞ்சமாவது பேசேன். நல்லாயிருக்கிங்களா? நல்லாயிருக்கேன்றதோடயாவது நிறுத்திக்கோயேன்.’

 

’அம்மா.’

 

’இரு அவர் பக்கத்தில தான் இருக்காரு. நான் குடுக்கிறேன்.’

 

ஹஸன் இணைப்பைத் துண்டித்தான்.

 

 

 

’உங்களுக்குத் தெரியுமா? காஸாவோட லிட்டரேட் ரேட் நைண்டி பர்ஸண்ட்டுக்கும் மேல’

 

‘இஸிட். படிச்சவங்க தொண்ணூறு சதவிகிதத்துக்கும் மேலனு சொல்ல வறீங்களா?’

 

‘ஆமா. வேலையில்லாமை தான் அதிகம்’

 

‘ஜோஆன் கேட்டுங்கங்க. அனெம்ப்ளாய்மெண்ட் தான் அதிகமாம். சரி, நீங்க என்ன நினைக்கிறீங்க மேடம்? இந்த நிலைமையில காஸாவுக்கு என்ன தேவை?’

 

‘ஸ்கூல்ஸ் காலேஜஸ் எஜூகேஷனல் இன்ஸ்ட்டிட்யூட்ஸ்.’

 

‘ஆன் நான் உங்கள கேக்கல. ஆஸ்கிங் ஹெர். மேடம் நீங்க சொல்லுங்க?’ ஜோஆன் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை. ஹஸனும் மாயமும் பேசிக் கொண்டிருந்தனர். இன்னும் அவளை  அவன் மாயம், விடியல், சூனியம் என்று தான் அவளைக் கூப்பிட்டுவந்தான். காரணம். ஃபுட் பாய்ஸன் ஆன அந்த நிலையில் ஏற்பட்ட மாயமும் மந்திரமும் அவள் உருவத்துடன் தொடர்புபட்டன. மனதுக்கு இந்தக் கெட்ட பழக்கம் இருக்கிறது. என்றோ எதோவொரு சூழலில் நம்மையும் அறியாமல் ஒரு பாடலைக் கேட்டிருப்போம். மீண்டும் என்றோ ஒரு நாள் அந்தப் பாடலைக் கேட்கும் போது அந்தச் சூழலுக்கான நினைவுகள் மனதினை முட்டும்.

 

எடுத்துக்காட்டாக, ஹஸனுக்கு இந்தியன் படப் பாடல்களைக் கேட்டால் ஒருவித வலிமிகுந்த உணர்வு ஏற்படும். அடிவயிறு கலங்குவதைப் போல் இருக்கும். கூச்சம் இருக்கும். ஏதோ பானைக்கு மேல் அமர்ந்திருப்பதைப் போல் ஒரு பிம்பம் வந்து போகும். தெளிவில்லாத வலி உணர்வு ஏற்படும். குளிக்காமல் பல நாள் இருப்பதைப் போல் தோன்றும். இடுப்புக்கு கீழே உணர்வே இருக்காததைப் போல் இருக்கும். அதற்கு அவனுக்கே என்ன காரணம் என்று தெரியாது. பிறகு தான் தெரிந்தது அவனுக்கு விவரம் தெரியாமல் இருந்த வயதில் அவனுக்கு ’சுன்னத்’ செய்யப்பட்டது. நபியின் வழிமுறைகளுக்கு சுன்னத் என்று பெயர். இந்த சுன்னத் ஆன்குறியின் மேற் தோலை நீக்கிவிடுவது. இது இஸ்லாமியர்கள் மட்டுமல்லாது யூதர்களும் காலம் காலமாக பின்பற்றி வரும் வழக்கம். இயேசு கிறிஸ்து விருத்தசேதனம் செய்யப்பட்டதாக பைபிள் கூறுகிறது. சுத்தம் கருதி இந்த வழக்கம் நடைமுறையில் உள்ளது.

 

பானை மீது அமரவைத்து கால்களை அகட்டி குறியின் முன் தோல் நீக்கப்படும். வலி நாலைந்து நாட்கள் இருக்கும். பிறகு எல்லாம் மறந்துவிடும். இது நடந்தது ஹஸனுக்கு நினைவில் இல்லை. வாலிபத்தில் சக நண்பர்கள் அந்தத் தோலால் ஏற்படும் பிரச்சனைகளை அவனுடன் பகிர்ந்திருக்கிறார்கள். ஆனால் அவன் உணர்ந்ததில்லை. ஹஸனுக்கு சுன்னத் செய்யப்பட்டபோது இந்தியன் படம் வெளியான சமயம். அவன் தந்தை, வீட்டில் மூலைக்கு ஒரு ஸ்பீக்கர் கட்டி பாடல் கேட்பார். இவன் அப்படி அறுபட்டுக் கிடக்கும் பொழுது அந்த பாடல்கள் இவனை அறியாமல் காதில் விழுந்திருக்கின்றன. வலியின் இடத்தில் பாடல்களும் பாடல்களின் இடத்தின் வலியும் பதியப்பட்டிருக்கின்றன. ஹஸனுக்கு இந்த விசயம் அவன் சுன்னத் செய்யப்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோ டேப்பை ஒருமுறை பார்க்கும் போது தான் பிடிபட்டது.

 

அப்படித்தான் இந்த நிலையும். மீனால் ஏற்பட்ட மயக்கத்தை அவன் மூளை இந்தப் பெண்ணின் மீன் கண்களில் பதித்திருந்தது. அவளைக் காணும் போதெல்லாம் நெஞ்சம் பதைபதைத்தது. மூச்சு விறுவிறுத்தது. வேர்வை கொட்டியது. நாக்கு பிறண்டது. இருந்தாலும் விட்டுக் கொடுக்காமல் தான் பேசினான்.

 

‘ஃப்ரீடம். விடுதலை. நூர். ஒளி’

 

‘அதெல்லாம் எங்களால தர முடியாது மேடம். நாங்க இங்க தி க்ரீன் சார்பாவும் யு.என் சார்பாவும் ஒரு இன்ஃப்ராஸ்ட்ரக்சர் செஞ்சு குடுக்க வந்திருக்கோம். ஸ்கூல், காலேஜ், ரெஃபூஜி வெல்ஃபேர்னு ஏதாவது இன்ஃப்ராஸ்டக்சர் மூலமா காஸாவோட நிலைமைய எங்களால முடிஞ்ச அளவு மாத்தித் தர வந்திருக்கோம்.‘

 

‘ஹா ஹா ஐ வாஸ் ஜஸ்ட் மேக்கிங் ஃபன்’

 

‘குட். நான் என்ன கேக்கிறேன்னா? ஜோஆனும் எங்க கம்பெனியும் காஸால ஒரு ஸ்கூலையும் காலேஜையும் கட்டிக்குடுக்கனும்னு ஆசப்படறாங்க. நான் என்ன சொல்றேன்னா? ஏற்கனவே நல்லா படிக்கிற ஆளுங்க இருக்கிற ஊர்ல எதுக்குயா இன்னொரு இன்ஸ்டிட்யூட்னு கேக்கிறேன். சரியா தப்பா’

 

‘சரி தான். பட்’

 

‘என்ன பட்? இதில என்ன இருக்கு. காஸாவுக்கு இப்ப தேவை வேலைவாய்ப்பு தரக் கூடிய ஏதாவது ஒன்ன ஆரம்பிப்பது தான்றேன். தப்பா? எனிதிங் ராங் இன் திஸ்?’

 

‘நத்திங் ராங்’

 

‘தன்னோட கால்ல நிக்கிற ஒரு காஸாவ உருவாக்கிறதுக்கு எடுத்துக்காட்டா தன்னிறைவு பெற்ற ஒரு காம்பஸ உருவாக்கனும்றேன். சொந்தக் கால்ல நிக்கிறத தோட நிலைய உங்களுக்கு சொல்லிப் புரிய வைக்க முடியாது. ஒரு நாள்ல எல்லோரும் நாம நம்பி இருந்த எல்லாரும் எல்லாமும் நம்மள கைவிட்டுடுவாங்க. அந்த நாள்ல அந்த நொடில நாம நமக்குனு ஒரு உலகத்த கற்பன பண்ணி இருப்போமே அந்த உலகம் மொத்தமா நொறுங்கும். ஒளி பறிபோன அந்த நொடில தான் வாழ்க்கையில ஒளினு ஒன்னு இருக்கதே நமக்குத் தெரியவரும். ஆனா அதத் தேட வழி தெரியாது. பையில ஒரு பைசா இருக்காது. வாழ்க்கைல அடுத்து என்ன பண்ணப்போறோம்ற தெளிவே இல்லாத அந்த நொடி தான் நமக்குள்ள இருக்க தேடல தூசு தட்டி எழுப்பி விடும். தெளிவற்ற தெளிவு அது.

 

இது உலகத்தோட நியதி. உலகத்தில இருக்க ஒவ்வொரு துகளுக்கும் பொருந்தும் நியதி. மனுஷங்களுக்கு வருசத்தில நாடுகளுக்கு நூற்றாண்டுகள்ல. எப்படியோ எல்லாமும் இங்க மாறக் கூடியது. இப்டி இருக்கிற நிலைமைல மாற்றத்த வரவேற்கனும். நாலு பேர் ஏற்கனவே பண்ணிருக்க மாதிரி ஸ்கூல கட்டிக்கிட்டே போனா மட்டும் பத்தாது. அடுத்த கட்டதுக்கு தாவி ஆகனும். இல்லனா பத்தோட பதினொன்னா போக வேண்டியது தான். நான் அதத்தான் ஜோஆனுக்கு சொல்ல வரேன். ஏதாவது வேற மாதிரி பண்ணுவோம்னு. நம்ம கம்பெனியோட பேர் நிலச்சிருக்கனும்னு ஆசப்படறேன். தப்பா? நம்ம திட்டத்தால காஸாவுக்கு ஒரு சின்ன ஒளிப்பொறியாவது தெரியனும்னு ஆசப்படறேன்’

 

‘சரி. நீங்க சொல்றது நல்லாத்தான் இருக்கு. டூ யூ ஹாவ் எனி ப்ளான்ஸ்? உங்ககிட்ட ஏதாவது திட்டம் இருக்கா?’

 

‘தன்னோட கால்ல நிக்கனும் அவ்ளோ தான். இதுவரைக்கும் திட்டம்னு ஒன்னு இல்ல. ஆனால் நேரம் கிடச்சா நிச்சயம் ஒரு டீம் ஃபார்ம் பண்ணி வேலை செய்ய முடியும். ஆயிரக்கணக்கான யோசனை கிடைக்கும்’

 

‘ஹஸன் ட்ரை டூ அண்டர் ஸ்டாண்ட்.  நம்மகிட்ட டைம் இல்ல. காஸா ரொம்ப வாலடைல்லான ஊர். எப்ப என்ன நடக்கும்னு யாருக்கும் தெரியாது. நம்ம பிறந்த ஊரும் கிடையாது. நமக்குப் பிடிச்சத எல்லாம் இங்க அமல்படுத்த. அப்டிப்பட்ட ஊர். ஸ்பீடா வேலைய முடிச்சிட்டு கிளம்பனும். இன்னொன்னு நீ சொன்னவுடன நம்ம கம்பனி ஏத்துக்கப் போறதில்ல. நீ சொல்றதக் கேக்கனும்னு அவங்களுக்கு எந்த அவசியமும் இல்ல. நாம இங்க வந்தது என்ன செய்யலாம்னு சொல்ல மட்டும் தான். எதையும் எடுத்து நம்ம தோள்ல போட்டுக்க முடியாது. ஓகே’ ஜோஆன் விறுவிறுவெனச் சொல்லி முடித்தார்.

 

‘ஆமா நான் சொல்றத கேக்கனும்னு அவங்களுக்கு எந்த அவசியமும் இல்ல ஆனா அவங்க கேக்கனும்றதுக்காக என் மனசாட்சிய பகச்சு என்னால எதுவும் சொல்ல முடியாது. நீங்க என்ன வேணும்னாலும் சொல்லிக்கங்க. ஐம் கோனா ப்ரப்போஸ் மை தாட்’

 

‘அதுக்கு மேல நீயாச்சு. க்ரீன் ஆச்சு. யூ கேன் ப்ரப்போஸ். கொஞ்சம் தெளிவா உன்னோட ஐடியாவ எழுதப்பாரு. அண்ட் டோட்டலி திஸ் இஸ் ‘ஃபிலிம் ஹிந்தி’ ஜோஆன் இறுதியாக விடியலைப் பார்த்து கண்ணடித்துக் கொண்டே அந்த இறுதி சொல்லை முடித்தாள். இருவரும் சிரித்தனர்.

 

 

 

’உங்ககிட்ட கொஞ்சம் தனியா பேசலாமா?’ துணிவை வரவழைத்துக் கொண்டு மாயத்திடம் கேட்டான்.

 

‘ஆஃப் கோர்ஸ். இட் மஸ்ட் பீ இம்பார்ட்டண்ட்’ மந்திரம் பதிலளித்தாள்.

 

‘நோ. இட்ஸ் பர்ஸனல். நான் உங்ககிட்ட பர்ஸ்னலா பேச விரும்புறேன். எனக்கு நல்லா தெரியும் நீங்க வளந்த சொசைட்டி உங்கள அனுமதிக்காதுனு. பட் ஐ அஸ்யூர் நத்திங் வில் பீ ராங்’

 

‘ஐ ட்ரஸ்ட் யூ ஹஸன். கோ ஆன்’

 

’நீங்க கொஞ்சம் உங்களப் பத்தி சொல்லனும். உங்க ஃபேமிலி அண்ட் ஸம் பர்ஸனல் ஸ்டஃப்ஸ்’

 

‘வை? மே ஐ நோ?’

 

‘ஜஸ்ட் ஆஸ்கிங். கேக்கக்கூடாதுனா விட்டுடுங்க’

 

‘நோ நோ. நாங்க எங்க கெஸ்ட்ஸ அப்டி ட்ரீட் பண்ண மாட்டோம். யூ ஹாவ் எவரி ரைட் டு ஆஸ்க் மீ.’ எனக் கூறி அவளுடைய குடும்பத்தையும் பிண்ணனியையும் பகிர்ந்து கொண்டாள். தனக்கு கண் பார்வை பறிபோய் எப்படி தன்னம்பிக்கையுடன் வாழ்கிறாள் என்பதையும் கடந்து வந்த போர் சூழ்ந்த சூழலையும் பகிர்ந்து கொண்டாள். காஸாவின் பொதுக் கதையையும், ஒரு போர் பெரிதை சிறிதாகவும் சிறிதை பெரிதாகவும் மாற்றுவதையும் அதனால் பெரிய ஏற்றத்தாழ்வில்லாத சமூகமாய் காஸா இருப்பதையும், நிலையற்ற நிலையையும் பகிர்ந்து கொண்டாள். நடுவில் மிதமான அழுகை வேறு. ஹஸன் பேச்சை திசை திருப்பினான்.

 

‘இந்தியா பத்தி உங்களுக்கு ஏதாவது தெரியுமா?’

 

‘யா. ஸம் வாட். நான் படிச்சப்ப எங்க ப்ரோஃபெஸர் ஒருத்தார் அடிக்கடி இந்தியா பத்தி பேசுவாரு. இந்தியா மட்டும் தான் இஸ்ரேல் அமையவிருந்த போது அத எதிர்த்து குரல் குடுத்த ஒரே பெரிய முஸ்லிமல்லாத நாடுனு சொல்வாரு. கேந்தி, நேஹாரூனு சில இந்தியன் லீடர்ஸோட ஃபலஸ்தீனுக்கு ஆதரவான ஸ்பீச்சஸ காண்பிப்பாரு. இங்க அல் அஸ்ஹர் யுனிவர்ஸிட்டில இருக்கிற லைப்ரேரிக்கு ஜாவாஹார்லேல் நேஹாரூவோட பேர் தான் வச்சிருக்காங்க’

 

’ஹாஹா. கேந்தி இல்ல. காந்தி. மஹாத்மா காந்தி. நேஹாரூ இல்ல நேரு, ஜவஹர்லால் நேரு. இந்தியாவோட ஃபர்ஸ்ட் ப்ரைம் மினிஸ்டர். தே வேர் செக்யூலர். பரவா இல்லையே’

 

‘அண்ட் ஒன் மோர். இங்க காஸால இண்டியன் ஃபில்ம்ஸ் ரொம்ப ஃபேமஸ்.’

 

‘இண்டியன் ஃபிலிம்ஸ். பாலிவுட்?’

 

‘ஆஹான் பாலிவுட். ஹிந்தி ஃபில்ம்ஸ். சாருக் க்ஹான், ஆமீர் க்ஹான்’

 

‘ஆமாமா. பாலிவுட்’

 

‘வாட் யூ ஃபீல் அபவ்ட் தோஸ் மூவீஸ்’

 

’வாட் டு சே? ஒரு ஹீரோ ஒரு ஹீரோயின் ஒரு லவ் அஞ்சு பாட்டு ஏழு ஃபைட். கதை எப்டி இருந்தாலும் ஹீரோ ஹீரோயின் சேர்ந்திடுவாங்க. எவ்ரிதிங் வில் பீ அப்நார்மல். இங்க காஸால ஒரு வழக்கம் இருக்கு இந்தியாவ வச்சு’

 

‘என்ன வழக்கம்?’

 

’ஐ மீன் சேயிங். பழமொழி மாதிரி’

 

‘அப்டியா? என்ன சேயிங் அது’

 

‘ஃபில்ம் ஹிந்தி’

 

‘அப்டீனா?’

 

’ஹிந்திப் படம்னு அர்த்தம்’

 

’புரிலயே. எதுக்கு இந்த ப்ரேஸ்ஸ யூஸ் பண்ணுவாங்க?’

 

‘அதாவது நடக்க முடியாத ஒரு விசயத்த யாராவது சொன்னா இந்த பழமொழிய சொல்வாங்க.’

 

‘நடக்க முடியாத விசயம்னா?’

 

‘ஆகாயத்தில கைய வீசிப் பறக்கிறது. அந்த மாதிரி. என்னால அவ்வளவா பார்க்கமுடியாது. மத்தவங்க பாத்துட்டு சொல்வாங்க. நான் ஒன்னு சொன்ன தப்பா எடுத்துக்கக் கூடாது’

 

‘சொல்லுங்க’

 

நேத்து நீங்க காஸாவ சொந்தக் கால்ல நிக்கவைக்கனும்னு பேசி முடிச்சப்ப ‘ஃபிலிம் ஹிந்தினு’ ஜோஆன் சொன்னது நினைவில்லையா?’

 

இந்தியப் படங்களின் நிலையைப் பாருங்கள். ஓடும் ரயிலில் இருந்து மற்றொரு ரயிலுக்கு தாவுவது. சுருக்குக் கயிற்றைப் போட்டு ஹெலிகாப்டருக்குள் தொத்துவது என கண்டம் விட்டு கண்டம் பாயும் ஹீரோக்களால் அரபியில் ஒரு சொற்றொடரே கொண்டு வந்துவிட்டார்கள். ஸோ பேட். ஸோ பேட். இதனை எப்படி மழுப்புவது. ஆங். இந்தியர்கள் மிகவும் தன்னம்பிக்கை மிக்கவர்கள். முடியாததையும் முடித்துக் காட்டும் ஆர்வமுடையவர்கள். தங்கள் காதலி எதிரியின் வேலிக்குள் இருந்தாலும் அவளை மீட்க அவர்களுக்குக் கட்டிங் பிளேயர் போதும் இல்லை இல்லை கையே போதும் போதும். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். எங்கள் ஊர் பழமொழி இது. மழுப்பல் மழுப்பல்.

 

‘இன்னொன்னும் உங்க கிட்ட சொல்லவா?’

 

‘சொல்லுங்க’

 

’நீங்க இங்லீஷ் பேசற அக்ஸண்ட்ல ரொம்ப ஹிந்தி வாசம் அடிக்கிது’

 

‘அடக் கொடுமையே. நான் டெல்லில வேலை பாத்தப்ப மத்தவங்க எல்லாம் நான் பேசற ஹிந்தி தமிழ் மாதிரி இருக்குனு சொல்வாங்க. தமிழ் நாட்ல தமிழ் பேசினா நான் பேசினது தமிழானு கேப்பாங்க. இங்க இங்லிஷ் பேசினா ஹிந்தி மாதிரி இருக்குனு சொல்றீங்க.எனக்கு உண்மையிலேயே ஒரு மொழிக்கான ஆக்ஸண்ட் கிடையாதா? தெரியல? ஆனா தாங்க்ஸ். என்ன உங்களால ஒழுங்கா பாக்க முடியாது. என்னோட சாயல பாத்து  நான் இண்டியன்னு கண்டுபிடிக்க முடியாது. ஆனா பாருங்க இப்ப. என்னோட தொனி நான் பேசற தொனி உங்களுக்கு என்னைய இந்தியன் அடையாளப் படுத்தி இருக்கிறதே அதுவே எனக்கு பெருமையா இருக்கு’

 

‘ஆஹான்’

 

‘ஆமாங்க. உண்மையிலேயே. நாம ஏன் அமெரிக்காகாரனப் போலவோ இங்கிலாந்துக்காரன் போலவோ பேச ரொம்ப மெனக்கடனும். நம்ம தொனில பேசுவோமே. தொனியால மொழி ஒன்னும் கெட்டுப்போகாது. இல்ல’

 

‘யெஸ். உங்ககிட்ட இன்னொன்னும் கேக்கனும்’

 

‘கேளுங்க’

 

’நீங்க முஸ்லிமா?’

 

‘உங்கள மாதிரி என்ன பெத்தவங்க முஸ்லிம்ஸ் தான்.’

 

‘அப்ப நீங்களும் முஸ்லிம் தான்’

 

‘யார் சொன்னா?’

 

‘நீங்க தான சொன்னீங்க’

 

‘எங்கப்பா அம்மா தான் முஸ்லிம்ஸ்னு சொன்னேன். நான்னு சொல்லவே இல்ல’

 

‘ஹவ் இஸிட் பாஸிபில். டூ யூ ஃபாலோ எனி அதர் ரிலிஜியன்?’

 

’நோ. ஐ அக்கஸப்ட் இஸ்லாம். இப்பதான் எனக்கு இஸ்லாம் பத்தியான ஒரு தெளிவான வழிகாட்டல் கிடச்சது. நான் இஸ்லாம ஏத்துக்கிறேன். முஹம்மத் என்னக் கவர்ந்த மனுசங்கல்ல மிக முக்கியமான ஆள். என்னோட நிறைய கேள்விக்கு அங்கிருந்து பதில் கிடச்சிருக்கு. மனிதர்கள் ஒன்று என்று கூறும் அந்தப் பண்பும் உலகைவிட்டு ஒதுங்காமல் உலகிலேயே ஒட்டாமல் உலகில் எளிமையா வாழச் சொல்றது மட்டுமில்லாம வாழ்ந்து காட்றது, ஏழைகளுக்கு எப்படி உதவனும்னு பாடம் எடுக்கிறது, மிகத் தெளிவான கோட்பாடுகள் எல்லாத்தையும் நான் ஏத்துக்கிறேன். ஆனா எனக்கு கடவுள் அப்டீன்றதுல மட்டும் நம்பிக்கை கிடையாது. இஸ்லாம் சொல்ற வழியை ஏத்துக்கிறேன் ஆனால் இறைவனுக்கு அடிபணிந்தேனு பொருள் தர அந்த முஸ்லிமா என்னால இருக்க முடியாது. ஏன்னா நான் இறைவன் இருக்கத ஏத்துக்கல’

 

’ஹ்ஹ்ஹ். உங்க தேடல் ரொம்ப வித்தியாசமா இருக்கு. நீங்க இதுக்கு முன்னாடி சாலாஹ் பண்ணியிருக்கீங்களா?’

 

‘சலாஹ். ஹான். தொழுகை. இம். சின்ன வயசுல ரம்ஜான் பக்ரீத்னு அப்பா கூட்டீட்டு போவாரு.’

 

‘ஸவ்ம். ஃபாஸ்ட் பண்ணிருக்கீங்களா?’

 

‘நோன்பா? இல்ல வச்சதில்ல’

 

‘ஹஸன் நீங்க மெடிடேட் பண்ற பழக்கம் இருக்கவர்னு அடிக்கடி ஜோஆன் சொல்வாங்க. உண்மையா?’

 

‘ஆமா. சின்ன வயசில இருந்து. நான் வர நாடு அப்டிப்பட்டது. யோகாவும் தியானமும் ரொம்ப முக்கியம். நான் ஜைனிஸம் புத்திஸமோட சில தியானங்கள இரண்டு வருஷமா செஞ்சிட்டு தான் வரேன். ஆனா ஒரே ஒருத்தர் இடத்தில மட்டும் என்னால அத மெய்ண்டய்ன் பண்ண முடியல.’

 

‘இஸிட். மே பீ அந்த ஒருத்தர் உங்க மனச கெடுக்கிறார்னா ஸம்திங் ஸ்பேஷல். ஓகே. நீங்க இந்த ரமதான்ல ஃபாஸ்ட் பண்ணிப் பாருங்களேன். முடிஞ்சா தொழுது பாருங்களேன். யூ வில் ஃபீல் தெ டிஃபரன்ஸ்’

 

‘லெட் மீ ட்ரை’

 

‘இன்ஷா அல்லாஹ். இறைவன் நாடினால்’

 

 

 

I like you because you’re clever
Your mind needs years to figure
But when I see you smiling my world gets better
And I can’t be any happier
When you encourage me, my optimism can’t be any bigger
Because you’re the sunshine in my life Without it, my soul will sever
I’ll just die and suffer
My magic !
Without your hope I will not be a happiness seeker
That’s why you’re my princess and I’m Caesar
But when you’re not around it turns to fever
You’re the one who made me a love believer
So, stay close and stay with me forever
yes, dear
forever

 

ஹஸன் கையில் இருந்த அந்தப் பழைய காகிதத்தில் மேற்கண்டவாறு எழுதியிருந்தது. ஏதோ நோட்டில் இருந்து கிழிந்து கோணலும் மாணலுமாகக் கிறுக்கி இருந்த கையெழுத்துடன் இருந்தது. அதனை அந்த மாயம் அவனிடம் கொடுத்திருந்தாள்.

 

‘என்ன இது?’

 

‘இது நான் உலகத்த விட பெரிசா நினைக்கிற ஒருத்தனால எழுதப்பட்டது. எப்டி எழுதி இருக்கான் பாருங்க. என்னப் பத்தி எப்படி மனசில அவன் நினச்சிருக்கனும். எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. என்கிட்ட அவன் இதக் குடுத்த போது எனக்கு வாய் அடச்சு போச்சு. வார்த்தை வெளிய வரல. நம்மள நமக்கே தெரியாம இவ்வளவு காதலிக்கிற ஒருத்தன் இருப்பானு தோணுச்சு. வாசிச்சு பாருங்களேன். அவனோட திறமைய. எனக்குப் புல்லரிக்குது’

 

காய்ந்து போன களிமண் பூமியில் சேறு ஒன்றாகி திட்டுத் திட்டாய் நிற்கும். கணம் குறைந்த அந்த காய்ந்த சேற்றுப் பாளத்தை எடுத்து உடையாமால் பாதுப்பது என்பது நடக்காத ஒன்று. மிகவும் இளசாக இருக்கும் அவற்றை எடுப்பதற்குள்ளாகவே நொறுங்கிவிடும். அதில் அப்படியே நடந்து சென்றால் அவை உடைபடும் விதம் ஒருவித சுகம் அளிக்கும். கால்களுக்குக் கீழ் அவை உடைபடும் அந்த விதம் ஒருவித உற்சாகத்தை கொடுக்கும். ஆனால் அப்படிப்பட்ட அவை உடையும் போது வெளிப்படுத்தும் வலியை நாம் காது கொடுப்பதில்லை. உயிரற்ற பொருளல்லவா? அதே உணர்வு அவனுள் குடிகொண்டது. காய்ந்த இளம் களிமண் பாளத்தைச் சுமந்த தன் மனதுக்குள் யாரோ புகுந்து மிதித்து சுக்கு நூறாய் சுக்கு ஆயிரமாய் சுக்கு கோடியாய் உடைப்பதாய் உணர்ந்தான். ஆனால் அப்படி ஒரு வலி ஏன் தோன்ற வேண்டும்?

 

யாரோ யாரைப் பற்றி ஏதோ காதல் வரிகள் எழுதியதைப் படிக்கும் போது இவனுக்கு ஏன் வலிக்கிறது? சற்றும் பொருந்தா உவமைகளோடு இந்த மனம் ஏன் அதனைக் கிளறுகிறது?  புண் எனக் காட்டுகிறது? இந்த மாயம் செய்வதெல்லாம் மாயமாகத் தான் உள்ளது. ஏதோ மந்திரத்தில் கட்டுண்டதைப் போல் தான் உள்ளது. இது பொறாமை தானே? பிறர் எழுதியிருப்பதைப் பார்த்துப்படும் பொறாமை தானே? இல்லை. ஏமாற்றமா? நாம் அடைய நினைக்கும் பொருளை இன்னொருவர் அடைந்து விட்டார் என்று தெரியும் போது மனது கொடுக்கும் ஏமாற்றம். என்னவென்றெல்லாம் சொல்ல முடியவில்லை. இது தான் எனத் தெரியவில்லை. ஏனென்றால் இதற்கு முன் உணர்ந்ததில்லை. மனதை வாசிக்க முடிகிறது அடக்க முடியவில்லை. உணர்ச்சியைத் தாண்டி அழுகை முட்டிக் கொண்டு வரும் சமயம் இது. கண்ணீர் சிந்தக் கூடாது. ஏமாற்றத்தைக் காட்டிக் கொடுத்துவிடும். இருந்தாலும் இந்த இடத்தில் மௌணம் சரிப்படாது. பொறாமை என்றாகிவிடும். ஒரு பெருந்தன்மையான சொல்லாடல் தகுதி பெறும்.

 

‘ஆல் தி பெஸ்ட். ஐ தின்க் யூ ஆர் இன் லவ் வித் சம்படி. நிச்சயம் உங்களக் காதலிக்கிற அவரு ரொம்பக் குடுத்து வச்சிருக்கனும். சீக்கிரம் மேரேஜ்க்கு என்னய கூப்பிடுவீங்கனு நினக்கிறேன்’

 

நான் அவளை அடைய விரும்புகிறேனா? இல்லையே, என் மனதில் அப்படி எல்லாம் இல்லையே.

 

அப்படியெல்லாம் இல்லை என்று நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய். உனக்கே தெரியாமல் உன் மனது அடைய விரும்புகிறது. நீ அதனை அறியாமல் இருக்கிறாய்.

 

நான் அடைய விரும்பாமல் அதெப்படி மனது முடிவெடுக்கும்? அதெல்லாம் கிடையாது.

 

நீ அப்படிச் சொன்னால் சொல்லிக்கொள். உண்மையை மறைக்க முடியாது. அதெப்படி உன் மனதுள் நுழைந்தது என்றெல்லாம் தெரியாது. காரணம் எல்லாம் சொல்ல முடியாது. ஆனால் தெரிந்து கொள். அது உன்னுள் உனக்கே தெரியாமல் உள்ளது. நீ இல்லை என்றாலும் அது காட்டிக் கொடுத்துவிடும். ஏன் உனக்கு இதனைக் கேட்டால் வேதனை வருகிறது. உன்னையறியாமல். ஏதோ ஒரு சூழல் அவளை விரும்பிவிட்டது. தெரிந்து கொள்.

 

’ஹஸன். நத்திங் லைக் தாட். இது என்னக் காதலிக்கிற ஒருத்தன் குடுத்தது தான். பட் இந்த காதல் அந்தக் காதல் கிடையாது. இது வேற. இந்த போயம் என்னோட ஸ்டூடண்ட் எழுதினது. பத்து வயசுப் பையன். தப்பா நினைச்சுக்கிட்டீங்க’

 

அந்த வார்த்தைகள் செவிப்பறையில் டம்டம்மென பறையடித்து எலெக்ட்ரிக் சிக்னல்களாய் வலியால் துடித்த அந்த மூளைக்கு கொண்டு சென்றன. நொடியில் வலி பறந்தது. எப்படி இது? தடையமே இல்லாமல் வலியால் செல்ல முடிகிறது. நொறுங்கிய அந்த சேற்றுப் பாளம் நொடியில் எப்படி ஒன்று படுகிறது. இவை அனைத்தும் ஒன்றுடன் ஒன்று ஒன்றுபட்ட உணர்வு சங்கிலியைப் போல் தெரிகிறதா? ஏன் இது நாள்வரை நமக்குள் இந்த உணர்வு வரவே இல்லை? யாரிடமும் இப்படி மனது உரிமை எடுத்துக் கொண்டதில்லையே? என்ன நடந்து கொண்டிருக்கிறது? இது மற்ற மனிதர்களுக்குள்ளும் நடக்குமா என்ன? இதற்கென்ன பெயர் வைத்திருப்பார்கள்? மனித இனம் உணர்ந்திருக்குமா?

 

‘யூ மீன் ஹி இஸ் அ கிட்? அவன் சின்னப் பையனா?’

 

‘யெஸ். அவனுக்கு பத்து வயசு தான் ஆகுது. என்னோட ஸ்டூடண்ட்’

 

ஒரு வேளை இந்த மந்திரத்தைச் சந்தித்த எல்லோரும் இப்படித்தானோ. அவர்களுக்கு ஏதாவது ஆகிவிடுமோ? பத்து வயதுச் சிறுவனின் வார்த்தைகளைப் போலவா இருக்கின்றன அந்த வரிகள்? அவளால் மனம் குதம்பப்பட்ட இளைஞனின் வரிகளைப் போலவே இருக்கின்றனவே. கிறுக்கலும், எழுத்துப் பிழைகளும், கிழித்த காகிதமும் இல்லை என்றால் நிச்சயம் சிறுவன் இல்லை என்றே கூறியிருக்கலாம். அதுசரி, இந்தக் கடிதத்தை எப்படி இந்த விடியலால் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடிகிறது?

 

அதே நிலைமை. ஹஸன். பிரின்ஸிபல் மேம். ஹஸன் பிரின்ஸிபல் மேமின் மூக்கை வருணித்து ஒரு கவிதை எழுதுகிறான் என வைத்துக் கொள்வோம். அவன் மனதில் வேறொன்றும் இல்லை என்று சொல்வோம். என்ன நடக்கும்? இவன் கவிதைத் தாளை கிழித்த சமயத்தில் மேம் மாற்றுச் சான்றிதழைக் கிழித்திருக்கும்.

 

எப்படி இந்தப் பெண்ணுக்கு அப்படிப்பட்ட பக்குவம் வந்தது? புத்தகத்தில் இருப்பதை உருவேற்றி விடைத் தாளில் செரித்தும் செரிக்காமலும் வாந்தி எடுக்காமல் தானாக எழுதிய மாணவனின் திறனைப் பாராட்டும் அளவிற்கு எப்படி மனது விரிந்தது? தன்னை வருணித்த கவிதையை எப்படி அவளால் ஏற்றுக் கொள்ள முடிகிறது? இப்படி ஒரு ஆசிரியை எல்லா மாணவர்களுக்கும் கிடைத்துவிட்டால் எப்படி இருக்கும்? இவள். இந்த மாயம், இந்த மந்திரம், இந்த விடியல், இந்த சொல் உண்மையில் பிறரிடமிருந்து பல வகையிலும் வேறுபட்டவள். கண்கள் ஒளியைக் காணமுடியாது என்றாலும் இவளால் ஒளியை உணர முடிகிறது. ஒளிக்குள் பிறரை அழைத்துச் செல்ல முடிகிறது. எப்படி இவளுக்கு இது சாத்தியப்பட்டது?

ஒளி 222 கிராம்: பகுதி 11

ஒளி 222 கிராம்: பகுதி 11

 

’தலா அல் பத்ரு ஆலைனா. மின்த நிய்யாத்தில் வாதா. வஜபா ஷுக்ரு ஆலைனா. மா தாஆ லில்லாஹி தாஆ’

 

அதிகாலை நான்கு மணி. லண்டனிலிருந்து ஐந்து மணிநேரத்தில் அந்த இடைநில்லா விமானம் வந்திருந்தது. கைரோ விமான நிலையத்தில் இறங்கி தயாராக நின்ற காரில் ஏறி அமர்ந்தனர்.  நுழைந்ததும் வழக்கம் போல் ஜோஆன் அந்த ட்ரைவருக்கு ஸலாம் சொன்னார். சிரித்த முகத்துடன் உரத்த குரலில் அவரும் பதில் கூறினார். நிசப்தமான அந்த அதிகாலை நேரத்தில் அவர் குரல் கனீரென ஒலித்தது.

 

ஜோஆனின் ஹிஜாபையும் ஹஸனையும் பார்த்த ஓட்டுனர் ’அஹ்லன் வ மர்ஹபா ஃபீகும் பி மஸ்ர் உம் எல் ஆலம்’அரபியில் கூறினார்.

 

’ஸுக்ரன் லக். ஹய்யா பெனா இல ரஃபா’ ஜோஆன் அவருக்கு பதிலளித்தார். ஹஸனுக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. இவருக்கெப்படி அரபி தெரியும். மனதின் ஓரம் குறித்துக் கொண்டான். பின்னர் வண்டி கிளம்பியது. தலா அல் பத்ரு அலைனா என்ற பாடலை இசையே இல்லாமல் ஒருவர் பாடிக் கொண்டிருந்தார்.

 

’ஜோஆன். நான் எகிப்தப் பாக்கிறதுக்காவே தூக்கத்த வரவிடாம வச்சிருக்கேன். என்ன ம்யூஸிக் இது. மொதல்ல மாத்த சொல்லுங்க. தூக்கம் வருது.’

 

‘தய்யிப் சார். ஐ வில் சேஜ்’ உடைந்த ஆங்கிலத்துடன் ஓட்டுனர் பின்னால் திரும்பி தொடர்ந்தார். ‘திஸ் இஸ் வெல்கம் ஸாங். ஃபார் அவர் ப்ராபட்’

 

‘ப்ராஃபட்?’

 

‘ஆமாம் ஹஸன். இத நஸீத்னு சொல்வாங்க. ம்யூஸிக்கல் இண்ட்ஸ்ட்ருமெண்ட்ஸ் இருக்காது. வோக்கல்ஸ் மட்டும் தான். இப்ப நீ கேக்கிற இந்தப் பாட்டு, ப்ராஃபட் முஹம்மத் மதீனாவுக்கு போன போது அவர வரவேற்கிறதுக்காக மதினா மக்கள் பாடின பாட்டு. யூ மைட் ஹாவ் ப்ராபப்ளி ஹேர்ட். நம்மள வெல்கம் பன்றதுக்காக இந்த பாட்ட ட்ரைவர் ப்ளே பன்றார்.’ ஜோஆன் தெளிவாக்கினார்.

 

அவர் தன் ஊரை விட்டு அந்த நகருக்கு குடிபெயர்ந்தார். முஹம்மத் மக்காவை விட்டு யாத்ரிப் நகருக்கு இடம் பெயர்ந்தார். யாத்ரீபில் அரபுகளும் யூதர்களும் குடியிருந்தனர். யாத்ரிப் என்பது சிறு நகரம். கி.பி 622ன் அளவில் அது நகரம் தான். பேரீச்சம்பழச் சோலைகளை விவசாயமாகக் கொண்ட பாலைவன ஊற்று நகரம் அது. அன்று முதல் யாத்ரிப் முஹம்மதின் நகரம் ஆனது. இறைச் செய்தியாளரின் நகரம் ஆனது. நபியின் நகரம் ஆனது. மதீனத்துன் நபி ஆனது. மதீனா ஆனது. அரபு மொழியில் நபி என்றால் இறைச் செய்தியை சுமப்பவர் என்று பொருள். மதீனா என்றால் நகரம். முஸ்லிம் என்றால் இறைவனுக்கு அடிபணிந்தவர் என்று பொருள். இஸ்லாம் என்பது ஸலாம் எனும் வார்த்தையிலிருந்து பிறக்கிறது. அமைதி என்று பொருள்.

 

தங்கள் உடைமைகளை அப்படியே மக்காவில் விட்டுவிட்டு வெறுங்கையுடன் மதீனாவிற்கு வந்த முஸ்லிம்களுக்கு மதீனாவின் முஸ்லிம்கள் உதவிய விதம் மிகவும் குறிப்பிடத்தக்கது. வரலாறு மிக முக்கியமாக புரிந்துகொள்ள வேண்டியது. மதினாவாசிகள் தங்கள் சொந்த சகோதரர்களைப் போல் மக்காவில் இருந்து அகதிகளாய் வந்தவர்களை நடத்தினர். ஆளுக்கு ஒருவர் என்ற விதத்தில் அகதிகளை பொறுப்பில் எடுத்துக் கொண்டனர். தங்கள் உடைமைகளில் பங்கு கொடுத்தனர். சொத்தை பிரித்துக் கொடுத்து அவர்களை ஒரு நிலைக்கு கொண்டுவந்தனர். பெரும் உதவும் கரக்காரர்களாகிப் போயினர்.

 

முஹம்மத் இறைவனின் சொல்லை அங்கு இறக்கி வைத்தார். அவ்வூரின் அரசனானார். ஆனால் அந்த அரசன் படுத்தது உடலில் தடம் பதிக்கும் ஈச்சம் பாயில், உண்டது கோதுமை தோலின் மாவில் செய்யப்பட்ட ரொட்டியை. பின்னால் தோன்றவிருக்கும் ஒரு அரசாங்கத்திற்குரிய அடிப்படைக் கட்டமைப்பு அங்கிருந்து தான் எழுப்பப்பட்டது. பிறப்பினால் கொண்ட குலம் அங்கு செல்லுபடியாகவில்லை. யாவரும் சகோதரர்கள். இறைவனின் சொல்படி நடப்பவர்கள் யாவரும் முஹம்மதின் சஹாபாக்கள் அதாவது தோழர்கள்.

 

மக்காவில் இருந்து இரண்டு பெரும் படையெடுப்பகளும் ஒரு முற்றுகையும் நிகழ்ந்தன. ஒரு போரில் மதீனாவும் ஒரு போரில் மக்காவும் வென்றிருந்தன. அந்த முற்றுகையிலும் மதீனா தன்னைத் தற்காத்துக் கொண்டது. இந்த மூன்று படையெடுப்புகளால் துவண்டு போனது உண்மையில் மக்கா தான். தொடர்ச்சியான போர் அதன் பொருளாதாரத்தை சிதைத்திருந்தது. அதேவேளையில் முஹம்மதின் பக்கம் இன்னும் பிற ஊர்காரர்கள் பங்களிக்கத் தயாராய் இருந்தனர். யுத்தம் ஒன்று ஏற்பட்டால் வெற்றி நிச்சயம் மதீனாவின் பக்கம்.

 

அந்த நிலையில் முஹம்மத் தன் தோழர்களுடன் மக்காவிற்கு செல்ல முடிவெடுக்கிறார். போருக்குக்காக அல்ல. நிராயுதபாணியாய் மக்காவின் சதுரங்க கோவில் காபாவிற்கு. மக்காவிலிருந்து சில கல் தொலைவில் உள்ள ஹுதைபியா எனும் இடத்தை நெருங்கும் போது மக்காவசிகள் அவர்களை உள்ளே அனுமதிக்க மறுக்கிறார்கள். ஹுதைபியா உடன்படிக்கை கையெழுத்தாகிறது.

 

அப்துல்லாவின் மகன் முஹம்மத்திற்கும், மக்காவின் சார்பில் ஆம்ர் மகன் சுஹைலுக்குமிடையே கையெழுத்தாகும் அமைதிக்கான ஒப்பந்தம் இது. இன்றிலிருந்து பத்து வருடங்களுக்கு நமக்கிடையே எந்த போரும் இராது. முஹம்மதின் பக்கம் சேர நினைப்பவர்கள் தாராளமாக சேர்ந்துகொள்ளலாம். மக்காவின் பக்கம் சேர நினைப்பவர்கள் தராளமாக சேர்ந்து கொள்ளலாம். முடிவெடுக்கும் உரிமை அவரவரிடத்தில். மக்காவில் இருந்து, தகப்பன் உயிருடன் இருக்கும் யாராவது அவரது தகப்பனின் அனுமதி இல்லாமல் முஹம்மதிடம் சென்றால் அவரை முஹம்மத் மக்காவிடம் திருப்பி அனுப்பி விட வேண்டும். ஆனால் அதே வேளையில் முஹம்மதிடம் இருந்து யாராவது மக்காவிடம் வந்தால் அவர் திருப்பி அனுப்பப்படமாட்டார். இந்த வருடம் மதீனத்து முஸ்லிம்களுக்கு மக்காவிற்குள் அனுமதி இல்லை. திரும்பிச் சென்று விட வேண்டும். அடுத்த வருடத்தில் இருந்து முஹம்மதும் அவரது தோழர்களும் மூன்று நாட்கள் மக்காவுக்குள் வரலாம். காபாவை சுற்றலாம். அம்மூன்று நாட்களும் மக்காவாசிகள் ஊரை விட்டுச் சுற்றி இருக்கும் மலைகளுக்கு இடம் பெயர்வர். அப்படி முஹம்மதும் அவரைச் சார்ந்தவர்களும் மக்காவுக்குள் வரும் போது ஆயுதங்கள் ஏதும் எடுத்து வரக்கூடாது.

 

முஹம்மதின் தோழர்களுக்கு ஒரே ஆவேசம். வெற்றி பெரும் நிலையில் இருக்கையில் நாம் எதற்கு அவர்களுக்குச் சார்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். இது தேவையற்றது. நம்மை ஊரைவிட்டு துன்புறுத்தி துரத்தியவர்களிடம் நாம் ஏன் உடன்படிக்கை செய்து கொள்ளவேண்டும்? முஹம்மத் என்ன செய்து கொண்டிருக்கிறார்? அவருக்கேனும் என்ன செய்து கொண்டிருக்கிறோம் எனத் தெரிகிறதா? கூட்டத்தில் சலசலப்பு.

 

முஹம்மத் பொறுமையை மட்டும் கடைபிடிக்கச் சொன்னார். இரண்டு வருடம் ஒப்பந்தத்தின் போக்கில் சென்றது. ஒப்பந்தத்தின் ஷரத்துகள் யாவும் பின்பற்றப்பட்டது. அந்நிலையில் ஒரு நிகழ்வு நடந்தது.

 

குஸா’ஆ என்ற கோத்திரத்தினர் முஹம்மதின் அணியில் சேர்ந்திருந்தனர். அதே வேளையில் பனூ பக்கர் என்ற மற்றொரு கோத்திரத்தினர் மக்காவின் அணியில் இருந்தனர். மக்கா பனூ பக்கர் கோத்திரத்திற்கு ஆயுத உதவி செய்து குஸா’ஆ கோத்திரத்திற்கு பாடம் புகட்டச் சொல்லியது. பனூ பக்கர் கொஞ்சம் உக்கிரமான இரவுத் தாக்குதலை குஸா’ஆ மீது நடத்தி பலரை கொன்றது. முஹம்மத் மக்காவிற்கு மூன்று நிபந்தனைகளுடன் செய்தி அனுப்பினார்.

 

ஒன்று, மக்கா தாக்குதலில் பலியான குஸா’ஆ கோத்திரத்திற்கு உரிய இரத்தத் தொகையை செலுத்த வேண்டும் அல்லது பனூ பக்கர் கோத்திரத்திற்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனக் கூறி அவர்களை என்ன செய்தாலும் கண்டுகொள்ளக் கூடாது அல்லது ஹுதைபியாவின் உடன்படிக்கையை முறித்துக் கொள்ள வேண்டும்.

 

மக்காவிற்கு வேறு வழி தெரியவில்லை. இழப்பீட்டுத் தொகை செலுத்தும் அளவிற்கு செல்வம் இல்லை. பனூ பக்கர் கோத்திரத்தையும் கைவிட முடியாது. வேறு வழியில்லை. ஒப்பந்தம் முறிந்தது. மக்கா என்ன விலையிலும் ஒப்பந்தத்தைப் புதிப்பக்கத் தயாராய் இருந்தது. தங்களிடம் வலிமை இல்லை என நன்கு உணர்ந்திருந்தது. முஹம்மதற்கு தூது அனுப்பியது. இம்முறை முஹம்மத் தெளிவாய் இருந்தார்.

 

பத்தாயிரம் பேர் கொண்ட பெரும்படை மக்காவுக்குள் முஹம்மதின் தலைமையில் நுழைந்தது. வழியில் எதிர்த்து வாளேந்தி நிற்கும் வீரனைத் தவிர யாரையும் எதுவும் செய்யக்கூடாது என கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்தது. உண்மையில் யாரும் எதிர்க்கத் துணியவில்லை. மக்காவே வீட்டிற்குள் அடைபட்டிருந்தது. படை நேரே சதுரங்க கோவிலுக்கு சென்றது. காபாவில் இருந்த சிலைகள் உடைக்கப்பட்டன. தங்களைக் காப்பாற்ற இயலாத இந்த சிலைகளா உங்களை காப்பாற்றப் போகிறது என்ற தோரணையில் இருந்தது. காபா சுத்தமாக்கப்பட்டது. இறை இல்லம் என்ற தகுதியோடு நின்று கொண்டது. மக்காவாசிகளுக்கு பொது மன்னிப்பு கொடுக்கப்பட்டது. மக்கா வீழ்ந்தது, ஒரு மனிதனின் கனவில். கத்தியின்றி இரத்தமின்றி அந்தப் புரட்சி முடிவுக்கு வந்தது.

 

’மக்களே கொஞ்சம் உங்கள் செவிகளை என் பக்கம் திருப்புங்கள். எனக்குத் தெரியவில்லை, அடுத்த வருடம் உங்களிடையே இங்கு நிற்பேனா என்று. அதனால் எனக்குச் சற்று செவி சாயுங்கள். இங்கு இன்று வர முடியாதவர்களுக்கு இந்த செய்தியை எடுத்துச் செல்லுங்கள்.

 

என் மக்களே. எப்படி நீங்கள் இந்த மாதத்தை, இந்த நாளை, இந்த மண்ணைப் புனிதமாக கருதுகிறீர்களோ அதே போல் ஒவ்வொரு இறைவனுக்கு அடிபணிந்தவரின் உயிரும் பொருளும் அவர்கள் மீது நீங்கள் கொள்ளும் நம்பிக்கையும் புனிதமானதாகும். உங்களை நம்பி பாதுகாப்பிற்காக ஒப்படைக்கப்பட்டவற்றை அதன் சொந்தக்காரர்களிடம் நம்பிக்கையுடன் ஒப்படையுங்கள். யாரையும் புண்படுத்தாதீர்கள். உங்களையும் யாரும் புண்படுத்த மாட்டார்கள். என்றும் நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் உங்களைப் படைத்தவனிடமே மீளப்போகிறீர்கள். உங்களது ஒவ்வொரு செயலுக்கும் அவனிடம் பதில் கூற வேண்டும். இறைவன் உங்களை வட்டியில் இருந்தும் அதன் கெடுதியில் இருந்தும் விலகி நிற்கச் சொல்கிறான். வட்டி வாங்குவதையும் கொடுப்பதையும் நிறுத்திவிடுங்கள்.

 

அந்தத் தீங்கை விரும்புபவர்களிடம் கவனமாய் விலகி இருந்து கொள்ளுங்கள். உங்கள் மார்க்கத்தில் தெளிவாக நடங்கள். இன்று உங்களைப் பெரிய செயல்களில் தவறிழைக்க வைக்கமுடியும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இல்லை. அதனால் உங்களது சிறிய செயல்களில் எச்சரிக்கையாய் இருங்கள்.

 

மக்களே உங்களுக்குப் பெண்கள் மீது சில உரிமைகள் இருப்பது உண்மை தான். ஆனால் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள் அவர்களுக்கும் உங்களின் மேல் உரிமை இருக்கிறது என்பதை. உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்ட அப்பெண்களுக்கு உங்களிடம் உரிமை இருக்கிறது. அவர்களுக்கு அன்பை உணவாகவும் ஆடையாவும் ஊட்டுங்கள் அணிவியுங்கள். அவர்களிடம் பரிவாகவும் இரக்கமாகவும் நடந்து கொள்ளுங்கள். அவர்கள் தான் உங்களுக்கு உற்ற துணையாகவும் சிரைத்தையான அர்பணிப்பாளர்களாகவும் இருக்கின்றனர். இருந்தும் அவர்கள் நீங்கள் அனுமதிகாதவர்களிடம் பழகுவதும் கூடா ஒழுக்கத்தில் ஈடுபடுவதும் அனுமதிக்கப்பட்டதல்ல.

 

மக்களே உள்ளார்வத்துடன் இதைக் கேளுங்கள். இறைவனை ஐந்து வேளை தொழுங்கள், ரமதானில் நோன்பு நோறுங்கள், உங்கள் செல்வத்திலிருந்து ஜகாத் தானத்தை கொடுங்கள். உங்களால் முடியுமாயின் ஹஜ்ஜும் செய்யுங்கள். உங்களுக்குத் தெரியும் இறைவனுக்கு அடிபணிந்தவர் அனைவரும் சகோதரர்கள் என. முஸ்லிம்கள் யாவரும் அந்த ஒரே சகோதரத்துவத்துடன் ஒன்றிணைக்கப்படுகிறார்கள். ஒரு முஸ்லிமுக்கு சொந்தமானதை அவராக முன்வந்து தன் விருப்பத்துடன் உங்களுக்கு கொடுக்காதவரை அது உங்களுக்கு சொந்தம் அல்ல. அதனால் உங்களுக்கு நீங்களே அநீதி இழைத்துக் கொள்ளாதீர்கள்.

 

நீங்கள் அனைவரும் சமம். மனிதகுலம் அனைத்தும் ஆதமிடமிருந்து கிளைத்தது. ஒருவரை விட ஒருவர் எவ்வகையிலும் உயர்ந்தவர் அல்ல. அதனால் ஒரு அரபு எவ்வகையிலும் அரபு அல்லாதவரிடமிருந்து உயர்ந்தவன் அல்ல. அதே போல் எந்த அரபல்லாதவரும் எவ்வகையிலும் ஓர் அரபை விட உயர்ந்தவர் அல்ல. எவ்வகையிலும் கருப்பரோ, வெள்ளையரோ, அரபோ, அரபல்லாதோரோ ஒருவரை விட ஒருவர் உயர்ந்தவர் அல்ல, இறைப்பற்றிலும் நற்செயல்களிலும் அல்லாமல்.

 

நினைவில் கொள்ளுங்கள். ஒரு நாள் உங்களைப் படைத்தவனின் முன் நின்று உங்கள் செயல்களுக்கு விளக்கமளிக்க வேண்டும் என்பதை. அதனால், நான் சென்ற பிறகு சரியான பாதையை விட்டு விலகிச் சென்று விடாதீர்கள்.

 

மக்களே,  எனக்கு முன் ஒவ்வொரு மொழிபேசும் மக்களுக்கும் ஒவ்வொரு குலத்திற்கும் அவர்களில் இருந்தே இறைவன் தன் தூதுவரைத் தேர்ந்தெடுத்து தன் செய்தியைக் கொண்டு சேர்த்திருக்கிறான். ஆனால், எனக்குப் பிறகு இறைவனின் பக்கமிருந்து வேறெந்த செய்தியாளரோ மார்க்கமோ வரப் போவதில்லை. நான் இறுதியாய் விளங்குகிறேன். நன்றாக விளங்கிக் கொண்டு நான் உங்களுக்குக் கூறுவதை எடுத்துக் கொள்ளுங்கள். நான் என்னிடமிருந்து இரண்டை மட்டும் உங்களிடத்தில் விட்டுச் செல்கிறேன். ஒன்று, எனக்கு வந்த இறைச் செய்தி மற்றொன்று அதன் படி நான் நடந்துகொண்ட எடுத்துக்காட்டு. இவற்றை பின்பற்றுங்கள் வழி தவற வேண்டாம்.

 

இன்று நான் கூறியதைக் கேட்டவர்களே என் வார்த்தையைப் பிறருக்கு எடுத்துச் செல்லுங்கள். அவர்கள் பிறருக்கு எடுத்துச் சொல்லட்டும். என் செய்தி சென்று சேரும் கடைசி நபர், என்னிடம் நேரடியாக கேட்கும் உங்களைவிட தெளிவாய் இச்செய்தியை விளங்கிக் கொள்ளட்டும். இறைவா எனக்கு நீ அளித்த செய்தியை உன் மக்களிடம் இறக்கி வைத்ததற்கு நீயும் அவர்களும் தான் சாட்சியாய் இருக்கிறீர்கள்.

 

யா அய்யுஹன்னாஸ். அன்தும் வ அல்லாஹ் வஹ்தஹூ அல் ஷஹீத் அலா மா தூல்’ அந்த உரையை முஹம்மத் முடித்தார்.

 

பின் தனக்கு வந்த இறுதி இறைச்செய்தியை கூறினார். ‘இன்றைய தினம் உங்கள் மார்க்கம் முழுமைப் படுத்தப்பட்டுள்ளது. நான் உங்கள் மீது இறக்கிய ஆதரவை பரிபூரணப் படுத்திவிட்டேன். உங்களுக்காக இஸ்லாம் என்ற இந்தப் பாதயை திறந்துவிட்டுள்ளேன்.’

 

இறைச் செய்திகள் முடிந்தன. முஹம்மதால் ஓதப்பட்ட இறைச் செய்திகள் ‘குர்ஆன்’ ஆயின. முஹம்மதின் வேலை முடிந்தது. முஹம்மத் இறந்தார். உலகின் முதல் முஹம்மத் இறந்தார்.

உலகில் முதன் முதலில் முஹம்மத் என்ற பெயரைக் கொண்டவர் இறந்தார். இன்றுவரை உலகில் பல்வேறு நபர்கள் முஹம்மத் என்ற பெயரில் பல்வேறு குணங்களில் வந்திருக்கின்றனர். உலகின் அதிகம் பெயராய் சூட்டப்படும் சொல் ‘முஹம்மத்’. அதே பெயர் தான் இந்தக் காரில் உட்கார்ந்திருக்கும் முஹம்மத் ஹஸனுக்கும், அவன் கார் செல்லும் மண்ணின் அதிபர் முஹம்மத் மூர்ஸிக்கும். முஹம்மதின் புரட்சி லேசுப்பட்டதல்ல.

 

மணி ஆறு. கிழக்கில் ஒளி இறங்கிக் கொண்டிருந்தது. எகிப்தின் ரம்மியத்தை பார்க்க ஆவலாய் இருந்தான். இஸ்மாய்லியா நகரத்தில் வண்டி நிறுத்தப்பட்டது. பச்சைப் பசேலென்ற நகரமாய் தெரிந்தது. ஈச்ச மரங்கள் அங்கங்கு நடப்பட்டிருந்தன. வேறொரு ஓட்டுனர் பணியெடுத்தார். ஹஸன், ட்ரைவருக்கு அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டான். அவனுக்கு புதிய வானங்கள் புதிய பூமிகளைக் கண்டால் இப்படித்தான். பரஸ்பர அறிமுகத்திற்குப் பின் இதுவரை ஓடிக்கொண்டிருந்த இசையற்ற பாடல்கள் மாற்றப்பட்டன.

 

துள்ளலான இசையில் ஒலித்தது. ’ஹபிபி அர்ரப் புஸ் வ புஸ் புஸ். ஸாலன் இஸ் அல் நுஸ் அ நுஸ் நுஸ்.’

 

வண்டி ஸுயஸ் கால்வாயின்  அல்-ஸலாம் பாலத்தை கடந்தது. பச்சை பகுதி மறைந்து பாலைவனப் பகுதி தென்பட்டது. ஸினாய் பகுதிக்குள் நுழைவதாய் ஜோஆன் சொன்னார்.

 

 

 

ஆப்ரஹாமின் மனைவி ஸாரா தங்களுக்குக் குழந்தை இல்லாததால் தன் அடிமைப் பெண்ணான ஹாஜரை தன் கனவனுக்குத் திருமணம் செய்து வைக்கிறார். ஹாஜருக்கும் அப்ரஹாமிற்கும் இஸ்மாயில் என்ற மகன் பிறக்கிறான். இஸ்மாயில் வளர்ந்து பருவம் அடைகிறான். அந்நேரத்தில் ஸாராவுக்கு குழந்தை பிறக்கிறது. ஐஸாக் என்று குழந்தை பெயரிடப்படுகிறது. இப்போது ஹாஜர் மீதும் இஸ்மாயில் மீதும் ஸாராவுக்கு பொறாமை. தன் கணவனிடம் அவர்களை வேறெங்காவது சென்று விட்டு வரச் சொல்கிறார். கனத்த மனதுடன் அவர் சென்று அவர்களைப் பாலைவன மக்காவில் விட்டு வருகிறார். மக்காவின் இஸ்மாயிலின் சந்ததியில் தான் முஹம்மத் பல நூற்றாண்டுகளுக்குப் பின் பிறக்கிறார்.

 

அதே போல், ஐஸாக்கின் மகன் ஜாகோப். ஜாகோப்பிற்கு இன்னொரு பெயர் இஸ்ராயீல். ஜாகோபிற்கு பனிரெண்டு மகன்கள். அதாவது இஸ்ராயீலின் பனிரெண்டு மகன்கள். இந்த பனிரெண்டு பேருக்குப் பின் கிளைத்த சந்ததிகள் இஸ்ராயீலின் பன்னிரெண்டு சந்ததிகள் ஆயினர். இஸ்ராயீலின் இந்த பனிரெண்டு குலத்தில் தான் யூதர்களின் மூலம் இருக்கிறது. இந்த வழியில் வருபவர்கள் தான் மோஸஸ், ஜீஸஸ் எல்லாம்.

 

மோஸஸ். எகிப்தில் பிறந்தார். அப்போது இஸ்ராயீலின் சந்ததிகள் எகிப்தின் அரசனிடம் அடிமைகளாய் இருந்தனர். மோஸஸ் வளர்ந்து இறைவனின் செய்திக்குப் பணிந்து அடிமைகளாய் இருந்த இஸ்ராயீலின் சந்ததிகளை எகிப்தில் இருந்து காப்பாற்றி செங்கடலைப் பிளந்து மூட நம்பிக்கைகளைக் களைந்து சினாய் தீபகற்பத்தின் பாலைவனத்தின் ஊடே வழிநடத்திச் சென்று இஸ்ராயீல் ராஜ்ஜியத்தை உருவாக்கித் தருகிறார்.மோஸஸ் என்பவர் இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு இறைவனின் சொல்லைக் கொண்டு வழிநடத்தி நன்மை பயக்கிய ஒரு கருவி.

 

இதன் பின் இஸ்ராயீலின் சந்ததிகளில் தோன்றியவருள் முக்கியமானவர் ஜீஸஸ் ஆகிய இயேசு. இஸ்ராயீலின் சந்ததிக்கு இறைவனின் செய்தியை சுமந்து வந்தவராய் கிறிஸ்தவர்களால் நம்பப்படுபவர். கிறிஸ்தவர்கள் இயேசுவை கடவுளின் மகனாக கூறுவர், உலகின் பாவத்தை தன் உதிரத்தால் போக்க வந்தவர் என்பர். மோஸஸால் முன்னறிவிப்பு செய்யப்பட்ட செய்தியாளர் என்று நம்புவர். யூதர்கள் இதனை ஏற்றுக்கொள்வதில்லை. இயேசுவை பொய் செய்தியாளராகக் கூறி சிலுவையில் அறைந்தனர்.

 

யூதர்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள். இவர்கள் மூவருக்கும் இயேசு என்ற புள்ளி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. யூதர்களைப் பொறுத்தவரை இயேசு இறைச் செய்தியாளரும் இல்லை இறைவனின் மகன் என்ற பேச்சுக்கும் இடம் இல்லை. அவர் என்றோ சிலுவையில் அறையப்பட்ட பொய் பிரச்சாரகர். கிறிஸ்தவர்களைப் பொறுத்தவரை உலகத்தை இரட்சிக்க வந்த இரட்சகர். சிலுவையில் அறைந்து உயிர் நீத்த இறைமகனார். முஸ்லிம்களைப் பொறுத்தவரை அவர் இறைச் செய்தியாளர், கன்னி மரியாளின் மைந்தர், ஆனால் இறை மகனெல்லாம் கிடையாது. மற்ற இறைச் செய்தியாளர்களைப் போல் இறைச் செய்தியை தான் அனுப்பப்பட்ட இஸ்ராயீலின் கூட்டத்திற்கு எடுத்துச் சொல்ல வந்த ஒரு கருவி. இறைவனுக்கு மகன் எல்லாம் கிடையாது. அவன் கற்பனைகளுக்கு அப்பாற்பட்டவன். இதுபோக முஸ்லிம்கள் இயேசு சிலுவையில் அறையப்பட்டதையும் ஏற்றுக் கொள்வதில்லை. அவரை இறைவன் உலகை விட்டு உயர்த்திவிட்டதாகவும் மீண்டும் பூமியில் தோன்றுவார் என்றும் கூறுவர். கிறிஸ்தவர்களும் இயேசு மீண்டும் பூமியில் உயிர்த்தெழுவதை நம்புகின்றனர்.

 

இயேசு வாழ்ந்த காலத்தில் இஸ்ராயீலின் சந்ததி ரோமானியர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்தது. எப்படி மோஸஸின் காலத்தில் எகிப்தின் அரசினிடம் இருந்தார்களோ அதே நிலைமை. தனக்கு பின் தன்னைப் போல் ஒரு இறைச் செய்தியாளரை இறைவன் அனுப்ப இருப்பதாக ஏற்கனவே மோஸஸ் முன்னறிவிப்பு செய்திருந்தார். இது தான் யூதர்களின் வாதம். இயேசுவையே மோஸஸ் முன்னறிவிப்புச் செய்திருந்தால் ஏன் ரோமானியர்களிடமிருந்து எங்களை அவர் விடுவிக்கவில்லை?

 

நியாயமான கேள்வி தான் ஆனால் கேள்விக்கு பதிலளிப்பதற்கு முன் எல்லாம் தலைகீழாய் மாறிவிட்டது. ரோமானிய பேரரசு கிறிஸ்தவத்தை தழுவியது. ஐரோப்பா முழுவதும் கிறிஸ்தவம் பரப்பப்பட்டது. அதுவரை யூதர்கள் எகிப்தின் மன்னனாலும் அஸ்ஸிரிய்யர்களாலும் ஃபார்ஸிகளாலும் நாடிழந்து அகதிகளாய்  அடிமைகளாய் வாழ்ந்திருக்கலாம். ஆனால் இனி ‘இயேசுவை கொலை செய்தவர்கள்’ எனும் பட்டத்துடன் இன்னும் சில நூற்றாண்டுகளுக்குக் கிறிஸ்தவ தேசங்களில் அலையப் போகிறார்கள். நிலைமை எப்படி இருக்கும்? இதுதான் மத்திய காலத்தில் யூதர்களின் நிலைமை. ஐரோப்பா முழுவதும் யூதர்கள் துரத்தப்பட்டனர்.

 

‘உங்களில் அவனை நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்பவர்களுக்கு உங்களுக்கு முன் இருந்தவர்களுக்கு அளித்ததைப் போல் இந்த உலகின் மீது பெரும் வெற்றியை அளிப்பதாக இறைவன் உங்களுக்கு வாக்கு கொடுத்துள்ளான். அவன் உறுதியாக உங்களுக்கு அவன் விரும்பி அளித்த இந்தப் பாதையை நிலைநாட்டுவான். அவனை வணங்கி வேறு யாரையும் அவனுக்கு இணைவைக்காமலும் இருப்பவர்களின் பயத்தை, பாதுகாப்பை கொண்டு விரட்டுவான். ஆனால் அவன் பாதையில் இருந்து பிறழ்பவர்கள் நிச்சயம் தவறிழைத்தவர்கள். அத்தகையவர்களுக்கு கேடு தான்.’ இறைவன் குர்ஆனில் கூறினான். (24:55)

 

ஐரோப்பா இருளில் இருந்த சமயத்தில் அரேபியாவில் முஹம்மத் என்று ஒரு இறைத்தூதர் தோன்றினார். மறைந்தார். அவர் மரணத்திற்கு பிந்தைய இருபது வருடத்திலேயே இஸ்லாமை ஏற்று இறைவனுக்கு அடிபணிந்த முஸ்லிம்களின் கையில் அன்றைய வல்லரசுகள் கையில் இருந்த துருக்கியும், பாரசீகமும், எகிப்தும், பாலஸ்தீனமும், சிரியாவும் வீழ்ந்தன. நூறு ஆண்டுகளில் ஸ்பெய்னும், மேற்கு ஆப்பிரிக்காவும், ஆப்பிரிக்கக் கொம்பும், இந்தியாவின் சிந்தும் இணைந்தன. இது உண்மையில் அரபுகளுக்கு வந்த வெற்றியாக இருக்கவில்லை. இஸ்லாமை ஏற்ற அனைத்து மக்களுக்குமான வெற்றியாய் இருந்தது. ஐரோப்பா இருளில் இருந்த போது மத்தியக் கிழக்கு ஒளிரியது. புது நாகரிகம் தோற்றுவிக்கப்பட்டது. கிரேக்க, ரோமானிய ஆட்சிகள் அடங்கின. அவர்களது தத்துவங்கள் கிழக்கிற்குள் வந்தன. புத்துயிரூட்டப்பட்டன.

 

சொல்வது அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது, சொல்வதற்கு ஆதாரம் தேவை. அது இருந்தால் மட்டுமே உண்மையாய் இருக்கும் என்ற கோணத்தில் தத்துவத்தை பௌதீகம் ஆக்கியது இக்காலகட்டம். பிறகு இஸ்லாமை ஒரு கலாச்சாரமாக்கி கலாச்சார முஸ்லிம்களாய் வாழத் தொடங்கிய காலம் தொடங்கியது. முன்னிருந்த நேர்மையான செயல்பாடு பின்னில்லை. துருக்கியின் உஸ்மானியப் பேரரசும் இந்தியாவின் முகலாயப் பேரரசும் தோன்றுவிக்கப் பட்டன. ஐரோப்பா சிறிது சிறிதாய் இருளில் இருந்து ஒளியை நோக்கி வந்தது. இங்கிலாந்து அடுத்த வல்லரசாய் உருப்பெற்றது. அதனிடமிருந்து அமெரிக்காவுக்குச் சென்றது.

 

மத்திய காலங்களில் ஐரோப்பாவில் இருந்த யூதர்கள் துரத்தப்பட்டனர். வேண்டா விருந்தாளியாகப் பார்க்கப்பட்டனர். ஆனால் இஸ்லாமிய தேசங்களில் அவர்களுக்கு ஒளி இருந்தது. அவர்கள் விரட்டப்படவில்லை. தோழமையோடு தான் பழக்கம் இருந்தது. ஐரோப்பிய யூதர்கள் ஐரோப்பாவால் கண்டெடுக்கப்பட்ட அமெரிக்கா போன்ற புதிய தேசங்களில் வாழ்வு தேடிப் போயினர். தங்கள் குழந்தைகளுக்குத் தங்கள் பூர்வீகத்தையும் அடையாளத்தையும் சொல்லிக் கொடுத்தனர். கல்வியில் சிறந்தனர். முதல் உலகப் போர் காலகட்டத்தில் ஒரளவிற்கு அவர்களுக்கெதிரான கொடுமைகள் ஐரோப்பாவில் குறைந்தது. மிக விரைவில் ஹிட்லரின் வடிவில் துவங்கியது. பழைய சித்தாந்தங்களைப் புதுப்பித்துக் கொண்டு முதல் உலகப் போரில் துவண்டு போன ஜெர்மன் தாயைத் தூக்கி நிறுத்த ஹிட்லர் முடிவெடுத்தார். யூதர்கள் கொத்துக் கொத்தாக கொன்று குவிக்கப்பட்டனர். யூதர்கள் மாபெரும் வதைக்கு உள்ளாயினர். மீண்டும் அகதிகளாய் நாட்டைவிட்டுக் கிளம்பினர்.

 

இந்நிலையில் தான் இதுவரை அவர்களைத் துரத்திய உலகம் கண்ணீர் வடித்தது. இன்னொரு வகையில் இதுவரைத் துரத்திய அனைத்து நாடுகளின் முக்கியப் பொறுப்பிலும் யூதர்கள் இருந்தனர். கல்வியாகட்டும், விஞ்ஞானமாகட்டும், கலையாகட்டும், அரசியல் ஆகட்டும், எதுவாக வேண்டுமானாலும் ஆகட்டும். எங்கும் யூதன் இருப்பான் என்றானது. அவர்கள் தங்களைப் பற்றிய மேற்கின் அபிப்பிராயத்தை முழுதாக மாற்றியிருந்தனர்.

 

பல நூற்றாண்டுகளாய் நாடோடியாய் திரியும் தங்களுக்கு நாடு வேண்டும் என யூதர்கள் முடிவெடுத்தனர். ஆப்ரிக்கா போன்ற பல இடங்களில் யூத நாடு தேடி முடித்த பின் பாலஸ்தீன் அவர்கள் கண்ணில் பட்டது. கடவுள் தங்களுக்கு மோஸஸின் தலைமையில் கொடுத்த பூமி என்றனர். அங்கு ஒரு யூத நாட்டை உருவாக்க எண்ணினர். பிரிட்டன் தலையிட்டு தன் கட்டுப்பாட்டில் இருந்த பாலஸ்தீனத்தில் யூதர்களுக்கு நாடு அமைக்க முடிவெடுத்தது.

 

அதுவரை பல இடங்களில் இருந்தும் தொடர்ந்து துரத்தப்பட்ட யூதர்களை என்றும் இஸ்லாமிய நாடுகள் வரவேற்கவே செய்தன. ஆனால் அடி மடியிலேயே கைவைக்கும் திட்டத்திற்கு அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை.

 

இஸ்ரேல் அமைக்கப்படுவதற்கு முன்பு வரை பாலஸ்தீன் ஒன்றும் வெற்றிடமாக இல்லை. மக்கள் வாழ்ந்து தான் வந்தனர். யூதர்கள் அங்கிருந்து துடைத்துவிட்டாற் போல் எல்லாம் வெளியேறவில்லை. எஞ்சிய யூதர்களும், யூதர்களில் இருந்து கிறிஸ்தவர்களாய் மாறியவர்களும் வாழ்ந்தனர். பின்னர் இஸ்லாமின் வருகைக்குப் பின் பலர் இஸ்லாமைத் தழுவினர். பிராந்திய மொழியாக அரபு மொழி வளர்ந்தது. பல நூற்றாண்டுகள் அந்த நிலத்தைக் காக்க எதிரிகளிடம் போர் புரிந்துள்ளார்கள். கண்ணீரும் இரத்தம் சிந்தியுள்ளார்கள்.

 

அதெல்லாம் தெரியாது அந்த இடத்தில் யூத நாடு ஒன்று அமைந்தே தீரும். பெயர் இஸ்ரேல். 1948ல் பிரிட்டனின் முழு ஆசியுடன் பாலஸ்தீனைப் பிரித்தும், அங்கிருந்த அரபுகளை விரட்டியும் இஸ்ரேல் இயங்கத் துவங்கியது. வெளியில் இருந்து வந்த ஒரு அகதிக் கூட்டம் அங்கிருந்தவர்களை அகதியாக்கி அண்டை நாடுகளுக்குத் துரத்தியது. எகிப்தும், ஜோர்டானும், அண்டை அரபு தேசங்களும் இது கண்டு கொந்தளித்து இஸ்ரேலை எதிர்த்தனர். பல போர்களும் மூண்டது. அரபு தேசங்களிடம் வலிமை இல்லை. அனைத்திலும் இஸ்ரேலுக்கே ஜெயம். இப்போர்கள் இஸ்ரேலின் எல்லையை இன்னும் விரிவுபடுத்தி இருந்தன. எகிப்தின் சினாய் தீபகற்பம் முழுதும் இஸ்ரேல் வசம் போனது. ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. அரபு தேசங்கள் பின் வாங்கின. பாலஸ்தீன் காஸா பட்டை மற்றும் மேற்றுகரை என்று இரு பகுதியாய்  பிரிந்து நின்றது. இடையில் இஸ்ரேல். இஸ்ரேல் தன் எல்லைகளை மேற்குக் கரைக்கு உள்ளும் சில இஸ்ரேலிய குடியிருப்புகளை ஏற்படுத்தி இன்றுவரை விரிவுபடுத்தி வருகிறது.

 

பாலஸ்தீனின் பெரும்பாண்மை மேற்குக் கரைப் பகுதி. காஸா பட்டை என்பது எகிப்தின் சினாயை ஒட்டிய சிறு நிலப்பரப்பு. இன்றுவரை இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனுக்கும் இடையே எந்த நல்ல உடன்பாடும் எட்டப்படவில்லை. இன்று நடுவில் பிரிட்டன் இல்லை. இஸ்ரேலுக்கு தோள் கொடுத்து அமெரிக்கா நிற்கிறது.

 

இது போதாதென்று பாலஸ்தீனுக்குள்ளேயே சண்டை. ஃபத்தாஹ் மற்றும் ஹமாஸ் அமைப்புகளால். ஆயுதம் ஏந்தி இஸ்ரேலை எதிர்த்த யாசர் அராஃபத் இறுதியில் பேச்சுவார்த்தையே இதற்கு தீர்வென முடிவுகட்டி அமைத்த அரசியல் இயக்கம் ஃபத்தாஹ். அதேபோல் 1980களில் அரபு தேசங்களில் தோன்றிய ‘இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பின்’ விழுதாக அஹமத் யாஸினால் துவங்கப்பட்டது ‘ஹமாஸ்’ இயக்கம். ஃபத்தாஹ் ஆயுதப் போராட்டத்தை கைவிட்டுவிட்டாலும். ஹமாஸ் விடவில்லை. இஸ்ரேலை அது அங்கீகரிக்கவே இல்லை. அது பாலஸ்தீனின் நிலம் என்று கூறிவந்தது.

 

2004ல் அராஃபத் இறக்க வேலை முடிந்தது. பாலஸ்தீன பொதுத் தேர்தல் வந்தது. ஃபத்தாவும் ஹமாஸும் நின்றனர். இறுதியில் ஹமாஸ் மாபெரும் வெற்றி பெற்றது. அமெரிக்காவும் இஸ்ரேலும் அதனை ஏற்கவில்லை. வெளியிலிருந்து வரும் நிதிகளை நிறுத்தின. அரசாங்கத்தை முடக்கின. ஃபத்தாவுக்கு உதவி செய்யத் துவங்கின. ஒற்றிணைந்து இருந்த மேற்குக் கரையும் காஸா பட்டையும் பிரியத் துவங்கின. 2007ல் போர் மூண்டது.

 

போரின் இறுதியில் காஸா பட்டையை ஹமாஸும் மேற்குக் கரையை ஃபத்தாவும் நிலைநிறுத்திக் கொண்டன. மேற்குக் கரையில் வென்றிருந்தாலும் ஹமாஸ் சம்பந்தப்பட்டவர்கள் வெளியேற்றப்பட்டனர். ஹமாஸ் காஸாவில் குடிகொண்டது. ஃபத்தாஹ் சம்பந்தப்பட்டவர்கள் மேற்கு கரைக்கு அனுப்பப்பட்டனர். ஹமாஸ் கைக்கு காஸா வந்ததால் காஸாவின் மீது இஸ்ரேலும், எகிப்தும் பொருளாதாரத் தடை விதித்தன. பிறகு 2008ல் இஸ்ரேல் காஸா மீது தன் தேர்தல் நோக்கத்திற்காக படையெடுத்தது.

 

இலங்கைத் தமிழர்களை வைத்து எப்படி தமிழகத்தின் அரசியல்வாதிகள் சதுரங்கம் ஆடுகிறார்களோ அதே நிலைதான் மத்திய கிழக்கிலும். அங்கு பாலஸ்தீன் அப்படிப்பட்ட நிலையில் இருக்கிறது. இன்றைய நிலையில் ஹமாஸை இஸ்ரேலும் அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் கனடாவும் தீவிரவாத அமைப்புப் பட்டியலில் சேர்த்துள்ள நிலையில் ரஷ்யாவும், துருக்கியும், நார்வேவும் அதை அரசியல் கட்சியாக அங்கீகரித்துள்ளன.

 

எகிப்து?

 

இது தான் மிக முக்கியமான கேள்வி. எகிப்து. பிற நாடுகளைப் போல் இல்லை அரபு தேசங்கள். மிகவும் ஸ்திரமற்ற தன்மையில் அவை நிற்பவை. என்று என்ன நடக்கும் என்று சொல்ல முடியாது. நேற்றிருப்பது இன்றில்லை இன்றிருப்பது நாளையில்லை என்பதை ஒவ்வொரு நொடியும் உணர்த்தும் நிலங்கள் அவை. மொழியாலும் கலாச்சாரத்தாலும் மதத்தாலும் பெரும் வேறுபாடு இல்லாமல் இருந்தாலும் ஆட்சியாளர்களால் பெரிதும் மாறுபடக்கூடியது. எகிப்தும் இதற்கு விதிவிலக்கல்ல.

 

ஹோஸ்னி முபாரக்கின் ஆட்சியில் ஹமாஸ் தீவிரவாத இயக்கம். தற்போதைய முஹம்மத் மூர்ஸியின் ஆட்சியில் அப்படி இல்லை. மல்லிகைப் புரட்சிக்குப் பின் தேர்தலில் வென்ற மூர்ஸி இஸ்லாமிய சகோதரத்துவக் கட்சியை சார்ந்தவர். இஸ்லாமிய சகோதரத்துவக் கட்சியே ஹமாஸின் தாய்.

 

தற்போது மூர்ஸி ஆட்சிக்கு எதிரான அதிர்வுகள் எகிப்தில் நிலவுகின்றன. நாளை மூர்ஸியின் ஆட்சிக்கு எதுவும் நிகழ்ந்தால் காஸாவின் நிலை இன்னும் மோசமாக இருக்கும்.

 

ஒன்பது மணி. அந்த விடியலின் மயக்கத்தில் மத்தியத் தரைகடல் மிதமான நீலத்தில் பச்சைகளுடன் கலந்து ஈர்த்தது. மத்திய தரைக் கடலை ஒட்டியே சென்று ’ஆரிஷ்’ நகருக்கு அப்துல் மஸிஹ் வண்டியைச் சேர்த்தார். அந்த ஓட்டுனரின் பெயரை ஹஸன் அறிந்து வைத்திருந்தான். இவ்வளவு நேரம் அவர் தானே நடந்த கதையை சொல்லிக் கொண்டிருந்தார். எகிப்தில் இருந்து சினாய் தீபகற்பத்திற்குள் நுழைந்ததில் இருந்து அவர் அங்கு நிகழ்ந்து வரும் அரசியலை எளிமையாகக் கூறிக்கொண்டே வந்தார். புரியும்படி அவருக்கு ஆங்கிலம் பேசத் தெரிந்திருந்தது. இந்த அரபுகளால் கைகளை ஆட்டாமல் பேசவே முடியாது போல. உரத்த குரலில் கைகளை அடித்து மடக்கி உலுக்கி உணர்ச்சி பொங்கத் தான் பேசுகிறார்கள். அப்படியே உணர்ச்சியில் மிதக்க வைத்து விடுகிறார்கள். திடீரென்று அழுகிறார், மனிதர் திடீரென்று இடி முழக்கத்துடன் சிரிக்கிறார். முகத்தில் ரேகைகள் அதிகம் தென்படுகிறது. கவலையும் வருத்தமும் வாட்டி இருக்க வேண்டும்.

 

ஆரிஷ் நகரில் பகல் உணவைக் கொள்ளலாம் என ஒரு உணவகத்திற்கு அழைத்துச் சென்றார். ஃபலாஃபல், ஹும்முஸ்,  பிட்டா என ஏதேதோ புரியாத ஐட்டங்கள் வரவழைக்கப்பட்டன. ஹஸனுக்கு எதுவும் பிடிபடவில்லை. அதை எதில் செய்தார்கள் என்று கூட அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. பசிக் கொடுமை அதிகமாய் இருந்ததால் ஃபலாஃபல் உருண்டையை ஹும்முஸில் மஸிஹ் துவட்டி விழுங்குவதைப் போல் அவனும் செய்தான்.

 

உணவின் போது தான் அவனுக்குத் தெரிந்தது மஸிஹ் ’காப்ட்’ என. அதாவது எகிப்திய கிறிஸ்தவர்.

 

‘உங்க பேர்ல அப்துல்மஸிஹ்னு வச்சிருக்கீங்க? இது முஸ்லிம் பேர் இல்லையா?’

 

‘லா. தபாஆன் லா. அப்துல்னா அடிமை, மஸீஹ்னா கிறிஸ்து. இயேசு கிறிஸ்துவின் அடிமை’

 

’ஜேசுதாஸா நீங்க?’

 

‘எய்ஹ்? அனா மெஷ் ஃபஹ்ம எண்ட பேடயோல் எய்ஹ்.’

 

’நத்திங். இட்ஸ் தமிழ். ஜேசுதாஸ் இஸ் ஒன் ஆஃப் ஆர் தமிழ் ஸிங்கர். ஹீ ஹொல்ட்ஸ் தெ ஸேம் மீனிங் ஆஃப் யுயர் நேம். ஆமா எனக்கு இன்னொரு கேள்வி. ஷால் ஐ?’

 

‘ஸ்யூர். தபாஅன். எஸஅல் ஸய் மன்த ஆவெஸ் யா சப்ஹி’

 

’அப்பறம் ஏன் பேச்சுக்கு நடுவே. யால்லாஹ், இன்ஷாஅல்லாஹ்னு அல்லாஹ் அல்லாஹ்னு சொன்னிங்க’

 

‘யா ஹஸன். ‘அல்லாஹ்’ எல் எஸ்ம் த ஹ்வா ந்ஃப்ஸோ எஸ்ம்’ காட்’ . எல் எத்னீன் வாஹித். மெஷ் பாஸ் ‘காட்’இல் மொஸல்மீன். அல்லாஹ்ன்றது அரபில இறைவன்றதுக்கு பொதுப்பெயர். முஸ்லிம்ஸ் மட்டுமில்ல நாங்களும் யூதர்களும் கூட யூஸ் பண்ணுவோம். ஈவன் பிஃபோர் அட்வெண்ட் ஆஃப்இஸ்லாம்’

 

’ஓ. முஸ்லிம்ஸ்  அல்லாஹ்வ ஒரே கடவுள் உருவமே இல்லைனு சொல்வாங்க. நீங்க எப்படி உங்க ட்ரினிட்டிய இதில சொல்வீங்க? குழப்பமா இருக்காது?’

 

யா மாஷா அல்லாஹ். எண்ட காயெப் எல் மொக்ஹ் ட ம்னீன். தா சஹ்ல கலெஸ். அல்லாஹ் அல் அப், அல்லாஹ் அல் வலத், அல்லாஹ் அல் ரூஹுல் குத்ஸ். மா அண்தெனஷ் அய் மிஷ்கல். மா பெத்னாஷ் நெர்பெக்ஹ அக்தர் மென் கெதா’

 

‘காட் தி ஃபாதர், காட் தி சன், காட் தி ஹோலி ஸ்பிரிட். பிதா அல்லாஹ், சுதன் அல்லாஹ், பரிசுத்த ஆவி அல்லாஹ்’

 

’அய்வா அனா காஹெஸ். ரஃபா ஹ்தக்ஹொத் வஆத் மென் ஹெனா 30 (கைச் சைகை) திஆஇஆஅ’

 

முப்பது நிமிடத்தில் ரஃபா வந்தடைந்தது. நம்மூர் விமான முனையம் போல் தெரிந்தது. அப்துல் மஸிஹ் காரை உள்ளே செலுத்தினார். ஜோஆன் இறங்கி ஐ.நா சபையின் சார்பாக நடக்கும் கட்டிட வேலைக்காக வந்திருப்பதாக தெரிவித்தார். ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு எகிப்தின் பக்கத்தில் இருந்து உள்ளே வாகனம் அனுமதிக்கப்பட்டது. காஸாவின் பக்கம் சிறிது பரஸ்பர சோதனைக்குப் பின் நுழைய முடிந்தது.

 

’என்னக் ட்ஃபூட் அலா காஸா ஷெஆ மெஷ் பெஸொஹொலா எல்லி எண்டா ஃபக்ர்ஹா எல்லி பாஆஎத் ஸமாம். டெல்வஆதி பாஆஎத் சஆபா க்ஹலெஸ். அஹ்லன் வ மர்ஹபா ஃபீக் பி காஸா, அக்பர் ஸெக்ன் மஃப்தூஹ் பெல் ஆஅல்ம் தா.

 

காஸா, உலகின் பெரிய திறந்தவெளிச் சிறைச்சாலை உங்களை வரவேற்கிறது.’

 

 

காஸா பட்டை. ஆறு கிலோமீட்டர் அகலமும் நாற்பது கிலோமீட்டர் நீளமும் கொண்டது.  ரஃபா, கான் யூனுஸ், தைர் அல்பலாஹ், காஸா ஆகிய நான்கு நகரங்களை உள்ளடக்கியது.

மொத்தமாக காஸா பட்டை. இந்தப் பட்டையில் இன்று வாழும் மக்களில் பெரும்பான்மையினர் இஸ்ரேல் அமைந்த பிறகு அங்கிருந்து அகதிகளாய் வந்தவர்கள். சில அகதிகள் தங்கள் வாழ்வை ஓரளவிற்கு வாழக்கூடியதாய் மாற்றிக் கொண்டிருந்தாலும் பலரால் முடியவில்லை. பலருக்கு காஸாவின் அகதிகள் மூகாம்களில் தான் வாழ்க்கை கழிகிறது. எங்கும் மக்கள் நெரிசல் மிக அதிகமாய் தெரியும். இருந்தாலும் நம் இந்திய நகரங்கள் அளவிற்கு நெரிசல் தெரியாது. கூச்சலும் பெரிதாய் இருக்காது. ஆனாலும் மத்திய கிழக்கிற்கு இது அதிகம் தான்.

 

ஊரில் எங்கும் ஒரு வித பேரமைதியை உணர முடிந்தது. மக்களின் முகம் எப்போதும் ஒருவித பயத்துடன் அந்த அமைதிக்குப் பழகிப்போய் இருந்ததைப் போல் தெரிந்தது. வெயில் கொளுத்தி எடுத்தது. அந்த கடல் மட்டும் இல்லை என்றால் தாக்குப்பிடிக்க முடியாது. ஹஸன் கடலை நோக்கி நடந்தான். ஏதோ ஒன்று உள்ளிருந்து அவனைச் செலுத்திக் கொண்டிருந்தது.

 

கடல்கள் என்றும் அவனுள் பயத்தை தான் தோற்றுவித்துள்ளன. தூரத்தில் இருந்து போகிற போக்கில் பார்ப்பதில் இருக்கும் ஆர்வம் அருகில் சென்றால் இருப்பதில்லை. கடலும் அலையும் அதன் ஓசையும் உள்ளுக்குள் கிலியை உண்டுபண்ணி விடுகின்றன. சிறுவயதில் ஏதாவது கடலுக்கு மாதம் ஒரு முறையாவது சென்றுவிடுவான். ஆனாலும் அந்தப் பயம் விட்டதாகத் தெரியவில்லை. சுனாமி தமிழகத்தை சுழற்றியடித்த போது இவன் கடலில் இல்லை. கடலை வெகு தொலைவில் இருந்து தொலைக்காட்சியில் வேடிக்கை பார்த்துக் கொண்டு தான் இருந்தான். இருந்தாலும் அதை உணர்வுப் பூர்வமாக உணர முடிந்தது. மனது கற்பனை செய்து பயமுறுத்தியது. அன்றுடன் கடலுடன் என்றும் விளையாடியதில்லை. அதற்கு முன்பும் விளையாடியதில்லை என்பது வேறு கதை. அப்படியே மனதுக்குள் பயத்துடன் பதிந்தது. கால்களை தொட்டு விளையாடிக் கொண்டிருந்த அது திடீரென்று உள்வாங்கியது. அப்படியே தன் மொத்த திறத்தையும் திரட்டிக்கொண்டு வானத்துக்கும் பூமிக்குமாய் ஒரு தாண்டவத்துடன் பாய்ந்தது. தன்னை மிதித்து விளையாடிய கால்களை மொத்தமாக விழுங்கியது. அந்தக் கால்கள் நேற்றுப் பிறந்தவையானாலும் சரி நாளை பிறக்கப்போவதானாலும் சரி. பாரபட்சம் ஏதும் கிடையாது. விழுங்கு. அங்கு கட்டளை ஒன்றே.

 

கடலைப் பார்த்தவாறும் அங்கு மனிதர்களின் செயல்பாட்டைப் பார்த்தவாறும் அமைதியாக அமர்ந்தான். ஆனாலும் மனம் அமைதியடையவில்லை. மலைகளிலும் வயல்களிலும் காடுகளிலும் கிடைக்கும் அந்த அமைதியை இங்கே கண்டெடுக்க முடியவில்லை. தொடர்ச்சியான இரைச்சலாய் மட்டுமே கடலின் சப்தம் அவனுக்குப்பட்டது. இருந்தாலும் அந்த மனிதர்களின் செயல் அனைத்தையும் மறைத்தது. படகுகளைத் திணறி இழுத்து உள்ளே செலுத்தி அந்த இரைச்சல் மிகுந்த கடலுடன் போராடி முட்டி மோதி மீன்பிடித்துத் திரும்பிக் கொண்டிருந்த அவர்களின் அந்த உழைப்பு ரசிக்கக் கூடியதாய் இருந்தது. இவனுக்கும் அந்த படகில் ஏறிச் செல்ல வேண்டும் என்று ஆசை தான். ஆனால், அது கடலில் நிலையில்லாமல் இப்படி அப்படியுமாய் ஆடிச் செல்வதைக் கண்டால் தான் ஒரு மாதிரி இருந்தது. அதில் எப்படி உறுதியாக மனிதர்கள் நிற்கிறார்கள் என்பதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தான். அப்படியே எழுந்து அருகில் சென்றான்.

 

ஒரு படகு நீரைத் தழுவத் தயாரகிக் கொண்டிருந்தது. அருகே சென்று ஈரத்தில் நனைந்து கொண்டே  தடவிப்பார்த்தான். இதுவரை கடலுக்குள் படகில் போனதே இல்லை. இதை வட இந்தியர்கள் கேட்டால் காரி உமிழ்ந்திருப்பார்கள். கடல் விரிந்த தமிழ்நாட்டில் இருந்து கொண்டு கடலுக்குள் சென்றதில்லை என்றால் அவர்களுக்கு வியப்பாகத் தான் இருக்கும். கேட்போமா? வேண்டாமா? என்ன கேட்பது? திணறிக் கொண்டிருந்தான்.

 

அதற்குள் அவர் பார்த்தார். அந்த மீனவர் அவனைப் பார்த்தார்.

 

‘அலா ஷோ ப்டெதல்ஆ யா இப்னி’ அவனுக்கு எதுவும் புரியவில்லை. ஏதோ திட்டுவதைப் போல் தெரிந்தது. விலகினான்.

 

‘பெத்ஹப் அஸ்ஸஹ்பக்?’ குரல் சற்று தணிந்ததாய் தெரிந்தது.

 

‘நத்திங்’ என்றான்.

 

‘ப்தெஹ்க்கி அரபி எண்த்த? அரபி அரபி’ என அரபி தெரியாதா என வாய்க்கு அருகே விரல்களை குவித்து விரித்து சாடை செய்தார்.

 

’நோ. ஐ நோண்ட் நோ அரபிக். டூ யூ நோ இங்லிஸ். இங்லிஸ்?’

 

‘அஹ் ம்னீஹ். ஷோ எஸ்மக்?’ நேம் நேம் யூ நேம்’

 

‘ஆன். மை நேம். ஐம் முஹம்மத் ஹஸன்’

 

‘முஹம்மத் ஹஸன். ஆ ஹான். தய்யிப். எண்த மின் வீன்? வேர் யூ ஃப்ரம்?’

 

‘இந்தியா’

 

‘அல் ஹிந்த். ஆ ஹான். அஸ்ஸலாமு அலைக்கும்.’

 

‘வ அலைக்கும் ஸலாம். தான்க்ஸ்.’

 

‘போட். லைக் டு கம். யூ?’

 

‘யெஸ்’ பெரிதாக தலையாட்டினான். அந்த சிறிய படகில் இருவரும் ஏறிக்கொண்டனர். அவர் மோட்டாரைச் செலுத்தினார். அவன் கால்கள் நிற்க முடியாமல் தடுமாறின. ஒருவிதக் கூச்சம் தெரிந்தது. உள்ளே ஏறியவுடன் ஹஸன் அமர்ந்து கொண்டான். நீரைப் பிளந்து கொண்டு படகு சென்றது. சிறிது தொலைவு சென்றிருக்கும், மோட்டாரை நிறுத்தினார். படகு நின்றது. நடுக்கடல் என்றெல்லாம் சொல்ல முடியாது. கரையில் இருந்து சிறிது தூரம். பின் வலையை உள்ளே வீசினார்.

 

‘அனா லிஸத்ன ப்ர்மி எல்ஷபகா. காலீன நெஸ்த்ன ஷ்வாய். வெய்ட் டில் ஃபிஷ்’

 

‘ஓகே. ஹவ் ஓல்ட் ஆர் யூ?’ வயதைக் கேட்டான்.

 

‘ஓல்ட் ஹாஹா. பட் ஸ்ட்ராங்க்’ அவரை வயதானவர் என்று சொல்லிவிட்டானோ என்று நினைத்து வயதானவன் தான் ஆனால் இன்றும் பலம் குறையவில்லை என்று புஷ்டிகளை உயத்திக் காட்டினார்.

 

‘நோ. நோ. ஐம் ஆஸ்கிங் யுவர் ஏஜ். ஏஜ்?’

 

‘ஒம்ர்?’

 

‘ஆ ஒம்ர். யுவர் உம்ர்’ ஹிந்தி உர்தூவில் வயதை ஒமர் என்று தான் கூறுவர். இம்மொழிகளில் அரபு சொற்கள் அதிகம்.

 

‘ஒம்ரி 65 (கைச் சைகை) ஸனா’. சிக்ஸ் ஃபைவ்’ அருபத்தைந்து என புரிந்து கொண்டான். ஆனால் இவர்கள் வலிமையாகத் தான் இருக்கிறார்கள். அவர் உடல் உழைப்பைப் பார்த்தால் வயதானதைப் போல் தெரியவில்லை. வலையை இளைஞனைப் போல் அவனைத் துணைக்கு அழைக்காமல் இழுத்தார். வலையில் மிகக் குறைந்த அளவு மீன்களே சிக்கி இருந்தன.

 

‘’அல்லாஹ் யெல்ஆன் இஸ்ரயேல் லானா மின் எல் ஸமா. ஹாஸ்ப்ய அல்லாஹ் அலீகோ யா அந்தல்.’ முகத்தில் வருத்தம் தெரிந்தது.

 

‘வை? லெட்ஸ் கோ இன் டீப். நாம இன்னும் கொஞ்சம் உள்ள போய் பிடிக்கலாமே?’ கையை கடல் நோக்கி காட்டி விளக்கினான்.

 

‘ஹாதா ஹொவ்வ எல் மஆபர் வி அய் ஹாத் பைஇயோபர் மின்னோ பெதொகொஹ்’அவர் சொன்னதில் இருந்தும் கைகளைத் தூரத்தில் சில இஸ்ரேல் கொடி பறக்கும் படகுகளைக் காட்டி சுடுவதைப் போல் செய்தலிலும் இதுதான் எல்லை, இதை தாண்டினால் இஸ்ரேல் ரோந்துப் படகுகள் சுட்டுவிடும் எனப் புரிந்தது.

 

‘வை?’

 

‘பார்டர்’.

 

அவரிடம் திக்கித் திணறிப் புரிந்து கொண்டது இதுதான். காஸாவின் கடல்களும் இஸ்ரேலின் பிடியில். காஸாபட்டை மூன்று புறத்தில் நிலத்தாலும் ஒரு புறத்தில் கடலாலும் சூழப்பட்டுள்ளது. நிலப்பகுதியில் வடக்கிலும் கிழக்கிலும் மேற்கே இருக்கும் மத்திய தரைக் கடலிலும் இஸ்ரேலின் முற்றுகை தொடர்கிறது. ஹமாஸ் காரணமாகச் சொல்லப்படுகிறது. அதாவது ஹமாஸால், அவர்களின் ஏவுகணைகளால் தங்கள் நாட்டுக்கு ஆபத்து என்பதே இஸ்ரேலின் வாதம். ஹமாஸிடம் கேட்டால், முதலில் அவர்கள் தான் துவக்குகின்றனர், நாங்கள் செய்வது தற்காப்பு மட்டுமே. எங்களிடம், அமெரிக்காவின் துணையுடன் இருக்கும் அவர்களை எதிர்க்கும் அளவிற்கு ஆயுத பலம் இல்லை. இது போதாதென்று தெற்கே எகிப்தின் முற்றுகை. மூர்ஸிக்கு பிறகு நிலைமை கொஞ்சம் பரவாயில்லை. ஆனாலும் தெற்கே கடலுக்குள் செல்ல முடியாது. கரையிலிருந்து ஆறு கடல் மைல் தொலைவு தான் உள்ளே காஸா மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல முடியும். மீறிச் சென்றால் துப்பாக்கிச் சூடு.

 

‘ஹாதா மெஷ் எல் பஹ்ர் எல் மொடவஸ்ஸத். ஹாதி பெர்கெட் காஸா. நாட் ஸீ. காஸா ஸ்விம்மிங் பூல் திஸ்’ என்று கூறினார். ஆம் காஸாவைப் பொருத்தவரை அது மத்திய தரைக் கடல் கிடையாது காஸாவின் கண்மாய் தான்.

 

ஆனால் இங்கே ஒரு ஆறுதல் அளிக்கும் விஷயம் என்னவென்றால் இவர்களுக்கு எல்லை தாண்டுவதும் பிடித்துப் போவதும் நம்மூரைப் போல் தினசரி பிரச்சனை இல்லை. என்றோ ஒரு நாள் நடப்பது. தங்கள் எல்லையைத் தாண்டி நம் எல்லைக்குள் வந்து நம் மீனவர்களை சுடும் அல்லது சிறைக்குக் கொண்டு செல்லும் தினசரி காட்சி இங்கில்லை. இலங்கையை விடுங்கள். வேறெங்கிருந்தோ வந்து நம் மீனவனைச் சுட்ட வெளிநாட்டுக்காரன் தாய் நாடு சென்று ஓட்டுப் போட்டுவர அனுமதிப்பதும் அவன் அங்கிருந்துகொண்டு வரமாட்டேன் போ என்று அடம்பிடிப்பதையும் ஏற்றுகொள்ளும் நம் பாரத தேசம் உண்மையில் உலகத்திற்கு வியப்பைத் தான் அளித்திருக்க வேண்டும்.

 

பிடித்த மீன்களை எடுத்துக் கொண்டு படகு தரைக்குத் திரும்பியது. ஹஸன் விடைபெற்றான். அவர் விடவில்லை. தன்னுடன் வீட்டிற்கு வந்து உணவருந்திவிட்டுப் போகுமாறு நிர்பந்தித்தார். ஹஸன் எவ்வளவோ மறுத்தும் அவர் விடவில்லை. சரி என்று நடையைக் கட்டினான். வீட்டில் யாரும் இல்லை. அவர் மட்டும் தான் தனித்திருந்தார். மிகச் சிறிய வீடு. கடற்கரையை ஒட்டி.

 

அவர் கதையைச் சொன்னார். அவர் சில போர்களில் பங்கு கொண்ட போர் வீரராம். இண்டிஃபாதா கிளர்ச்சியின் போது கலந்திருக்கிறார். அவருக்கு மொத்தம் எட்டு குழந்தைகளாம். எல்லாம் திருமணமாகி வேலையில் வெளியில் இருக்கின்றனராம். ஹமாஸ் மீது கொண்ட பற்றால் மேற்குக் கரையிலிருந்து இங்கு மனைவியுடன் வந்தாராம். ஆனால் நிலைமை இப்படி மாறுமென அவர் ஒரு நாளும் எண்ணியிருக்க மாட்டார். அவர் மனைவியையும் ஏதோ போரில் இழந்துள்ளார். தற்போது தனிமையில் தான் வாழ்வைக் கழிக்கிறார். அவர் கதையைப் பேசும் போது கண்ணீர் மல்குகிறது. இதை பாலஸ்தீனியர்களிடம் காண முடிகிறது. அனைவருக்கு கண்ணை முட்டும் அளவிற்கு துன்பம் இருக்கிறது. ஆனால் அவர்கள் சிரிக்க மறப்பதில்லை. வெளியில் இருந்து வருபவர்களிடம் தங்கள் துன்பமான பகுதியை அவர்கள் தெரிவிக்க விரும்புவதில்லை இருந்தாலும் சொல்வதற்குத் துன்பத்தைத் தவிர எதுவும் இல்லையாகையால் எப்படியாவது அது வெளிப்பட்டுவிடுகிறது.

 

மிகச் சிறிய வீடு தான். ஆனால் நம்மைப் பொறுத்த மட்டில் அது முதல் தர நடுத்தர வர்கத்தினரின் வீடு. தரை விரிப்பு, கட்டில், மெத்தை, ஃப்ரிட்ஜ், டீவி, மார்பிள் தரை, வாஷ் பேஸின், வெஸ்டர்ன் டாய்லட். ஆனால் அகதிகள் மூகாம்கள் இப்படியல்ல. அவர்கள் மிகவும் துன்பத்தில் தான் வாடுகின்றனர். அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் தான் வாடுகின்றனர்.

 

வீட்டிற்குள் நுழைந்து விளக்கைப் போட்டார். எரியவில்லை.

 

‘அல்லாஹ் யஹோத்கோ யா அவ்பாஷ்.  ப்ரதோ மாஃபீஷ் கஹ்ரபா. டைய்லி சிக்ஸ் ஹவர்ஸ் நோ எலெக்ட்ரிசிடி’ இதற்கு முன் இஸ்ரேல் தொடுத்த தாக்குதலில் காஸாவின் மின் உற்பத்தி செய்யும் நிலையங்கள் துவம்சமாக்கப்பட்டன. இப்போது ஒரே ஒரு நிலையம் மட்டுமே இயங்குகிறது. கூடுதலாக எகிப்தில் இருந்தும் இஸ்ரேலில் இருந்தும் சிறிது மின்சாரம் தருவிக்கப்படுகிறது. அதாவது காஸாவின் மின்சாரத்தையும் நீரையும் இஸ்ரேல் தன் கையில் வைத்துக் கொள்ள விரும்புகிறது. ஏதாவது மோதல் அல்லது பிணக்கம் என்றால் இஸ்ரேல் செய்யும் முதல் செயல் இவ்விரண்டையும் நிறுத்திவைப்பது தான். மூச்சை பிடுங்கிவிட்டால் செயல்படுவது எப்படி?

 

இங்கும் அவன் தன் நாட்டின் நிலையை நினைத்துப் பார்த்தான். கடந்த வருடம் தன் வீட்டில் இருட்டில் கழித்த கணங்களை எண்ணிப் பார்த்தான். தமிழகத்தில் இன்றுவரை குறைந்தது எட்டு முதல் இருபது மணிநேரம் வரை மின்சாரம் இல்லாத நிலையை எண்ணிப் பார்த்தான். உண்மையில் காஸாவின் நிலையைவிட இந்தியாவின் நிலை பல வகையில் மோசமாகத்தான் உள்ளது. எந்த முற்றுகையும் இல்லாமலேயே அப்படித்தான் உள்ளது. ஆனால் அவர்களைச் சுற்றியிருக்கும் நாடுகளுடன் தொடர்புபடுத்திப் பார்க்கும் பொழுது இது அவர்களுக்கு மிக மோசமான நிலைமை தான். இந்தியக் கண்ணாடியைக் கழற்றிவைத்துவிட்டு தற்போது வேலை செய்யும் இங்கிலாந்தின் கண்ணாடியை அணிந்து பார்த்தால் நிலைமை புரியும்.

 

இந்தியர்கள் இவர்களைவிட ஏன் இந்த உலகத்தை விட இன்னொரு விஷயத்தில் கெட்டிக்காரர்கள். சேமிப்பில். ஆம். நிலையற்ற போர்ச் சூழல் நிலவுவதால் இவர்கள் சேமிப்பதில் பெரிதும் கவனம் செலுத்துவதில்லை. அதுபோக வேலையில்லாத் திண்டாமும் அதிகம். டிகிரி முடித்த இளைஞர்கள் பலர் இங்கு கார் ஓட்டுனர்களாய் தான் வேலை செய்கின்றனர். காஸாவில் அரசு போக்குவரத்தெல்லாம் கிடையாது எல்லாம் டாக்ஸிகள் தான். அப்படி கிடைக்கும் வேலையில் இருக்கும் அந்த சம்பளமும் கைக்கும் வாய்க்கும் சரியாக இருக்கிறது. நம் மக்கள் தங்கள் சேமிப்பைப் பளபள தரையிலும் மெத்தைகளிலும் விரிப்புகளிலும் செலவளிப்பத்தில்லை. தங்கத்திலும் இடத்திலும் முதலிட்டு பாதுகாத்து விடுகின்றனர். கட்டாந்தரையில் பாயை விரித்துப் படுப்பது இயற்கை. ஹஸன் இதுவரை அவன் வீட்டில் மெத்தையில் எல்லாம் படுத்ததே இல்லை. அந்த முற்றத்தில் பாயை விரித்து குடும்பத்துடன் நிலாவை வெறித்துக் கொண்டே தூங்கித்தான் பழக்கம்.

 

ஏன் இப்படி? உண்மையில் காஸா இப்பொழுது இருக்கும் நிலையில் முன்னர் இருந்ததில்லை. காஸா என்ற பெயருக்கு ‘கருவூலம்’ என்று பொருள். அந்தளவிற்கு செல்வச் செழிப்பு இருந்தது. ஆசியாவையும், ஐரோப்பாவையும், ஆஃப்ரிக்காவையும் இணைக்கும் மிக முக்கியமான பகுதியாய் விளங்கியது. வணிகத்திற்கு முக்கியமான தடம். காஸாவின் பழங்களைப் பற்றி மஸிஹ் ஏற்கனவே பேசியிருக்கிறார். தொடர்ச்சியான போர்களும் மாற்றங்களும் நிலவி வந்தாலும் உலகின் நாளங்கள் பாயும் சில முக்கியமான பகுதிகளில் ஒன்று. கிட்டத்தட்ட உலகின் நடுப்பகுதி. எல்லாம் இங்கே மாறிக்கொண்டே இருக்கும்.  வரலாற்றின் பார்வையில் விரைவில். மனிதர்களின் பார்வையில் தலைமுறைகளில்.

 

அவர் மீனை ஏதேதோ செய்து ஒரு மணிநேரத்திற்குள் எதையோ தயார் செய்துவிட்டார். மீனும் காய்கறி சாலடும் பிட்டா ரொட்டியும் நனைத்துக் கொள்ள ஹும்மூஸும். இந்த ஹும்மூஸ் என்பது கொண்டைக் கடலையை ஊறவைத்து அரைத்து செய்யப்படும் ஒருவகை பேஸ்ட். இதை அப்படியே கெடாமல் ஃப்ரிட்ஜில் வைத்துவிடுகிறார்கள். வெளியே எடுத்து ஆலிவ் எண்ணெய் ஊற்றி ஜாம் போல பிட்டா ரொட்டியை தொட்டுக் கொண்டு சாப்பிடுகிறார்கள்.

 

’ஹபீத் எல் ஸமக்?, ஹவ் ஃபிஷ் இஸ்?’

 

‘வெல். ரொம்ப அருமையா இருக்கு.’

 

அன்றைய தினத்தின் முதல் மொபைல் அழைப்பு வந்தது. ஜோஆன் எதிர் முனையில். ஹஸன் எங்கே இருக்கிறான் என்று விசாரித்துவிட்டு அவனை மாலை ஆறு மணிக்குள் அவர்கள் தங்கியிருந்த விடுதிக்கு வரச் சொன்னார். காஸாவை அளந்து கொண்டிருந்த ஹஸனுக்கு தான் இங்கு ஏதோ ஐ.நாவும் தி க்ரீனும் இணைந்து கட்டித் தரும் ஏதோ கட்டிட வேலைக்காக வந்திருக்கிறோம் என்று மட்டும் தெரியும். துபாய்க்குப் போக முடியாததில் வருத்தம் எல்லாம் இல்லை. சிறிய ஏமாற்றம் அவ்வளவுதான். மொத்தத்தில் ஊர் சுற்ற வேண்டும். அது துபாய் என்றால் என்ன? பாலஸ்தீன் என்றால் என்ன?

 

பாலஸ்தீன் என்றவுடன் கிளம்பும்வரை ஏதோ பாலைவனம் என்று தான் நினைத்துக் கொண்டிருந்தான். அவன் சிறுவயதில் ஆசிரியர் பாடம் நடத்தியபடி ஏதோ பங்காளிச் சண்டை என்று தான் நினைத்து வந்தான். ஆனால் அப்பயணம் எல்லாவற்றையும் மாற்றியிருந்தது. மனிதர்கள் எங்கும் மனிதர்கள் தான் என ஆதாரம் காட்டியது. ஒரு வகையில் கவர்ந்திழுத்தது. அவனுக்குத் தெரியவில்லை இனிமேல் தான் அந்தக் கவர்ச்சி, அந்த மாயம், அந்த விடியல், அந்த மந்திரம் அவனுக்கு காட்சியளிக்கப் போகிறதென்று.

 

இறுதியில் அந்த எக்ஸ் ஆர்மி மீனவரிடம் விடைபெற்றுக் கிளம்பினான். அதே கடற்கரையோரம் தான் அவன் தங்கியிருந்த விடுதியும் இருந்தது. ஐநா வின் கட்டிடமும் அங்கு தான் இருந்தது. விடுதி அவன் தரத்தில் மிக ஆடம்பரமாகப் பட்டது. எல்லாம் இந்தியக் கண் என்ன செய்வது?

 

மாலை ஆறுமணிக்கு ஜோஆன் தொலைபேசியில் அழைத்தார். தன் அறையைவிட்டு வெளியே வந்தான். அப்துல் மஸிஹ் தயாராய் காத்திருந்தார். இருவரும் ஏறிச் சென்றனர்.

 

காஸாவில் ஐநாவின் சார்பிலும் உதவியிலும் சில பள்ளிகள் இயங்குகின்றன. அப்படிப்பட்ட பள்ளி ஒன்றுக்குத் தான் அவர்கள் சென்று கொண்டிருந்தார்கள். பள்ளியின் குழந்தைகள் பச்சைச் சீருடையில் இருந்தனர். அநேகமாக இங்கு தான் அந்த ஊரில் பச்சை நிறம் அதிகம் இருக்கவேண்டும். கண்களுக்குக் கொஞ்சம் குளிச்சியாய் இருந்தது. ஊரே ஒருவகைப் புழுதி நிறத்தில் தான் எங்கும் காட்சியளிக்கிறது. வண்டியை நிறுத்திவிட்டு யாரையோ ஜோஆன் அலைபேசியில் அழைத்தார். பின்னர் எதையோ நோக்கி நடந்தார். ஹஸனும் தொடர்ந்தான்.

 

அங்கே ஒரு வகுப்பறை. அதற்குள் நுழைந்தார். ஒரு ஆசிரியை பாடமெடுத்துக் கொண்டிருந்தார். உடலை முழுதும் மறைத்த உடை. கரும்பலகை முழுவதும் அரபியில் ஏதேதோ கோடுகள். புரியாத வரை எழுத்துகள் என்றும் கோடுகள் தான். ஆனாலும் அந்தக் கோடுகளில் ஒரு நளினம் தெரிந்தது. இழுத்து இழுத்து சேர்த்து சேர்த்து எழுதப்படும் அம்மொழியில் ஒரு அழகு தென்பட்டது. இது அறிமுகமில்லா மொழியெல்லாம் இல்லை. குர்ஆனிலும் சிறுவயதில் அரபி பாடசாலையிலும் அடிக்கடிக் கண்ட மொழிதான். இருந்தாலும் அதனிடத்தில் வந்து பார்க்கும் போது ஒரு கலைநயம் தெரிகிறது.

 

அதனை எழுதிக் கொண்டிருந்த ஆசிரியை திரும்பினார். யார் என்று கேட்டார். மாணவர்கள் ‘ஜோஆன் மிஸ்’ என அலறினர். ’அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரகாத்துஹ் ஜோஆன் கீஃப் ஒக்ஹ்தெக்?. ஒரே நிமிடம் தான். ஹஸன் செய்வினை வைக்கப்பட்டவனைப் போல் ஆனான். ஏதோ மாயத்தால் தீண்டப்பட்டான். ஏதோ விடியல் அவனுள் குடிகொண்டதைப் போல் இருந்தது. ஏதோ ஒரு மந்திரம் கவர்ந்திழுத்தது. மூச்சு பெருமூச்சானது. பேசக்கூட நாக்கு எழவில்லை. ஏதோ ஒன்றால் கட்டுண்டதைப் போல் இருந்தது.

 

இதுவரை இப்படி எதுவும் நடந்ததில்லை. எந்தப் பெண்ணைப் பார்த்தும் இவ்வளவு சிலிர்த்ததில்லை. என்ன காரணம் என்றும் தெரியவில்லை. உணர்ச்சிகளுக்கு இவ்வளவு பலமா? இதுவரை இந்த உணர்வு எங்கே இருந்தது? என்ன ஆனது? இப்படி எல்லாம் உணர்ச்சிகள் ஒரு நொடியில் தோன்றுமா? விந்தையிலும் விந்தைதான். மனதைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியும் என்ற நம்பிக்கை தகர்ந்தது. தன் முன் ஏதோ நடப்பது மட்டும் தெரிந்தது. மிக அருகில் அந்த மாயம் வந்து ஜோஆனைக் கண்டாள். மிக அருகில் வந்து ஜோஆனை உற்றுப் பார்த்தாள். அவள் முகத்தில் சந்தோச உணர்ச்சி பெருக்கெடுத்து ஓடியது. பின் ஏதேதோ இருவரும் பேசினார்கள். பின் ஹஸனை அவளுக்கு ஜோஆன் அறிமுகப்படுத்தினார். அந்த மந்திரம் ஹஸனை நேரே பார்க்காமல் ஏதோ ஒரு திசையில் பார்த்து ஸலாம் கூறினாள்.

 

பின் ஒரு மணிநேரம் ஏதோ ஒரு அறையில் உட்கார்ந்து ஜோஆனும் விடியலும் பேசிக் கொண்டார்கள். அவனும் அதே அறையில் தான் இருந்தான். ஆனால் எண்ணங்கள் எதுவும் இல்லாத நிலையில். அவளைப் பார்த்தது அவனைக் கேரளத்தின் மலைகளுக்கு ஊடே மழைச் சாரலில் நிற்க வைத்திருந்தது. அடிக்கும் அனல் காற்று தென்றலாய் வந்து தழுவியது. எங்கோ இருந்தான். இன்னதென அறியாத எங்கோ இருந்தான். பின், ஜோஆன் விடைபெற்றார். இவனிடம் ஏதோ பேசினார். இவன் காதில் எதுவும் விழவில்லை. அப்படியே மாயத்தை பார்த்துக் கொண்டே இருந்தான். எங்கோ நடப்பதைப் போல் இருந்தது. காரில் ஏறி அமர்ந்தான். விடுதியில் இறங்கினான். விடுதியின் உரிமையாளர் அங்கு நின்றிருந்தார். ஹஸன் அவனை அறியாமல் சிரித்துக் கொண்டே அவரைக் கடந்து சென்றான். அவர் ஹஸனுக்கு அருகே வந்து ஏதோ சொன்னார். பின் அவன் சாலை நோக்கித் திரும்பினான். பின்னால் யார் யாரோ அழைப்பதைப் போல் கேட்டது. அவன் திரும்பும் நிலையில் இல்லை. அவன் போக்கில் எங்கோ சென்று கொண்டிருந்தான். ஏதோ ஒரு வண்டி இடித்தது. வானம் தெரிந்தது. பின்னர் ஏதேதோ முகங்கள் தெரிந்தது. பின்னர் மஸிஹ் தெரிந்தார். பின்னர் காரின் உட்புறக் கூரை தெரிந்தது. பின்னர் ரெட்டினா ஐ டிஸ்ப்ளேவில் தெரிந்து கொண்டிருந்தவை அனைத்தும் 1080p பிக்ஸல் ஆனது. 1080p 720p ஆனது. 720p 480p ஆனது. 480p 360p ஆனது. 360p 240p ஆனது. 240p 144p ஆனது. புள்ளிகள் அதிகமானது. ஏதேதோ தெரிந்தது. எங்கோ கேட்டுக் கொண்டிருந்த சத்தம் உள்வாங்கி உள்வாங்கி இறுதியில் நின்றே போனது.

ஒளி 222 கிராம்: பகுதி 10

ஒளி 222 கிராம்: பகுதி 10

திடலில் ஒதுங்கிய மூன்று வருட வாழ்க்கையில் செல்வத்தை இழந்தான், சிறிய தந்தையை இழந்தான், அனைத்திற்கும் மணிமுடியாக இதோ அவளையும் இழந்துவிட்டான். இழக்க இனி ஏது? உயிர் தவிர. இவற்றை எல்லாம் விடவா அந்த உயிர் பெரிது? பித்துப் பிடிப்பது என்பது என்ன? எப்படி இருக்கும்? எல்லோருக்கும் வாழ்க்கையில் அந்த சமயம் வரும். இழக்க இனி எதுவுமில்லை உயிர்தவிர என்ற நிலையின் ஊடே பூக்கும் அந்தப் பித்தம். உலகத்தின் எந்த ஈர்ப்புகளுக்கும் அசைந்து கொடுக்காத அந்த பித்தம். வெற்றிகளின் களிப்புகளில் இருந்து விடுதலை அளிக்கும் பித்தம். அப்பித்தத்திற்கு இன்னொரு பலனும் உண்டு. அதைக் கடந்தவர்களால் மட்டுமே அதனை உணர முடியும்.

 

பலவகையில் சோகம் என்றாலும் ஒரு வகையில் அவனுக்கே தெரியாமல் அந்த நிலை அவனுக்கு ஊக்கம் தந்தது. இறைச் செய்தியை அருகாமையில் இருக்கும் ஊருக்கும் எடுத்துச் செல்லும்படி இறைவனிடம் இருந்து கட்டளை வந்தது. அவன் இழக்க ஏதும் இல்லை. மலையுச்சிக்கு சென்று தற்கொலை எல்லாம் செய்யத் தேவையில்லை. அவன் திடமாக இருந்தான். இறைவனை நம்புவேன். அவனது செய்தியை உண்மை எனச் சான்று கூறுவேன். பிறருக்கு எத்திவைப்பேன். அதற்குப் பதிலாய் அவன் வெற்றியைக் கொடுத்தாலும் சரி. வேதனையைக் கொடுத்தாலும் சரி. துணிவுடன் நிற்பேன். ஒன்றும் பாதகமில்லை. இவர்களால் என்ன செய்து விட முடியும் என்னை? மிஞ்சிப்போனால் உயிரை எடுப்பார்கள். எடுத்தால் எடுத்துக் கொள்ளட்டுமே. எனக்கு அதனால் ஒன்றும் நோவினை வந்துவிடப் போவதில்லை. என்றைக்கோ செல்லப்போகின்ற உயிர் இன்றைக்குச் சென்றால் தான் என்ன. அடுத்த ஊர் ஒன்றுக்கு இறைச் செய்தியை எடுத்துக் கொண்டு கால்நடையாகக் கிளம்பினான் அவன்.

 

முதலில் அந்த ஊரின் தலைவரைச் சென்று பார்த்தான். அவர் முகத்தைத் திருப்பிக் கொண்டார். பின் தான் நம்பி வந்தவர்களைச் சென்று சந்தித்தான். ஏதும் நிகழவில்லை. சென்ற இடம் எல்லாம் ஏதோ பிச்சைக்காரனை விரட்டுவது போல் விரட்டினர். சொற்களால் குதறி எடுத்தனர். கண்ணீர் மல்கத் திரும்ப முற்பட்டான். கற்களைக் கையில் கொண்டு சிறுவர்கள் துரத்தினர். கற்கள் எறியப்பட்டன. நாயை விரட்டுவது போல் விரட்டினர். உடல் முழுவதும் காயம். அங்கங்கு சதை கிழிந்து இரத்தம் கொட்டியது. ஆடைகள் கிழிந்தன. இரத்தத்தால் காலில் இருந்த செருப்புகள் தேய்ந்தன. அந்த ஊரில் இருந்து சில மைல் தூரம் வரை வந்து அவனை விரட்டிவிட்டு உற்சாகத்தில் சிறுவர்கள் வீடு திரும்பினர்.

 

அது அழுகைக்கான நேரம் இல்லை. கண்களில் நீர் தழும்புவதும் வழிவதும் தெரியாத நிலையை அழுகை என்று சொல்ல முடியாது. அது என்ன நிகழ்கிறது என்றே தெரியாத நிலை. மனம் சிதறி இரத்தத்தைக் கக்கும் கணம் அது. நடக்க முடியாமல் நடந்து ஒரு தோட்டத்தின் நிழலில் அமர்ந்தான். அத்தோட்டம் அவன் ஊரைச் சார்ந்த இரண்டு செல்வந்தர்களின் சொத்து. அவனைக் கண்டு அவர்கள் மனம் கலங்கினர். நேரடியாக அவர்கள் அவனிடம் வரமுடியாத சூழல். தங்கள் அடிமையிடம் சிறிது பழங்களைக் கொடுத்து அனுப்பினர்.

 

அடிமை பழத்தை அவனிடம் கொடுத்தான். அவன் ஏற்றுக்கொண்டான். அவன் பழத்தை எடுத்து ‘இறைவனின் பெயரால் இதை உண்ணத் துவங்குகிறேன்’ என்று கூறி பழத்தை வாயிலிட்டான். அவ்வடிமைக்கு ஒரே ஆச்சர்யம். ’இறைவனின் பெயாரால் என்று கூறுகிறீர்களே? இது இம்மக்கள் எப்போதும் பயன்படுத்தாத சொல்லாயிற்றே? நீங்கள் என்ன மதம்?’

 

அடிமைக்கு அவனைப் பற்றி தெரியாது. அவன் வேறு நாட்டைச் சார்ந்தவன். கிறிஸ்தவன். தற்போதுதான் அந்தப் பழத்தோட்டத்திற்குப் பணியில் அமர்த்தப்பட்டிருக்கிறான். ஆச்சர்யத்தால் வினவினான். அடிமையும் அவனும் சிறிது நேரம் ஏதோ பேசிக்கொண்டனர். தன் எஜமானர்கள் அழைத்ததால் அடிமை அவ்விடம் விட்டு அகன்றான். செல்லும் போது அவன் கையைப் பிடித்து முத்தம் கொடுத்தான். தன் மரியாதையை வெளிப்படுத்தினான்.

 

’அவனுடன் என்ன பேசினாய்?’ எஜமானர்கள் வினவினர்.

 

‘சத்தியமாகச் சொல்கிறேன். அவரைப் போல் மனிதனை நான் இவ்வுலகில் கண்டதில்லை. அவரிடமிருந்து நான் பல உண்மைகளை அறிந்து கொண்டேன். நிச்சயம் இறைத்தூதுவர்களை அன்றி இச்செய்திகளை யாராலும் கூற முடியாது’ என்று சிலாகித்துக் கூறினான்.

 

‘நாங்கள் இதனால் விழையவிருக்கும் விளைவுகளைக் கண்டு உன்னை எச்சரிக்கிறோம். உன் மூன்னோர்களின் வழியில் இருந்து பிறழாமல் இருக்க எச்சரிக்கிறோம். உன்னை தன்வசம் இழுக்கும் அவனது வழியை விட உன் முன்னோர்கள் வழி மிகவும் பாதுகாப்பானது. புரிந்துகொள்’

 

மனம் குமுறி ய நிலையில் அவன் ஊர் திரும்பிக் கொண்டிருந்தான்.

 

ஒளியில் இருப்பவர்களில் பெரும்பாலானோர் அப்படித்தான். ஒளியற்றவர்களை ஒளியால் உரசிப் பார்ப்பார்கள். மனதைப் புண்படுத்துவார்கள். ஒருவகையில் அவர்கள் ஒளியில் இருப்பதாக நினைத்துக் கொண்டிருந்தாலும் அவர்கள் சுத்த மனநோயாளிகளன்றி வேறில்லை. பணம், புகழ், ஆடாத வாழ்க்கை மட்டும் ஒளியெனக் கொண்ட மனநோயாளிகள் ஒளியற்றோர்களின் மனதை குதறி வெறிநாயைப் போல் தங்கள் மனநோயை அவர்களுக்குள் திணிக்க முற்படுவர். முடிந்தளவு பிறரை புண்படுத்திக் குளிர் காய்வர். புண்படுத்துதல் என்பது மன அளவிலிருந்து உடல் அளவு வரை ஆள்பொருத்து நீளும். என்ன கோரமான இதயம் பாருங்கள். மிரட்டும் கண்களும், கோரைப் பற்களும், சீழ்வடியும் அங்கமும் அவர்கள் உள்ளே அகப்பட்டுக் கிடக்கும். என்ன செய்ய உலகம் அவர்களைத் தான் நம்புகிறது. ஒளி என்பது அப்படித்தான் நிர்ணயிக்கப்படுகிறது.

 

ஒளி குன்றிய அவன் முன் பேரொளி மீண்டும் தோன்றியது. அதுவும் மிக்க சஞ்சலத்தில் இருந்தது. ஒளியின் வீரீயம் முன்பு எப்பொழுதும் இல்லாத அளவிற்கு கனலாய் கனிந்தது.

 

‘ஒரு சொல் கூறு. அவ்வூரை இரண்டு மலைகளுக்கு நடுவில் வைத்து அழுத்திவிடுகிறேன்’ கோபம் கொப்பளிக்க அவனை நோக்கிக் கூறியது.

 

அவனுக்கு அது ஒன்றும் பெரிதாய் படவில்லை. பெரிதாக என்ன செய்து விட்டார்கள்? கல்லால் தானே அடித்தார்கள். ‘இன்று அவர்கள் ஏற்கவில்லை என்றாலும் நாளை அவர்களது சந்ததிகளாவது இறைவனின் செய்தியை ஏற்றுக்கொள்வார்கள்.’

 

‘இல்லை. நீ கூறு. ஒரே ஒரு வார்த்தை கூறு போதும். நான் பார்த்துக் கொள்கிறேன்.’

 

‘நீ யார் எனக்கு உதவ? என்னைப் படைத்தவன் போதும் எனக்கு. என் முறையிடலை நான் அவனிடம் வைத்துக் கொள்கிறேன். இறைச் செய்தி ஏதுமில்லை என்றால் நீ செல்லலாம்.’

 

அந்த நிகழ்விற்குப் பின் பல ஊர்களுக்கு அவன் சென்றான். அவமானங்களும் வேதனைகளும் அவனுக்காக காத்து நின்றன. அதனைப் பெரிய துன்பமாக அவன் எடுத்துக் கொள்ளவில்லை. என்ன தான் நடக்கிறதெனப் பார்க்கும் முடிவில் முனைப்போடு இருந்தான். தன் ஊரில் இருந்த கோவிலுக்கு வரும் யாத்ரீகர்களிடமும் இறைச் செய்தியை எடுத்துவைத்தான். யாரும் கேட்பதாகத் தெரியவில்லை. இறைச் செய்தி வரத் துவங்கிய பத்தாம் வருடம் துக்கம் மிகுந்த வருடமாய் கழிந்தது. பதினொன்றாம் வருடம் வந்தது. ’நிச்சயம், துன்பத்தின் இறுதியில் இன்பம் பிறக்கின்றது’ எனும் இறைச் செய்தியுடன்.

 

அவ்வூருக்கு மற்றொரு நகரத்தில் இருந்து சிலர் கோவில் யாத்திரைக்காக வந்திருந்தனர். அந்த ஊரில் தங்கித் தங்கள் யாத்திரையைப் பூர்த்தி செய்துவிட்டுக் கிளம்பத் தயாராயினர். எதிரில் அவன் முற்பட்டான். தனக்கு வந்த இறைச் செய்தியை அவர்களிடம் பகிர்ந்து கொள்ளலாமா எனக் கேள்வி எழுப்பினான் அவன். நல்லவிதமாகவோ கெட்டவிதமாகவோ அந்த நாடே அவன் பேச்சைத் தான் பேசியது. அவனது கிளர்ச்சியை பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தது. அந்த நகரத்தார்களுக்கு உள்ளுக்குள் ஒரு ஆசை. அவன் என்னதான் சொல்கிறான் என்று கேட்போமே என முடிவு கட்டினர். அவன் பேச்சில் அப்படி என்ன கிளர்ச்சி இருக்கிறதென தெரிந்து கொள்ள ஆர்வப்பட்டனர். செவி கொடுத்தனர்.

 

அவன் பேசி முடித்தான். அவர்களுக்குள் ஏதோ மின்சாரம் பாய்வதைப் போல் இருந்தது. புது இரத்தம் ஓடியது. தங்கள் ஊரில் சென்று இறைச் செய்தியை பிறருக்கும் சொல்வதாய் அவர்கள் அவனுக்கு வாக்களித்தனர். அங்கிருந்து அவர்கள் நகரத்திற்கு கிளம்பினர்.

 

தங்கள் ஊருக்குத் திரும்பிய நகரத்தினர் அச்செய்தியைப் பரப்பினர். பனிரெண்டாம் ஆண்டும் அவர்கள் அவனைச் சந்திக்க அந்த ஊருக்கு வந்தனர். இம்முறை அவர்கள் எண்ணிக்கை அதிகமாய் இருந்தது.

 

‘நாங்கள் எங்களைப் படைத்த ஒருவனாகிய அந்த இறைவனைத் தவிர வேறு யாரையும் எதையும் வணங்கமாட்டோம். விபச்சாரத்தில் ஈடுபடமாட்டோம். வருங்காலத்தை எண்ணி குழந்தைகளை கொல்ல மாட்டோம்.  நாங்கள் பொய்யை அதிகாரமாய் மனதில் நிறுத்தி யாருக்கும் எந்தத் தீங்கும் செய்ய மாட்டோம். உங்களது பேச்சை மீற மாட்டோம்.’ அவர்கள் வாக்குறுதியாக மொழிந்தனர்.

 

அவன் முடித்தான். ’சொன்னதைத் சொன்னது போல் செயல்படுத்துபவர்களுக்கு இறைவன் பரிசளிப்பான். எவர்கள் இவ்வுண்மையை நிராகரித்து உலகத்தின் மோகத்தின் பின் தொடர்கிறாரோ அவர்களுக்கு உலகத்திற்குப் பின் தக்க பதில் கிடைக்கும். அவர்கள் எவ்வளவு திட்டம் தீட்டி பிறர் காணா வண்ணம் அப்பாவங்களைச் செய்து வந்தாலும் சரி. அது குறித்து இறைவன் அறிவான். அவர்களது பிடி இறைவனிடத்தில். இறைவன் அவர்களை மன்னிக்கவும் செய்யலாம். இல்லை செய்யாமலும் இருக்கலாம். அவர்களது பிடி இறைவனிடத்தில்.’

 

ஒரு புறம் அவன் மூலம் இறைச் செய்தி பரவி, அந்த அடிபணிந்த மார்க்கத்தைப் பலரும் ஏற்றுக் கொண்டுவந்தாலும் அந்த ஊரில் அவனை ஒடுக்குவதற்கான செயல் தொடர்ந்து கொண்டு தான் இருந்தது. பல வகையிலும் ஊரார்கள் தொல்லை கொடுத்துக் கொண்டுதான் இருந்தனர். உயிருக்கு உத்தரவாதமளிக்க அவனது சித்தப்பா இல்லை. கொடுமைகள் மிக வெளிப்படையாக நடந்தன. அவமானங்களும் அசிங்கங்களும் அவனுக்கு மாலையாய் அணிவிக்கப்பட்டன.

 

பதிமூன்றாம் வருடம் பிறந்தது. வழக்கம் போல் கோவில் திருவிழா துவங்கியது. அந்த நகரத்தில் இருந்து பெரும் கூட்டமாய் அவ்வருடம் மக்கள் வந்திருந்தனர். அவர்கள் அவனது நிலையைக் கண்டு கொதித்தனர். தங்கள் ஊருக்கு வந்துவிடும் படிக் கூறினர். அவன் அது பற்றி யோசிப்பதாகக் கூறினான். முதல் கட்டமாக அதிகம் அந்த ஊரில் துன்பத்திற்கு உள்ளாபவர்களை அந்த நகரத்திற்கு அனுப்பி வைத்தான். அனைத்து நம்பிக்கையாளர்களும் ஊரைவிட்டு மெல்ல மெல்ல மறைந்து நகருக்குச் சென்றனர். இறுதியாக அவனும் கிளம்ப ஆயத்தமானான்.

 

தான் பிறந்து வளர்ந்து பண்பட்ட மண்ணைவிட்டு, உறவுகளைவிட்டு, உடைமைகளைவிட்டு இன்னொரு அயல் மண்ணுக்கு அகதியாய், போக்கற்றவனாய், புகழிடமற்று உயிருக்குப் பயந்து போவது அவ்வளவு எளிதல்ல. தற்கொலை செய்து கொள்வதைவிட கொடிய உணர்வு அது. ஓரிடம் விட்டு மற்றோரிடம் புகுவது மாற்றங்களைச் செய்விக்க வல்லது. மாற்றங்களை விரும்புவர்களால் ஒரிடத்தில் தங்க முடியாது. மாற்றம் மட்டும் நிரந்தரமென்றானபின் அதனை அனுசரிக்க மனித மனம் கற்றுக்கொள்கிறது. அது பயணங்களாலும் இடம்பெயர்தல்களாலும் பெரும்பாலும் கற்றுக் கொடுக்கப்படுகிறது.

 

ஒன்றை இழந்தால் தான் மற்றொன்று கிடைக்கும் என்பது வாழ்க்கை நியதி. இழக்க எதுவும் இல்லை என்றாலும் இழப்பதற்கென்றே நிறைய இருக்கிறது. கிடைக்கும் என்ற நம்பிக்கை  இழக்கும் போது இருக்காது. கிடைக்கும் போது தெரியும் நாம் இழந்தது என்ன அடைந்தது என்னவென்று. அவன் இழந்தான். அன்றோடு அவன் இழந்தான். ‘அவன்’ என்பதை இழந்தான். அவன் அந்தத் துயர ஆண்டில் துயரப்பட்டு மனம் தளர்ந்திருந்தால் வரலாறு அவனைப் பல அவன்களில் ஒருவனாக்கி மூழ்கடித்திருக்கும்.பெருந் துன்பங்கள் கடந்திருந்தன. அவனை அன்று நிகழ்ந்த அந்த நிகழ்வு அவராக்கியது. யாரும் இனி அவன் இவன் என்று அவனைச் சொல்ல முடியா அளவிற்கு அவனது வாழ்க்கையை அதற்குப் பின் மாற்றி அமைந்தது. இனி அவர்.

 

ஹஸனுக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம்? ஹஸனுக்கு அவரது பெயரே முதல் பெயர். முஹம்மத். முஹம்மத் ஹஸன் அறையில் அமர்ந்து ஜோஆன் கொடுத்த புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்தான். முஹம்மத் எனும் இறைச் செய்தியாளரின் வரலாற்றை. அவன் பெயருக்குப் பின் இருந்தவரின் வரலாற்றை. உலகில் அதிகம் பெயராகச் சூட்டப்படும் பெயருக்குரியரின் வரலாற்றை.

 

 

 

கட்டிடங்களும் உங்கள் கற்பனையும். அருமையான தலைப்பு. மெக்கானிகல் எஞ்சினீரான எனக்குக் கட்டிடங்கள் பற்றி என்ன தெரியும்? உண்மையில் அதனைப் பற்றி நீங்கள் கவலைப் பட்டிருக்க வேண்டும். நான் எதற்காகக் கவலை கொள்ள? கேட்கிறீர்கள் சொல்லிவிடுகிறேன். இந்தக் கட்டுரையை நான் எழுதுவதற்கு உங்கள் நிறுவனத்தில் வேலைக்கு சேரவேண்டும் என்ற எண்ணம் எல்லாம் காரணம் இல்லை. எனக்கு மிகவும் பிடித்த நான் அதிகம் பயப்படும் ஒருத்தி என்னை இக்கட்டுரையை எழுதச் சொல்கிறாள். ஸ்மிர்தி. கடந்த வாரம் முதற்கொண்டே என்னை நிபந்திக்கிறாள். இது கற்பனைக்கான தளம் தான் என்கிறாள். உன் படிப்புக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்கிறாள். உண்மைதான் தற்போது நான் வேலை செய்து கொண்டிருக்கிறது என் படிப்பிற்கு சம்பந்தமில்லாத வேலை தான். இருந்தாலும் செய்து வருகிறேன். காரணம் என் மனதுக்கு அது இதமளிக்கிறது. சில தொல்லைகளில் இருந்து என்னைக் காக்கிறது. நான் இந்த வேலையைக் காதலிக்கிறேன். உண்மையில் எனக்கு இந்த வேலையைவிட்டு தங்கள் நிறுவனத்திற்கு வர விருப்பம் இல்லை. என்னடா இவன் கட்டுரை எழுதடா என்றால் ஏதோ நிறுவனத்தில் வேலைக்குச் சேர்த்துக் கொண்டுவிட்டது போல வேலை  எல்லாம் வேண்டாம் என்று நிராகரிக்கிறான் என்று நினைக்காதீர்கள். நான் எப்போதும் அப்படித்தான். கதவைத் தட்டும் வாய்ப்புகளை அல்லது நான் கதவைத் தட்டும் வாய்ப்புகளை முதலில் கற்பனையைத் தூண்டி சில மணிநேரங்களோ, நாட்களோ வாழ்ந்து பார்ப்பேன். நெளிவு சுழிவுகளில் சென்று வருவேன். பின்னரே முடிவுகள் என்பது இருக்கும். எல்லாம் கற்பனையின் விளைவு. இக்கற்பனைகள் என்னைக் கனவிலும் விடுவதில்லை. நான் கனவை ஒருவகையில் ஆள்கிறேன். எப்படி என்றெல்லாம் எனக்குத் தெரியவில்லை. என்னால் கனவுகளிலும் ஒரு வாழ்க்கை வாழ முடிகிறது. எனக்கு பிடித்தாற் போல் கனவுகளை என்னால் கையாள முடிகிறது. நிஜ வாழ்க்கை கொடுக்கும் ஏமாற்றங்களை என்னால் கனவுகளில் மறக்க முடிகிறது. கற்பனைக்கும் கனவுகளுக்கும் என்னால் வேறுபாடு கூற இயலவில்லை.

 

நான் ஏன் என்னைப் பற்றி இவ்வளவு நேரம் கூறிக்கொண்டிருக்கிறேன். கட்டிடங்களும் உங்கள் கற்பனையும் என்று நீங்கள் தலைப்பு கொடுத்துள்ளீர்கள். கட்டிடங்களுக்குள் புகுவதற்கு முன் என் கனவுகள் பற்றி உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்பினேன். இப்போது கட்டிடங்கள் சார்ந்த கனவுகளுக்குள் செல்வோம். எனக்கு, கனவுகளுக்கும் கற்பனைகளுக்கும் பெரிய வேறுபாடு தெரிவதில்லை.நினைவுக்குத் தெரிந்து கண்டால் கற்பனை, நினைவுக்குத் தெரியாமல் கண்டால் கனவு. நிஜ வாழ்கையே நினைவில் தெளிவாக இல்லை. நான் நிஜ வாழ்கையையும் கனவுகளைப் போல் தான் அனுகுகிறேன். வலித்தாலும் வலிக்காகதது போல் தான் இருக்கிறேன். ஜன்னலுக்கு வெளியே அமர்ந்து காட்சிகளைக் காண்பது போலத்தான் நிஜத்தில் நிகழ்வதைக் கவனிக்கிறேன். கனவுகளும் அப்படித்தான். கற்பனைகளும் அப்படித்தான். நினைவுகளை வைத்தும் உணர்வுகளை வைத்தும் நிஜம், கனவு, கற்பனை போன்றவற்றை பிரிக்கலாம் தான். ஆனால் இவைகளை பிரிக்கும் அந்த நாண் மிக மிக மெல்லியது. எளிதில் உடைபடக் கூடியது. அந்த நாண் எனக்கு இருந்ததாக நினைவும் இல்லை உணர்வும் இல்லை. இனி உணர்வுகளையும், நினைவுகளையும் கொண்டு எப்படி இவற்றை நான் பிரிப்பது?

 

உங்களுக்கு நான் தற்போது எழுதிக்கொண்டிருப்பது ஏதோ கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல், எதுவும் புரிபடாமல் நழுவிக் கொண்டு செல்வதைப் போல் தெரியலாம். இவன் என்ன பித்தனா என்று கூட கேள்வி எழும். இல்லை இந்நேரம் இந்தக் கட்டுரையின் பக்கம் குப்பைத் தொட்டியின் அணைப்பிலும் கிடக்கலாம். யார் கண்டது?

 

இதையும் கடந்து படித்துவிட்டீர்களா? சபாஷ். ஒன்றை உங்களுக்கு தெளிவாக்க விரும்புகிறேன். இப்போது நான் உங்களுக்கு ஒரு பயிற்சி அளித்திக்கொண்டிருக்கிறேன். ஆம் உண்மைதான். என்னிடம் யாராவது என்னைப்பற்றி கேட்டால் நான் எப்போது இப்படித்தான் பதில் கூறுவேன். காரணம் உள்ளது. மிக வல்லிய காரணம். என்னைப் பற்றியும் என் மனதைப் பற்றியும் யாராவது அறிய முற்பட்டால் நான் முதலில் அவர்களுக்கு மனதின் மொழியைச் சொல்லிக் கொடுக்க விரும்புகிறேன். அதென்ன மனதின் மொழி?

 

ஆம் எப்படி நீங்களும் நானும் பேசிக்கொள்ள ஒரு மொழி இருக்கிறதோ? எப்படி நாம் இந்தக் கணினியுடன் பேச மொழி இருக்கிறதோ? அதே போல் மனதுக்கும் ஒரு மொழி உள்ளது. அது நாம் பேசும் மொழிகளைக் கடந்த மொழி. மிகவும் சிக்கலான, குழப்பமான மொழி. அதனால் தான் நம்மில் பலரும் அதை ஏதோ புரியாத கத்தலாகக் கொண்டு கேட்காமல் விடுகிறோம். உண்மையில் இந்த மனதின் மொழி மிகவும் விந்தையானது. முற்றிலும் உண்மையானது. இம்மனதின் மொழி இப்பிரபஞ்சம் அனைத்திற்கும் ஒன்று தான். மனிதன் தன் தாய் மொழியில் யோசிப்பதாய் சிலர் கூறுவர். உண்மையில் அது பொய். வடிகட்டிய பொய். அனைவரும் மனதின் அம்மொழியில் தான் யோசிக்கிறார்கள். வெளிப்படுத்தும் மொழி மட்டுமே தாய் மொழி. மனதின் மொழிக்குள் போய்விட்டால் அனைத்தும் ஒருமையே. மொழியும் நீங்களும் நானும் அதுவும் இதுவும் அனைத்தும் அந்த ஒருமைக்குள் சிக்கிக் கொள்கின்றன. இந்த மனதின் மொழி தெரிந்தால் உங்களுக்கு பேசும் மொழிகளின் அவசியம் குறைந்துவிடுகிறது. இப்போது நீங்கள் நம்ப மறுக்கலாம். ஆனால், ஒருநாள் அந்த மொழி உங்களுக்கு புரிபடுகிற போது தெரிந்து கொள்வீர்கள்.

 

சரி, அந்த மனதின் மொழி இப்பொழுது எதற்கு? என் கற்பனைகளைக் கேட்கிறீர்கள். நான் என் மனதின் மொழியில் இருந்து மொழிபெயர்த்து தாய் மொழிக்கு கொணர்ந்து உங்கள் மொழியில் மறுபடியும் தெரிவிக்கிறேன். அதனை நீங்கள் மீண்டும் நான் கொடுத்த மொழியில் வாங்கித் தாய்மொழிக்குக் கொண்டு செல்கிறீர்கள். பின்னர் உங்களை அறியாமலே தாய்மொழியிலிருந்து மனம் தன் மொழிக்கு மாற்றம் செய்து எடுத்துக் கொள்கிறது. நான் மொழி பெயர்ப்பவன். எனக்கு நன்கு தெரியும் மொழி பெயர்ப்பின் மூலம் எண்ணங்கள் எப்படி தொலைகின்றன என்று. அதனால் தான் நான் இவ்வளவு சிரத்தை எடுத்துக் கொள்கிறேன். உங்களுடன் பூச்சுகளற்ற மனதின் மொழியிலேயே முடிந்தளவு பேச நினைக்கிறேன். மனதின் மொழியில் பேசி பழக்கம் இல்லாதவர்களுக்கு சிறிது தலை வலிக்கும். தலை சுற்றும். இதுவும் ஒருவகை தியானம் தான். தியானம் முதலில் கடினமாகத் தான் இருக்கும். மனதின் மொழியைக் கற்றுக்கொள்ள தியானிப்பது அவசியம். தியானம் என்றால் கண்களை மூடி பத்மாசனத்தில் அமர்ந்து யோக முத்திரைகளுடன் செய்வது என கற்பனை செய்ய வேண்டாம். தனிமையில் அமர்ந்து யோசிப்பதும், தீர்வுகாண இயலா பிரச்சனைகளுக்குத் தீர்வு காண இயல்வதும், அன்பு காட்டுவதும், நான், நாம் என்பதை நோக்கி எடுத்துவைக்கிற எந்த அடியும் தியானம்தான். மனதைப் புரிந்து கொள்ள எடுக்கும் முயற்சி தான். தியானம் தான். எண்ணங்களைப் பரிமாற முதலில் நானும் நீங்களும் தியானத்திற்குள் வர வேண்டும் என்கிறேன் நான். மனதின் மொழி அப்படித்தான் இருக்கும்.

 

நேர்கோட்டில் மனம் எதையும் எண்ணுவதில்லை. ஒன்றைத் தொட்டு மற்றொன்றைத் தொட்டு வேறொன்றைத் தொட்டு எங்கெங்கோ கூட்டிச் செல்லும் தன்மையுடையது மனம். எங்கெங்கோ கூட்டிச் செல்வதைப் போலும் சுற்றி வளைத்து பேசுவதைப் போலும் தோன்றினாலும் அதுதான் நம் இயல்பு. அந்த சுற்றி வளைத்தலிலிருந்து பல பாடங்கள் கிடைக்கும். பல புள்ளிகள் ஓரிடத்தில் கோடாகும். அது தான் மனம் பேசும் மொழி. ஆனால் பேசும் மொழியோ நேராக ஒரு கோர்வையாக எதையும் எடுத்துச் சொல்ல நினைக்கும். இது உண்மையில் தேவையற்ற தன்மை தான். மனதை மறைக்க நாம் எடுத்துக் கொள்ளும் முயற்சி தான். அந்த தேவையற்ற தன்மையை கடந்து பாருங்கள். அனைத்தும் தெளிவாக இருக்கும். தெளிவற்ற தெளிவில்.

 

எதையும் பார்த்துப் புரிந்து கொள்ள மொழி தேவையில்லை. அதே போல் இசையைக் கேட்டு உணரவும் மொழி தேவை இல்லை. உணர்ச்சிகளை அறிந்து கொள்ளவும் மொழி தேவையில்லை. முகர்ந்து உணரவும் மொழி தேவை இல்லை. இவை அனைத்தும் இடைத்தரகர் ஏதுமின்றி நேரடியான மனதின் மொழியுடன் தொடர்பு கொள்ள முடிந்தவை.  அனைவருக்கும் தெரியும் இது. ஆனால், பேசுவதில் மட்டும் ஒரு தரகு தேவைப்படுகிறது. அது மனதின் மொழியை முற்றிலும் மறைக்கப் பயன்படுகிறது. பொய்யும், புறமும் இதன் வெளிப்பாடு தான். நான் கூற வருவது இதைத் தான். இடைத் தரகு மொழியே இல்லாமல் பேசமுடியும் என்கிறேன். மனதில் இருந்து மனதுக்கு நேரடியாய் பேச இயலும் என்கிறேன். அதற்குச் சில முயற்சிகள் தேவை என்கிறேன். சரி, நாம் இப்போது கட்டிடங்களுக்குள் செல்வோம்.

 

கட்டிடங்களின் அவசியம் என்ன? ஒன்றே ஒன்றுதான் நமக்குப் பாதுகாப்பான ஒரு சூழல் அளிப்பது. அடிப்படையில் கட்டிடங்கள் என்பது குளிரிலும், மழையிலும், வெயிலிலும் இருந்து பாதுகாப்பளிக்கும் ஒரு அமைப்பு. பிறகு தான் அதில் நாம் செய்யும் வேலையைப் பொறுத்து பிரிப்பதெல்லாம். மனிதன் வேலை செய்ய கட்டிடங்கள் அவசியப்பட்டது பிற்காலத்தில் தான். முதலில் தன்னைப் பாதுகாக்க ஒரு அமைப்பு என்ற அளவில் தான் கட்டிடங்கள் கட்டப்பட்டன. பின்னர் உணவு தானியத்தைப் பாதுகாக்க, பொருட்களைப் பாதுகாக்க, பிறகு அதனுள் அமர்ந்து வேலை செய்ய என முன்னேறியது. ஆனால் இந்த உலகில் ஒன்றரை பில்லியன் மக்கள் இருப்பிடம் இல்லாமல் இருப்பது உங்களுக்குத் தெரியுமா? அதாவது உலகின் மக்களுள் ஐந்தில் ஒருவருக்கு இருக்க இருப்பிடம் இல்லை.

 

அடிப்படை தேவைகளான உணவும், உடையும் மிக எளிதில் பெற்றுவிடக்கூடியதே. செலவும் குறைந்ததே. ஆனால் இருப்பிடம் என்பது மிகவும் விலையுயர்ந்த ஒன்றாதலால் ஏழைகளால் எளிதில் அடையவியலாத ஒன்றாக விளங்கிவருகிறது. என் நாட்டின் தலைநகரில் மட்டும் எத்தனை பேர் குளிர்காலத்தில் தங்க இடமின்றி இறக்கிறார்கள் தெரியுமா? இந்தக் குளிரை நான் முதன் முதல் முறை உணர்ந்த போது கிட்டத்தட்ட இறந்தே உயிர்பித்தேன். அப்படி ஒரு குளிரை என் வாழ்நாளிலேயே கண்டதில்லை. நான் வளர்ந்த தமிழ்நாட்டில் இப்படி ஒரு குளிர் இருந்தே இருந்ததில்லை. எங்கள் ஊரில் வெயில் இல்லாத நாளில்லை. உக்கிர வெயில் காலம், மிதமான வெயில் காலம், மழையுடன் கூடிய வெயில் காலம் என்று மூன்றே மூன்று காலங்களுக்குள் அடக்கிவிடலாம்.

 

அப்படிப்பட்ட எனக்கு முதன் முதலில் இந்த ஊருக்கு ரயிலில் வரும் போது தான் குளிரின் கொடூரம் புரிந்தது. இந்திய ரயில்களில் பிச்சை எடுப்பவர்களை நீங்கள் பார்த்திருக்க கூடும். ஒரு கனமான மெத்தையை சுற்றிக்கொண்டும், ஒருவித குமட்டும் நெடியுடனும் கையேந்தும் கைகளை நீங்கள் பார்த்திருக்கக்கூடும். வாழ்கையில் ஒரே ஒரு முறை அவர்களுடன் பேச்சுக் கொடுத்துப் பாருங்கள். இருப்பிடத்தின் அருமை புரியும். அவர்கள் உடலைச் சுற்றி இருக்கும் அந்த மெத்தைதான் அவர்கள் இருப்பிடம். இருப்பிடம் என்பது என்றும் தேவை அதிகம் நிலவிவரும் துறை. கட்டிடங்கள் என்பது என்றும் புதியதை நோக்கி பாய்ந்து கொண்டிருக்கும் துறை.

 

கட்டிடங்களும் என் கற்பனையும். என் கற்பனை இதுதான். உலகின் இருப்பிடமற்ற அந்த ஐந்தாம்  நபருக்கும் இருப்பிடம் வேண்டும். நாம் நடுக்கடலுக்குள் தீவமைத்து வான்முட்டும் கட்டிடங்களை எழுப்பச் செலவிடும் ஆற்றலில் மிகச் சில துளிகளைச் செலவிட்டால் போதும் இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து விடலாம். போர்வைகளை ஆடைகளாகவும் இருப்பிடமாகவும் பயன்படுத்துவதற்கு விடை கொடுக்கலாம். இதை ஒன்றும் இலவசமாக செய்யத் தேவை இல்லை. மிகக் குறைந்த ஆதாயத்தில் செய்து கொடுக்கலாம். சமூக சேவை தான் இதுவும். இருப்பிடம் கட்டச் செலவு குறைந்த வழியை கண்டுணர்ந்து ஆராய்ந்து அறிமுகப்படுத்தினால் தீர்ந்தது. எட்டாக் கனியாக இருந்த செல்போன்களை அனைவர் கையிலும் திணிக்கும் அளவிற்கு நம்மிடம் யோசனைகள் இருக்கிறதென்றால், ஏன் இதற்கு இல்லை? உண்மை யாதெனின் யாரும் இதில் காலெடுத்து வைக்க விரும்பவில்லை. அது தான் உண்மை.

 

உண்மையில் அரசாங்கம் எடுக்கும் இலவச வீடு வழங்கும் முடிவு முட்டாள்தனமானது. நூற்றில் ஒருவரைச் சென்று சேரக்கூடியது. அப்படி ஒருவரை சென்று சேர்ந்தாலும் அதை அவர் முழுக்கப் பயன்படுத்துகிறாரா? இல்லை வேறொருவரிடம் வாடகைக்கு விடுகிறாரா? என்பது கேள்விக்குறி. ஏன் ஒருவர் தனக்காக அரசாங்கம் கொடுத்த இருப்பிடத்தை மற்றொருவருக்கு விட்டுக்கொடுக்க முயல்கிறார்?

 

இது உளவியல் சார்ந்த கேள்வி. மனிதன் தேவையற்றதாய் தோன்றுவதை தேவைப் படுவதற்காகப் பலி கொடுக்கிறான். மாதம் ஒரு வருமானத்தை ஈட்டித்தரும் வீட்டை எதற்காக நாம் குடியிருந்து வீணாக்க வேண்டும் என்ற எண்ணம் தான் இதற்குக் காரணம். அந்த மாத வருமானத்திற்காக அவர்கள் அந்த வீட்டை பலிகொடுக்கிறார்கள். பழையபடியே குப்பைத் தொட்டியிலோ நடைபாதையிலோ அவர்கள் வாழ்கின்றனர். வீடு என்பதை தேவையற்ற ஒரு ஆடம்பரமாய் நினைக்கின்றனர். அரசாங்கம் இலவசமாகக் கொடுத்ததில் அவர்கள் தான் வாழ வேண்டும் என்றெல்லாம் சொல்லமுடியாது. அது கொடுப்பது என்ற அர்த்தத்திலேயே இல்லை. கொடுப்பதை இப்படித்தான் செலவு செய்யவேண்டும் என்று கொடுப்பவர் அதிகாரம் செய்வது அநாகரிகம். கொடுக்கப்பட்டவருக்கு தேவை இருந்தால் அதனை பயன்படுத்திக் கொண்டிருப்பார் அல்லவா?

 

இந்தப் பிரச்சனையை மூன்று முறையில் கையாளலாம். முதலில் இலவசம் என்பதே இருக்கக்கூடாது. இலவசம் என்று கொடுத்தால் வாங்கியவர் அதைத் தனக்கு வேண்டிய வகையில் செலவு செய்வதற்கு உரிமை உண்டு. அதனால் இலவசம் என்ற ஒன்று இல்லாமல் மானிய விலை அல்லது குறைந்தபட்ச ஆதாயத்துடன் கூடிய விலையில் அவர்களுக்கு விற்கலாம். தேவைப்பட்டவர்கள் தாங்களாய் முன்வந்து வாங்கிக் கொள்வர்.

 

இரண்டு, இலவசம் என்று கொடுக்காமல் தாங்களே இருப்பிடங்களை நிர்வகித்து தகுதியானவர்களுக்கு இலவச வாடகை என்கிற வகையில் கொடுக்கலாம். அது ஒரு இரவானலும் சரி, ஒரு வருட இரவானாலும் சரி. அந்த நபர் தகுதியடையும் வரை அவ்வாறு செய்து வரலாம். டெல்லியில் அரசாங்கமே செய்து தரும் இலவச இரவு துகிலகம் இதற்கு மிகச் சிறந்த உதாரணம்.

 

இவ்விரண்டிலும் அடங்காத மூன்றாம் ஒன்று இதன் மூலத்திற்கே சென்று விடை காண்பதாய் அமைகிறது. ஏன் இருப்பிடமற்றவர்களின் எண்ணிக்கை கிராமங்களைவிட நகரங்களில் அதிகமாய் உள்ளது?

 

கிராமங்களில் போதிய வேலைவாய்ப்பற்ற மக்கள் நகரத்தை நோக்கி, ஒளியை நோக்கி படையெடுக்கின்றனர். இப்படி வருபவர்களால் எவ்வளவு தான் உள்கட்டமைப்பு இருக்கும் நகரமாய் இருந்தாலும் விழி பிதுங்குகிறது. தேவை அதிகம் வளம் குறைவு. விலை ஏறுகிறது. வாடகை கொடுக்க முடியாத அவர்கள் தெருக்களில் தஞ்சம் புகுகிறார்கள், தங்கள் வாழ்விலும் ஒரு நாள் ஒளி பிரவேசிக்கும் என்ற நம்பிக்கையில். இதில் யார் மீது குற்றம்? அவர்கள் மீது யாராலும் குற்றம் சொல்ல முடியாது. அரசாங்கம் தான் அவரவர் தங்கி இருக்கும் இடங்களுக்கு அருகாமையிலேயே தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டும். கிராமங்களை மனதில் வைத்துத் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் இப்படித்தான் ஏதாவது நிகழும்.

 

நாம் அரசாங்களைக் கடந்து சற்று வெளியே வருவோம். நிறுவனங்களாலும் முதலாளிகளாலும் என்ன செய்ய முடியும் என்ற கருத்துக்கு வருவோம். நிறுவனங்கள் நினைத்தால் எதுவும் செய்ய முடியும் என்ற உலகில் தான் இன்று நாம் வாழ்ந்து வருகிறோம். இப்போதெல்லாம் அரசாங்கங்களை நிறுவனங்கள் தான் ஆட்டிப்படைக்கின்றன. கடந்த தலைமுறைக்கு முதல் தலைமுறையில் உலகத்தின் மூலையில் இருக்கும் ஒருவர் மற்றொரு மூலையில் இருப்பவரிடம் நேரடியாக பேசமுடியுமா என்று கேட்டால் ‘சத்தியமாக சாத்தியமில்லை’ என்று கூறியிருப்பார்கள். இன்று நேருக்கு நேர் முகம் பார்த்து பேசுவது மிகச் சாதாரணமான ஒன்றாகிவிட்டது. இது அறிவியலால் செயல்படுத்தப்பட்டதா? நிச்சயம் இல்லை. இவை அனைத்தும் நிறுவனங்களால் சாத்தியப்பட்டது. நிறுவனக்களின் ஆராய்ச்சியும், தொழில்நுட்ப போட்டியும், உற்பத்தியும், சந்தைபடுத்துதலும் இதனை நிகழ்த்திக் காட்டியது.

 

அரசாங்கங்களை விட நிறுவனங்களால் நிறைய செய்ய முடியும். இலவசமாக  அல்லாமல் ஆதாயத்துடன் ஒன்று இருக்குமானால் அதில் தலைபட எந்த நிறுவனமும் தயங்கப் போவதில்லை. தேவைகள் அதிகம் இருக்கும் துறை தான் இது. இருப்பிடம் அமைத்துத் தரும் துறையும். உற்பத்தியைப் பெருக்கினால் போதும். இதற்கு தீர்வு கைக்கருகே கிடைத்துவிடும்.

 

நிறுவனங்கள் குறைந்த விலையில் நகரங்களில் தங்கும் விடுதிகள் நடத்தலாம். டோக்கியோவின் கேப்ஸூல் ஹோட்டல்களைப் போல. எளிதில் எடுத்துச் செல்லும் வகையிலான இருப்பிடம் எதையாவது கண்டுபிடித்து அறிமுகப்படுத்தலாம். இன்றைய உலகம் இன்னும் நானோடெக்னாலஜியின் அதிர்வை பெரிதாய் உணர்ந்ததாகத் தெரியவில்லை. நானோவின் மூலம் செலவு குறைந்த பாதுகாப்பான உறைவிடம் ஒன்றை ஏற்படுத்தித் தரலாம். கிராமங்களை வளமாக்கும் செயல் திட்டங்களை வகுத்து நகர் நோக்கிய படையெடுப்பைக் கட்டுப்படுத்தலாம். இதற்கு சிறிது அரசாங்கத்தின் துணை தேவை. அது நிறுவனங்களால் எளிதில் பெற்றுவிடக் கூடியதே.

 

இது தான் என் கட்டிடங்கள் நோக்கிய கற்பனை. உலகில் இருப்பிடச் சிக்கல் என்று ஒன்று இரவே கூடாது. எனக்குப் போதிய இடமும் காலமும் உதவியும் இருந்தால் நிச்சயம் என்னால் இதனை செய்து காட்டமுடியும். இது வெறும் நம்பிக்கை இல்லை. சவால்.

 

தளம் அமைக்கப்பட்டு கொடுத்தால் போதும் இளைஞர்கள் எதையும் செய்யத் துணிந்து விடுகின்றனர். என் இந்தியா இளைஞர்கள் நிரம்பிய தேசம். மக்கள் தொகையும் தேவையும் நினைத்துப் பார்க்க இயலாத வகையில் முன்னேறிச் செல்லும் தேசம். சந்தைப் படுத்துதலும் அதற்கான யோசனைகளும் மலிந்து கிடக்கும் தேசம். தங்கள் ஆற்றலைப் பற்றி தங்களுக்கே முழுமையாக தெரியாதவர்களின் தாய் தேசம். எனது தேசம். என்னை ஆளாக்கிய தேசம்.

 

எனக்கு உண்மையில் தேசம் என்ற கற்பனைக் கோட்டின் மீது நம்பிக்கை கிடையாது. உலகம் முழுவதும் ஒரே தேசம் தான். ஆனால் ஒவ்வொரு மனிதனிக்கும் தனித்தனி குணம் இருப்பதைப் போல் ஒவ்வொரு மனிதக் கூட்டத்திற்கும் தனி குணம் அமைகிறது. மனிதன், கூட்டம், ஊர், மாநிலம், நாடு, உலகம் என ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு குண நலன்களை வெளிப்படுத்துகின்றன. அதில் என் நாடு என குறிப்பிட்டுக் கூறியது நான் வாழும் நாட்டின் குணநலன்களை விளக்க. என் நாட்டிற்கு சாதகமான அம்சங்களை கூறிவிட்டேன். அதற்காக பாதகங்களே இல்லை என்று கூற வரவில்லை. மனிதன் தொடர்புடைய அத்தனையும் ஒரே விதம் தான். நன்மையும் தீமையும் ஒருக்கே அமையப் பெற்றிருப்பவை தான். எல்லா மனிதனும், கூட்டமும், ஊர்களும், மாநிலங்களும், நாடுகளும் அதனதன் தனித்துவத்தை பெற்றுள்ளன. அதன் மனித சிந்தனையின், செயலின் உள்ளடக்கத்தின் மொத்த தொகையாய் அவை இருக்கின்றன. அனைத்தும் அதனதன் வட்டத்தில் உயர்ந்தவையே. உயர்த்திப் பிடிக்கிறேன் என்றோ தாழ்த்திப் பிடிக்கிறேன் என்றோ சொல்ல முடியாது.

 

நான் இதில் எல்லாம் வல்லவன் என்று சொல்வதனால் பிறரைத் திறமையற்றவர் என்று கூறுவதாய் ஆகிவிடாது. என்னுடைய தனித்தன்மையை வெளிப்படுத்துவதாய் தான் எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்காக நான் சுயநலவாதி என்று கொள்ள முடியாது. என்னை முதலில் நேசித்தால் தான் நான் மற்றவர்களை நேசிக்க முடியும். என் ஊரை நேசித்தால் தான் என்னால் மற்ற ஊரை நேசிக்க முடியும். என் மொழியை நேசித்தால் தான் என்னால் மற்ற மொழிகளை நேசிக்க முடியும். என்  நாட்டை நேசித்தால் தான் என்னால் மற்ற நாட்டையும் நேசிக்க முடியும். கட்டிடங்களும், என் கற்பனைகளும் இப்போதைக்கு இத்தோடு நிறைவடைகின்றன.

 

 

’ஹஸன். இப்பலாம் என்ன உங்கள் பாக்கவே முடியல. எப்பப்பாத்தாலும் ஏதாவது புக்கோட அலையறீங்க. உங்க வேலையுண்டு நீங்க உண்டுனு வேலை முடிஞ்சன்ன ஃபார்ம பக்கம் நடையக்கட்றிங்க?. என்னாச்சு உங்களுக்கு?. ஹாவ் யூ ஃபர்கட்டன் அஸ்?’, ஏதோ மும்முரமாக வேலை பார்த்துக்கொண்டிருந்த ஹஸனிடம் நெருங்கினான் பாலா.

 

‘வெல்கம் பாலா. நீங்க வேற. வேலை அதிகமாயிடுச்சு. எனக்கு முன்னாடியே நீங்க தான சொன்னிங்க’

 

‘ஆமா. அதுக்காக இப்டியா. இருபத்தி நாலு மணிநேரமும் ஆஃபிஸ்லயே கிடக்கிறது. அபார்ட்மெண்ட்ட வெக்கேட் பண்ணிட்டிங்களா என்ன?’

 

‘ஹா.ஹா. ஆமா பாலா. தாங்ஸ் ஃபார் ரிமைண்டிங். நானே நினச்சிட்டிருந்தேன்.’

 

‘மை காட். உண்மையா தான் சொல்றீங்களா?’

 

‘ஆமாம்’

 

‘டோண்ட் வரி. கூடிய சீக்கிரம் அபார்ட்மெண்ட விட்டு மட்டுமில்ல இந்த ஊரவிட்டே வெளிய போகப்போறீங்க. அதப் பத்தி தான் நான் பேச வந்தேன்’

 

‘வெளிய போகப் போறேனா? ஆம் ஐ ஃபயர்ட்? அப்டி ஏதாச்சுனா முன்னாடியே சொல்லிடுங்க பாலா. நான் கொஞ்சம் ரெடியா இருப்பேன்’

 

‘ரெடியா இருப்பிங்களா? என்னங்க நீங்க ஃபயர் ஆகிறத எதிர் பாத்திட்டிட்டே இருப்பிங்க போல’

 

‘ஆமாம் பாலா எல்லாத்துக்கும் தயாரா தான் இருக்கனும். வாழ்க்கை ரொம்ப மோசமானது. யார வேணும்னாலும் எப்டி வேணும்னாலும் எப்ப வேணும்னாலும் மாத்திடும். மாற்றங்கள் மட்டும் தான நிரந்திரம்’

 

‘ஐயய்யோ. என்ன விடுங்க. அந்த ஃபார்ம் மேன்கூட சேர்ந்ததில உங்களுக்கு ஏதோ ஆயிடிச்சு. சீர்ஸ்’

 

‘சரி வந்த விசயத்த பேசுங்க’

 

‘உங்களுக்கு எப்டி தெரியும். நான் ஏதோ விசயத்தோட வந்திருக்கேன்னு?’

 

‘விசயம் இல்லாம பாலா வரமாட்டார்னு எனக்கு நல்லாத் தெரியும். என்னோட கற்பனைனு கூட வச்சுக்கங்களேன். சரி மேட்டருக்கு வாங்க. எனக்கும் ஒரே இடத்தில இருக்கிறத விட நாலஞ்சு ஊருக்கு போகத்தான் பிடிக்கும். என்ன எங்க பேக் பண்ணப் போறீங்க? என்ன ரீஸன்?

 

‘மை காட். யூ ஆர் ரீடிங் மீ. தர் வில் பீ அ மீட்டிங் திஸ் ஈவ்னிங் இன் நியூக்ளியோலஸ். வந்திடுங்க. சாரி டு டிஸ்டர்ப் யூ. ஸி யூ’

 

 

 

அந்த போன் காலை எடுக்கலாமா வேண்டாமா என பல முறை யோசித்து எடுத்தான்.

 

‘இஸ் திஸ் ஹஸன்’

 

‘ஐம் பாலாஜி. ஸ்பீக்கிங் ஃப்ரம் தி க்ரீன்’

 

‘பாலாவா? யார் நீங்க?’

 

‘யே. சாரி ஃபார் தட். ஐம் ஸ்பீக்கிங் ஃப்ரம் க்ரீன். கான் யூ கெட் மீ?’

 

‘தி க்ரீனா? அப்டீனா?’

 

‘தி க்ரீன். நீங்க உங்க சி.வி அனுப்பி இருந்தீங்களே? வேலைக்கு அப்ளை பண்ண’

 

’சாரி. எனக்கு தெரியாது. நான் எதுவும் அப்டி அனுப்பல’

 

‘நீங்க முஹம்மத் ஹஸன் தானே? டெல்லில ஜெர்மன் ட்ரான்ஸ்லேட்டரா வர்க் பண்ணீட்டிருக்கீங்க இல்ல?’

 

’ஆமாம் ஐம் ஹஸன். நான் ட்ரான்ஸ்லேட்டரா தான் வேலை செஞ்சிட்டிருந்தேன். ஆனா நான் எதுவும் வேலைக்கு அப்ளை பண்ணலையே’

 

‘ஓ ஐ ஸீ. கன்ஸ்ட்ரக்‌ஷன் அண்ட் யுவர் க்ரியேட்டிவிடினு ஒரு எஸ்ஸே எழுதி உங்க சி.வி கூட அப்ளை பண்ணி இருந்தீங்க’

 

கன்ஸ்ட்ரக்‌ஷன் அண்ட் யுவர் க்ரியேட்டிவிட்டி. கட்டிடங்களும் உங்கள் கற்பனையும். வேண்டா வெறுப்பாக எழுதிய கட்டுரை. ஆனால் எழுதும் போது வேலைக்கு எழுதுகிறோம் என்று தெரியாது. ஏதோ கட்டுரைப் போட்டி, ஜெயித்தால் ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை கிடைக்கும் என்று சொல்லித் தான் அதனை ஸ்மிர்தி எழுத வைத்தாள். ஏதோ வேலைக்கு அப்ளை செய்வாள் என கனவில் கூட நினைத்துப் பார்த்ததில்லை. இப்போது அவள் கனவில் மட்டுமே காட்சி தருகிறாள். ஆனால் அவள் சார்ந்த விசயங்கள் கனவில் இருந்து நிஜ உருவை அடைந்து வருகின்றன.

 

’ஆமாம். உங்க பேர் என்ன சொன்னீங்க?’

 

‘பாலாஜி. சார்ட்டா பாலா, பாலு, பாஜினு எப்டி ஃபீல் பன்றீங்களோ அப்டி கூப்பிடுங்க.’

 

’ஆமாம் பாலாஜி. நான் தான் அனுப்பி இருந்தேன்.’

 

‘அப்பா. அட் லாஸ்ட் ஐ ஹாவ் கன்வின்ஸ்ட் யூ. தென் வென் ஆர் யூ ஜாய்னிங்’

 

‘ஜாய்ன் பண்ணவா? ஹாவ் ஐ பீன் அப்பாய்ண்டட்’

 

‘யெஸ். ஆஃப் கோர்ஸ். உங்க மெய்ல்ல செக் பண்ணுங்க. யூ ஹாவ் தட் அப்பாய்ண்ட்மண்ட் ஆடர் தேர்’

 

‘ஓகே’

 

‘அண்ட் அனதர் திங். உங்களுக்கு எஃப்.பி-ல ஃப்ரண்ட் ரெக்வஸ்ட் அனுப்பி இருக்கேன். அக்ஸப்ட் பண்ணுங்க. லெட்டஸ் மீட் தேர்’

 

‘ஸ்யூர்.’

 

ஸ்மிர்தி இறந்த பிறகு ஹஸன் டில்லியில் இருந்து வேலையை உதறிவிட்டுக் கிளம்பினான். உலகம் பெரிய பாடம் ஒன்றைக் கொடுத்திருந்தது. உலகத்தின் மீதான விரக்தியும் வெறுப்பும், தானும் உடன் சென்றிருக்க வேண்டும் என்ற குற்ற உணர்வும் அவனைக் கொன்று கொண்டிருந்தன. வாழ்வின் அடுத்த இலக்கை விரட்டும் எண்ணமின்றி துவண்டு கிடந்தான். மனம் பெரும் அடி ஒன்றை வாங்கி இருந்தது. ஆனால் அவனால் கண்ணால் அழ முடியவில்லை. இதயம் அழுதது, உதிரத்தால்.

 

தமிழகமும் அப்போது திணறிக் கொண்டிருந்தது. வருந்திக்கொண்டிருந்தது. நாளுக்கு 16 மணிநேர மின்வெட்டு என அமலில் இருந்தது. சந்திக்கும் மக்கள் அனைவரும் கோபத்தைக் கொப்பளித்தவர்களாய் இருந்தனர். ஆட்சி மாற்றம் வேண்டும் என்பதை எளிதாக அவர்களிடத்தில் இருந்து புரிந்து கொள்ள முடிந்தது. ஹஸனுக்கு இருள் பழகியது. தமிழகத்தில் இருட்டு ஒரு வகையில் தன் இருட்டுடன் தொடர்புபட்டது. ஒளிவரும் நாளுக்காக ஏங்கியது. இருளும் ஒளியும் காதலர்கள். ஒன்றுகூடத் துடித்து ஒன்றை மற்றொன்று விழுங்கும் இயல்பின் காதலர்கள். இருள் இரவின் பார்வையைக் கொடுத்தது. இரவின் அழகு வெளிப்பட்டது. இரவு கொடுக்கும் இதம் பிடித்துக் கொண்டது. அதானால் இரவில் தூக்கம் என்பது போய் எண்ணம் என்றானது. அப்படி இரவில் தூக்கம் வந்தாலும் மின்சாரம் இராது. தூக்கம் எப்படியும் கெடும். பகல் உக்கிர வெயிலைச் சுமந்து வந்து வெறுப்பேற்றியது. இந்த சமயத்தில் தான் அவனுக்கு பூனைகளுடன் உறவு ஏற்பட்டது.

 

பூனைகள் சுகவாசிகள். சுதந்திர விரும்பிகள். நாய்களைப் போல் தனக்குப் பிடித்தவரை மகிழ்விக்க அவைகளுக்கு பிடிக்காது. தனக்கு விருப்பம் இருக்கும் போது அல்லது தேவை இருக்கும் போது மகிழ்விப்பதைப் போல் மகிழ்வித்து பிற நேரங்களில் செவிட்டித் திரியும் தன்மையுடையவை. கிட்டத்தட்ட மனிதனைப் போன்றவை. சுவையும் உணர்வும் ஒரே மாதிரியானவை. ஆம். மனிதனைப் போல் இல்லாவிட்டால் இந்நேரம் அவைகளால் எப்படி மனிதனிடம் அவன் வீடுகளில் எந்தப் பயனும் பயக்காமல் வாழ முடியும்? பிற விலங்குகள் எல்லாம் மனிதனால் அழிவு கண்ட போது பிழைத்துக் கொண்டவை இந்த நாய்களும் பூனைகளும். மனிதன் தனக்கு அடிபணிந்தவற்றையும் தன்னைப் போல் தான்தோன்றிக் குணமுள்ளவற்றையும் தேவை இல்லை எனினும் வளர்க்கும் குணமுடையவன் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

 

ஹஸனுக்குப் பூனைகள் பிடித்ததற்கு இதற்கெல்லாம் மேல் ஒரு காரணம் உண்டு. அனைவரும் உறங்கும் அந்நேரத்தில் தங்கள் வேலையில் ஈடுபடும் பூனைகளின் அந்த தனிமை விரும்பும் தன்மை தான் அந்தக் காரணம். அவற்றின் சுதந்திரப் போக்கும், தனித்துவமும் அவனைக் கவர்ந்தன. விருப்பமில்லாத வீட்டில் பூனைகளும் அக்கம்பக்கத்துக் குழந்தைகளும் அவனுக்கு இதமளித்தனர். தமிழகத்தின் இருள் இவை அனைத்திற்கும் அணி சேர்த்தது. இருள் திரையில் நட்சத்திரங்கள் மிண்ணின.

 

அந்த நேரத்தில் தான் இந்தப் பணி வாய்ப்பு வந்திருந்தது. ஹஸன் யோசித்தான். வீட்டைவிட்டு ஓடியவன் வீட்டிற்கு வந்து சேர்ந்த மகிழ்ச்சி பெற்றோருக்கு இருந்தது. ஆனால் இவனால் ஒரு நிமிடம் கூட அங்கு இருக்க முடியவில்லை. அங்கு தங்கி இருந்த ஒரு மாதத்தில் ஒன்றை கண்டான். தன் தந்தை மாறியிருந்தார். குடித்த வாடையோ சுடுசொல்லோ அவரிடமிருந்து வெளிவரவில்லை. ஆனால் அவரது முகத்தை பார்க்க அவனுக்குப் பிடிக்கவில்லை. அவரைப் பார்க்கும் பொழுதெல்லாம் அந்த இரவு தான் அவனுக்கு நினைவுக்கு வந்தது. ஏளனத்தை அவனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவர் முகத்தில் விழிக்க அவன் விரும்பவில்லை. திருப்பிக் கொண்டான். வழிய வந்து பேசினாலும் வலிய விலகினான். வீட்டைவிட்டு மற்றொரு முறை வெளியேறும் வாய்ப்புக்காக காத்திருந்தான். வாய்ப்பும் கதவைத் தட்டியது. கிளம்பினான். லண்டனுக்கு.

 

‘பாத்து போய்ட்டுவாப்பா’ தந்தை அத்துடன் நின்று கொண்டார்.

 

 

 

நியூக்ளியோலஸ் களைகட்டி இருந்தது. பாலா, ஜோஆன், மேக்ஸ், ரைஹானா எனத் தெரிந்த முகங்களுடன் தெரியாத பல முகங்களும் அமர்ந்திருந்தன. ஆம். ஹஸன் எப்போதும் அப்படித்தான் தான் வேலையில் நெருங்கி இருப்பவர்களிடம் மட்டும் தான் பழகுவான். பிறரிடம் பேசக்கூட மாட்டான். அவர்கள் பெயர் கூட தெரிந்திருக்காது. அல்லது நினைவில் தங்காது. தேவையற்றதை மனதில் போட்டு குழப்புவதென்பது அவனுக்கு பிடிக்காத செயல். அந்த அறை முழுதும் நிரம்பி இருந்த முகங்களுக்குள் தனக்கு தெரிந்த முகங்களிடம் சிறு புன்னகையைக் கொடுத்து விட்டு ஒரு இருக்கையில் சென்று அமர்ந்தான்.

 

ரைஹானா எழுந்தார். ரைஹானாவிடம் ஒரே ஒருமுறை தான் ஹஸன் பேசியிருக்கிறான். அதுவும் லண்டனுக்கு வந்த மறுநாள். அவன் அறைக்குள் வந்த பெண்ணாய். தன்னைத் துளியும் மதிக்காத பெண்ணாய் தான் அவனுக்குத் தெரியும். அதற்குப் பிறகு அவளிடம் நேரடியாக எதுவும் பேசியதில்லை. அவளைப் பற்றியும் வெளியே விசாரித்ததில்லை. அவன் வேலையில் முழுவதுமாய் மூழ்கிப்போனான். அவளைப் பார்த்தால் இந்திய, அல்லது அரேபிய வம்சாவளிப் பெண்ணைப் போல் இருந்தாள். ஆனால், பேச்சு சுத்தமாய் ஆங்கிலேயர்கள் போலவே இருந்தது. அவளது பூர்வீகம் பற்றிக் குழப்பிக் கொள்ள அவன் விரும்பவில்லை. அவளைப் பற்றி தெரிந்து கொள்ளவும் ஆவல் இல்லை. ஆனால் ஒன்று அந்த முகச் சாயலை எங்கோ பார்த்திருக்கிறான். ஏதோ அருகில் பல நாள் இருந்த ஒருவரின் சாயலைப் போல் இருந்தது. ஆனால் தெளிவில்லை. மனம் சில குழப்பங்களுடன் முன்னே வந்து அவளைப் பற்றி சிந்திக்கச் சொன்னாலும் அவன் அதனை விரும்பவில்லை. விலக்கியே வைத்தான்.

 

வந்து சில மாதங்கள் சென்றிருந்தன. எடை குறைந்த ஆனால் வலிமையான கற்களைத் தயாரிக்கும் குழுவில் இருந்தான். அவர்கள் தலையை பிய்த்துக் கொண்டு வேலை செய்தனர். நானோ டெக்னாலஜியில் சாத்தியப்பட்ட கூறுகளை ஆராய்ந்து கொண்டிருந்தனர். அக்குழுவில்  தான் ஜோஆன் அறிமுகமானார். அவர் மூலம் கிடைத்த சில புத்தகங்கள் அவனுக்கு முஹம்மதை அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தன. ஆவல் மேலிட்டு வாழ்க்கையை தனிமையில் கழிக்க எண்ணினான். எண்ணங்களுக்கு மதிப்பளிக்கத் துவங்கினான். முடிவுக்கு இன்னும் வரவில்லை என்றாலும், தன் எண்ணங்கள் ஏதோ முடியை நோக்கி அழைத்துச் செல்வதை அவனால் உணர முடிந்தது. ஜோஆனின் வற்புறுத்தலுக்கிணங்க ஓரிருமுறை அவர் வீட்டு விருந்தில் கலந்து கொண்டான்.

 

ஜோஆனுக்கு இரண்டு மகள்கள். இரட்டையர்கள். பதினோறு வயதாகிறது. பார்ப்பதற்கு பூனைக்குட்டிகளைப் போல் இருப்பர். அவரது கணவர் சென்ற வருடம் இறந்து விட்டார். அவர் இஸ்லாத்தை தழுவிய கதை மிகவும் சிலிர்பூட்டக்கூடியது. தன் மனது கூறும் உண்மையைத் துரத்தித் தொடர்ந்து தழுவ ஏகப்பட்ட தைரியம் தேவை. ஜோஆனிடம் அது இருந்தது. ஆனால் துவக்கத்தில் எதற்காக இஸ்லாமை தன் மதமாக ஏற்றுக்கொள்ள போராடினார் எனப் புரியவில்லை. தெளிவற்ற தேடலாய் தெரிந்தது. பின்னர் அவர் மூலம் ஒரு புதிய முகம் தென்பட்டது. புதிய புலன் திறந்துகொண்டது. புதிய தத்துவம் ஒன்று அறிமுகப்பட்டது. தேடல் தென்பட்டது.

 

மேக்ஸிடமும் விவசாயத்திடமும் ஏற்கனவே தன் மனதை பறிகொடுத்திருந்தான். இந்த அரசல்புரசலான வாழ்க்கையில் பாலா விடுபட்டுப்போனான். வாழ்க்கை அனுபவிக்கிறேன் என்று நாளொரு தோழியும் பொழுதொரு விருந்துமாய் திரிந்தான். ஹஸனால் ஏனோ தெரியவில்லை அவனுடன் அணி சேர முடியவில்லை. அவனுள் சில காயங்கள் இன்னும் மாறாமல் தான் இருந்தன. அவை வலியைக் கொடுத்திருக்கலாம். தெரியவில்லை. அவ்வப்பொழுது வந்து செல்லும் ஜோவியல் மேனாய் அவன் தென்பட்டான்.

 

ரைஹானா எழுந்து உரையை ஆரம்பித்தாள். உரை மிகவும் தெளிவாக இருந்தது. தேவையற்ற சுற்றல்களோ வளைவுகளோ எங்கும் இல்லை. மிடுக்காக அவளைப் போல் பேசின. கண்கள் கட்டளை பிறப்பித்தன. அனைவரும் கட்டுண்டு கிடந்தனர். சாரம் இதுதான். அந்த வருடத்தின் பெரும்பாலான ப்ராஜக்ட்கள் அன்றுடன் முடிகின்றன. அடுத்த வேலையையும் குழுவையும் பிரிக்கும் தருணம் அது. ஹஸன் இடையில் சேர்ந்தவன். அவன் இல்லை என்றாலும் அந்த இடை குறைந்த கல் பற்றியான ஆய்வும் செயலும் நிகழ்ந்து கொண்டிருக்கும். அதாவது அவனுக்கென்று இதுவரை தனியே பொறுப்புகள் ஏதும் இல்லை. இன்று கொடுக்கப்படவிருக்கிறது. அனைவருக்கும் அப்படியே.

 

தி க்ரீன் உலக அளவில் மிகவும் பரந்துபட்ட நிறுவனம். இது நிறுவனங்களுக்கான நூற்றாண்டு. அவை எங்கும் எதிலும் விரவி இருக்கலாம். காலமும் மொழியும் இடமும் அவர்களைத் தடை செய்யாது. செய்யாமல் பார்த்துக் கொள்வர். அன்றைய கூட்டத்தில் தி க்ரீனில் இருந்து வெளிநாடுகளில் தங்கள் நிறுவனம் சார்பில் நடந்துகொண்டிருக்கும் வேலைகளில் பங்கெடுக்கச் சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். அதில் ஹஸன் இருந்தான். அதைத் தான் பாலா அன்றைய தினம் அவனிடம் தெரிவித்திருந்தான். ஹஸனது உலகறியும் வேட்கையோ எதுவோ தெரியவில்லை அவனை அந்தப் பட்டியலில் சேர்த்திருந்தது. அனைவருக்கும் அவரவர் கணினி கணக்கிற்கு அது பற்றிய தகவல் அனுப்பப்பட்டது. தங்கள் அறைகளுக்கு திரும்பி அவர்கள் வேலையைத் தேர்ந்தெடுக்க அன்னைவரும் பணிக்கப்பட்டனர். நாற்பத்தெட்டு மணி நேரங்கள் முடிவெடுக்க கெடு கொடுக்கப்பட்டிருந்தது. கூட்டம் முடிந்தது.

 

 

மூன்று சாய்ஸ். ஒன்று எமிரெட்ஸ், இன்னொன்று காஸா, மற்றொன்று டில்லி.

 

எதை எடுப்பதென்பதில் குழப்பம் இருந்தாலும், எதை விடுப்பதென்பதில் தெளிவாக இருந்தான். டில்லி. மீண்டும் ஒருமுறை அங்கு சென்று நினைவுகளை மீண்டும் மீட்டு வலிகளை வலிய வரவழைக்க அவன் விரும்பவில்லை. முடிந்தளவிற்கு இந்தியாவை தவிர்க்க எண்ணினான். அந்த நிகழ்விற்குப் பின் அவன் மிக நொந்திருந்தான். இந்தியர்கள் பெண்களைக் கடவுளாகவும் நதியாகவும் உருவகப்படுத்தினாலும் வழக்கத்திலும் எதிரிலும் பெண்களை வேறு விதமாகத் தான் பார்த்தனர். உலகத்தில் பெண்கள் வேறெங்கும் இவ்வளவு பாதுகாப்பற்ற சூழலில் இருக்கிறார்களா என்று தெரியவில்லை. ஆனால் அந்த மாதம் மட்டும் ஸ்மிர்தியையும் சேர்ந்த்து ஆண்களின் இச்சையால் பலியான பெண்களின் எண்ணிக்கை மலைக்க வைக்கக்கூடியது. என்னதான் ஆடை குறைவு, அறிவு குறைவு என்று கருத்துகள் கூறப்பட்டாலும் அவை எல்லாம் பூச்சானவை. அது சமூகத்தின் மொத்த மதிப்பீடுகளில் உள்ள ஓட்டை. என்ன தான் ஆயிரக்கணக்கான தத்துவங்களின் பிறப்பிடமாய் இருந்தாலும் மாந்தன் எங்கும் மாந்தன் தான்.

 

விவாதம் தேவையில்லை. டெல்லி வேண்டாம். காஸா. காஸாவா? அப்படி ஒரு ஊரை இதுவரை கேள்விப்பட்டதே இல்லை அவன். க்ரீனியிடமோ கூகுளிடமோ அவன் கேட்க விரும்பவில்லை. நேரே எமிரெட்ஸ். நன்கு தெரிந்த அடிக்கடி பரிச்சயபட்ட நாடு. துபை, ஷார்ஜா என செழிப்பான பாலை நிலம். அதைத் தான் மனதில் நினைத்துகொண்டான். தனக்கு வந்த அந்த மெய்லில் ரெய்ஹானாவிடமிருந்து இன்னொரு குறிப்பு இருந்தது. எமிரெட்ஸை தேர்ந்தெடுத்தால் சிறப்பு என.

 

எமிரெட்ஸ் முடிவெடுத்தான். யாரிடமும் கேட்கவெல்லாம் விரும்பவில்லை. உடனே மறுமொழி அளித்தான். எமிரெட்ஸ் என. ஆறு மாதம் அங்கு வேலை. பிறகு லண்டன் திரும்பி விடலாம். அங்கு ’தி க்ரீன்’ சார்பில் கடலுக்கு நடுவே பிரம்மாண்டமாய் கட்டப்பட்டுவரும் அந்த ஈச்சமர வடிவத் தீவின் கட்டமைபில் பங்கெடுக்க வேண்டும். புதுமைகளைப் புகுத்த வேண்டும். ஆறு மாத்ததிற்கு அவன் செய்ய வேண்டிய அனைத்து பணிகளும் அதில் இருந்தன. பயணப்பட தயாரானான்.

 

நேரம் முடிந்தது. இந்தியாவிற்கும், எமிரெட்ஸுக்கும், அமெரிக்காவுக்கும், ஜெர்மனிக்கும், ஓமனுக்கும், எகிப்திற்கும் என மொத்தம் 20 நாடுகளுக்கு ஆட்கள் தெரிவு செய்யப்பட்டனர். அவரவர் வேலை செய்யப்போகும் நாட்டிற்கான அனைத்து தகவல்களும் அனுப்பி வைக்கப்பட்டன. ஹஸன் அதிர்ந்தான்.

 

ஹஸனை காஸாவுக்கு அனுப்புவதாய் மின்னஞ்சல் வந்திருந்தது. காஸாவா? என்ன ஊர் இது? எந்த நாட்டில் உள்ளது? என்ன மொழி பேசுவார்கள்? யாரைக் கேட்டு இந்த முடிவை எடுத்தார்கள்? நேரே பாலாவைத் தொடர்பு கொண்டான்.

 

‘சொல்லுங்க ஹஸன்’

 

‘பாலா? என்ன இது  நான் எமிட்ரெட்ஸ் தானே கேட்டிருந்தேன். அப்பறம் ஏன் காஸா கீஸானு ஏதாவது ஊருக்கு அனுப்பி வைக்கிறீங்க?’

 

‘ஜோஆன் தான் உங்களை ப்ரஸ்க்ரைப் பண்ணாங்க. மேக்ஸ் தான் நான் பாத்துக்கிறேன்னு உங்களுக்கு காஸாவ அசைன் பண்ணச் சொன்னாரு. ஆர் யூ நாட் இண்டரஸ்டட்?’

 

‘ஓ. ஐ ஸீ. தென் லெட் மீ ஸ்பீக் டு தெம்’ அவர்களிடம் நேரில் பேசுவதாய் சொல்லி வைத்தான்.

 

‘மேம் என்ன இது?’

 

‘வாட்ஸ் அப் ஹஸன்’

 

‘என்ன எதுக்கு காஸாவுக்கு செலக்ட் பண்ண சொன்னீங்க?’

 

‘நான் ஏதும் சொல்லல. உங்க டீம்ல யார் இருந்த நல்லா இருக்கும்னு கேட்டாங்க. ஐ ஜஸ்ட் ப்ரிஃபர்ட் யூ’

 

‘மேம் எனக்கு காஸா எங்க இருக்குனே தெரியாது. இதுக்கு முன்னாடி நான் அப்டி ஒரு ஊர கேள்விப்பட்டதே இல்ல. ஏதாவது ஆஃப்ரிக்கா அண்டார்டிக்கானு அனுப்பிடப்போறாங்க’

 

‘ஹஸன். ஹாவ் யூ பீன் ஸெலெக்டட் டூ காஸா’

 

‘யெஸ்’

 

‘தாங்க் காட். நான் அதத் தான் ப்ரே பண்ணிட்டிருந்தேன். ப்ளீஸ் எங்கூட வா’

 

‘மேம். என்னனே தெரியாம உங்க கூட எப்டி வர முடியும்?’

 

‘காஸா இஸ் இன் பாலஸ்டைன். நோ ப்ராப்ளம். கம் வித் மீ’

 

‘பாலஸ்டைனா?’ ஒரு நிமிடம் இதயமே நின்று திரும்பியது.  இராக், ஆஃப்கன், இஸ்ரேல், பாலஸ்தீன். மனது கோர்த்தது.

 

‘மேம். தேர் வில் பீ டெரர் எவ்ரிவேர்’

 

‘ஸோ வாட். ஆர் யூ அஃப்ரைட்?’

 

’டெஃபனட்லி நோ ஆன். பட் அங்க போய் நாம என்ன பண்ண போறோம்?’

 

‘உன் மெய்ல்ல பாரு. டீடய்ல்ஸ் இருக்கும்’

 

‘ஓகே பை’

 

மெய்ல் பெட்டியை திறந்தான். புதிதாக ஒரு மெய்ல் வந்திருந்தது. மேக்ஸிடமிருந்து. மேக்ஸ் திரையில் தோன்றினார்.

 

‘பான் வாயேஜ்’

 

‘மேக்ஸ் வாட்ஸ் திஸ். யூ ஹாட் செலக்டட் மீ டூ காஸா வைல் ஐ ப்ரிஃபர் எமிரெட்ஸ்’

 

‘வாட் தெ ஹெல் ஆர் யூ கொனா டூ இன் தட் ஃபகிங் எமிரேட்ஸ்? ஆர் யூ கோனா ஹாவ் ஃபன் வித் யுவர் டிக்? ஃபூல். ஐ நோ மோர் அபவ்ட் யூ தன் மோர் யூ குட் ஹாவ். ஷட் அண்ட் பேக்’

வேறு வழியில்லை. விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் கிளம்பி தான் ஆக வேண்டும். ஏதோ ஒன்றை நோக்கித்தான் வாழ்க்கை இழுத்துச் செல்லும். பயணங்கள் என்றும் வீண் போனதில்லை. அந்தப் புரிதல் இருந்தது. ஓரிடம்விட்டு மற்றோரிடம் செல்ல வேண்டியது வளர்ச்சியின் மிக முக்கிய நிலை. லெட் த லைஃப் டேக் இட்ஸ் பேஸ்.

ஒளி 222 கிராம்: பகுதி 9

ஒளி 222 கிராம்: பகுதி 9

‘என்னங்க இது  ஷார்ட்ஸெல்லாம் போட்டு எங்கயோ கெளம்பிட்டிங்க’

 

‘ஆமா. நம்ம ஃபார்முக்கு’

 

‘வர வர நீங்க சரியில்ல ஹஸன். இப்பலாம் குவாட்டர்ஸ் பக்கமே வரதே கிடையாது. எப்பப்பாரு கம்பெனியே கதியேனு கெடக்கிங்க’

 

‘ஆமா பாலா. இது பத்தி நானும் மேனேஜ்மெண்ட்கிட்ட பேசனும்னு நினச்சேன். இங்கயே நமக்கு தேவைக்கு அதிகமான ஃபெஸிலிடீஸ் இருக்கும் போது ஏன் நமக்கு வெளிய வேற குவாட்டஸ் குடுத்திருக்காங்க.தேவையில்லாம எதுக்கு வெட்டிச் செலவு’

 

‘பாஸ் உங்களுக்கு குடும்பமும் கிடையாது, கேர்ள்ஃபிரண்ட்ஸுன்னும் யாரும் கிடையாது. அதுனால சாமியார் மாதிரி இங்க காட்டுக்குள்ளயே இருப்பீங்க. நாங்கலாம் அப்டி இல்ல ஊருக்குள்ள தான் ‘பல’ வேலைகள் இருக்கும்.’

 

‘தெரிது பாலா’

 

‘எதுக்கு ஃபார்ம் பக்கமெல்லாம் போறீங்க. ஏதாவது ஸ்போர்ட்ஸ் விளையாட வேண்டியது தானா?’

 

‘இல்ல பாலா. கொஞ்ச நாளா அப்டித்தான். மனசு தனிமையத் தேடுது. கூட்டமில்லாத எடத்த நாடுது.’

 

‘யுவர் விஷ். பட் பீ கேர்ஃபுல் வித் ஹிம். ஃபார்ம் மேன் மேக்ஸ்கிட்ட கொஞ்சம் பார்த்துப் பழகுங்க’

 

‘ஏன்?’

 

’உங்களுக்கே போகப் போகத் தெரியும்’

 

‘ஆனா உன்ன மாதிரி யாரும் சஸ்பன்ஸ் வைக்க முடியாது.’

 

 

’தி க்ரீன்’ உள்ளுக்குள் மிகப்பெரிய தோட்டத்தையும் வயல்களையும் உள்ளடக்கியிருந்தது. இவற்றிற்கு க்ளோரோப்ளாஸ்ட் என்று பெயர். இது முற்றிலும் தன்னிறைவு அடைந்த செல். வளாகத்திற்குத் தேவையான உணவுப் பொருட்கள் அனைத்தும் முடிந்தளவு உள்ளேயே விளைவிக்கப்படுகின்றன. இங்கும் அனைத்தும் கணினிமயம். மனிதர்களே தேவை இல்லை என்று சொல்லும் அளவிற்கு இயந்திரங்களின் ஆதிக்கம். மண் இன்றி ஊட்டத் தண்ணீரில் சில அறிய வகைச் செடிகள் பயிரிடப்பட்டன. இயற்கையுடன் ஒத்துழைத்து நடக்கும் செயற்கை இங்கு செயல்பாட்டில் இருந்தது. பூச்சிக் கொல்லிகளோ இல்லை வேதியியல் உரங்களோ பயன்படுத்தப்படவில்லை. அனைத்தும் இயற்கையில் இருந்தே தருவிக்கப்பட்டன. இந்த துறையிலும் பலர் வேலையில் இருந்தனர். இவர்கள் தாவரங்கங்களோடு ஒரு வாழ்க்கை வாழ்ந்தனர். க்ரீனின் வழக்கப்படி ஒருவர் தான் சார்ந்த துறை தவிர பிற துறைகளுக்கு அறிமுகப்பட்டிருக்க வேண்டும். அதனால் தன் ஊழியர்களைப் பிற துறை பயில ஏவுவது வழக்கம்.

 

ஹஸன் தன் வேலைக்குப் பிறகு வேளாண்மைக்கு கவனம் செலுத்துவதென்று முடிவுகட்டியிருந்தான். வேளாண்மை என்றால் என்னவென்றே தெரியாது. தஞ்சாவூரில் விளைச்சல் நிலங்களை பார்த்திருக்கிறான். ஒன்றிரண்டு முறை கிராமங்களுக்கும் சென்று வந்திருக்கிறான். ஆனால், ஒருமுறை கூட வயல்களுக்குள் இறங்கியதில்லை. நன்செய் புன்செய் என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறான் ஆனால் அப்படி என்றால் என்னவென்று விளங்கியதில்லை.

 

பிறகு எதற்கு இந்த வேண்டாத வேலை? எதற்கு வயற்காட்டுப் பக்கம் செல்லும் முடிவு?

 

கிட்டத்தட்ட யாருமே செல்ல விருப்பப்படாத இடம் ‘தி க்ரீன்’னுள் இந்த வயல்கள் தான். வயல்களில் இருக்கும் முதுகுடைக்கும் வேலைகளை பார்த்து இவர்கள் எல்லாம் பயப்படவில்லை. வயல்களை நிர்வாகித்த ஃபார்ம் மேன் மேக்ஸை கண்டு தான் இந்த உதறல். ஏன்? அப்படிப்பட்டவரா அவர். இல்லை அவர் எதையும் வெளிப்படையாக பேசிவிடுவார். இன்னும் பிச்சையாக சொல்ல வேண்டுமானால் எதையும் ‘பச்சையாக’ பேசக்கூடியவர். பச்சை வயல் வெளிகளுடன் பழகிப் பழகி ‘பச்சை’ அவருடன் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும். தி க்ரீனின் க்ரீனாக பேசுவதெல்லாம் ஒரு குற்றமா? குற்றமோ இல்லையோ பலருக்கு கூச்சம். அவருடன் பழகுவதற்கு கூச்சம். அதனால் தான் யாரும் அந்தப் பக்கம் மழைக்குக் கூட ஒதுங்குவதில்லை. மேக்ஸின் கதை மிகவும் போராட்டம் மிகுந்தது.

 

தி க்ரீன் நிறுவனம் தங்கள் கனவு நிறுவனத்தை ஆரம்பிக்க எண்ணி லண்டனைச் சுற்றி இருந்த கிராமங்களில் இடம் தேடிக் கொண்டிருந்த சமயத்தில் தான் இந்த இடம் அவர்கள் கண்ணில் பட்டது. அப்போது அதன் பெயர் தி க்ரீன் இல்லை. தி பாண்ட். அத்துனை பெரிய நிலப்பரப்பு முழுவதும் ஒரே ஒருவருக்குச் சொந்தமாய் இருந்தது. எளிதில் வாங்கிவிடலாம் என அணுகிய போது தான் அவரது சுயரூபம் தெரிந்தது. அந்த இடத்தின் சொந்தக்காரர் மேக்ஸ். தாய் தந்தை யாரும் இன்றி ஒற்றையாய் அந்தப் பண்ணையில் இருந்த வீட்டில் வசித்துவந்தார். பெரிய படிப்பாளி வேறு. ஆக்ஸ்ஃபோர்டில் பயாலஜிகல் சைன்ஸ் பிரிவின் தலைவராக இருந்து வந்தார். இந்தப் பண்ணையை அவர் தன் ஆராய்ச்சிக்காக முழுதும் பயன் படுத்திவந்தார். தி பாண்ட் நிறுவனம் என்னனென்னவோ செய்து பார்த்தும் அவர் அசையவில்லை. மாறாக மற்றொரு திட்டத்தை முன் வைத்தார்.

 

 

அதாவது, அந்த இடத்தை தி பாண்ட் தாரளமாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் ஒன்று எப்படி தி பாண்ட் அறிவியலின் ஒரு பாகமான எலக்ட்ரானிக்ஸையும் எஞ்சினீரியங்கையும் தன் கட்டிடக் கலைக்குள் புகுத்துகிறதோ. அதேபோல் பயாலஜியையும் உள்ளே செலுத்த வேண்டும் என கட்டளை கொடுத்தார். செடிகொடிகளின் ஆக்கிரமிப்புகளின் ஊடே கட்டிடங்களைக் கட்டச் சொன்னார். பெரிய எதிர்ப்பு கிளம்பியது. கட்டிடங்களுக்குள் செடி கொடிகள் வளர்த்தால் கட்டிடம் நாசமாகப் போகும் என்று முதலீட்டாளர்கள் கொதித்தனர். வேறு எங்காவது நிலம் பார்த்துக் கொள்ளலாம் என நிறுவனரை அழுத்தினர். ஆனால் அவருக்கு மேக்ஸின் யோசனை பிடித்திருந்தது. மற்றொரு பாய்ச்சலுக்குத் தன் நிறுவனம் தயாராகிக் கொண்டிருப்பதை அவரால் உணர முடிந்தது. ஒப்புக்கொண்டார். இருபத்தைந்து சதவிகித பங்குகள் மேக்ஸ் வசம் ஒப்படைக்கப்பட்டது. தி பாண்ட், தி க்ரீன் ஆனது. அந்த வளாகம் க்ரீன் செல் எனப்பட்டது. மைட்டோகாண்ட்ரியா, க்ளோரோப்ளாஸ்ட் என அனைத்திலும் உயிரியல் தென்பட்டது. மேக்ஸின் யோசைனையும் செயல்திறனும் உண்மையில் தி க்ரீனை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் சென்றது. தி க்ரீன் மேக்ஸுக்கு கொடுத்த பெயர் ‘ஃபார்ம்மேன்’ பண்ணை மனிதன்.

 

பண்ணை மனிதன் என்றால் அசல் பண்ணை மனிதன். ப்ரவ்ன் ஸ்விஸ் காளையையும் ஐர்ஷைர் பசுவையும் நடு வகுப்புக்குள் இணைய வைத்து பாடம் நடத்துவார். பாடம் நடத்துவது கூட பரவாயில்லை. அவர் அதனை விளக்கப் பயன்படுத்தும் வார்த்தைகள் தான் பச்சையானவை. வெளிப்படையானவை. ஃபக் யூ பஸ்டர்ட், ராம்ப் ஆன், தட்ஸ் மை பாய், ஃப்ர்பக்ட் புஸி, மஸ்ட் பி அ வர்ஜின் என ஆரம்பித்து கேட்க முடியாத அளவிற்கு தாளித்து எடுத்துவிடுவார். அப்படிப்பட்டவர். இதற்காக பலமுறை பல்கலைக் கழகம் அவரை கடிந்து கொண்டாலும் அவர் கவலை கொண்டதாகத் தெரியவில்லை. கல்லூரிப் பணி முடிந்ததும் முழுவீச்சில் தி க்ரீனில் அவர் வேலை செய்து கொண்டிருந்தார். இப்போது ஹஸன் அவரிடம் தான் சென்று கொண்டிருக்கிறான்.

நல்ல ஆஜானுவாகுவான உடல். கண் இமைகளின் முடிகூட நரைத்துக் கிடந்தது. ஆனால் சுறுசுறுப்பாக அவர் பண்ணை வீட்டில் ஆட்டின் வாயைத் திறந்து ஏதோ ஒன்றை வலுக்கட்டாயாமாக ஊற்றிக்கொண்டிருந்தார். அது திமிறியது. குண்டுக்கட்டாக தூக்கி இரண்டு கால்களுக்கு நடுவே கிட்டிபோட்டு அழுத்தி அதனை வாயில் திணித்தார். அதுவும் கண்ணீர் மல்க வேறு வழியின்றி அரைத்து உள்ளே அனுப்பியது.

 

’ஹஸன். ரைட்? வை ஆர் யூ ஹியர்?’

 

‘உங்க கிட்ட கொஞ்சம் ஃபார்ம் பத்தி கத்துகலாம்னு’

 

‘அல்ரைட். பட் ஹாவ் யூ ஹியர்ட் எபௌட் மீ?’

 

’யெஸ் சர். நிறைய கேள்விப்பட்டிருக்கேன். அதுதான் உங்ககிட்ட வேலை செய்யனும்னு ஆவல கொடுத்தது’

 

‘ஓ ஐ ஸீ. இட்ஸ் இண்டரெஸ்டின்ங் பட் அதுக்கு முன்னாடி உன்னப் பத்தி நான் தெரிஞ்சுக்கனும். அண்ட் ஒன் திங் டோண்ட் கால் மீ சர். ஐ ஹேட் இட், தட் டூ ஃப்ரம் ஆன் இண்டியன்’

 

‘ஸ்யூர். அதான் என் இன்ஸ்ட்டிட்யூட் ப்ரொஃபைல்ல இருக்கே?’

 

‘நாட் தட் பஸ்டர்ட். ஐ நீட் டு நோ யூர் பர்ஸனனல் ஸ்டஃப்ஸ்’

 

‘ஸ்யூர்’ ரொம்ப நாள் கழித்து கெட்ட வார்த்தை காதில் விழுந்தது. விழிபிதிங்க நின்றான்.

 

‘டூ யூ ஸ்மோக், ட்ரின்க்?’

 

‘நோ. எனக்கு ஸ்மோக், ட்ரிங்க் பண்ண பிடிக்காது’

 

‘ஹாவ் யூ எவர்?’

 

‘எஸ். ஒன் டைம்’

 

‘ட்ரிங்க் ஆர் ஸ்மோக்?’

 

‘ட்ரிங்க்’

 

‘அல்ரைட். ஹாவ் யூ எவர் வாட்ச்ட் போர்ன்?’

 

‘போர்ன். யா டூரிங் மை ஹையர் செகண்டரி. என் ஃப்ரெண்ட்ஸ் நச்சரிச்சு பாக்கவச்சாங்க’

 

‘ஹாவ் யூ எவர் இண்டல்ஜ்ட் இன் செக்ஸ்? மே பீ ஹோமோ ஆர் ஹெட்ரோ’

 

‘அப்ஸலூட்லி நாட் சர். நான் யார் கூடவும் செக்ஸ் வச்சுக்கிட்டதில்ல’

 

‘ஹாவ் யூ மாஸ்டர்பேட்டட்?’

 

‘நோ சர். ஆக்ட்சுவலி எனக்கு செக்ஸ் மேல இதுவரைக்கும் எந்த இண்ட்ரஸ்ட்டும் வந்ததில்ல.’

 

‘நோ ப்ளேஸ் ஹியர் ஃபார் எக்ஸ்ட்ராஸ். ஜஸ்ட் நீட் ஆன்ஸர் ’

 

‘ஓகே’

 

‘ஹாவ் யூ கிஸ்ட்?’

 

‘யா. ஒன் டைம். ஒரே ஒரு தடவை கிஸ் பண்ணியிருக்கேன்’

 

‘தட்ஸ் குட். லெட் அஸ் பி டுகதர். இன்னிக்கிருந்தே நாம வேலைய தொடங்க வேண்டியது தான்’

 

‘இதெல்லாம் எதுக்கு கேட்டிங்கனு தெரிஞ்சுக்கலாமா?’

 

‘ஷட். யூ வில் நோ’

 

 

 

’பேடி? இன் இங்லெண்ட்? ஹவ் இஸ் திஸ் பாஸிபிள் மேக்ஸ்?’

 

அது நெல் வயல். இங்கிலாந்தில் அரிசி விளைச்சலே கிடையாது. கோதுமை தான். ஆனால், எப்படியும் தன் பண்ணையில் அரிசி விளைவித்து காட்டுவதாகக் கூறி மேக்ஸ் ஒரு கூடத்தை திறந்தார். அங்கே செயற்கை சூழலில் அரிசி விளைய வைத்துக் காட்டினார். இப்போது கூடத்திற்குள் இருந்த அந்த வயல்களுக்குள் தான் நடந்து கொண்டிருக்கின்றனர்.

 

‘யா ஹஸன். திஸ் இஸ் பேடி. டூ யூ நோ ஐம் க்ரேஸி எபவ்ட் பேடி. எனக்கு நெல் மேல ஒரு தனி ஆசை’

 

‘அரிசியோட டேஸ்ட்ட சொல்றீங்களா?’

 

‘பிஸ் ஆஃப். டேஸ்ட் இல்ல ப்ளடி. டேஸ்ட் ஆஃப் இண்டர்கோர்ஸ் வித் ஒரேசா.’

 

‘இண்டர்கோர்ஸா? அரிசி கூடவா. ஆர் யூ வெல்?’

 

‘யா. யார் சொன்னா? ஒரு பொண்ணு கூட மட்டும் தான் இண்டர்கோர்ஸ் வைக்க முடியும்னு? இட் இஸ் பாஸிபிள் வித் எவரி திங் இன் நேச்சர்.’

 

’எவ்ரிதிங்?’

 

’யூ கான் ஹாவ் செக்ஸ் வித் எவரி திங் இன் நேச்சர். நோ ஜெனிடல்ஸ் ரக்வயர்ட்’

 

‘எனக்கு புரில’

 

‘இயற்கை கூட செக்ஸ் வக்க உனக்கு எந்த உறுப்பும் தேவையில்ல. உன் மனசு மட்டும் போதும்’

 

‘என்ன சொல்ல வறீங்க?’

 

‘எவரி திங் இஸ் செக்ஸ்னு சொல்லவரேன். எக்ஸிஸ்டன்ஸ் இஸ் கம்ளீட்லி செக்ஸ். செக்ஸ் இஸ் மேனிஃபெஸ்டேசன் ஆஃப் லவ்’

 

’சர்டைன்லி நாட்.’

 

‘ஃபக் ஆஃப். நீ செக்ஸ இரண்டு உறுப்புகளோட உராய்வுன்னு நினைச்சிட்டிருந்தைனா முதல்ல அத மாத்திக்கோ. இட்ஸ் ஜஸ்ட் அ பார்ட் ஆஃப் செக்ஸ்.’

 

‘தென்’ கண்கள் வேறு திசைக்கு இடமாறின.

 

‘செக்ஸுக்கு இன்னொரு பேர் இருக்கு காய்டஸ், கலவி. காய்டஸ் Coitus அப்டீன்ற பேர் லேட்டின்ல இருந்து வந்தது. Coire காய்ர் அப்டின்ற வார்த்தைல இருந்து. காய்ர் அப்டீனா ஒன்றாக கலந்து விடுதல் இல்ல ஒன்றாக கலந்து போதல் என அர்த்தம். இட்ஸ் ஆல் எபவ்ட் கோயிங் டுகதர். செக்ஸ்ன்றது ஒன்னா கலக்கிற விஷயம். நான் நீன்ற நிலையில்லாம ஒன்னோடா ஒன்னா நாம யார்னே தெரியாத அளவுக்கு கலந்திடற விஷயம்.’

 

‘…….’ கண்களை வேறு பக்கம் திருப்பி வைத்திருந்தவன் தத்துவத்தைக் கேட்டு திரும்பிப்பார்த்தான்.

 

‘யெஸ். ஒரு பூனைக்குட்டியவோ கோழிக்குஞ்சவோ இல்ல குழந்தையவோ கொஞ்சும் போதும், அதோட சேர்ந்து விளையாடும் போதும், ஒரு நதியில குளிக்கும் போதும், மீன்கள் கடிக்கும் போதும், மழை பெய்து நம்ம நனைக்கும் போதும், தென்றல் வீசும் போதும் நம்மள அறியாமலே நாம உணர்ச்சிப் பெருக்கடையிறோம். இன் அதர் டெர்ம்ஸ் வீ எஜாகுலேட்.’

 

’எஜாகுலேட். ஹ ஹ இட்ஸ் ஃபனி’

 

‘நத்திங் இஸ் ஃபனி ஹஸன். வீ நீட் டூ பே ஃபார் எவரிதிங். நத்திங் இஸ் ஃபனி’

 

‘ஸாரி. ஐ வாஸ் ஜஸ்ட் கிட்டிங்.’

 

’கிட்டிங். இந்த வயலுக்குள்ள இறங்கு நான் சொல்றேன் எப்படி நான் இந்த வயலோட செக்ஸ் வச்சுக்கிறேன்னு.’

 

மேக்ஸை தொடர்ந்து ஹஸனும் காலணிகளைக் கழட்டி வைத்துவிட்டு உள்ளே குதித்தான். நெற்கதிர்கள் இப்போதுதான் கதிர்விடத் தொடங்கியிருந்தன. அனைத்தும் பச்சைப் பசேலென இருந்தது. அது ஒரு அழகிய பச்சை. மதி மயக்கும் பச்சை. காலெல்லாம் சேறானது. வழுக்கிக் கொண்டிருந்தது. நிற்கமுடியாமல் தள்ளாடினான். மேக்ஸ் நடந்து நடு வயலை நோக்கிச் சென்றார். ஹஸனால் இயலவில்லை. செடிகள் மிதிபட்டு வளைந்தன. மேக்ஸ் கற்றுக்கொடுத்தார் எப்படி செடிகளை விலக்கிக் கொண்டு நடப்பதென. நடு வயலில் பாடம் துவங்கியது.

 

’ஹவ் டூ யூ ஃபீல்?’

 

‘நத்திங். எனக்கு இங்க நிக்கவே ஒரு மாதிரி இருக்கு. கொழ கொழன்ற சகதிக்கு நடுவ என்னால நிக்க முடியல. இந்தச் செடி பட்டு ஒடம்பெல்லாம் அரிக்கிற மாதிரித் தோணுது’

 

‘எனக்கு பேடி பிடிக்கிறதுக்குக் காரணமே இந்த வழவழப்பு தான். பேடிக்கு எப்பவும் மண்ணில தண்ணி தேங்கி இருக்கனும்.’

 

’மே பீ’

 

’நவ் ஜஸ்ட் க்ளோஸ் யுவர் ஐஸ்’

 

‘கண்ண மூடவா? எதுக்கு?’

 

’ஜஸ்ட் டூ இட்’.  ஹஸன் கண்ணை மூடினான்.

 

’வாட் யூ ஃபீல் அண்டர் யுவர் ஃபீட்’

 

‘என் காலுக்கு அடியில சேறும் சகதியையும் உணர்றேன்’

 

’இன்னும் கொஞ்சம் உன் உணர்ச்சியத் தூண்டிப்பாரு. ஒரு பெண்ணோட மேனிய தழுவிற உணர்வ. இன்னும் கொஞ்சம் மனச ஆழமாக்கு. அது தரும் ஒரு நெகிழ்ச்சிய உணர்வ. அது தரும் ஈரப்பதத்த உணர்வ. அது தரும் சூடு கலந்த குளிர்ச்சிய உணர்வ. ஒரு அடி முன்னாடி எடுத்து வச்சுப் பாரு. அப்படியே பாதம் வழுக்கி சகதிக்குள்ள நுழையும். அந்த வழுக்கல்ல ஒரு இதத்த உணர்வ. அது அப்படியே நெகிழ்ந்து குடுக்கிற அழகப் பாரு. உதடுகள நினைவு படுத்தும்.எந்த உதடுகள்னு எடுத்துக்கிறது உன்னோட கற்பனை. செக்ஸோட கிளர்ச்சி எல்லாத்தையும் ஃப்ரெஞ்ச் கிஸ் ஒன்னு குடுத்துடும்.’

 

ஹஸன் எங்கோ சென்று கொண்டிருந்தான். கற்பனையின் உச்சத்தை அடையும் ஏதோ ஒரு இடத்திற்கு. சற்று நேரத்திற்கு முன் களிமண்ணாய் தெரிந்த பூமிக்கு தற்போது உடல் முளைத்திருந்தது. கால்கள் வழியே மேலே எழும்பி தழுவிக்கொண்டிருந்தது. ஒவ்வொரு பாகத்தையும் உணர்ந்துகொண்டிருந்தான். கால்களை அசைத்து வேறோர் இடத்தில் இருத்தினால் வலிய வந்து கட்டிக் கொண்டது. மண்ணின் மணம் மனதை உசுப்பியது. காலுக்குக் கீழ் குளிரும், தலைக்கு மேல் வெயிலும் கலந்து புதுவித சுகத்தை அளித்தன. உணர்ச்சி நரம்புகள் எழுந்து கொண்டன. ஹஸனது இதயம் பதைபதைக்கத் துவங்கியது. வியர்வை நனைக்கத் துவங்கியது. தன்னிலை மறக்கத் துவங்கியது. ஏதோ ஓர் பொறிக்குள் சிக்கிக் கொண்ட உணர்வு எழுந்தது.

 

மெல்ல மண்வாசனை பாரிஸ் ஹில்டன் பர்ஃப்யூமின் வாசனைக்கு மாறியது. வென்னிலாவும் மஸ்க்கும் சேர்ந்த ஒரு கலவையான வாசனை. நெற்கதிற்களின் மணம் லஷ் ஹேர் ஜெல்லின் கடல் மணத்தைத் தொட்டது. அப்படியே வாசனையில் மயங்கிக் கழுத்தின் அருகே ஒரு முத்தத்தைப் பதித்கவா வேண்டாமா என சந்தேகத்தில் எழுந்து பார்த்தான் கண்கள் சொருகிய நிலையில் ஸ்மிர்தி தழுவிக் கொண்டிருந்தாள். வெடுக்கென தள்ளிவிட்டான்.

 

மேக்ஸ் சிரித்த முகத்துடன் நின்று கொண்டிருந்தார்.

 

’பரவாயில்ல. உன்னப்பத்தி சொன்னத நான் நம்பலை. உனக்கு உண்மையில கற்பனை ரொம்ப அதிகம் தான். சகதி சேறுன்னு நினச்சா எதுவும் நடக்காது. அத உணர்ந்து பார்த்தா தான் கிளர்ச்சி. வயலோட போராடறத வியர்வை சிந்திறத வேலையாய நினச்சா வேலை கலவியா நினச்சா கலவி. எல்லாம் நம்ம நாலஞ்சு ஹார்மோனோட விளையாட்டு தான். அத நேச்சர் நமக்கு தருது தட்ஸ் ஆல். யூ கான் கோர்ட் வித் நேச்சர் பீஸ்ஃபுலி. புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்.’

 

மூச்சு வாங்க வியர்வை கொட்ட பேச்சு மூச்சின்றி நின்று கொண்டிருந்தான் ஹஸன்.

 

 

அது ஸாட்டர் டே நைட். ஜனவரியின் குளிர்ந்த இரவு. இளசுகள் பப்களில் குவிந்து கொண்டிருந்த நேரம். கூர்காவ்னிலேயே ஸ்மிர்தி ஒரு பார்ட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தாள். ஆஃபிஸ் அமைந்திருந்த மொட்டை மாடியில் வழக்கம் போல் திறந்தவெளி பார்ட்டி. ஸ்மிர்தியின் கடைசி பாச்சலர் பார்ட்டி இது. இன்னும் ஒரு வாரத்தில் அவளுக்கு திருமணம்.

 

பார்ட்டி இரவு பனிரெண்டு மணிக்கு டான் என துவங்கியது. அழகிய வண்ண வண்ண ஆடைகளில் நறுமணம் காற்றில் கலக்க ஒருவர் பின் ஒருவராக வரத் துவங்கியிருந்தனர். இந்த பார்டிக்காக உண்மையில் ஸ்மிர்தி பெரிதாக அலையவில்லை. அனைத்தும் ஹஸன் பொறுப்பில் விடப்பட்டது. இரண்டு நாட்களுக்கு முன்பிருந்தே அலைந்து கொண்டிருந்தான். அனைத்தும் பார்த்து பார்த்துச் செய்யப்பட்டது. பார்ட்டி துவங்கி அரைமணி நேரம் கழித்து தான் வந்து சேர்ந்தான் ஹஸன். எங்கெங்கோ அலைந்துவிட்டு வியர்வையும் அழுக்கும் ஏறிய டி-சர்ட்டும் ஜீன்ஸுமாய் உள்ளே வந்து அமர்ந்தான். ஒளியில் ஒரு இருள். யாரும் அவனைக் கண்டுகொள்ளவில்லை. அவர்களுக்கு அவன் கண்டுகொள்ளும் பொருள் கிடையாது. அவர்களைப் பொறுத்த வரை இன்னும் குழந்தைத் தனம் மாறாத கனவுகளைச் சுமந்து செல்பவன். தன் வேலை சம்பந்தப்பட்ட ஆட்களைத் தவிர யாருடனும் ஒட்டாதவன். ஒரு வார்த்தை பேச பத்துப் பணம் கேட்பவன்.

 

எல்லோரும் மகிழ்ச்சியாக ஏதேதோ பேசிக்கொண்டிருந்தனர். ஸ்மிர்தி தலையை அசைத்து அசைத்து ஹஸனை ஓரக்கண்ணில் நோட்டம் விட்டபடியே அவர்களுடன் ஏதேதோ அளவளாவிக் கொண்டிருந்தாள். கூட்டத்தில் ஹஸனை அவள் ஆட்டுவிப்பதில்லை. வெளியில் தனக்கு கீழ் வேலைபார்க்கும் ஒரு ஜூனியர் என்கிற ரீதியில் தான் ஹஸன் பற்றி காட்டிக்கொண்டிருந்தாள். பிண்ணனியில் மென்மையாக ஹிந்திப்பாடல்களும் ஆங்கில ஆல்பங்களும் ஒலித்துக் கொண்டிருந்தன. குளிர் கொஞ்சம் அதிகமாகத் தான் இருந்தது. முன்பு போலெல்லாம் இப்பொழுது இல்லை. குளிரிலேயே குறைந்த ஆடையுடன் தான் ஹஸன் சுற்றிக்கொண்டிருந்தான். ஓரிடத்தில் அமர்ந்தால் தான் குளிர் தெரிந்தது. அருகில் கிடந்த ஏதோ ஒரு பழைய துணியை எடுத்து போர்த்திக் கொண்டு ஒரு இருண்ட மூலையில் கிடந்த டேபிள் மீதேறி படுத்துக்கொண்டான். லேசான விடுவிடுப்புடன் அப்படியே தூக்கம் தழுவிக் கொண்டது.

 

முகத்தில் ஒரு பாட்டில் ஐஸ்வாட்டர் உற்றப்பட்டது. அலறித் துடித்து எழுந்தான்.

 

’சப் டீக் ஹே நா?’ கையில் பாட்டிலுடன் ஸ்மிர்தி கோபமாய் நின்றிருந்தாள். வேறு யாரும் இல்லை. அதிகாலை ஐந்து மணிபோல் தெரிந்து.

 

‘க்யா ஹே ஆப்கி ப்ராப்ளம்?’

 

‘மேரி. ஐம் ஆஸ்கிங் யூ வாட் ஹெல் தெ ராங் வித் யூ. இது என்னோட லாஸ்ட் பாச்சலர் பார்ட்டி. நீ என்னனா இங்க தூங்கிட்டிருக்க. ஹவ் டேர் யூ பஸ்டர்ட். எவ்ளோ தைரியம் இருந்தா நீ என்னய அசிங்கப்படுத்துவ’

 

‘அசிங்கப்படுத்தினனா? அப்டிலாம் இல்ல மேம். ஐ வாஸ் டையர்ட். மை தக் கயா தா. அதான் அலுப்பில அசந்து தூங்கிட்டேன்’

 

‘ஜூட் மத் போலோ. யூலையர்’

 

‘நய். ட்ரை டூ அண்டர்ஸ்டாண்ட். எனக்கு ரொம்ப அலுப்பா இருந்தது. அதுபோக நீங்க அங்க இம்பார்ட்டண்ட் பீப்பிள்ஸ்கிட்ட ஏதோ பேசிட்டிருந்தீங்க. அதான் டிஸ்டர்ப் பண்ண வேண்டாமேனு இங்க வந்தேன். ட்ரை டூ அண்டர்ஸ்டாண்ட்’

 

’பட் யூ ஹாவ் ஸ்பாயில்ட் ஆல் ஆஃப் மை மூட். என்ன செய்வியோ எனக்கு தெரியாது. உன்னால நான் ரொம்ப அப்சட் ஆயிட்டேன். ப்ரிங் மீ அகைன் டு நார்மல்’

 

‘மாஃப் கரோ. ஐம் எக்ஸ்ட்ரீம்லி ஸாரி. ஐ டிடிண்ட் மீன் டூ பாதர் யூ. நான் என்ன பண்ணா நீங்க நார்மல் ஆவீங்க. இங்க இருந்து நான் வெளிய போகட்டுமா?’

 

’ஸூவர். கோ அவே ஸாலா. அப்னே லண்ட் சூஸ். இடியட்’

 

வாழ்கையில் கேட்கக்கூடாத வார்த்தைகள் எல்லாம் ஒருக்கே. எழுந்தவுடன் முகத்திற்கு நேரே. அந்த வார்த்தைகளின் மணத்தைவிட அவளது வாயிலிருந்து வந்த மதுவின் நெடி முகம் சுழிக்கச் செய்தது. அவன் வழக்கம் போல் எதுவும் பேசவில்லை. ஜாட், கண்ட், மா கி, தேரி கலந்த வசனங்களுடன் ஹிந்தியில் உள்ள அத்தனை கெட்ட வார்த்தைகளையும் கேட்க முடிந்தது. காலை ஃபஜ்ர் தொழுகைக்கு அருகில் இருந்த பள்ளிவாசல்களில் இருந்து அழைப்பு விடுக்கும் அதான் ஒலித்தது. என்ன நினைத்தாலோ அரைமணி நேர அர்ச்சனைக்குப் பின் திட்டுவதை நிறுத்தினாள்.

 

‘ஐம் ஸாரி’ எதுவுமே நடக்காதது போல் ஒரே நொடியில் முகத்தை மாற்றிப் புன்னகையுடன் கூறினாள்.

 

‘க்யோன்? என்ன திட்டினதுக்கா?’

 

‘ஹே பேபி லீவிட். நீ என்ன அப்ஸட் ஆக்கின. அதனால கோபப்பட்டு நானும் உன்னய அப்ஸட் ஆக்கிட்டேன். தட்ஸ் ஆல். அ டூத் ஃபார் டூத். லீவிட். ஐம்  நால்மல் நவ்’

 

‘அச்சா. நீங்க சந்தோசமா இருக்கிங்கள? எனக்கு அது போதும்.’

 

‘ஆர் யூ நாட் ஹாப்பி’

 

‘தட் ஸீம் நத்திங் டு யூ’

 

‘ஹஸன் பையா. ஐ கேர் ஃபார் யூ மச். நான் உனக்காக அதிகமாக கேர் எடுத்துக்கிறனால தான் என்னால உன்மேல உரிமை எடுத்துக்கிற முடியுது. நம்ம மேல அதிகமா அன்பு வச்சிருக்கவங்களால தான் நம்ம மேல அதிகமா உரிமை எடுத்துக்கிற முடியும்’

 

’தான்க்ஸ். ஃபார் யுவர் அட்வைஸ். நான் இதெல்லாம் கேக்கிற நிலையில இல்ல’

 

‘கமான். இதுக்கெல்லாம் கோபப்பட்டா எப்படி? ஒன்னு பண்ணிக்கோ பதிலுக்கு என்னய திட்டிடு. ஓ.கே’

 

‘அன்பு வச்சிருக்கவங்கள எனக்கு திட்டத் தெரியாது’

 

’ஐம் டெரிப்ளி சாரி. சீர் அப். நீ என்ன சொன்னாலும் செய்யறேன்’

 

‘என்ன கொஞ்சம் தனியா விடுங்க. நான் பாத்துக்கிறேன்’

 

‘தனியாவா? டோட்ண்ட் பீ ஸில்லி. டென்சனா இருக்கறவங்க தனியா இருந்தா என்ன ஆகும்னு தெரியுமா? டென்சன் இன்னும் அதிகமாகிடும்’

 

‘உங்களுக்கு வேணும்னா அப்டி இருக்கலாம். எனக்கு அப்டி இல்ல’

 

’ஓகே. கமான். நான் உன்னத் தனியா விடறேன். ஆனா அதுக்கு முன்னாடி நீ எனக்காக ஒன்னு செய்யனும்’

 

‘செய்யலைனா விடவா போறிங்க?’

 

‘ஹஸன். ஐம் ஸீரியஸ். ப்ளீஸ் அண்டர்ஸ்டாண்ட். யூ நீட் டு அக்ஸப்ட் மை ப்ளீ. வில் யூ?’

 

‘சொல்லுங்க மேம்’

 

’யூ நீட் டு ட்ரிங் திஸ்’ எனக் கூறி ஒரு கண்ணாடி கோப்பையை நீட்டினாள். அது ஏதோ ஒரு மதுபானத்தால் நிரம்பியிருந்தது.

 

குடிகாரனையும், குடித்துவிட்டு அவன் தரும் அழும்பலையும் ஹஸன் வெளியில் சென்றெல்லாம் கண்டதில்லை. அனைத்தையும் வீட்டிலேயே நேரடியாக கண்டிருக்கிறான். எப்போது அவருக்கு அந்தப் பழக்கம் வந்தது எனச் சரியாகச் சொல்லத் தெரியவில்லை. பாம்பே போய் சுற்றிய பொழுது இருந்த போதைப் பழக்கம் பல நாட்கள் தொடரவில்லை. அம்மா, தங்கை, திருமணம், சம்பாத்தியம், குழந்தைகள்,  என ஒளியை நோக்கி ஓடிய வேளையில் அந்தப் பழக்கம் அறவே ஒழிந்து போனது. பிறகு எப்படி மீண்டும் வந்து ஒட்டியது?

 

ஹஸன் பிறப்பதற்கு முன், தன் தங்கையை திருமணம் முடித்துக் கொடுத்ததில் ஏதோ மனக்குழப்பம் ஏற்பட்டுச் சில வருடங்கள் குடிகாரராய் அலைந்ததாய் கேள்விப்பட்டிருக்கிறான். தன் தங்கை பற்றி ஹஸனது தந்தை வெளிப்படையாக என்றும் பேசியதில்லை. தன் தாயின் மூலமும் பிறர் மூலமும் அரசல்புரசலாகத் தெரிந்து கொண்டிருக்கிறான்.

 

தங்கையை தன் கடையில் வேலை பார்த்த ஒருவருக்கு திருமணம் செய்து கொடுத்திருக்கிறார். திருமணம் செய்து கொண்ட சில நாட்களிலேயே சொத்தைப் பிரித்து தரும்படி பிரச்சனை எழுந்து பிரித்து கொடுத்திருக்கிறார். அது போததென அவர் கடையிலேயே கைவைத்திருக்கின்றனர். ஏனென்று கேட்டால் பதில் இல்லை. இப்படிப்பட்ட வேளையில் தங்கை கணவன் தங்கையை அழைத்துக் கொண்டு அனைத்து சொத்துகளையும் விற்றுவிட்டு வேறோர் நாட்டுக்குச் சென்றுவிட்டனர். எந்த நாட்டுக்குச் சென்றனர், இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்ற பல கேள்விகளுக்கு பதில் இல்லை. இன்றுவரை அவர் தங்கை பற்றிய செய்திகள் அனைத்தும் மர்மமாக இருக்கிறது.

 

ஹஸன் பிறந்த பிறகு அவர் குடிப்பதை அறவே நிறுத்தி வைத்திருந்தார். மீண்டும் எப்போது தொட்டார் எனத் தெரியவில்லை. ஒருவேளை வியாபாரம் நன்றாக நடந்ததால் கௌரவத்திற்காகக் குடிக்க ஆரம்பித்திருக்கலாம். அது அப்படியே முற்றி இருக்கலாம். ஹஸன் டிகிரி முடித்து வீட்டில் இருந்த போது மிகவும் முற்றி இருந்தது.

 

ஆனால் ஒன்று குடியால் பல கெடுதிகள் இருந்தாலும் ஒரே ஒரு நல்லதும் இருக்கத் தான் செய்கிறது. குடிப்பவன் எவனும் மனதை ஒளித்துவைக்க முடியாது. ஆல்கஹால் சிறுமூளையைக் குதறி உண்மைகளை அள்ளிக் கொட்டிவிடும். அது மட்டும் உண்மை. முழுக்க முழுக்க உண்மை.

 

அந்த இரவும் அதுதான் நடந்தது. தன் தந்தை போல் வரவேண்டும் என்ற ஆவல் மிகுதியால் அவருடன் இருப்பதை விரும்பும் ஹஸன், அன்றும் அவர் கடையிலிருந்து வீட்டிற்கு வந்ததும் வழக்கம் போல் அருகில் போய் அமர்ந்தான். ஆனால் ஏதோ வித்தியாசமான வாடை அவரிடமிருந்து வந்தது. எங்கோ கெமிஸ்ட்ரி லேபிலோ மார்க்கர் பேனாவிலோ அந்த வாடையை ஏற்கனவே நுகர்ந்திருக்கிறான். ஒருவிதமான கிறக்கும் வாடை அது. அவன் அதற்கு முன் குடித்தவர்களுடன் இவ்வளவு அருகில் அமர்ந்திருந்தது கிடையாது. தந்தையின் மாற்றத்தை மிக விரைவில் உணரத் துவங்கினான்.

 

இரத்தச் சிவப்பேறிய கண்கள், தெளிவாகப் புரியாத வகையில் உளறல், உறுதியாக நிற்காத தலை, சீரில்லாத உறுப்புகள் என பெரிய வித்தியாசம் தெரிந்தது. கண்ணே மணியே மகனே என்ற சொல்லல்லாமல் நாயே, எருமையே எனச் சொற்கள் வந்து விழுந்தது.

 

மனதில் இருப்பதை வெளிப்படையாக அவனிடம் சொன்னார். தான் மட்டும் அவனுக்கு பணமளித்திராவிட்டால் அவனால் இந்தப் படிப்பை முடித்திருக்க முடியாது என ஏளனம் செய்தார். அவன் எதற்கும் உபயோகப்பட மாட்டான் என முகத்திற்கு முன் கூறி நகைத்தார். அவனால் முடிந்தால் சொந்தக்காலில் நின்று ஒரே ஒரு ரூபாய் சம்பாதித்துக் காட்டும்படி சவால் விட்டார். தன் சொல்லைக் கேட்டால் மட்டுமே அவனுக்கு வாழ்கை என்றும் அதனால் தான் கூறுகிற, தன் தங்கையின் பெண்ணை மணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார். ஒரு மணி நேரம் நடந்த இப்படிப்பட்ட உரையாடல்களுக்கு அவனது தாயிடம் சென்று விளக்கம் கேட்டான். அவள் அழுதாள். அதுதான் பதில்.

 

அன்றோடு அவன் தூக்கம் தொலைந்தது. தினமும் வீட்டில் நடப்பதைக் கண்டு வெம்பினான். இப்படி ஒரு மிருகம் தன் தந்தைக்குள் தூங்கி கிடப்பதை கண்டு கொதித்துப் போயிருந்தான். தினமும் இதே கதை. கோபம், மிரட்டல், ஏளனம்.

 

மனம் வெதும்பி அன்று வீட்டைவிட்டுத் தெரியாமல் வெளியேறி கோயம்புத்தூர் வந்தான். அலைந்து திரிந்து ஒரு நண்பன் மூலமாக டெல்லியில் வேலை செய்யும் அவன் அண்ணன் மூலமாக டெல்லிக்கு வேலைக்குப் போனான். இன்று அந்த நிறுவனத்தின் மாடியில் நின்று கொண்டிருந்தான். எதிரில் அதே பொருள். எதற்காக ஓடிவந்தானோ அதே பொருள். உயிர் போனாலும் அதை ஏற்றுக்கொள்ளக் கூடாது என மனது கூறியது. அந்தப் பொருள் திசையை மாற்றிவிடும் என உள்ளுணர்வு சொன்னது. ஸ்மிர்தி புன்னகையுடன் அதனை நீட்டினாள்.

 

‘யூ நீட் டு ட்ரிங் திஸ். இத நீ குடிக்கனும்’

 

‘இல்ல மேம். என்னால முடியாது’

 

‘வோண்ட் யூ அண்டர்ஸ்டாண்ட். ட்ரிங் இட் ப்ளீஸ்’

 

‘நோ மேம். ஐ காண்ட்’

 

’ஹஸன் இது தான் என்னோட கடைசி நாள். அதாவது இனி மேரேஜ்கு பின்னாடி என்னால இப்டிலாம் உங்கூட டைம் ஸ்பெண்ட் பண்ண முடியாது.’

 

‘மேம் ஐ ஹேட் ட்ரிங்கிங். ஃப்ரம் மை ஹார்ட். என்னால குடிக்க முடியாது’

 

’ப்ரேக் த ஐஸ் நவ். எனக்காக. இது என்னோட கடைசி ஆசையா வச்சுக்கோ’

 

‘என்ன?’

 

’யே மேரி ஆகிரி இச்சா ஹை. டிஸ் இஸ்ட் மைன் லெஸ்ட்ஸர் வான்ச்ஸ்’ ஜெர்மன். பார்க்கும் வேலை ஜெர்மன் மொழிபெயர்ப்பு தான் என்றாலும் இதுவரை ஸ்மிர்தி பேசுகையில் ஜெர்மன் உபயோகப் படுத்தியதில்லை. இது முதல் முறை. ஏதோ வித்தியாசமாகப்பட்டது. கடைசி ஆசை என்றெல்லாம் எப்போதும் சொன்னதில்லை. வார்த்தைகள் மனதை என்னமோ செய்துவிட்டது. கையில் இருந்த கோப்பையைக் கையில் வாங்கி மடமடவெனக் குடித்தான். தொண்டையை எரித்துக் கொண்டு அந்தத் திரவம் வயிற்றை அடைந்தது. ஒரு நிமிடம் என்னன்னமோ செய்தது. முன்னே நின்று கொண்டிருந்த ஸ்மிர்தியும் கட்டிடங்களும் வானமும் ஒரு குலுங்கு குலுங்கி ஓய்ந்தது. தொட்டால் தொட்டது போலவே இல்லை. பார்த்தால் பார்ப்பது போலவே இல்லை. எங்கோ நின்று எதையோ செய்ததைப் போல் இருந்தது. இருப்பற்ற நிலையில் இருந்தான்.

 

ஸ்மிர்தி நெருங்கினாள். இருவர் மூச்சுக்காற்றும் பலமாய் இருந்தது. காதருகே வந்து ஏதோ கிசுகிசுத்தாள்.

 

’வோண்ட் யூ ஃபீல் மீ?’

 

‘ஐ ஹாட் அல்ரெடி’

 

‘யூ ஃபூல். ஃபீல் மீ. ஃபீல் மீ’

 

‘என்ன ஃபீல் பண்ண? உங்கள நான் உணர்றேன்’

 

‘என்னோட மூச்சுக் காத்த உணர்றயா?’

 

’உணர்றேன்’

 

’என்னோட வாசைனைய உணர்றயா?’

 

‘உணர்றேன்’

 

‘என்னோட மென்மைய உணர்றயா?’ அவளது கையை எடுத்து ஹஸனது இடுப்பில் வைத்தாள்.

 

‘உணர்றேன்’

 

‘என்னோட மென்மைய உணர்றயா?’ அவனது கையை எடுத்து அவள் இடுப்பில் வைத்தாள்.

 

‘உணர்றேன்’ அவனுள் ஏதோ மின்சாரம் பாய்ந்தது. கையை விடுவிக்க எண்ணியும் எடுக்க இயலவில்லை. அவளது கை அவனது முடியைக் கோதியது. மெல்லத் தலையை முகர்ந்தது. ஸ்மிர்தி அருகில் வந்தாள். மிக அருகில். அவனது நெற்றியில் முத்தமிட்டாள். கண்களுக்கு இறங்கினாள். உதட்டில் லேசாக உதட்டை வைத்தாள். பிறகு எடுத்துக்கொண்டாள். அவன் உடைந்திருந்தான். அவளது தலையைப் பிடித்து இழுத்தான். வியர்வை கலக்கத் துவங்கியது. உதட்டில் முத்தம் கொடுத்தாள். சொற்கள் மறைந்து நாவுகள் ’உணர்ந்தாயா?’ ‘உணர்ந்தேன்’ என தங்களுக்குள் பேசிக்கொண்டன. இணைந்தன. அந்த ஈரத்தில் ஒன்றுடன் ஒன்று கலந்து மறைந்து போயின. சூன்ய வெளியில் கரைந்தன. கைகள் உடலின் வேறு அங்கங்களை துலாவத் துவங்கின. அவள் விழியைக் கண்டான். விழித்துக் கொண்டான். வெடுக்கென அவளைத் தள்ளிவிட்டு ஒதுங்கி நின்றான். இதயம் படபடத்தது.

 

’லீவ் மீ அலோன் மேம். என்னயத் தனியா விடுங்க.’ கத்தினான்.

 

ஸ்மிர்தியும் நினைவுக்கு திரும்பி இருந்தாள். கண்கள் எதையோ எதிர்பார்த்து ஏமாந்திருந்தன.

 

‘ஆர்ட்னாங். ஃப்விலென் டான்க் ஃபர் ஆலிஸ். ஸி ஸேய்ன்’

 

மெல்ல இறங்கிப்போனாள். ஹஸன் மாடியிலிருந்து கீழே இரண்டாம் தளத்தில் இருந்த கார்பார்க்கிங் தளத்தை வெறித்துப் கொண்டிருந்தான். தானும் அவளுடன் சென்றிருக்க வேண்டும் என எண்ணினான். கருப்பு ஸ்லீவ்லெஸ் சல்வார் கமீஸுடன் ஸ்மிர்தி இறங்கி தன் காரின் அருகே சென்றாள். அவளும் மேலே பார்த்தாள். ஹஸன் திரும்பிக் கொண்டான். அப்பக்கம் இருந்து விலகி எதிர் திசையில் நடந்தான். ‘ஹஸன் பைய்யா’ என திடீரென ஸ்மிர்தியின் குரல் ஒலித்தது. பதறிப்போய் எட்டிப்பார்த்தான்.

 

ஸ்மிர்தியைச் சுற்றிவளைத்து இருவர் நின்று கொண்டிருந்தனர். மேலிருந்து பார்ப்பதற்கு பதற்றமாய் இருந்தது. அவசர அவசரமாக அங்கிருந்து இறங்கினான். லிஃப்ட்களுக்கு நிற்க பொறுமையில்லாமல் படிகளில் இறங்கினான். வியர்த்துக் கொட்டி இரண்டாம் தளத்தை அடைந்தான். வாட்ச்மேன்கள் அந்த இருவரையும் பிடித்து வைத்து உதைத்துக் கொண்டிருந்தனர். ஹஸனது கண்கள் ஸ்மிர்தியைத் தேடின. அந்தத் தளத்தின் சுவற்களுக்கு அருகில் நான்கைந்து செக்யூரிட்டிகள் நின்று கத்திக் கொண்டிருந்தனர். அருகில் சென்றான். சுவற்றிற்கு அந்தப் பக்கம் எட்டிப்பார்த்தான். அருகே இருந்த பள்ளிவாசலில் தொழுதுவிட்டு வீட்டிற்குச் சென்றவர்கள் கூட்டமாக சுற்றி நிற்க இரண்டு வயர்லெஸ் ஏந்திய செக்யூரிட்டிகள் அருகில். ரத்தம், கருப்பு சல்வார்கமீஸ், ஸ்மிர்தி, ஹா, சா என்ற முனுமுனுப்பு. கண்கள் ஹஸனை பார்த்தபடி, எதிர்பார்த்து ஏமாந்திருந்தன. அவள் அவ்விருவரிடமிருந்தும் தற்காத்துக் கொள்ள இரண்டாம் தளத்திலிருந்த கார் பார்க்கிங்கிலிருந்து கீழே குதித்து உயிர் விட்டிருந்தாள்.

 

குற்ற உணர்ச்சியில் தொடங்கிய அந்த உறவு, குற்ற உணர்ச்சியிலேயே முடிந்தது.

ஒளி 222 கிராம்: பகுதி 8

ஒளி 222 கிராம்: பகுதி 8

’இக்ரா’

 

‘மா அனா ப்கிரா’

 

’இக்ரா’

 

‘மா அனா ப்கிரா’

 

‘இக்ரக் பிஸ்மி ரப்பிக்கல்லதீ கலக்’

 

அந்தக் மலைக் குகையின் விளிம்பில் வியர்த்து விறுவிறுத்து எழுந்து நின்றான் அவன். ஒரு நிமிடம் குலையே நடுங்கிவிட்டது. வானத்திற்கும் பூமிக்குமாக ஒரு ராட்ஷத உருவம் எதிரே நின்று கொண்டிருந்தது. ஒளியால் முழுவதும் நிரம்பிய அந்த உருவம். சில நாட்களாக கனவில் தோன்றிக் கலவரப்படுத்திய அந்த உருவம் இன்று நேரில். அதுவும் சில அடி தொலைவில். அவனைப் பார்த்து கூறியது.

 

’வாசி’

 

’எனக்கு வாசிக்கத் தெரியாது’

 

’வாசி’

 

‘நான் வாசிக்கத் தெரியாதவன்’

 

‘வாசி’

 

வாசிக்கத் தெரியா ஒருவனிடம் வாசி என்றால் என்ன கூறுவான். விழித்துக் கொண்டு நின்றான். பேரொளி அருகே நெருங்கியது. அவன் விலகிச் சென்றான். விடவில்லை. நெருங்கிய ஒளி அருகே வந்து இறுகக் கட்டி அணைத்தது. மூச்சுத் திணற இறுகக் கட்டி மீண்டும் கூறியது.

 

’வாசி.

உன்னைப் படைத்த அந்த இறைவனின் பெயரால் வாசி.

அவன் உன்னை அட்டைபோல் ஒட்டும் சிறு பொருளிலிருந்து படைத்தான்.

உன் இறைவன் உனக்களித்திருக்கும் கொடையை எண்ணிப்பார்.

அவன் கற்றுக்கொடுத்தான்

மனிதன் அறியாதை எல்லாம் அறிய வைத்தான்.

இருந்தும் மனிதன் வரம்பு மீறுபவனாகவே இருக்கிறான்,

ஏனென்றால் அவன் தன்னைப் போதுமானவனாக கருதுவதால்.

தெரிந்து கொள்ளுங்கள், உங்கள் இறைவனிடமே மீண்டும் நீங்கள் மீளப்போகிறீர்கள்.’

 

ஒளியின் சொல்லும் செயலும் உருவமும் அவனைப் பதைபதைக்க வைத்தன. ஊருக்கு வெளியே மலை மீதிருந்த குகையிலிருந்து வீட்டிற்கு ஓடிவந்தான், பித்துப் பிடித்தவனைப் போல், கைகால் நடுங்கி காய்ச்சல் எகிற.

 

‘ ஜாமலூனி. ஜாமலூனி. முதலில் என்னைப் போர்வையால் போர்த்து’

 

தன் மனைவியிடம் நடந்தது அத்தனையையும் ஒப்பித்தான்.

 

‘எனக்கு ஏதோ நடந்துவிட்டது. பித்து பிடித்துவிட்டாற் போல் உள்ளது. என் கனவில் வந்த அந்த மாபெரும் ஒளி என்னுடன் உரையாடுகிறது. அது தரும் பார்வை நெஞ்சைப் பதைபதைக்கச் செய்கிறது. ஏதோ ஒன்றில் நான் சிக்கிவிட்டேன்’ எனப் பயந்தவாறு கூறினான்.

 

’நீங்கள் யாருக்கும் எந்தத் தீங்கும் செய்ததில்லை. கனவிலும் கெடுதி இழைக்கவில்லை. உங்களுக்கு அப்படி எதுவும் நடக்காது. புலம்பாதீர்கள். நிச்சயம் இறைவன் உங்களைக் கைவிடமாட்டான்’ அவள் ஆறுதல் கூறினாள்.

 

தன் மனைவியை எந்தளவிற்கு அவன் நேசித்தான் என்று கூற வரையறை இல்லை. அது வயது கடந்த காதல். அவள், அவனை விட சுமார் பதினைந்து வயது மூத்தவள். தெளிவாகப் புரிந்து கொள்ளவும், அவள், அவனைவிட சுமார் பதினைந்து வயது மூத்தவள்.

 

அவள் அந்த ஊரிலேயே மிகப்பெரிய செல்வந்தர் வீட்டுப் பெண். முதல் முறை திருமணமாகி கணவன் இறக்க, மறுமுறை திருமணம் செய்தாள். அதே கதை, கணவன் இறந்தான். விதவையாக இருந்தே வியாபாரம் செய்து அந்த ஊரின் மிகப் பெரிய செல்வந்தர் நிலைக்கு உயர்ந்திருந்தாள். பல்வேறு இடங்களில் இருந்து மொத்தமாக பொருட்களை வாங்கி பல்வேறு ஊர்களுக்கு, நாடுகளுக்குச் சென்று விற்றுவரும் வணிகத்தைச் செய்தாள். அவள் நேரடியாக எந்த ஊருக்கும் செல்வதில்லை. அதற்கென அங்கங்கே தனக்குக் கீழ் வாணிபக் குழுக்களை அமர்த்தி வேலை வாங்கி வந்தாள். இந்த நிலையில் தான் அவன் அவளுக்கு அறிமுகமாகிறான். தன் அண்ணன் மகனான அவனை, தலைவர் அவளது வணிகத்திற்குச் சிபாரிசு செய்கிறார். அவளும் அவனுக்கு தன் வணிகக் குழுவுக்கான தலைமைப் பதவியை அளிக்கிறாள். அவன் பல நாடுகளுக்கும் சென்று வெற்றிகரமாக வணிகத்தை நடத்தி வருகிறான். அவனது நேர்மையும் நாணயமும் தான் அந்தக் குழுவின் துதியாக இருக்கிறது. இப்படியும் ஒரு மனிதன் இருக்க முடியுமா என அவன் மீது மையல் கொள்கிறாள். தன்னை திருமணம் செய்ய முடியுமா என அவனுக்கு தூதனுப்புகிறாள்.

 

அவனைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.

 

அவன் பிறக்கும் சில மாதங்களுக்கு முன், அவன் தந்தை இறந்து போகிறார். அவனது ஊரில் ஒரு வழக்கம். குழந்தைகளை ஐந்தாறு வயது வரை கிராமங்களில் சென்று வளரவிடுவது. அப்போதுதான் நோய்நொடியற்று திடகார்த்தமாக குழந்தை வளரும் என்பது அவர்கள் நம்பிக்கை. அவனையும் அதே போல் ஒரு கிராமத்தில் சென்று விட்டுவிடுகிறார்கள். வளர்ந்து ஊருக்குத் திரும்பி சில ஆண்டுகளில் தாயும் இறந்துபோக தாத்தாவிடம் வளர்கிறான். தாத்தாவும் சிறிது மாதங்களில் இறக்க கைவிடப்பட்ட அனாதையாய் அவன் சித்தாப்பாவிடம் வளர்கிறான். சித்தப்பா தான் அந்த ஊரின் தலைவர்.

 

அனாதை வாழ்க்கை எப்படிப்பட்டது என்று வாழ்ந்து பார்த்தால் மட்டுமே உணர முடியும். ஒளியற்ற வாழ்வு நமக்கெல்லாம் அறிமுகமாக பதின்ம வயது வரை எடுக்கும். சிலருக்கு கூடும் குறையும். தாய் தந்தையரின் அரவணைப்பு நம்மை என்றும் ஒளியில் வைத்திருப்பதால் தான் அவ்வளவு நாள் தாக்குப் பிடிக்கிறது. பணத்தையும் புகழையும் ஒளியெனக் கருதும் நமக்கு முன்பே பணத்தையும், புகழையும் மட்டுமல்லாது அன்பையும் அரவணைப்பையும் ஒளியெனக் கண்டு ஏங்கும் கண்கள் அனாதைகளின் கண்கள். வருத்தங்களையும் ஏமாற்றங்களையும் அவமானங்களையும் ஒருக்கே கண்ட கண்கள் அவை. ஊண்டக் கையோ, தூக்கி நடக்கக் கால்களோ, வாங்கித் தர நெஞ்சமோ, முட்டுக் கொடுக்க தோளோ இல்லாத உடலுடம் அலையும் கோலம் படைத்த வாழ்க்கை.

 

அவன் வாழ்கையை ஆடு மேய்த்துத் துவங்கினான். பின் சிறிது நாள் வியாபாரம் கற்றான். ஊருக்குள் உண்மையானவன், நேர்மையானவன் எனப் பெயர் அவனுக்கு. இங்கு நிச்சயம் அந்த நிகழ்வை பகிர்ந்து கொண்டாக வேண்டும்.

 

அந்த ஊரிலிருந்த கட்டிடம். மிகவும் தொன்மை வாய்ந்த கட்டிடம். சதுரங்க வடிவக் கட்டிடம். மிகவும் மதிப்பிற்குரிய கட்டிடம். பல சிலைகளுக்கு அடைக்கலமாய் செயல்பட்ட கட்டிடம். ஊரார்கள் வணங்கச் செல்லும் கோவில் கட்டிடம். அந்தக் கட்டிடம் புதுப்பிக்கப்பட்டு முடியும் தருவாயில் இருந்தது. அதிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு அழகிய தொன்மையான கல்லை அதில் மீண்டும் பதிக்க வேண்டும். புதிய பிரச்சனை வெடித்தது. யார் அதை எடுத்துக் கொடுப்பது? எங்கள் குலமா? இல்லை உங்கள் குலமா?

 

ஊரிலிருந்த அனைத்துக் குலங்களும் மோதிக்கொண்டிருந்தன. யார் குலம் பெரியது என தங்கள் திராணியை நிருபிக்கும் கௌரவத்திற்குரிய செயல் அது. வாய்ச் சண்டை கைச் சண்டையாய் மூள தயாராய் இருந்தது. அந்த ஊர்க்காரர்கள் குலப்பெருமை காக்க போர் வரை கூடச் செல்லத் துணிந்தவர்கள். இறுதியில் அவன் அந்தப் பக்கம் வந்தான். அனாதை என்பதாலும் யாரையும் சாரா நேர்மையாளன் என்பதாலும் அவனிடம் ஒரு கருத்துக் கேட்போம் என ஊரார்கள் முடிவெடுத்தனர்.

 

ஒரு துணியால் மோதலைத் தவிர்த்தான் அவன். பெரிய கனமான துணியை எடுத்து அதன் நடுவே அந்தக் கல்லை வைத்து, அனைத்துக் குலமும் ஒன்று சேர்ந்து துணியை ஆளுக்கொரு பகுதியில் பிடித்துத் தூக்கி எடுத்துக் கொடுக்க ஒரு வழியைச் சொன்னான் அவன். ஒரு பெரிய மோதல் தவிர்க்கப்பட்டது.

 

இப்படி இருக்கையில் தான் சித்தப்பாவின் மூலம் அவளது வணிகக் குழுவின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறான். பல்வேறு ஊர்களையும் நாடுகளையும் கடந்து வெற்றிகரமாக வியாபாரம் செய்து வீட்டிற்கு வந்திருக்கையில் தான் அந்தத் தூது வந்து சேர்கிறது. அவனை அவள் மணக்க விரும்புகிறாள் என்று. அவனுக்குச் சில நிமிடம் எதுவும் புரியவில்லை. அவளை விரும்பாமல் எல்லாம் இல்லை. முதலில் அவள் அவனைவிட வயதில் மூத்தவள். இரண்டாவது அவளுக்கு மணப்பணம் கொடுக்கும் அளவிற்கு அவன் செல்வந்தன் இல்லை. ஆம் அந்த ஊரில் இன்னொரு பழக்கம். திருமணம் செய்ய மணமகளுக்கு, மனமகன்தான் தட்சணை கொடுக்கவேண்டும்.

 

எப்படியோ அந்த திருமணம் முடிந்திருந்தது. ஹுவ்வ ஃகம்ச வ உஸ்ரூன் வ ஹிய்ய அர்பூன். அவனுக்கு 25. அவளுக்கு 40. அவனும் அவளும் வயதுகடந்த காதலர்களாய் கனிந்தனர். ஒருவரை ஒருவர் தெளிவாக புரிந்து கொண்டிருந்தனர். அனாதையாய் வளர்ந்த அவனுக்கு எல்லையற்ற அன்பும் அரவணைப்பும் கிடைக்கத் துவங்கியிருந்தது. அவனுக்கு வயது நாற்பதைத் தொடத் துவங்கியிருந்தது. பணத்திற்கும் புகழுக்குமான ஒளியை நோக்கிய வேட்கை தணிந்து அவனுள் வேறு சில கவலைகள் தொற்றிக் கொள்ளத் துவங்கியிருந்தன.

 

நான் ஏன் பிறந்தேன்? இந்த வாழ்வின் நோக்கம் என்ன? ஏன் உலகம் இவ்வளவு கொடூரமாக இருக்கிறது? கடவுள் என்று சொல்லிக் கல்லை வணங்குகிறார்கள், அதற்குப் பலி கொடுத்து உணவும் படைக்கிறார்கள். ஏழையோ அனாதையோ அருகில் சென்றால் விரட்டுகிறார்கள். ஏதேதோ லாபத்திற்காகப் போர் மூட்டுகிறார்கள். பிறர் குடியைக் கெடுக்கிறார்கள். கொலை செய்கிறார்கள். கடவுள் என்று ஒருவன் இருக்கிறானா? இல்லை நாம் தான் தவறாகப் புரிந்து கொண்டுள்ளோமா? ஏன் உலகம் அநியாயத்திற்கு துணை போகிறது? ஏன்? ஏன்? ஏன்? மனது பதிலுக்காக துலாவும் கட்டத்தை அடைந்திருந்தான். கேள்விக்கு பதில் கிடைக்குமா என்றெல்லாம் தெரியவில்லை. ஆனாலும் தெரியாமல் விடக்கூடாது என்ற வைராக்கியம். மனதை ஒருநிலைப்படுத்தி அதன் நிலைபாட்டையும் குரலையும் கவனிக்கக் கற்றுக்கொண்டான்.

 

அந்த ஊரில் மற்றொரு வழக்கம் இருந்தது. ஊரைவிட்டுச் சில நாட்கள் ஒதுங்கி சுற்றியிருந்த மலைகளின் குகைகளில் சென்று தனியே தியானிப்பது. அவன் அடிக்கடி குகைகளுக்குச் செல்வது வழக்கம். தனிமை தரும் பக்குவத்தை அவன் அனுபவிக்கத் துவங்கியிருந்தான். ஏதாவது கஞ்சியுடன் மலைக்கு ஏறிச்சென்று பல வாரக்கணக்கில் தியானித்துக் கிடப்பான். கணவனுக்கு அவ்வவப்போது மலை மீதேறி உணவு கொடுத்துப் பார்த்துவிட்டு வருவது அவளுக்கு வழக்கம்.

 

சில நாட்களாகவே அவனுக்கு மனதில் பெரும் குழப்பம், வருத்தம். உலகத்தை எண்ணி எண்ணி வருத்தப்பட்டான். இப்படி ஒரு உலகம் எதற்காக என கோபப்பட்டான். இந்த நிலையில் தீடீர் திடீரென கண் முன் ஏதோ வருவது போல் இருக்கும். டக்கென மறைந்துவிடும். பெரிய ஒளி தோன்றும் அப்படியே மறைந்துவிடும். பின் அது கனவிலும் தோன்றத் துவங்கியது. அந்தப் பேரொளி அவனைத் துரத்தியது. அவன் மிரண்டுபோய் ஓடினான். இப்படியான தொடர் மன அழுத்தத்தினால் அவனது உடல் மெலிந்தது. நிறம் குறைந்தது. அப்படிப் பட்ட காலகட்டத்தில் தான் குகைக்குச் சென்று தியானிக்க அவன் முடிவெடுத்தான்.

 

குகையில் தியானத்தில் அமர்ந்திருக்க வெளியே ஏதோ நெருப்பு பிடிப்பதை போல் தெரிந்தது. எழுந்து அருகில் சென்ற போது தான் அந்தப் பேரொளி நின்றுகொண்டிருந்தது. வாசிக்கச் சொல்லியது. வாசித்தான். மிரண்டான். உடல் அனல் கக்கியது. மனவழுத்தம் மிகுந்தது. அரண்டு விழுந்து வீட்டிற்கு வந்து போர்வைக்குள் புகுந்தான். என்ன நடக்கிறதென்றே தெரியாமல் குழம்பினான். தனக்கு ஏதோ நிகழ்ந்துவிட்டதாக எண்ணி வருந்தினான். எண்ணங்கள் அதற்கு மேல் அவனை எண்ண அனுமதிக்கவில்லை. ஏதோ ஒரு நிலையில் சிக்கியவனைப் போல் ஒடுங்கிப்படுத்தான்.

 

தன் கணவனை அழைத்துக் கொண்டு அவள் தன் வயதான உறவினர் ஒருவரிடம் சென்றாள். அவர் கண் தெரியாதவர். மெத்தப் படித்தவர். தீர்க்கதரிசி.

 

அவரிடம் நடந்த அனைத்தையும் அவன் கூறினான். நிதானமாக அனைத்தையும் கேட்ட அவர் கூறினார். ‘அந்த ஒளியைக் கண்டு நீ அஞ்சத் தேவையில்லை. நடப்பதெல்லாம் நன்மைக்கே. இனிமேல் தான் உன் மேல் அந்த சுமை இறக்கப்படவிருக்கிறது. உன் ஊரார் உன்னைக் கூடிய விரைவில் எதிர்ப்பார்கள். விரட்டுவார்கள்.’

 

‘என்னை விரட்டுவார்களா? ஏன்? ஏதும் தவறிழைக்கப் போகிறேனா?’

 

’தவறுக்கு மட்டுமல்ல சிலசமயம் உண்மைக்கும் தண்டனை கொடுப்பார்கள். அவர்களால் தாங்க முடியாத உண்மையை நீ கொண்டுவரப் போகிறாய். எனக்கு இளமை இருந்திருந்தால் நானும் உன்னுடன் சுமை பகிர்ந்திருப்பேன். என்ன செய்ய. இனி இளமை  என்னிடம் திரும்பப் போவதில்லை. நான் அதுவரை உயிருடன் இருப்பின் என் தோள் உனக்கு’ என்று கூறினார். இந்த நிகழ்விற்குச் சில நாட்களுக்குப் பின் அவர் இறந்தார்.

 

அவன் ஒரு முடிவிற்கு வந்தான். ஊர் மக்கள் தன்னை துரத்துவதற்கு முன் தானே தன் உயிரை போக்கிக் கொள்ள முடிவு கட்டினான். மலைக்கு மேல் இருந்து குதித்து உயிர் விடும் முடிவோடு அரை மலை கடந்தான். மீண்டும் ஒரு குரலொளித்தது.

 

‘நில். இறைவன் உன்னை தேர்ந்தெடுத்திருக்கிறான். அவனது வாக்கை மக்களுக்கு எடுத்து வைக்க உன்னை தேர்ந்தெடுத்திருக்கிறான்.’

 

குரல் வந்த திசையில் தலையைத் தூக்கினான். பேரொளி, மனித வடிவில் வானத்தில் மிதந்துகொண்டு குரல் கொடுத்துக் கொண்டிருந்தது. அதனைப் பார்க்க அச்சப்பட்டு தலையை வேறு திசையில் திருப்பினான். அங்கும் அதே உருவம் காட்சியளித்தது. வேறு பக்கம் திரும்பினான். அங்கும் அதே நிலை. எல்லாத் திசையிலும் அந்த உருவம் காட்சியளித்தது. வழக்கம் போல் வீட்டிற்கு விடுவிடுத்துத் திரும்பிப் போர்த்திக்கொண்டான்.

 

தன்னை ஊரார்கள் துரத்துவதற்கு முன் தானே மரித்துக் கொள்ள எண்ணி தற்கொலை முடிவுடன் பல முறை அந்த மலைக்குச் சென்றான். எல்லா முறையும் அந்த உருவம் தோன்றி தடுத்தது. ஏதும் புரியாமல் நடுக்கம் அதிகமாகி தன் போர்வைக்குள் அடைபட்டான் அவன்.

 

அந்தப் பேரொளி தோன்றும் போதெல்லாம் நடுக்கம் ஏற்பட்டு அச்சம் தலைக்கேறினாலும் அதன் வருகை ஒரு இனம் புரியா இனிமையைக் கொடுத்தது. வலித்தாலூம் அந்த வலியை மனம் வேண்டியது. வரும் போது வலியைக் கொடுத்தாலும், வராத போது அந்த வலியே ஒரு வித சுகத்தைத் தந்தது. ஒளிக்கும் அவனுக்குமான உறவு காதலைப் போல் ஆகியது. அது வராதா எனும் அளவிற்கு ஏங்கிப்போனான். அதுவும் ஏங்க வைத்தது. பல நாள் வராமல் அவன் மனதுக்குப் போக்கு காட்டியது.

 

ஒரு செயல் செய்யும் போது வலி எடுத்தாலும், செய்யாத போது அந்த வலிக்காக உங்கள் மனம் ஏங்குகிறதா? அப்படி என்றால் எழுதிவைத்துக்கொள்ளுங்கள். அதுவே உங்கள் வாழ்க்கைக்கென்றே ஒதுக்கப்பட்டிருக்கும் செயல் என.

 

இப்படி, பல மாதங்கள் கடந்தன. ஒளி தோன்றிய பொழுது தனக்கு ஏதோ பித்துப் பிடித்துவிட்டதாய் எண்ணிய அவன். உண்மையில் அது வராமல் எந்த வலியும் தராமல் இருந்ததை எண்ணி மகிழ்ந்திருக்க வேண்டும். ஆனால் அவன் மனது அப்படி செய்யவில்லை. மறுபடியும் மறுபடியும் அதனைப் பற்றியே எண்ணிக்கொண்டிருந்தது. அந்த வலியை வலிய வரவழைக்கத் துணிந்து கொண்டிருந்தது. இதுவே பாதி உயிரைக் குடித்தது. போர்வையில் இருந்து வெளிவரவே அவன் விரும்பவில்லை. அந்த நிலையில் தான் அந்தச் செய்தியை ஒளி கொண்டு வந்தது.

 

‘போர்வை போர்த்திக் கொண்டிருப்பவரே

எழு. எச்சரி. இறைவன் உனக்கு யாருக்கும் அளிக்காத ஒளியை அளிக்கப்போகிறான்.

உன்னை எப்பொழுதும் தூய்மையாக வைத்துக் கொள். அசுத்தத்தை வெறுத்து ஒதுக்கு.

கொடுப்பதைக் காட்டிலும் அதிகம் திரும்பி வரும் என்ற ஆசையில் எதையும் செய்யாதே. உன்னைப் படைத்தவனுக்காகவேணும் பொறுமையைக் கடைபிடி’

 

அதற்குப்பிறகு அந்த ஒளி அடிக்கடி இறைவனின் செய்தியை அவனுக்கு கொண்டு வந்தது. அதன் பிறகு, அவனுக்கு அது அச்சத்தையோ மிரட்சியையோ தரவில்லை. காட்சியாகவோ, ஒளி வடிவிலோ, மனித வடிவிலோ, இல்லை அதிர்வுகளாய் அவனுள் இறங்கியோ அல்லது அவன் கண்களுக்கு புலப்படாமல் அவன் மனதுக்குள் இறக்கியோ தான் கொண்டுவந்த செய்தியை அவனிடம் சேர்த்தது.

 

’போர்வை போர்த்திக் கொண்டிருப்பவரே!

எழு. இரவில் சிறிது நேரம் பிராத்திப்பதற்காக எழுந்து நில்.

நேரத்தைக் கொஞ்சம் கூட்டியோ குறைத்தோ கொள்.

மேலும் அந்நேரத்தில், உன் மீது இறங்கிய இவ்வசனங்களை ஓது.

மிக விரைவில் உன் மீது கடினமான வாக்கை நாம் இறக்கப்போவது உறுதி.

நிச்சயமாக இரவென்பது அகத்தையும் புறத்தையும் ஒருங்கிணைப்பதற்கும், வெளிப்படையான சொற்களுக்கும் ஏற்ற நேரம்.

உண்மையில் இனி பகலில் உனக்குப் பல வேலைகள் இருக்கப் போகின்றன.

இரவிலும் பகலிலும் உனைப் படைத்தவனை நினைவில் கொள். முழுமையான நினைவில்.

கிழக்கிற்கும் மேற்கிற்கும் இறைவன். அவன் ஒருவன். அவனைத் தவிர வேறு கடவுள் இல்லை. அதனால் உன் விசயங்களின் பொருப்பாளனாய் அவனையே எடுத்துக் கொள்.

அவர்கள் காயப்படுத்தினால் பொறுத்துக்கொள். திரும்பி காயத்தை அல்லாமல் கண்ணியத்தை அவர்களுக்கு பதிலாய் கொடுத்து விலகு.

அவர்களை இறைவன் பொறுப்பில் விட்டுவிடு. அவர்களும் கொஞ்ச காலம் ஆடித்திரியட்டும்.

அவர்களுக்காவே நரகமும் பிணைகளும் காத்திருக்கின்றன.’

 

அவர்கள் கிசுகிசுத்துக் கொண்டிருந்தார்கள். அந்த வீட்டின் நடு இரவுக்குமேல் ஒரு கூட்டம் தினசரி கூடியது. அதில் பெரும்பான்மை இளைஞர்கள்.  சமூகத்தின் அவல நிலை கண்டு கொதித்து மாற்றம் தேடிய இளைஞர்கள். அவன் மீது இறங்கிய செய்யுள்கள் அங்கு வைத்து வாசிக்கப்பட்டது. அவனுக்கு செய்தி பொதிந்த செய்யுள்களை அந்த ஒளி இறைவனிடமிருந்து கொணர்ந்தது. அவர்களுக்கு அவன் மீது இறங்கிய வசனம் புதுவித உத்வேகம் அளித்தது. மதி மயக்கியது. இன்னும் பரிசோதனையே செய்யாத நிலையிலேயே உண்மை என உணர்த்தியது. யானைப் பலமளித்தது. மனத் திடம் கொடுத்தது. கவலைகளுக்கு காது கொடுத்தது. நேர்மையான அறிவுரைகள் வழங்கியது. ஒளியை நோக்கிச் செல்ல வழி காட்டியது.

 

இவை அனைத்தும் இரகசியமாக நடந்து கொண்டிருந்தன. அனைத்தும் கிசுகிசுக்கப்பட்டன. இங்கு ஏதோ ஒரு புரட்சி புகைந்து கொண்டிருந்தது தெரியாமல் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தனர் மக்கள்.

 

’யா அய்யுஹஸ் முஸ்ஸம்மில்’ என ஆரம்பித்த மேற்கூறிய வசனத்தை அவர்கள் கேட்டுக்கொண்டிருந்தார்கள். மிகவும் அழகிய முறையில் அந்த வசனம் பாடல் போல் செய்யுள் வடிவில் அமைக்கப்பட்டிருந்தது. கிசுகிசுக்க ஏற்ற நடையில் இருந்தது.

 

இறைவசனம் சொல்லியதை அவர்கள் செயல் படுத்தினர். இரவில் கூடிப் பிராத்தித்தனர். இறைவனை தியானித்தார்கள். பொய்யும் புறமும் கள்ளும் களவும் தவிர்த்தார்கள். மனிதர் அனைவரும் சமம் என்றனர். அன்பையும் அமைதியையும் பரப்பினர். பொறுமையைக் கடைபிடித்தனர்.  இயலாதவர்களுக்கு உதவினர். மாதரை மதித்தனர். மூடப்பழக்கங்களை எதிர்த்தனர்.

 

மறைமுகமாக, வெளியில் தெரியாமல் பின்பற்றி வரப்பட்ட அந்த இரசியக் கூட்டத்தின் அதிர்வுகள் கூட்டத்தினரின் செயல்கள் மூலம் ஊருக்குள் உணரப்பட்டது. அனாதையாகிய அவன் என்ன செய்து விடுவான் என்று ஊரார்கள் முதலில் அலட்சியத்தில் விட்டனர். நாளாக நாளாக அதிர்வு அருகில் உணரப்பட்டது. தங்கள் வீட்டு இளையோர்களும் கேள்வி எழுப்பினர். தங்கள் மூதாதையர்கள் வழிவழியாக பின்பற்றி வந்த வழக்கங்களில் குறைகண்டனர். தளைக்கக் கூட வழியில்லாத வயதில் தத்துவம் பேசினர். பெண்களுக்காக உரிமை கோரினர். விபச்சாரத்தையும், மதுப்பழக்கத்தையும் விட்டொழிக்கச் சொல்லினர்.

 

‘இவர்கள் யார் நம்மைச் சொல்ல? நாம் இவர்களைப் பெற்றோமா? இல்லை அவர்கள் நம்மைப் பெற்றனரா? நிகழ்வு கை மீறிக்கொண்டிருக்கிறது. நம் பிள்ளைகளே நம்மை கேள்வி கேட்கிறார்கள். திடீரென ஞானிகளைப் போல் பேசுகிறார்கள். இதெற்கெல்லாம் அவன் தான் காரணம். ஏதோ இறைவனிடமிருந்து அவனுக்கு செய்தி வருகின்றதாம். அது தான் இப்படி எல்லாம் கூறுகிறதாம். ஆனால் எதையும் யாரும் வெளிப்படையாக சொல்லவில்லை. மறைமுகமான திட்டங்கள் செயல்களால் வெளிப்படுகின்றன. வெளிப்படையாக சொல்லட்டும் தொலைந்தார்கள். இப்படியே சென்றால் நம்மூர் தழைக்காது. முளையிலேயே இதனைக் கிள்ளி எறிய வேண்டும். வணிகச் செல்வம் மிக்க நம் ஊரின் பெருமை சீரழிந்துவிடும். ஒரு முடிவிற்கு வந்து தான் ஆக வேண்டும். ஆண்டாண்டு காலமாக இங்கே வாழும் குலங்கள் சிதறுவதற்கு முன் அவனை எச்சரிக்க வேண்டும். அவனை மேற்கொண்டு எதுவும் செய்ய விடாமல் முடக்க வேண்டும். வெளிப்படையாக எப்படியும் அவன் அறிவித்துத் தான் ஆவான். அப்படி மட்டும் செய்யட்டும் தொலைந்தான்.’

 

 

அன்று அனைத்து நெருங்கிய சொந்தங்களும் அவனது வீட்டில் கூடியிருந்தனர். அவன் அவர்களை விருந்துக்காக அழைத்திருந்தான். உண்மையில் நோக்கம் வேறு. அன்றைக்கு முந்தைய தினத்தில் தான் அவனுக்கு செய்தி வந்திருந்தது. ‘உன் நெருங்கிய சொந்தங்களில் இருந்து எச்சரிக்கையைத் துவங்கு’ என. அவன் இறைச் செய்தியை தன் நெருங்கிய உறவினர்களுக்கு தெரிவிக்கவே இந்த விருந்து ஏற்பாட்டைச் செய்திருந்தான்.

 

விருந்து முடிந்தபின் செய்தியை எடுத்து வைத்தான். தன்னிடம் இறைவனிடமிருந்து ஒரு ஒளி வருவதாகவும், அந்த ஒளி இறைவனின் செய்தியைத் தாங்கி வருவதாகவும், அந்தச் செய்தி இந்த உலகத்தை நல்வழிபடுத்தும் விதத்தில் இருப்பதாகவும் கூறினான்.

 

சிலர் ஆமோதிக்க, பலர் ஆட்சேபம் தெரிவித்தனர். இது நிச்சயம் அவனை இன்னலில் கொண்டு தான் விடப்போகிறதென உறுதிபடத் தெரிவித்தனர். ஆறுதல் தரும் வகையில் அவனது சித்தப்பா, அந்த ஊரின் தலைவர் மட்டும் ஒரு உறுதியளித்தார். அவன் உயிருக்கு எந்தத் தீங்கும் வராத வகையில் தான் காப்பதாக உறுதியளித்தார். அனைவரும் கைகழுவினர்.

 

அவனுக்குள் ஒரு நம்பிக்கை பிறந்தது. தன் பாதுகாப்புக்கு உறுதியளித்ததைப் பற்றியல்ல. தான் சொல்லக் கூடிய இறைவனின் வாக்கை சிலராவது கேட்கிறார்கள் என்ற நம்பிக்கை பிறந்தது. அப்படி இறைவாக்கை கேட்பவர்கள் தங்கள் உயிரைத் துச்சமென மதிக்கும் துணிச்சலைச் பெற்றிருப்பது தெளிவாகத் தெரிந்தது. இந்த இறைவாக்கை கேட்பாவர்களுக்கு இறைவன் ஒரு பெயரளித்தான். இறைவனின் சொல்லுக்கு அடிபணிந்தவர்கள் என.

 

அந்த குன்றின் உச்சியில் நின்று கொண்டிருந்தான். மக்களை அவர்கள் குலம் கூறி கூவிக்கூவி அழைத்துக் கொண்டிருந்தான். இதுவும் அந்த ஊரின் வழக்கம். யாராவது ஏதாவது செய்தியை அறிவிக்க விரும்பினால் அந்த குன்றின் மீது ஏறி அதனை அறிவிப்பர். அப்படி அறிவிக்கும் போது குலத்திற்கு ஒருவரையாவது அழைப்பர். தங்களால் வர இயலாதவர்கள் கூட குலத்திற்கு ஒருவனை அனுப்பி வைப்பர். அன்றும் அது போல் யாரோ நின்றிருந்தனர். அனைவரும் குன்றிற்கு கீழ் கூடினர். யாரெனப் பார்த்ததில் அவன். அவன். அவன் நின்றிருந்தான். அனைவருக்கும் எதிர்பார்ப்பு ஏறியது.

 

‘நான், நம்மை இந்தக் குன்றுக்குப் பின் எதிரிகள் சூழ்துள்ளனர் எனக் கூறி உங்களை எச்சரித்தால் நம்புவீர்களா?’ குன்றின் உச்சியில் இருந்து கத்தினான். அவனது முதல் கேள்வியில் ஏதோ சூசகம் தென்பட்டது. என்ன சொல்வதென யோசித்து பின் மக்கள் மத்தியிலிருந்து குரல் ஒலித்தது.

 

‘நிச்சயம். நம்புவோம். நீங்கள் இதற்கு முன் எந்தப் பொய்யும் கூறியதில்லையே’

 

‘அப்படியானால் இதையும் நம்புங்கள். நான் எச்சரிக்கிறேன். உங்களை நெருப்பு சூழ்ந்துள்ளது. உங்களை, உங்களை, உங்களை, என்னை, என் மகளை, என் குடும்பத்தை, உங்கள் குடும்பத்தை, நம் ஊரை, நம் தேசத்தை, இந்த உலகத்தை, தவறான வழியில் செல்லும் அனைத்து மக்களை. அந்த நெருப்பு. நரகத்தின் கொடிய நெருப்பு சூழ்ந்துள்ளது. என்னிடம் இறைவன் அவன் பாரமான வாக்கை இறக்கி வைத்துள்ளான். நீங்கள் அவனுக்கு அடிபணியுங்கள். அவனை திடமாக நம்புங்கள்.’ உரையை முடித்தான்.

 

அந்த ஊர் எங்கும் இதே சலசலப்பு. அவன் பேசிய பேச்சில் ஊரார்கள் குழம்பி இருந்தார்கள். என்ன செய்வதென முடிவுகட்டக் காத்திருந்தார்கள். அதற்குள் அடுத்த இறைச் செய்தி வந்தது.

 

’உனக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் செய்தியை வெளிப்படையாக அறிவி. உனக்கு கொடுக்கப்பட்ட கட்டளைகளை எடுத்துக் கூறு. இறைவனுக்கு கல்லையும் மண்ணையும் இணைவைப்பவர்களை விட்டு விலகு’

 

அவன் அறிவித்தான். வெளிப்படையாக அறிவித்தான்.

 

’தன்னைப் பாதுகாக்க முடியாத இக்கற்களா உங்களைப் பாதுகாக்கப் போகிறது? பேச இயலா இந்த விக்ரகங்களா உங்களுக்காகப் பரிந்து பேசப் போகிறது? உங்களைப் படைத்த இறைவனை நேரடியாக நெருங்காமல் ஏன் நடுவில் கல்லையும் அதைக் கவனிக்க ஒரு ஆளையும் வைத்து இறைவனுடனான நெருக்கத்தை குறைத்துக் கொள்கிறீர்கள்? இது மடமை அல்லவா? அவர்கள் உங்களை ஏமாற்றுகிறார்கள் இல்லையா? ஏன் இதை உணர மாட்டேன் என்கிறீர்கள்? நீங்கள் பிறந்த நோக்கத்தை மறந்து தவறிழைக்கிறீர்கள். சடங்குகளின் போலித்தனம் தெரியாமல் அதனை அலங்கரிக்கிறீர்கள். சிலைகளை தெய்வமாக்கி அவைகளின் பெயரைச் சொல்லி மனிதனை பிறப்பால் உயர்த்தவும் தாழ்த்தவும் செய்கிறீர்கள். குலத்திற்காக போர் வரை செல்கிறீர்கள். சுதந்திரமாகப் பிறந்த மனிதனை அடிமைப்படுத்துகிறீர்கள். உங்களுக்குப் புரியவில்லையா? இல்லை புரிந்தும் புரியாயாதபடி அலட்சியம் செய்கிறீர்களா? உங்கள் மனது உங்களைக் கேட்காதா? நாம் அனைவரும் மனிதர்கள் என. ஒரே நிலையில் இருப்பவர்கள் என. பெண் குழந்தைகளை உயிருடன் புதைக்கிறீர்கள். அவை வளர்ந்தால் செலவுகள் அதிகம் வரும் என அஞ்சுகிறீர்கள். யார் சொன்னது? உங்களுக்கே உணவளிக்கும் அந்த இறைவன் உங்கள் குழந்தைகளுக்கு அளிக்க மாட்டானா? பிஞ்சுக் குழந்தைகளை புதைக்கும் போது உங்கள் மனதையும் சேர்த்து புதைத்துவிடுவீர்களா? அடுத்த வீட்டுக்காரன் பசித்திருக்க நீங்கள் மட்டும் புசிக்கிறீர்களே சரியா? ஏழைகள் எங்கு செல்வார்கள்? அவர்களுக்கு நீங்கள் உதவ முன்வர வேண்டாமா?’

 

அவனது பிரச்சாரம் தெருவுக்கு வந்தது. பலரும் ஈர்க்கப்பட்டனர். பலரும் எரிச்சலூட்டப்பட்டனர்.

 

‘என்ன நேற்று வந்தவன் நம்மை கேள்வி கேட்கிறானா? பல நூற்றாண்டுகளாக வணங்கிவரும் நம் தெய்வங்களை அவன் கற்கள் என்கிறானா? என்ன நெஞ்சழுத்தம் இருக்கும்? நாமும் அடிமைகளும் ஒன்றெனவா சொல்கிறான். அடிமைகள் அடிமைகளாக இருக்க வேண்டும் என எழுதிப் பிறக்கிறார்கள். யார் இவன் அதை மாற்ற? பெண்களுக்கு எல்லாம் குரல் கொடுக்க இவன் யார்? இப்படி ஒருவனை எழவிட்டால் பிறகு பலர் கிளம்பி விடுவார்கள். கடவுளுக்கு உருவமில்லையாம். அவன் நிலையானவனாம். அவன் யாரையும் பெறவுமில்லையாம், யாராலும் பெறப்படவும் இல்லையாம். நம் எண்ணங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்ட ஒருவனாம். என்னடா இது? இப்படி ஒரு கடவுள். என்ன இருந்தாலும் சரி. நம் மூதாதையரின் கடவுளை இவன் நிந்திக்கிறான். இவனை ஏதாவது செய்ய வேண்டும். பேசாமல் கொலை செய்து விடுவோமா? ம்ஹும் முடியாது அவனது சித்தப்பா தான் ஊர் தலைவர். அவர் வேறு இவனுக்கு பாதுகாப்பு தருவதாக வாக்களித்துவிட்டார். கொல்ல முடியாது. சரி ஏன் இப்படி சொல்கிறான். அவன் ஒன்றும் பைத்தியக்காரன் கிடையாது. இத்தனை நாளாய் உண்மை மட்டும் தான் பேசிவந்தான். தீடீரென்று நம்மிடம் வந்து எனக்கு இறைவன் செய்தி அளிக்கிறான் என்கிறான்.

 

இதிலிருந்து இரண்டு மட்டுமே சாத்தியம். ஒன்று அவனுக்கு உண்மையிலேயே இறைவன் செய்தி அனுப்பி வைக்க வேண்டும் இல்லை என்றால் வேறேதோ பலனுக்காக அவன் இப்படிச் செய்ய வேண்டும். பலன் என்றால்? மண், பெண், பொருள்? பொருள் அவனிடம் நிறையவே இருக்கிறது. செல்வச் செழிப்புள்ள சீமாட்டியல்லவா அவன் மனைவி. பெண்? தெரியவில்லை. அப்படிப்பட்ட ஆள் இல்லை அவன். சரி மண்ணாகத் தான் இருக்கும். இந்த மண்ணை ஆண்டு மன்னனாக அவன் விரும்ப வேண்டும். பாருங்கள் நம் வீட்டு இளைஞர்கள் அவன் கூறுவதை அப்படியே ஏற்று நம்மையே கேள்வி கேட்கிறார்கள். பேசாமல் அவனுக்கு மண்ணை விட்டுக் கொடுத்தால் என்ன? நம்மூரை நம் நாட்டை அவன் ஆண்டு கொள்ளட்டுமே. மிகவும் உண்மையானவன் நேர்மையானவன். அவன் ஆள்வதில் நமக்கென்ன கவலை. பேசாமல் வாருங்கள் அவன் சித்தப்பாவிடம் சொல்லி பேச வைப்போம். நிச்சயம் இந்த அஸ்திரம் வேலை செய்யும்’ ஊர் பெரியவர்கள் கூடி ஒரு முடிவுடன் அவனிடம் சென்றனர். சித்தப்பா முன்னிலையில் கேட்டனர்.

 

‘நீங்கள் ஒரு கையில் சந்திரனையும் மறு கையில் சூரியனையும் கொடுப்பதாக எனக்கு வாக்களித்தாலும் அது என் இறைவனின் வாக்குக்கு ஈடாகாது. என் இறைவன் எனக்குப் போதுமானவன். வெற்றியோ தோல்வியோ அவன் வாக்கை நான் மரிக்கும் வரை நம்பியே ஆவேன். தாங்கள் செல்லலாம்’ முடித்தான் அவன்.

 

 

அந்த ஊரில் திருவிழா நெருங்கிக் கொண்டிருந்தது. அந்த சதுரங்கக் கோவிலுக்கு இன்னும் சில தினங்களில் பல்வேறு ஊர்களில் இருந்தும் பக்தர்கள் வரவிருந்தனர். இது ஆண்டு தோறும் நடக்கும் விழா. இந்தத் திருவிழா மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும். லட்சக்கணக்கான பேர் கூடும் திருவிழா. அந்த ஊரே களைகட்டி வியாபாரம் தழைக்கும் திருவிழா. அன்றைய பொழுது ஊர் பெரியவர்கள் வரப்போகும் திருவிழா நிமிர்த்தமாகப் பேச கோவிலுக்கு அருகே கூடி இருந்தனர். புதுத் தலைவலி ஒன்றுடன் கூடியிருந்தனர். ’அவன்’ என்னும் ஒரே தலைவலி.

 

‘பல்வேறு ஊர்களிலும் நாடுகளிலுமிருந்தும் பக்தர்கள் வரவிருக்கின்றனர். இந்த நிலையில் நம் ஊரில் புதுத் தலைவலி தலைதூக்கியுள்ளது. அவன். அவனே தான்.’

 

‘நிச்சயம் திருவிழாவிற்கு வந்தவர்களிடம் தன் செய்தியைத் தெரிவிப்பான். இவற்றை வணங்காதீர்கள். கற்கள். என்பான். இவை அந்த இறைவனை அடைவதற்கு இடையூறாய் இருக்கின்றன. இவற்றை விட்டொதுங்கி அந்த இறைவனை மட்டும் வணங்குங்கள் என்பான்.’

 

‘அவர்கள் அனைவரும் நம்பவில்லை என்றாலும், ஒரு சிலராவது நம்புவார்கள். ஏனென்றால் நம் வீடுகளிலேயே, நம் குழந்தைகள் குடும்பங்களிடையேயே அவனது சொல்லின் தாக்கம் அதிகமாக உள்ளது.’

 

‘ஆம். அவனை நம்பி பலர் தங்கள் மூதாதையரின் தெய்வங்களை விட்டு ஒதுங்கிவிடுவார்கள். பிறகு இங்கே யாரும் வரமாட்டார்கள். இத் திருவிழாவிற்கு வரும் ஆட்களும் கணிசமாக குறைந்து விடுவர். அவர்களை நம்பி இருக்கும் நம் வியாபாரமும் படுத்துவிடும். பிறகு நம்மூர் வறுமையை நோக்கிச் செல்ல வேண்டியது தான்’

 

‘ஆம். முற்றிலும் சரி. நாம் அனைவரும் சேர்ந்து அவன் அவர்களை அணுகுவதற்கு முன், அவனைப் பற்றி அவர்களிடம் சொல்லிவிடுவோம்.’

 

‘என்னவென்று? அவன் இறைவனின் செய்தியை அறிவிக்கும் தூதன் என்றா?’

 

‘இல்லை. வேறேதாவது சொல்வோம். கவிஞன் என்போம். அவன் செய்தியாய் கூறுபவை அத்தனையும் அழகிய செய்யுளாய் அல்லவா இருக்கிறது?’

 

‘கவிஞனா? அவனே முறையாகக் கல்லாதவன். அவனைப் போய் கவிஞன் என்றால் நம்பவா போகிறார்கள்?’

 

‘அப்படி என்றால் பைத்தியக்காரன், தீய பேய் பிடித்தவன் என்று சொல்லிவிடுவோம்’

 

’நீங்களும் உங்கள் யோசனைகளும். எந்தப் பைத்தியக்காரன் தெளிவாய் பேசினான்? தீய சக்தி என்று கடவுள் பற்றி பேசியது? கெட்டதைச் செய்யாதீர்கள் என ஏவியது?’

 

‘அப்படியென்றால் என்ன செய்யலாம்? சக்தி வாய்ந்த சூனியக்காரன் என்று சொல்லிவிடுவோம். நம் பிள்ளைகளையும் குடும்பத்தையும் மந்திரத்தால் நம்மிடமிருந்து பிரிக்க விரும்பும் சூனியக்காரன் அவன் என்று சொல்லிவிடுவோம். எப்படி?’

 

‘அதுவும் சரிதான். இது தான் பொருத்தமாக இருக்கும். அவன், மனைவியை கணவனிடமிருந்தும் கணவனை மனைவியிடமிருந்தும், பெற்றோரை பிள்ளைகளிடமிருந்தும், பிள்ளைகளை பெற்றோர்களிடமிருந்தும், மனிதனை அவன் குலத்திலிருந்தும், குலத்தை மனிதனிடமிருந்தும் பிரிக்கும் சூனியக்காரன். அவன்’

 

 

’அவர்களும் திட்டம் தீட்டட்டும். இறைவனும் திட்டம் தீட்டுவான். ஆனால், இறைவனே திட்டம் தீட்டுபவர்களில் எல்லாம் கைதேர்ந்தவன்.’

 

இறைச் செய்தி அவனுக்கு இறங்கிக் கொண்டே இருந்து தைரியமூட்டியது. அவன் யாருக்கும் கவலைப்படவில்லை. அவனுக்கு அளிக்கப்பட்ட செய்தியை பிறருக்கு எடுத்து வைத்துக் கொண்டே வந்தான். ஒன்று இரண்டானது. இரண்டு நான்கானது. நான்கு எட்டானது. அவன் செய்தி சென்று சேர்வதும் வளர்ந்து கொண்டே சென்றது. இறைவனுக்கு அடிபணிந்தவர்களின் எண்ணிக்கையும் வளர்ந்து கொண்டிருந்தது. அடிமைகளும், பெண்களும், வறியவர்களும், இளைஞர்களும் அதிக அளவில் ஈடுபாடு காட்டினர்.

 

ஊரார்களால் பொறுக்க முடியைல்லை. அவனுக்கு அவன் சித்தப்பா பாதுகாப்பிற்கு பொறுப்பு. மற்றும் சிலருக்கு அவர்கள் குலங்கள் பொறுப்பு. ஏழைகளுக்கும் அடிமைகளுக்கும் யார் பொறுப்பு?

 

அவர்களிலிருந்து கொடுமை தொடங்கியது. அடிமைகளும், தாழ்ந்த குலத்தினரும், ஏழைகளும் இன்னலுக்கு உள்ளாயினர். உச்சி வெயிலில் சுடுபாறைகளைக் கொண்டும், இரு கால்களிலும் இரண்டு கயிற்றைக் கட்டி இரு வேறு திசையில் இழுத்துக் கிழித்தும், இன்னும் சொல்ல முடியாத அளவில் எல்லாம் சித்திரவதை செய்யப்பட்டார்கள். ஆனாலும் அவர்கள் மனம் தளரவில்லை. தாங்கள் தேர்ந்தெடுத்த பாதையை மனமாற ஏற்று மரணத்தை தழுவினார்கள்.

 

அவன் அவர்கள் நிலையை எண்ணி சஞ்சலத்தில் இருந்தான். ஏழை எளியவர்களை, காக்க குலம் இல்லாதவர்களை அந்த ஊரைவிட்டுக் கிளம்பி கடல்கடந்து மற்றொரு தேசத்திற்கு செல்லும் படி இறைச்செய்திவந்தது.

 

அவர்கள் ஊரைவிட்டுக் கிளம்பினர். கடல் கடந்து அத்தேசத்திற்கு சென்றனர். அது கிறிஸ்தவ தேசம். அவர்கள் சென்றால் மட்டும் ஊரார்கள் விட்டுவிடுவார்களா என்ன? அது வியாபார ஊர். வியாபாரத்திற்கு பெயர் போன ஊரல்லவா? அத்தேசத்திற்கும் அந்த ஊருக்கும் வியாபாரத் தொடர்பு இருந்து வந்தது. அத்தேசத்திற்கும் அவ்வூரிலிரிருந்து முக்கியமான ஆட்கள் அவலைகளை விரட்டிச் சென்றனர். தங்கள் ஊரில் உள்ளவர்களை கெடுத்துவிட்டு இங்கே உயிருக்கு பயந்து அவர்கள் தஞ்சம் புகுந்துள்ளதாய் ஊரார்கள் அத்தேசத்து மன்னனிடம் புகார் கூறினர். மன்னனும் அவலைகளை அழைத்தான். விசாரனை துவங்கியது.

 

அவர்கள் ஊரில் என்ன நடக்கிறது என வினாவினான் மன்னன். அவர்கள் தெளிவாகக் கூறினர். எங்களுக்கு இறைவன் தன் செய்தியை ஒரு தூதர் மூலம் அனுப்பி வைக்கிறான். அச்செய்தி எங்களை சில தீய பண்புகளை விட்டு வெறுத்து ஒதுங்கச் சொல்கிறது. இறைவனுக்கு கல்லையும் மண்ணையும் இணைவைக்கவேண்டாம் என்கிறது. ஏழைகளை துரத்த வேண்டாம் என்கிறது. இன்னும் அது சொல்வதை எல்லாம் கூறினார்கள்.

மன்னன் யோசித்துவிட்டு ஊரார்களை நோக்கி சொன்னான்.

 

‘அவர்கள் சரியாகத் தானே சொல்கிறார்கள். உங்கள் ஊரில் இருக்கும் மடமையை ஒழிக்கத் தானே சொல்கிறார்கள்.இது உண்மைதானே ’என்றான்.

 

ஊரார்களுக்கு முகம் வாடிப்போனது. தங்கள் தெய்வங்களை இப்படி சொல்லிவிட்டாரே என்று. இப்படி ஒரு சமயம் வந்தால் சமாளிப்பதற்கெனவே ஒரு கேள்வி வைத்திருந்தனர். அதைக் கேட்டனர். அவர்கள் உங்கள் ஏசு கிறிஸ்துவைப் பற்றி என்ன சொல்கிறார்கள் என விசாரியுங்கள்.

 

மன்னன் கேட்டான். ‘எங்கள் கிறிஸ்துவைப் பற்றி என்ன கூறிகிறது உங்கள் இறைச்செய்தி?’

 

ஆம். ஏசுவைப் பற்றியும் செய்தி வந்திருந்தது. அவர்களுக்கு சிறிது தயக்கம் என்றாலும் துணிவை வரவழைத்துக் கொண்டு கூறினர். உண்மையை மறைக்க அவர்கள் யார்?

 

’தாலிக ஆ’ஈஸ இப்னு மர்யம கவ்ல அல்ஹக்கி அல்லதீ ஃபீஹி யவ்ம்தப் ரூன.’ எனத் தொடங்கினர்.

 

‘அவர் தான் ஏசு, மரியாளின் மகன். எவரைப் பற்றி இவர்கள் சந்தேகம் கொண்டிருக்கிறார்களோ அவர். அவரைப் பற்றிய உண்மை இதோ.

இறைவன் குழந்தை எடுத்துக் கொள்ளும் தேவை அற்றவன். அவன் உயர்ந்தவன். ஒன்றை ஆக்க நினைத்தால் அவன் ‘ஆகுக’ என எண்ணினால் போதும் அது ஆகிவிடும்.

இறைவனுக்கு எந்த மகனும் நிச்சயம் தேவையில்லை. இறைவனுக்கு குழந்தையுண்டு என்பது ஆபாண்டமன்றி வேறில்லை.’ என்றும்

 

‘ஏசு மனிதர்களை நல்வழிப்படுத்த அனுப்பப்பட்ட மனிதரே அன்றி தேவகுமாரன் அல்ல. அவர் தூய பிறப்பைக் கொண்டவர். அவரது தாயும் தூயாள். அவர் இறைவனின் துணைகொண்டே அற்புதங்கள் நிகழ்த்தினார். பிதா, சுதன், பரிசுத்த ஆவி என்ற ஒன்றில் முக்கடவுள் கோட்பாடு என்பது அப்பட்டமான பொய். ஏசுவை அவர்கள் சிலுவையில் அறையவும் இல்லை அவர் இறக்கவும் இல்லை. அவரை இறைவன் ஏற்றுக்கொண்டான். உலகம் அழியும் நாள் நெருங்குகையில் அவர் மீண்டும் வருவார். தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை பூர்த்தி செய்வார். அவர் மீது அமைதி நிலவட்டுமாக’ என எங்களுக்கு இறைவனிடமிருந்து வந்த செய்தி தெரிவிக்கிறது எனறனர்.

 

மன்னன் இருக்கையை விட்டு எழுந்தான். ஊரார்களுக்கு மகிழ்ச்சி. எப்படியும் இன்றுடன் இவர்கள் தொலைந்தார்கள் என்று முடிவு கட்டினர்.

 

‘இவர்கள் சொல்வது உண்மை. சத்தியம். நானறிவேன். என் மக்களைப் போல் என் தேசத்தில் தங்கவும் உலவாவும் இவர்களுக்கு முழு உரிமை உண்டு. நீங்கள் செல்லலாம்’ என ஊரார்களைப் பார்த்து கூறினான் மன்னன்.

 

ஊரார்கள் கருப்பேறிய முகத்துடன் ஊர் திரும்பினர். அவனுக்கு எதிராக அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்கத் தயாராயினர்.

 

’அவனையும் அவன் குலத்தையும், அவனை ஆதரிப்பவர்களையும் ஊரைவிட்டு வெளியே தள்ளிவைப்போம். அவர்களுடன் யாரும் வாணிபத்திலோ, கொடுக்கல் வாங்கலிலோ ஈடுபடக் கூடாது.’ எனத் தொடங்கிய அறிவிப்பு கோவிலில் இருந்தது.

 

அவனைச் சார்ந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர். ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் இருந்த திடலில் அவர்கள் கூடாரமிட்டனர். போதுமான நீரும் உணவும் மருந்துமின்றி மூன்று வருடங்கள் அங்கே கடந்திருந்தன. பலரும் இறந்திருந்தனர். அவனுக்கு இறைச்செய்தி வரத் துவங்கி பத்து வருடங்கள் பூர்த்தியாகி இருந்தன. சொல்ல இயலாத அளவீற்கு துன்பம் இருந்தது. மொத்தமாக அழித்துவிடுதைவிட கொடியது இது போல் ஒதுக்கிவைப்பதென்பது. மனிதன் சமூக விலங்கு. ஒருவரை ஒருவர் சார்ந்த சமூக விலங்கு. தனிமைப்படுத்தப்படும் போது அவன் அனுபவிக்கும் சித்தரவதை மனதை நொறுக்கக் கூடியது. தைரியத்தை வடித்தெடுக்கக் கூடியது. தாழ்மையை வார்க்கக்கூடியது.

 

அவன் மனதளவில் திடமாக இருந்தான். எதையும் இறைவன் தாங்கக்கூடிய சக்தியை தருவான் என நம்பினான். இறைச்செய்தி பொறுமையைக் கடைபிடிப்பதில் பெரிதளவில் ஆர்வம் காட்டச் சொன்னது. அவனுக்கு உறுதுணையாய் அவள் நின்றிருந்தாள். தங்கள் செல்வம் முற்றிலும் கறைந்தாலும் அவர்கள் அதற்காகச் சிறிதும் வருந்தவில்லை. எல்லாம் இறைவனின் திட்டம் எனத் திடமாக இருந்தனர். அவள் அந்த வயதிலும் அவனுக்கு உதவியாக இருந்தாள். அவனை முழுமையாக நம்பினாள். அவனிடமிருந்த வந்த செய்திகளின் உண்மையை அவள் சிறிதும் சந்தேகிக்கவில்லை.

 

அன்றிரவு ஐந்தாறு மூட்டை உணவுப் பொருட்களை திடல் நோக்கி ஊரில் இருந்த சில அனுதாபிகள் கடத்திக் கொண்டு போயினர். அச்சமயம் ஊரார் கண்களில் சிக்கிப் பிடிபட்டனர். அவர்களுக்கு தீர்பளிக்க கோவிலில் கூட்டம் கூட்டப்பட்டது. தீர்ப்பை அறிவிக்கும் அறிவிப்பைக் கொண்டே எப்பொழுதும் தீர்ப்பு வழங்கப்படும். அறிவிப்பை எடுக்க கோவிலுக்குள் சென்றனர். அறிவிப்புக் காகிதம் செதிலறிக்கப்பட்ட நிலையில் தொங்கியது.

 

முடிந்தது. அந்த ஊரின் வழக்கப்படி செதிலறிக்கப்பட்ட அறிவிப்பு என்பது ஒப்பந்த முறிவைக் குறிக்கும். ஏற்கனவே அந்த ஊரில் பல மக்கள் திடலில் ஒதுக்கி வைக்கப்பட்டவர்களுக்கு ஆதரவுக் குரல் கொடுத்து வந்தனர். எப்படியும் ஏதாவது வகையில் அனைவரும் இந்த ஒதுக்கி வைக்கும் படலத்தினால் பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர். அந்தத் திடலில் செல்வந்தர்களாய் இருந்தவர்களும் ஏழைகளுடன் சேர்ந்து தோளோடு தோள் நின்று துன்பங்கள் அனுபவிப்பதைக் கண்டு கண்கலங்கினர். அவர்களுக்கு ஆதரவான அனுதாப அலை அடித்துக் கொண்டிருந்த சமயம். ஊரார்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. மக்களின் அலை. தற்போது செதிலரிக்கப்பட்ட அறிவிப்பு. போதும். ஒப்பந்தம் முறிந்தது. தள்ளிவைப்பு முடிந்தது. அனைவரும் தங்கள் இல்லத்திற்குத் திரும்பினர்.

 

தங்கள் இருப்பிடத்திற்குத் திரும்பிவிட்டனரே தவிர மூன்றுவருடம் அத்திடலில் கழித்த காயங்கள் ஆறவில்லை. அவர்கள் மனம் அத்துன்பங்களை மறந்தாலும், உடல் மறக்கவில்லை. வயதானவர்கள் பலரும் குழந்தைகளும் வற்றிய உடலில் உயிருடன் ஊசலாடினர்.

 

அது அவனுக்கு துயர ஆண்டாக மாறிப்போனது. மனத் திடம் குன்றியது. இனியும் தன்னால் வாழ முடியுமா என சந்தேகம் தொற்றிக்கொண்ட்டது.

 

முதலில் அவன் சித்தப்பா. இத்தனை நாளாய் அவனை ஊரார்களின் கோபத்திலிருந்து காத்துவந்த அவனது சித்தப்பா காலமானார். அவனது சித்தப்பா இறுதிவரை அவனை நம்பினாரே தவிர அவனது இறைச் செய்தியை நம்ப மறுத்தார். என்ன ஆனாலும் தன் மூதாதையரின் மதத்தை அவர் விடத் தயாராய் இல்லை. அவரது இறுதி மூச்சு வெளியேறும் வரை அவன் போராடிப் பார்த்தான். அவர் அவனை நம்பினாரே தவிர செய்தியை நம்பவில்லை. இறைவன் ஒன்று என்பதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. அவனுக்கு அதில் மனவருத்தம்.

 

‘நீ நாடியவர்களுக்கு எல்லாம் உண்மையை சென்று சேர்த்துவிட முடியாது. அது இறைவனது நாட்டம்’ என ஒரு செய்தி இறங்கியது.இறைவனின் வல்லமையையும், தனது இயலாமையையும் எண்ணி வருந்தினான். இரண்டொரு மாதத்தில் இன்னொரு இடி விழுந்தது.

 

’யாரும் என்னை நம்பத் தயங்கிய பொழுது என்னை முழுமையாக நம்பினாள். .யாரும் இறைவனின் வழியை பின்பற்றத் துணியாத பொழுது துணிந்து நின்றாள். அவளாலும் அவளது குணத்தாலும் அவளது செல்வத்தாலும் எனக்கு உதவினாள். என்னைப் பாதுகாத்தாள். அவளிடமிருந்து மட்டுமே எனக்கு செல்வங்கள் உண்டாயின.’

 

அவளும் இறந்து போனாள்.

ஒளி 222 கிராம்: பகுதி 7

ஒளி 222 கிராம்: பகுதி 7

 

’என்ன இவ்வளோ லேட்டா கெளம்பியிருக்கீங்க. சீக்கரம் சீக்கரம்’

 

ஹஸன் வீட்டிற்கு ஒரே பிள்ளை. எப்போதும் எதிலும் வேகம். அதுவும் எங்காவது ஊர் சுற்ற கிளம்ப வேண்டும் என்றால் அனைவருக்கும் முன் கிளம்பிவிடுவான். தன் ஏழு வயது வரை எப்போதும் சிரிப்புடனே வலம் வருவான். அப்போதெல்லாம் அவனுக்கு வாழ்கையைப் பற்றி தெரியாது. வலியைப் பற்றி தெரியாது. ஒளியைப் பற்றி தெரியாது. எதைப்பற்றியும் தெரியாது. வாழ்க்கை என்பது வீடும் பள்ளியும். துன்பம் என்பது ஹோம்வொர்க். இன்பம் என்பது சுற்றுலா. பணம் என்பது மிட்டாய் வாங்க பயன்படும் ஒரு பொருள். அது எப்படி வருகிறது என்றெல்லாம் தெரியவில்லை. அநேகமாக அந்த மளிகைக் கடையில் இருந்து தான் வர வேண்டும். தினசரி வாழ்வதற்கு பணம் தேவையில்லை. மளிகைக் கடை போதும். அரிசியும் பருப்பும் அங்கிருந்து தான் வருகின்றன. ஆனால், பிற தேவைகளுக்குப் பணம் தேவை. அது ஒரு வயது வந்துவிட்டால் தானே வரும். வந்துவிடும். உழைப்பின் கசப்பை அவன் உணர்ந்திருக்கவில்லை. இன்பங்களை சுற்றியே வளர்ப்பு இருந்தது.

 

அன்று அவர்கள் நாகூருக்கு கிளம்பிக் கொண்டிருந்தனர். வருடா வருடம் நான்கைந்து குடும்பங்கள் ஒன்றாக சேர்ந்து நாகூர், ஏர்வாடி, ஆத்தங்கரை, பீமா என ஒரு டஜன் தர்காக்களுக்குச் செல்வது வழக்கம். ஹஸன் இச்சமயங்களில் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருப்பான். இதற்காக வாரக்கணக்கில் காத்துக்கிடப்பான். பயணத்திற்குத் தேவையான பொருட்களைப் பார்த்துப் பார்த்து எடுத்து வைப்பான்.

 

தர்காக்களுக்கு சென்று தங்கள் நலனுக்காக வேண்டி வருவதற்குத் தான் பிறருக்கு இந்தப் பயணம். ஹிந்துக்கள் கோவில் கோவிலாக சென்று வேண்டி வருவதைப் போல, இவர்கள் தர்காகளுக்குச் செல்வர்.

 

முதலில் தர்காக்கள் என்றால் என்ன? தர்கா என்பது முன்னொரு காலத்தில் வாழ்ந்த ஞானி, அரசர்கள் போன்றோர்களின் சமாதி இருக்கும் இடத்திற்குப் பெயர். இங்கு தொழுகைகள் நடக்காது. வேண்டுதல்கள் தான் நிரம்பி இருக்கும். மயிலிறகுக் கட்டை கையில் வைத்துக்கொண்டு எதையோ முணுமுணுத்து அமர்ந்திர்ப்பர். அவர்களிடம் சர்க்கரை, ஊதுபத்தி, பணம் போன்றவற்றை கொடுத்தால் ஏதோ கையை ஏந்திப் பிராத்திப்பர். பின் ஆளுக்கொரு தாயத்தைக் கையில் கட்டிவிட்டு மயிலிறகுமாரால் தலையில் இரண்டு மிதமான அடிகளைக் கொடுத்துவிட்டு அனுப்பி வைப்பர்.

 

ஒவ்வொரு தர்காக்களிலும் கிட்டத்தட்ட இதுதான் நடக்கும். சில இடங்களில் அந்த இடத்திற்கேற்றாற் போல் எல்லாம் மாறுபடும். இங்கு செல்லும் அனைவரும் சமாதிகளின் முன்னால் மண்டியிட்டு வேண்டுவர். சிலைகளுக்கு முன் வேண்டாமல் இறந்தவர்களின் முன் வேண்டுவது.

 

தர்காக்களுக்கும் மசூதிக்கும் வேறுபாடு உண்டு. மசூதிகளில் சமாதி எல்லாம் இருக்காது. மசூதிகளில் சிலைகளும் இருக்காது. எதுவுமே இருக்காது. மயிற்பீலி ஆசாமி எல்லாம் இருக்க மாட்டர்கள். நான்கு சுவர்களை கொண்ட ஒரு அறை. அங்கு தொழுவார்கள். மாலை நேரங்களில் அரபி வாசிக்கச் சொல்லிக் கொடுப்பர்.

 

வாழ்கையில் ஒளி வேண்டியே அனைவரும் தர்காக்களுக்குச் செல்வர். ஹஸன் செல்வது வேறு காரணம். புதிய வானம், புதிய பூமி, புதிய மொழி, புதிய உணவு, புதுப்புது மனிதர்கள் என ஒரு புதிய உலகைக் காண அவன் ஆவல் கொண்டான். புதிய உறவுகளை உருவாக்கிக் கொள்வதில் அவனுக்கு அலாதிப் பிரியம். அப்படி ஏதோ ஒரு தர்காவின் கடற்கரையில் கிரிக்கட் விளையாடும் போது உருவான பந்தங்கள் சில இன்றுவரை அவனுடன் தொடர்கின்றன. அதுமட்டுமல்ல மதத்தை புரிந்து கொள்ளும் வயதிலும் அவன் இல்லை என்பதே உண்மை.

 

இஸ்லாம் என்றால் என்ன?

 

ஜோஆனைச் சந்திப்பதற்கு முன் இந்தக் கேள்வி அவனுள் என்றும் எழுந்ததில்லை. பெரிதாக ஒன்றும் தெரியவில்லை. ஒரு வெள்ளைக்காரப் பெண், அதுவும் மெத்தப் படித்த பெண் தலையில் ஹிஜாபைக் கவிழ்த்துக் கொண்டு வந்து முன்னால் நின்று ஸலாம் சொன்னால் எப்படி இருக்கும்?

 

சில அலைகளைக் கிளப்பி விட்டிருந்தது. வாழ்கையின் ஒரு பகுதியைத் துளியும் நினைவின்றி நினைவின் பதிவுகளை மறப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால், முதலில் அவன் விருப்பம் தன் எட்டு முதல் பதினாறு வயது வரை உள்ள காலகட்டத்தின் நினைவுகளாகத் தான் இருக்கும். சிரிப்பையும் சந்தோசத்தையும் மூச்சைப் பிடித்து சாகடித்த காலம் அது. ஆனாலும் அவனுக்குள் மதிப்புகளையும் கொள்கைகளையும் ஆழமாக வேரூன்றச் செய்த காலமும் அதுதான். ஆனால் இதன் சுகத்தைவிட அதன் துன்பம் மிகைத்து நிற்பது தான் அவனை இப்படி யோசிக்கச் செய்கிறது. மறக்கச் சொல்கிறது.

 

அனால் ஒன்று இத்தனை வருடத்தில் அவன் இஸ்லாம் பற்றி எதுவும் யோசித்ததில்லை. அல்லது யோசிக்க முற்பட்டதில்லை. ஏன் இப்போழுது கூட அது பற்றி எல்லாம் அவன் பெரிதாக யோசிக்க விரும்பவில்லை. ஆனால் இந்த ஜோஆன் தான் இப்படி குழப்பிவிட்டுப் போயிருக்கிறார். அதெப்படி சாத்தியம். தத்துவங்களையும் அவற்றின் அவசியத்தையும் உணர்ந்து அவற்றுடன் கலந்து கண்டடைந்து நிறுவிய உண்மைகளின் முன் இந்த இஸ்லாம் நிற்கிறதா? அதற்கு அவ்வளவு தகுதி உண்டா?

 

சரி, இஸ்லாம் என்றால் என்ன? இதுவரை அவனுக்குத் தெரிந்ததெல்லாம் இதுதான்.

 

ஹிந்து மதம், கிருஸ்தவம் போல அது ஒரு மதம். பல வருடங்களுக்கு முன் அரேபியாவில் வாழ்ந்த முஹம்மத் எனும் ஞானி தோற்றுவித்தது. அவர் மன்னராகவும் இருந்திருக்கிறார். அவர் எப்படி என்றெல்லாம் தெரியவில்லை. அவருக்கு உருவம் எல்லாம் யாரும் வரைந்து வைக்கவில்லை. அவர் என்ன சொன்னார் என்றால் அல்லாஹ்வைக் கும்பிடச் சொன்னார். அல்லாஹ் என்பது இறைவன். உலகை, நம்மை படைத்தவனாக கருதப்படுபவன். அல்லாஹுக்கு உருவம் கிடையாது. புகையாகவோ ஒளியாகவோ இருக்கவேண்டும். அப்போது தான் உருவம் இருக்க வாய்ப்பில்லை. அல்லாஹ்வை எல்லோரும் அவன் இவன் என்று தான் கூப்பிடுவார்கள். அது எந்த வகையிலும் அவன் மீது மரியாதைக் குறைவை குறிக்கவில்லை. அவன் ஆணும் இல்லை பெண்ணும் இல்லை எதுவும் இல்லை என்று கூறுவர். அரபியில் அல்லாஹ் என்றால் பால், உருவம் எதுவும் இல்லாத இறைவனைக் குறிக்கும் என்பர்.  அரபியில் அதேபோல் அவர், இவர் போன்ற மரியாதை வார்த்தைகள் எல்லாம் கிடையாது. அதனால் தமிழிலும் அவர் இவர் என்று பெயர்க்காமல் அவன் இவன் என்றே அழைக்கின்றனர்.

 

முஸ்லிம்கள் இந்த அல்லாஹ்வை பள்ளிவாசல்கள் என்று அழைக்கப்படும் மஸ்ஜித்களில் தொழுவர். ஐந்து வேளை பாங்கு சொல்லி தொழுவதற்கு அழைப்பர். பெரும்பாலும் வெள்ளைத்தாடி முளைத்த பெரியவர்கள் தான் வேலை வெட்டி இல்லாததால் ஐந்து வேளையும் தொழுகச் செல்வர். மற்றவர்கள் வெள்ளிக்கிழமை மட்டும் அப்பக்கம் ஒதுங்குவர்.

 

இதுபோக தர்காக்கள் என்றும் சில உண்டு. இஸ்லாமை அரேபியாவில் இருந்து இங்கு எடுத்து வந்த மன்னர்கள், ஞானிகளின் அடக்கத் தலங்கள் இவை. அவரவர் விருப்பத்திற்கேற்ப இங்கு சென்று வருவர். எதையாவது வேண்டிக்கொண்டு, வேண்டுதல்களுடன் சென்று மொட்டை அடித்தோ இல்லை வேறுவகையிலோ காணிக்கை செலுத்திவருவர். ஹிந்துக்கள் கோவிலுக்குச் சென்று சாமியை வணங்கி மொட்டையடித்துக் காணிக்கை செலுத்துவதைப் போல் தான் இதுவும். என்ன சாமிக்கு பதில் சமாதி, விபூதிக்கு பதில் சந்தனம். எல்லாம் ஒன்று தான். பெயர் மட்டும் வேறு வேறு. வடி கட்டிய மூட நம்பிக்கை. டெல்லியில் பல வருடம் தங்கியதில் அங்கு இது இன்னும் அதிகமாக இருப்பதை உணர முடிந்தது. முக்குக்கு ஒரு தர்கா என்கிற ரீதியில் வட இந்தியா காணப்படுகிறது. இங்கு ஹிந்துக்களும் வழிபாடு நடத்துகிறார்கள். சமூக நல்லிணக்கம் என்று ஊர் கூறுகிறது. பகுத்தறிவில்லாமல் இது போன்ற மூடப் பழக்கத்தினால் சமூக நல்லிணக்கம் ஏற்படாது என்பது ஏனோ இவர்களுக்கு புரிவதில்லை.

 

ஹிந்துக்கள் வேதங்களின் பின்னால் சென்றால் மட்டுமே உண்மையான ஹிந்து மதத்தை புரிய முடியும். உண்மையில் ஹிந்து மதம் என்பதே ஒரு பொதுப் பெயர் தான். இந்தியாவின் பல கருத்துகளையும் கொள்கைகளையும் ஒன்றாக கோர்க்கப் பயன்படுத்தும் சொல்லாடல் தவிர வேறில்லை. முஸ்லிம்கள் இப்படி சிலை வழிபாட்டைப் போன்ற சமாதி வழிபாட்டையும் கோவில்கள் போன்ற தர்காக்களையும் பின்பற்றுவதற்குப் பதில் தியானங்களையும் தேடல்களையும் பின்பற்றினால் தேவலம். எங்கே ஹிந்துக்களுக்கே தியானம் என்பது என்னவென்று தெரியவில்லை. இதில் முஸ்லிம்கள் எங்கு போய்?

 

இஸ்லாமில் இரண்டு பெருநாள்கள் உண்டு. ரம்ஜானும், பக்ரீதும். முப்பது நாள் சூரியன் உதிக்கும் முன்னிருந்து மறையும் வரை நோன்பு வைத்து கொண்டாடப்படுவது ரம்ஜான். ஆடொன்றை பலி கொடுத்து கொண்டாடுவது பக்ரீத். இந்த பக்ரீத் ஹஜ்ஜை தொடர்ந்து வரும். ஹஜ் என்பது மக்காவுக்கு சென்று வருவது. மக்கா என்பது இந்த தர்காக்களின் தலைமை இடம்.

 

இன்று உலகத்தில் அதிக அளவு தீவிரவாதத்தில் முஸ்லிம்கள் தான் ஈடுபடுகின்றனர். ஜோஆன் சொல்கிறபடி குர்ஆன் என்ன சொல்கிறதென்றெல்லாம் தெரியவில்லை. ஆனால் நிச்சயம் அது சொல்லாமல் இவர்கள் அதனை தூக்கி கையில் வைத்துக் கொண்டு வீடியோ ரிலிஸ் செய்ய மாட்டார்கள்.

 

இன்றுவரை அவன் மனது இஸ்லாம் குறித்து வரையும் சித்திரம் இதுதான். ஜோஆன் இரண்டு புத்தகங்களை கையில் கொடுத்துவிட்டுப் போயிருந்தார். பாவம் அவனுக்கு தெரியாது, அந்தப் புத்தகங்கள் அவனது வாழ்கையை தலைகீழாய் மாற்றப் போகிறதென.

 

 

வீட்டைவிட்டு ஓடிப்போகும் பொழுது அவருக்கு சரியாக இருபத்தியோரு வயது. அந்த வயதில் அவருக்கென்ன கஷ்டமோ?

 

என்னங்க இது இருபத்தியோரு வயதில் என்ன கஷ்டம்னு கேக்கிறீங்க? இன்னைக்கு இருபத்தியோரு வயசு இளவட்டத்த நம்பித் தான் பல வீடே இருக்கு. படிப்பு, ப்ளேஸ்மண்ட் மண்ணாங்கட்டினு அவனவனுக்கு ஆயிரம் கஷ்டம் இருக்கு. இப்பிடி சாதாரணமா சொல்லிபுட்டீங்க.

 

பாஸ். எதுக்கு கோபம்? ம்? இன்னைக்கு இருக்கிற இருபத்தோரு வயசு பையன பத்தி பேசியிருந்தா, அவனுக்கு என்ன கஷ்டம் இல்லனுல கேட்டிருப்பேன். இது வேறங்க 1980ல வாழ்ந்த தலைமுறையில ஒரு இருபத்தியோரு வயது இளைஞன பத்தினது.

 

சொந்தமா கிராமத்தில வீடு. முப்போகம் நல்லா விளையும் நிலம். நாலஞ்சு மாட்டு மந்தைக. பத்து பதினஞ்சு ஆட்டுக் கூட்டம். ஒரு மரத்தில அடையிற அளவுக்கு கோழி குஞ்சுக. இப்படி நிம்மதியா கிராமத்தில வாழ்ந்திட்டிருந்த ஒரு தகப்பனோட இருபத்தியோரு வயசு பையன் அவன். கூழோ கஞ்சியோ வயிறுமுட்டக் குடுச்சிட்டு கலப்பைய எடுத்து நிலத்த இளம முறுக்கோட நாலு இழு இழுத்தோமோ, வீட்டுக்கு வந்து தூங்கினோமானு இல்லாம, டவுனுக்கு போயி சினிமா பாக்கிறது, ஹோட்டல்ல திங்கறது, சீகரட் கொளுத்துரது, அப்படியே ராத்திரிக்கு மப்பும் மந்தாரமுமா வீட்டுக்கு வந்து படுக்கையப் போடுறதுனு சுத்தின பையன் அவன். அவன் என்ன பண்ணுவான். இப்படி கிராமத்துக்குள்ளயே கெடந்தா உருப்பட முடியுமா? நாளைக்கு அவன் தலைமுறையும் ஆடு மாடு பத்திக்கிட்டு திரிய முடியுமா?

 

அதான் பையன் யோசிச்சான். நான் டவுனுக்குப் போயி நாலு எழுத்து படிக்கப்போறேன்னு சொல்லிட்டு ஏற்கனவே நாலு வருசத்த கடத்திட்டான். இப்பக்கூட ஒன்னும் கெட்டுப்போவல. கலப்பைய தூக்கிட்டு கிளம்பினா யாரும் அவன எதுவும் கேக்கப் போறதில்ல. அடப்போங்கப்பா, கலப்பையில கை வைக்கவா இத்தின வருஷமா டவுன் பக்கம் போயி படிச்சோம். ஒரு வாத்தியாராவோ, டாக்டராவோ, வக்கீலாவோ ஆனாத் தானே நல்லா இருக்கும்.

 

அங்க தான நம்ம பையனுக்கு பிரச்சனையே. யாருகிட்டயும் அவனுக்கு கைகட்டி வேல பாக்க வேற பிடிக்காதே. என்ன செய்ய? படிச்சதுனால கலப்பையும் தொடமாட்டேன். காலணானாலும் கைகட்டி ஒருத்தன் கிட்ட வாங்கவும் மாட்டேன். என் சொந்தக் காசா இருக்கனும். அதுக்கு? நீங்க தானே என்ன பெத்திங்க. கிழக்க இருக்கிற தோட்டத்த வித்துட்டு எனக்கு துட்டு குடுங்க. நான் எங்கிட்டாச்சும் கண்காணத திசையில போயி யாவாரம் ஆரம்பிச்சு பொழச்சுக்கிறேன்.

 

கண்காணாத தெசைக்கு போற நாயி, சொல்லிட்டுப் போனா என்ன? சொல்லாம ஓடினா என்ன? அதுக்கெதுக்கு நான் காசு குடுக்கனும்? சொந்தக்கால்ல நிக்க வேண்டியது தானே?

 

இந்தப் பேச்சக் கேட்டுட்டு சும்மாவா நிக்கும் இருபத்தோரு வயசு எள ரத்தம். போடா உன் சொத்துமாச்சு மசுருமாச்சுனு ஒரே போடா போட்டுட்டு வீட்டவிட்டு ஓடிப்போச்சு.

 

ஓடின காலு அப்படியே வடக்குப் பக்கமா ஓடி அரபிக்கடல்ல ஓஞ்சது. நின்னு பாத்தா பாம்பே. ஆத்தாடி எம்மாம்பெரிய ஊரு. காரென்ன? பஸ்ஸென்ன? வண்டியென்ன? சொர்க்கம்டா இது. ஒரு வாழ்க்கைய வாழ்ந்து பாத்திர வேண்டியது தான். முடிவோட அந்த இருபத்தியோரு வயசு அங்கயே டேரா போட்டது. என்னத்தையோ அங்க தமிழ் பேச ஆளிருந்ததால வேமா நீச்சலடிச்சு ஒரு நல்ல பாறையா பாத்து பிடிச்சுக்கிச்சு. அப்படி பிடிச்ச பாறை ஒரு பழம்பாறை. பாம்பேல கள்ளச் சாராயம் காச்சிறதுல பழந்தின்னு கொட்ட போட்ட பாறை.

 

பாறைகிட்ட வேலைக்கு சேர்ந்த நம்ம இருபத்தியொன்னு பல வருஷமா அதோடவே ஒட்டிக் கெடந்துச்சு. பல வருஷமாகியும் இன்னும் இருபத்தியொன்னு தானானு கேக்கப்படாது. நமக்கு இந்த பகுதி முடியிறவரைக்கும் இருபத்தியொன்னு தான். அப்படி சேர்ந்த இருபத்தியொன்னுக்கு வேல, தண்ணிக்கு மண்டவெல்லம், பேட்டரிகட்டை, சுக்கு, மிளகு, திப்பிலினு தேவப்பட்ட சாமானெல்லாம் வாங்கிக் குடுக்கிற வேல தான்.

 

மண்டவெல்லம் சுக்கெல்லாம் போட்டு செய்யக்கூடாத வேலையெல்லாம் செஞ்சு அப்படி இப்படி தெளிஞ்சாப்பில இறக்கினோம்னா ரெடி. பாயாசம் இல்லப்பு. இனிக்க இனிக்க நம்ம கள்ளச்சாராயம். காச்சி வைக்கிறது மட்டும் தான் பாறையோட வேலை. எடுத்திட்டு போயி விக்கிறதுக்கெல்லாம் கூட்டம் கேகேனு நிக்கும். ஒரு ட்ரம் பத்து ரூவானு எடுத்துட்டு போயி குடம் அஞ்சு ரூவானு கடைகளுக்குச் சப்ளை செஞ்சிட்டு புட்டி ஒரு ரூவானு விக்கிறதெல்லாம் அவனவன் பாடு. பாறைக்கு இது தான் வேல. என்ன கெடச்சிடப்போவுது சாராயத்திலனு சலிச்சுக்காதிங்க. இது மழை பேஞ்சா ஓஞ்சு போற சர்பத் யாவாரமில்ல. மனிசங்க சாவுவீட்லயும் குடிப்பானுங்க, சடங்கு வீட்லயும் குடிப்பானுங்க, ஏன் சாமிகும்பிடற பேரிலயும் குடிப்பானுங்க. அதுனால மழையோ புயலோ இடியோ காத்தோ என்னைக்கும் சாராயத்தோட பக்கம் வீசிறது கொறையாது. சும்மா கின்னுனு நிக்கும்.

 

அதான பாத்தேன். இருபத்தியொன்னு ஒரு வாழ்க்கை வாழ்ந்து பாத்துச்சு. கையிக்குனு எதுவும் சேக்கல. நல்லா சுத்தினமா தாம் தூம்னு தீட்டினமானு வாழ்க்க ஓடிச்சு. அப்பதான் அந்த பாறையும் புட்டுக்கிச்சு. மண்ணா போயி தண்ணீல கரஞ்சிச்சு. இருபத்தியொன்னுக்கு என்ன பண்றதுன்னு ஒன்னும் வெளங்கள. ஒலகம் புரியல. இருந்தாலும் தளருமா என்ன?

 

அப்படியே தாதர்ல கடலோரத்தில இருந்த சாய்பாபா கோவில்ல கர சேந்துச்சு. அப்படி ஒருநாள் அந்தக் கோவில் பக்கம் வந்த அமண சாமி ஒன்னு கைய நீட்ட, நெத்தீல விபூதியோட அதோட கெளம்பிச்சு நம்ம இருபத்தி ஒன்னு. ஊர் ஊரா சுத்தல். ரொட்டியோ சப்பாத்தியோ நல்லா அரவவுத்துக்கு மேஞ்சிட்டு கால்போன போக்கில ஒரு வாழ்க்க. டெய்லி ரெண்டு வேள கஞ்சா. அப்படியே தியானத்தில உக்காந்தா காலைல தான் எந்திரிக்கிறது. உண்மையில தியானிச்சதா இல்ல தூங்கினதானு தெரியல. ஆனா ஒன்னு, நம்ம இருபத்தி ஒன்னுக்கு இப்படித் தான் ஞானம் கெடச்சது. அமண சாமி மூலமா ஒரு ஃபகிர்கிட்ட அறிமுகமாகி, ஃபகிரோட ஃபகிரா கொஞ்ச காலம் ஹாஜி மலங், ஹாஜி அலி, அஜ்மிர், கஷ்மிர்னு சுத்திச்சு இருபத்தொன்னு. இப்ப கஞ்சாவெல்லாம் கெடையாது. ஃபகிர்பாய்கிட்ட அதெல்லாம் எடுபடாது. வயிறுமுட்ட பிரியாணி கிடைக்கும். அவ்ளோதான். அந்த மயக்கத்திலயே கிக் ஏத்திக்கிற வேண்டியது தான். இப்படி பல நாள் ஊர் உலகத்த தெரிஞ்சிக்கிட்ட இருபத்தியொன்னுக்கு ஒருநாள் ஒரு ஆசை வந்துச்சு. பழச்செல்லாம் ஞாபகம் வந்துச்சு. ஒருக்கா வீட்டுபக்கம் தான் போயிட்டு வருவோமேனு.

 

இருபத்திஒன்னு என்னிக்கு யார்கிட்ட கேட்டுச்சு. நேரா விறுவிறுனு நடையக் கட்டுச்சு. ஹிந்தி, மராட்டி, கன்னடம், தெலுங்கு, மலையாளம்னு ஒரு மொழிப் பட்டாளத்தோட தமிழ் நாட்டுக்குள்ள எட்டிப்பாத்துச்சு. எட்டிப்பாத்தா ஒரே ஆச்சரியம். ஒரே பிள்ளையா வளந்த இருபத்தி ஒன்னு வீட்டுக்குள்ள பத்து வயசு பிள்ள ஒன்னு இருந்துச்சு. பொம்பளப் பிள்ள. இருபத்தியொன்னு வீட்டவிட்டு ஓடிப்போயி திரும்பி வந்த வயசு அந்த புள்ளைக்கு. தங்கச்சியப் பாத்ததில கடந்து வந்ததெல்லாம் மறந்த நம்ம இருபத்தியொன்னு அங்கயே தங்கிடுச்சு. ஓடுகாலியா மாறி ஊரூரா திரிஞ்ச இருபத்தியொன்னுக்கு ஒருவழியா ஒரு எடத்தில நோகாம ஒக்காந்து ஊர் மேயறதோட அரும புரிஞ்சிச்சு. என்ன புரிஞ்சு என்ன செய்ய? இது ஊருக்கு வந்த மறுமாசமே அவுங்க டாடி மண்டையப் போட, சோழி முடிஞ்சிச்சு. சம்பாரிச்சதெல்லாத்தையும் அவுங்க டாடி ஓடி ஆடி செலவு செஞ்சு எல்லாத்தையும் காலியாக்கிட்டு ‘நான் உனக்கே டாடிடா என் பேடி’ என டேக்கா காட்டி போயிருப்பது இப்ப தான் நம்ம இருபத்தி ஒன்னுக்கு உரச்சது. என்ன செய்யலாம்? ஏது செய்யலாம்? கையில ஒரு பைசா கெடையாது. இருக்கிறது ஒரு வீடு தான். ரைட்டுன்னு எல்லாத்தையும் வித்திட்டு அம்மாளையும் தங்கச்சிக்காரியையும் கூட்டிக்கிட்டு தஞ்சாவூரு வந்துச்சு. அங்கிட்டு பசுபதி கோயிலப்பக்கம் ஒரு குடிசைய வேஞ்சு ஒரு மளிகக் கடையில வேலைக்கு சேந்துச்சு. இந்த நேரத்தில கலியாணம் வேற. எதுக்கு? வேறெதுக்கு துணி தொவைக்கவும், சமச்சுப் போடவும் ஆளில்லாம இருந்ததால தான்.

 

இப்டியே போன இருபத்தி ஒன்னு சொந்தமா ஒரு மளிக கடைய ஆரம்பிச்சது. அது பிச்சிக்கிட்டு ஓட ஆரம்பிச்சது. தன்னோட கடையில வேல பாத்த ஒருத்தனுக்கே தங்கச்சிய கட்டி வச்சது. கடைசியா இருபத்தியொன்னுக்கு நாப்பத்தி சில்ற வயசில ஒரு கொழந்த பொறந்துச்சு. ஹஸன்னு பேர் வச்சாச்சு.

 

இது தான் ஹஸனோட டாடி இருபத்தி ஒன்னோட கத. இருபத்தி ஒன்னு நாப்பத்தி சில்லறையான கத. இந்த பகுதிய படிச்சு உங்களுக்கு எப்படி தல சூத்துதோ அதே மாதி அத சுத்தல்கள்ல விட்ட கத. இன்னொரு முக்கியமான விசயம் நம்ம கதையோட பூர்வ கத.

 

 

 

என்ன நடந்ததென்றே நினைவில்லை. அல்லது நினைவில் கொள்ளுமளவிற்கு  எதுவும் பெரிதாக நடக்கவில்லை.

 

காலையில் எட்டரை மணிக்கு எழுந்தோமா, ஒன்பது மணி வகுப்பிற்கு அரைமணி நேரத்தில் அடித்துப் பிடித்து  எப்படியாவது தூக்கம் கலையாமல் சென்று சேர்ந்தோமா, அங்கு போய் ப்ரொஃபஸரின் தாலாட்டைக் கேட்டுக்கொண்டே தூக்கத்தைத் தொடர்ந்தோமா, கொஞ்சம் டெரர் ப்ரொஃபஸராக இருந்தார் என்றால் வகுப்பைக் கட்டடித்துவிட்டு காண்டீனில் எதையாவது விழுங்கினோமா, அப்படியே மதியம் வரை அரட்டையட்டித்துவிட்டு  உணவு விடுதிக்கு சென்று வயிறு முட்ட உண்டோமா, மீண்டும் கல்லூரிக்கு வந்து உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு என்பதைப் போல் இன்னொரு தூக்கத்தைப் போட்டோமா, நான்கு மணி வாக்கில் மீண்டு எழுந்து அறைக்குச் சென்று பாடம் அல்லாத வேறு சில பொதுப் புத்தகங்களை தொட்டோமா, நள்ளிரவு இரண்டு மணிவரை தொடர்ந்தோமா இடையிடையே தொட்டுக்கொள்ள இணையத்தை துலாவினோமா என தினமும் ஒரே மாதிரி சென்று கொண்டிருந்த வேளை அது.

 

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை உடலில் சூடாக பாய்ந்த அந்த இரத்தம் இங்கு கூலண்ட் ஊற்றி குளிர்விக்கப்பட்டிருந்தது. போராட்டம், புரட்சி, எதிர்ப்பு, அதிருப்தி என்பதெல்லாம் இங்கு உணரக் கூட யாரும் தயாராய் இல்லை. காதல், முத்தம், பித்தம், டேட்டிங், மேட்டிங் என இங்கு இளைஞர்கள் மற்றொரு திசையில் சென்று கொண்டிருந்தனர். இருவர் இருவராக கூட்டு சேரும் இவர்களிடம் ஒற்றுமை கிற்றுமை என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்க முடியாது. பேசினாலும் புரியாது. டெஸ்டோஸ்டீரோன் உச்சத்தில் இருக்கும் காலகட்டம் அது.

 

இங்கு ஹஸன் வந்து சேர்ந்தது பெரிய கதை. பண்ணிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் அவனுக்கே அதிர்ச்சியைக் கொடுத்தது. வழக்கம் போல் தான். பத்தாம் வகுப்பில் நடந்த அதே கதை தான். கை நிறைய மதிப்பெண்களை அள்ளிக்கொண்டு தேர்வு முடிவுகள் வந்திருந்தது. 96% மதிப்பெண்கள். அவனால் நம்பவே முடியவில்லை. என்ன செய்ய. சில நேரங்களில் இப்படித்தான் ஏதாவது நடந்து தொலைத்து வாழ்கைப் பாதையையே மொத்தமாக மாற்றிவிடுகிறது.

 

உண்மையில் இப்படி ஹஸன் தன் மனதுக்குள் தன்னையே குறைவாக மதிப்பிட்டிருந்தான். உண்மையில் அவன் பெற்ற மதிப்பெண்கள் ஒன்றும் தாமாக வந்து விடவில்லை.இவனது உழைப்பும் இல்லாமல் இல்லை. ஒருமுறை ஒளியில் இருந்தவனை ஒளியின் ஒளி தன் வசம் ஈர்த்துவிட்டது. தன்னை அறியாமலே ஒளியை நோக்கி நடக்கத் தொடங்கியிருந்தான். ஒளியும் அவனை நோக்கி நடந்து வரத் துவங்கியிருந்தது.

 

எல்லாம் ஒரு கனவு போல் முடிந்தது. இவ்வளவு நாளாய் தொடர்பில் இருந்த தோழர்களை விட்டு பல மைல் தூரத்தில் இருந்த கோயம்புத்தூரில் அவனுக்கு இஞ்சினியரிங் டிகிரி கிடைத்திருந்தது. வேறு வழியில்லை. சேர்ந்து தான் ஆகவேண்டும். இது வாழ்க்கை சம்பந்தப்பட்டது. கிளம்பிவிட்டான். கை நிறைய கனவுகளை சுமந்து கொண்டு கல்லூரிக்குள்ளே நு­­ழைந்தான்.

 

கனவுகளா? அதுவும் கல்லூரியிலா? தம்பி நீங்க படிக்கிறது இஞ்சினீரிங் காலேஜ். இது தமிழ் நாடு. செத்த  எந்திரிக்கிறீங்களா? கனவுகளை கைவிட்டுவிட்டு காலத்தில் கவனம் செலுத்துவதற்குள் காலம் கடந்துவிட்டது. அது என்று யாருக்காக காத்திருந்தது?

 

ஐந்து வருடமும் அப்படித்தான். ஆமாம் அரியர் எழுதிய ஒருவருடம் தனி. என்ன நடந்ததென்றே தெரியைவில்லை. தீடீரென ஒரு நாள் முடிந்தது. கையில் கனவுகளும் இல்லை. கைகொடுக்க தோள்களும் இல்லை. நடுக்காட்டில் கண்ணைக்கட்டி விட்டாற் போல் இருந்தது. ஒளி அகன்றுவிட்டது. தத்துவங்களின் பின்னும் கொள்கைகளின் பின்னும் போன போது ஒளி தானாய் தொடர்ந்தது. இப்போது வாழ்கையின் பின்னால், ஒளியின் பின்னால் விரட்டிப் போனால் அகன்று நிற்கிறது. என்ன உலகம் இது. ஒளியற்ற நிலை மீண்டும் ஒட்டிக் கொண்டுவிட்டது.

 

 

கேட்டவுடன் கிடைக்காமல் இருப்பதில் மட்டும் மன வருத்தம் இல்லை.  கேட்காமல், கேட்டதற்கு மேல் கிடைப்பதிலும் சில சமயம் மன வருத்தம் வரத்தான் செய்கிறது. வாழ்க்கையில் ஏற்கனவே நிகழ்ந்திருந்தால் புரியும். இல்லை புரிய இன்னும் சில பக்கங்களைத் தாண்ட வேண்டி இருக்கும்.

 

வீட்டைவிட்டு வெளியேறி ஏழு வருடம் ஆயிருந்தது. இரண்டு வருடம் நாமக்கல். ஐந்து வருடம் கோயம்புத்தூர். ஏழு வருடமும் வீட்டின் பக்கம் எட்டிப்பார்க்காமல் இல்லை. தீபாவளி பொங்கல் ரம்ஜான் பக்ரீத் ந்யூஇயர் என அவ்வப்போது வந்து செல்வது வழக்கம் தான். ஆடிக் களித்து செல்வது வழக்கம் தான். அப்படி வந்து போகும் போதெல்லாம் உலகம் அவனைச் சுற்றி இயங்குவதும் வழக்கம் தான். பல நாள் கழித்து வீட்டிற்கு வந்த பிள்ளையை பார்த்துப் பார்த்து கவனிப்பதும் வழக்கம் தான். புன்னைகயால் புண்களை மூடி உபசரிப்பது வழக்கம். வீட்டில் என்ன நடக்கிறதென்பதே கிட்டத்தட்ட தெரியாத நிலை. ஒரே பிள்ளை அவனுக்கு ஏதற்குத் தேவையில்லாத சங்கதிகள், படிப்பில் மட்டும் அவன் கவனம் இருந்தால் போதும் என்ற எண்ணத்தில் பெற்றோர் இப்படி இருப்பதும் வழக்கம் தான்.

 

இப்பொழுது அப்படியில்லை. வழக்கம் மாறவிருக்கிறது. படித்து முடித்து வீட்டிற்கு வந்தாயிற்று. வேலை என்றெல்லாம் ஒன்றும் பெரிதாக கிடைக்கவில்லை. கிடைத்தாலும் போகும் மனநிலையில் தற்போதைக்கு இல்லை. கல்லூரிக் கலவரங்களை மறந்து கொஞ்ச காலம் நிம்மதியாக வீட்டில் இருக்க வேண்டுமெனப் பட்டது. ஏழாண்டுகள் விட்டதைக் கூடிய விரைவில் எட்டிப்பிடிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. ஆனால் நினைப்பதைப் போல் எதுவும் நடப்பத்தில்லை. எதையும் நடப்பதைப் போலவும் நாம் நினைப்பதில்லை. வீடு உண்மையில் நிம்மதியான இடம் தானா? பரிசீலனை செய்து பார்க்கவேண்டிய தருணம் வந்தது. தானகத் தான். ஆமாம், இதனை தேடி வேறு செல்வார்கள்.

 

முதல் மாதம் அருமையாகச் சென்றது. அப்படியே காலார மதகடி பஜாரின் பக்கம் சென்று பாலத்தில் ஏறி அகண்ட காவிரியைக் கிளை கிளையாய் கண்டு உண்டு குளித்து மயங்கிக் களித்து தோழர்களுடன் திரும்பினால் அன்றைய நாள் போனதே தெரியாது. அதற்கு மேலும் போரடித்தால் கும்பகோணமோ தஞ்சாவூரோ சென்று வர வேண்டியது தான். ஊரின் பெயரே பாதிக்கதை சொல்லும். அய்யம்பேட்டை. அய்யம்பேட்டை அறிவுடைநம்பி கலிய பெருமாள் சந்திரன். அதே அய்யம்பேட்டை தான். ஊரின் ஒவ்வொரு துகளும் பெயருக்கு சான்று கூறும். ஹஸனது வீடு, முற்றம் வைத்துக் கொள்ளை வைத்து கட்டப்பட்டது. கொள்ளையில் பலா மரங்களும், தென்னை மரங்களும், வாழை மரங்களும், அணில்களும், பாம்புகளும் அதிகம் இருக்கும். கால் கட்டைவிரலால் கீறினால் தண்ணீர் கொப்பளிக்கும் மண்ணைக் கொண்ட பூமி. மொட்டை மாடிக்குச் சென்று ஒரு கயிற்றுக் கட்டிலைப் போட்டு தூங்கினால் எழுந்திரிக்கவே மனம் வராது. ஒரு கொசுவைக் கூட பார்க்கமுடியாது. வாழ்க்கையை வாழ்வது எப்படி என வாழத் தெரியாதவர்கள் ஒரு நடை சென்று பார்த்து வரலாம் அப்படியொரு இடம். மாதம் மும்மாரி பொழியும் சுரங்கம். சோழர் காலத்தில் காட்டுயானைகளுக்கு ஊட்டிவிடுமளவிற்கு  நெல் விளைந்ததாம். சொல்வார்கள்.

 

நாமக்கல் இதற்கு நேர் எதிர். எத்திசை திரும்பினும் நீக்கமர நிறைந்திருக்கும் வெயிலும், கண்களைக் கூசச் செய்யும் தூசும், ஆங்காங்கே கழட்டி தைக்கப்படும் லாரிகளும், ஊரின் நடுவே மொழுமொழுவென நிற்கும் தக தக பாறையும், அதற்கு உவமைபோல் ஊருக்குள் அலையும் வழுக்கைத் தலைகளும், பேருந்துகள் தீண்டத் தயங்கும் நிலையங்களும், குறிப்பாக தமிழகத்திலேயே அதிசயமாக விற்கப்படும் வாத்துக் கறியும், முதல் முறை உண்பவர்களுக்கு அது கொடுக்கும் வயிற்று வலியும் சொல்லிப் புரியவைக்கும் அளவை விஞ்சியவை.

 

கோயம்புத்தூர் அப்படியில்லை. வலிக்காமல் தடவிக்கொடுக்கும் படியான வெயில், அடித்தாலும் அழுகாமல் செல்லும் அம்மாஞ்சி மக்கள், சொல்லிக்கொள்ளும் படியாக ஒரே ஒரு அவினாசி ரோடு, குடிசையிலும் கோபுரத்திலும் குடி கொண்டிருக்கும் தொழில் தொழில் தொழில், கண்ணுக்கு குளிர்ச்சியாக ஊர் நிரம்பி வழியும் அளவிற்கு கலர் கலர் இளசுகள், எங்கும் எதிலும் அவசரம், சேரிகளை மறைத்து அகண்ட மார்புகளுடன் ஏதேதோ பெயர் தாங்கிய கட்டிடங்கள், ஒரு ஊர் அளவிற்கு கட்டப்பட்ட கொடீசியா கண்காட்சி மைதானம், எட்டிப்பார்த்தால் எக்காளமிடும் கேரளம், முட்டிப்ப்பார்த்தால் மோதி நிற்கும் ஊட்டி, பருகப் பருகத் திகட்டாமல் தித்திக்கும் சிறுவாணி, ஜெர்மன் புகழ்பாடும் எந்திரங்கள், என்ரரரரரர கண்ணு என தமிழை ஜெர்மன் போல் இழுக்கும் நாவுகள்.

 

ஊருக்கொரு வசியம். ஆளுக்கொரு செய்கை. ஊரையும் மக்களையும் கொண்டு பல காவியம் எழுதலாம். யாருக்கும் எப்பொழுதும் வெறுக்காது. சரி அய்யம்பேட்டைக்கு வருவோம்.

 

ஊர் செழிப்பாக இருந்தால், வியாபாரமும் செழிப்பாகத் தானே இருக்கும். ஏதோ ஒரு கிராமத்தில் இருந்து பிழைப்பு தேடி பசுபதிகோவில் வந்த இருபத்தியொன்றுக்கு வாழ இடமளித்தது இந்த அய்யம்பேட்டை தான். இருபத்தியொன்று இதுவரை ஹஸனுக்கு முன்னுதாரனமாகத் தான் இருந்துள்ளார். என் தந்தையைப் போல் தான் ஆவேன் என வெளிப்படையாக பிரகடனப்படுத்தாத குறைதான். தந்தையை போல் எல்லா விசயத்திலும் வரவேண்டுமென்பது அவன் பேரவா.

 

காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஏதேதோ யோகாசனங்களை செய்து கிளம்புவதில் இருந்து இரவில் குளித்து தியானித்துவிட்டு படுக்கைக்குச் செல்லும் வரை அவரது ஒவ்வொரு செயலையும் அடிபிறழாமல் திரும்பச் செய்வான். அவ்வளவு தேர்ந்த மனிதர் அவர். பூஜ்யத்திலிருந்து தனக்கான ராஜ்ஜியத்தை பெருக்கிக் கொண்டவர். தன் தாயையும் தங்கையையும் பார்த்துப் பார்த்து பார்த்துக்கொண்டவர். என்ன தன் மனைவி விசயத்தில் அவர் எப்போதும் அலட்சியமாகத் தான் இருப்பார். அது ஒன்று தான். அதுவும் இந்த ஏழு வருட இடைவெளியில் சரியாகிப் போனது போல் தான் தெரிகிறது. ஒரு மாதமாக இருக்கிறேன் அம்மா இன்னும் புலம்பவில்லை. நிச்சயம் முன்னெப்பொழுதும் பார்க்காத அளவிற்கு மாறியிருக்கவேண்டும். எதிர்பார்ப்புகள் புதிதல்ல. எதிர்பார்க்கா எதிர்ப்பக்க திருப்பங்கள் தான் புதிது.

 

அன்றிரவு நடந்த அந்த நிகழ்விற்குப் பின் மொத்தமாக மாறிப்போனான் ஹஸன். வாழ்க்கையில் யாரைப் போல் வரவேண்டும் என கனவு கண்டிருந்தானோ, அவரைப் போல் நிச்சயம் வரக்கூடாது என முடிவு கட்டிய ஒரே இரவது. தெளிந்த இரவு. ஒளி பொருந்திய இரவு. இரவற்ற இரவு.

ஒளி 222 கிராம்: பகுதி 6

ஒளி 222 கிராம்: பகுதி 6

’திஸ் இஸ் ஜோஆன் ஜோன்ஸ். டிசைனிங்ல இருக்காங்க. ரொம்ப பிரில்லியண்ட் லேடி. ’ பாலா அறிமுகப்படுத்தினான்.

 

ஜோஆன். முப்பத்தைந்து வயது இருக்கும். பார்த்தாலே தெரிந்துவிடும் தூய ஆங்கில இனம் என. எதிரே ஹிஜாப்புடன் நின்றார்.

 

‘அஸ்ஸலாமு அலைக்கும்’ ஜோஆன் ஹஸனை நோக்கிக் கூறினார்.

 

‘வ அலைக்கும் ஸலாம்’ திணறித் திணறி பதில் கூறினான் ஹஸன். இதுவரை தன் வாழ்நாளில் சில தவிர்க்க இயலாத சமயங்களைத் தவிர இந்தத் தொடரை அவன் பயன்படுத்தியதில்லை. இன்று பயன்படுத்தியதற்கு காரணம், குழப்பம். வெள்ளைக்காரப் பெண்ணொருத்தி இஸ்லாமிய தோரனையில் உடையணிந்து சலாம் வேறு சொல்கிறாள். பாலாவை புதிராகப் பார்த்தான்.

 

மூவரும் ஹஸனது அறைக்கு அருகே இருந்த பார்க்கில் அமர்ந்திருந்தனர். ஹஸனுக்கு வேலை துவங்கியிருந்தது. அடுத்த மாதம் முதல் தீவிரமான ப்ராஜக்ட்களில் இறங்கியாக வேண்டும். தி க்ரீனின் ப்ராஜக்ட்கள் எல்லாம் மிகவும் தீவிரமானவை. நாளும் பொழுதும் புதுப்புது சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். அதனால் நிறுவனத்தின் செயல்பாடுகளைத் தெரிந்து கொள்ளவும் உடன் வேலை செய்யத் தகுதியானவர்களை தெரிவு செய்யவும் இந்த மாதத்தை செலவு செய்யமாறு அவனுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

 

‘ஐ அண்டர்ஸ்டாண்ட். ஜோஆனோட  ஹிஜாபும் சலாமும் தானே இந்த குழப்பத்துக்கு காரணம்?’ சிரித்துக் கொண்டே கேட்டான் பாலா.

 

‘ம் அப்டிலாம் இல்ல பாலா’ எனத் துவங்கி சில பொருந்தா வசனங்களை உதிர்த்துவிட்டு அவசர அவசரமாக‘ஆமாம் பாலா’  என மழுப்பிக் கொண்டே முடித்தான்.

 

அதற்குள் ஜோஆன் புன்னகையுடன் சொன்னார் ‘ஐம் முஸ்லிம்’

 

‘முஸ்லிமா எப்படி? யூ சீம் டு பி அ வைட்’

 

‘யா. நான் இஸ்லாம இப்ப தான் ஏத்துக்கிட்டேன். டூ இயர்ஸ் ஆகுது’ கடகடவென நொடிப்பொழுது ஆங்கிலத்தில் முடிந்ததார்.

 

‘வை? இஸ்லாம்?’

 

‘ஹஸன் எதுக்குனு மட்டும் கேக்காதீங்க. விளக்கம் குடுக்க ஆரம்பிச்சாங்கனா ஒரு நாள் பத்தாது.’ விளையாட்டாகக் கூறிவிட்டு கண்ணடித்தான் பாலா.

 

’ஐ வில் ஸே யூ டுமாரோ. இப்பக் கொஞ்சம் வேலை இருக்கு. நான் கெளம்பனும்’ என பாலாவை விளையாட்டாக முறைத்துவிட்டு கிளம்பினார் ஜோஆன்.

 

 

’உனக்கு என்னப் பார்த்தா என்ன தோனுது?’

 

‘என்ன தோனுதுனா? புரியல’

 

‘சரி. நான் எப்படி இருக்கேன்’

 

‘எப்படி இருக்கேன்னா? நல்லா தானே இருக்கீங்க’

 

‘நீ உண்மையிலேயே இப்படி பேசிறீயா இல்ல சும்மா நடிக்கிறீயா?’

 

‘உங்களுக்கு பிடிச்ச மாதிரி எடுத்துக்கோங்க மேம்’

 

‘சரி. நான் எப்டி இருக்கேன். பாக்க அழகா இருக்கேனா? இல்ல அசிங்கமா இருக்கேனா? ஆம் ஐ நாட் ஹாட் அன் செக்ஸி ’

 

‘மேம் இப்ப நமக்கு இது தேவையா? நமக்கு வேலை குமிஞ்சு கெடக்கு. முக்கியாமான டிஸ்கஷன் நடக்கும் போது தானா உங்களுக்கு இப்டீலாம் சந்தேகம் வரும்?’

 

‘ஐம் யுவர் சுபீரிர்யர். ஜஸ்ட் ஆன்ஸர். நான் எப்டி இருக்கேன்?’

 

’நல்லா தான் இருக்கீங்க’

 

‘நாட் திஸ் சிம்பிள். இன்னும் நல்லா டீப்பா ஃபீல் பண்ணி சொல்லு’

 

‘டீப்பா? எப்டி?

 

‘ஓகே ஐ வில் டீச் யூ. மனசில இருந்து எல்லாத்தையும் அழிச்சிடு. நோ தாட்ஸ். அப்டியே என்னப் பாரு. நல்லா என்னை உள்வாங்கிக்கோ. ஐ மீன் நான் இப்ப உனக்கு கெடச்சா எப்டி இருக்கும்னு யோசி.’

 

’இத என்ன யோசிச்சுட்டு இருக்கிறது மேம். கெடச்சானா என்ன சொல்லவறீங்க? வெளிப்படையா சொல்லுங்களேன்’

 

’மூர்க் மூர்க். பொண்ணுங்களப் பாத்தா உனக்கு என்னடா தோனும்?’

 

‘இப்டி திடீர்னு கேட்டா என்ன சொல்ல. பொண்ணுங்களா தோனும்.’

 

‘இடியட். உனக்கு ஆசைனு ஒன்னு இருக்கா இல்லையா? பொண்ணுங்கள பார்த்தா ஆசை வராதா?’

 

‘எதுக்கு ஆசை வரனும்? நீங்க அதிகமா சினிமா பாத்து கெட்டு போயிருக்கீங்க. சினிமால காட்ற மாதிரி பொண்ணு பின்னாடி சுத்திறதெல்லாம் சும்மாங்க’

 

’உனக்குள்ள என்ன மாதிரி உணர்ச்சிலாம் வரும்டா?’

 

‘எல்லா உணர்ச்சியும் வரும் ஆனா அத அப்டியே மெண்டு முழுங்கிடுவேன்’

 

‘இம் அதத்தான் கேக்கிறேன். ஒரு உணர்ச்சி வரும்னு சொல்றியே. அதத்தான் வெளிப்படையா சொல்லச் சொல்றேன்’

 

‘உங்களுக்கு ஒன்னு தெரியுமா. நான் சின்ன வயசில அப்டி தான் வெளிப்படையா மனசில எது இருந்தாலும் சொல்லிடுவேன். ஆனா அதுக்காக நான் வாங்கிக் கட்டிக்கிட்டது தான் அதிகம். அதனால நான் எதையும் வெளிய சொல்றதில்ல. அப்டியே மென்னு முழுங்கிடுவேன். அதுவே பழக்கமாயிடுச்சு’

 

‘அப்ப உனக்கும் உணர்ச்சிகளெல்லாம் வரும்ல. இப்ப சொல்லு என்ன பார்த்தா எப்புடி இருக்கு. வோ யார் ஹை ஜோ குஷ்பு கி தராஹ் வோ ஜிஸ்கெ ஸுபான் உர்தூ கி தராஹ்னு ஏதாவது கவிதை கண்டிப்பா தோணனும்’

 

‘உண்மையிலேயே நான் மனசில நினைச்சத சொல்லிடவா?’

 

‘ம் சொல்லு அதத்தானே கேட்டிட்டிருக்கேன்’

 

‘பயம் தான் தோனுது. உங்கள பார்த்தா எனக்கு அடிமனசில பயம் தான் தோனுது. ஏன் தோனுது கேக்காதீங்க’

 

‘யூ ஆர் டெம்ப்டிங் மீ. ஒழுங்க சொல்லிடு.’

 

‘நானும் சொல்லனும்னு தான் நினைக்கிறேன். ஆனா சொல்லாம விட்டுறதே நல்லதுனு நினைக்கிறேன்.’

 

’இப்ப சொல்றியா இல்லையா. ஆர் எல்ஸ் ஐ வில் ஸ்டாப் டாக்கிங் வித் யூ’

 

’இது ஒன்ன சொல்லிடுங்க மேம். பேசமாட்டேன் கீசமாட்டேன்னு’

 

‘டெல் மீ’

 

’சொல்றேன். நீங்க நான் ஃபர்ஸ்ட் டே ஆஃபிஸ்க்கு வந்தப்ப லேட்டா ஏன் வந்திங்க’

 

‘ம் அதுவா. மெட்ரோல ஒரு சின்ன பிரச்சன’

 

‘அதான் என்ன பிரச்சனை?’

 

‘பெரிசா ஒன்னுமில்லை. ஒருத்தன் என்ன இடிச்சிட்டு ஓடிட்டான். சச் அ சீப் பர்ஸன் ஹீ மஸ்ட் பீ’

 

’அவன உங்களுக்கு தெரியுமா?’

 

‘தெரியாது. ஆனா பாத்தா கண்டிப்பா சொல்லிடுவேன்.’

 

‘அப்டியா. ஸ்யூர் ஹேனா?’

 

‘ஸ்யூர்’

 

‘ஒன்னு தெரியுமா? நீங்க அவன் கூட தான் இவ்ளோ நேரமா பேசிட்டிருக்கீங்க.’

 

’யூ மீன்?’

 

‘நான் தான் அன்னிக்கு உங்கள தள்ளிவிட்டது?’

 

’சான்ஸே இல்ல. ஜூட் மத் கஹோ. எனக்கு அவன் நல்லா மைண்ட்ல இருக்கான். நீயில்ல’

 

‘போங்க மேம். நீங்களும், உங்க மைண்ட்டும். நான் தான் அவன். டோக்கன் இல்லாம மாட்டிட்டேன். அதான் உங்க பின்னாடியே வந்தேன்’ என்று கூறி அந்தக் கதையை எடுத்து விட்டான். ஆடிப்போனாள் ஸ்மிர்தி.

 

‘ஐ காண்ட் பிளிவ். இத ஏன் நீ முன்னாலயே சொல்லல’

 

‘சொல்லி இருந்தா?’

 

‘அன்னிக்கே நல்லா குடுத்திருப்பேன்.’

 

’அதான் சொல்லல’

 

‘யூ லையர்.’  அவனுக்கு ஒன்று கொடுக்க கையை உயர்த்தினாள்.

 

‘அதான் நான் முன்னாடியே சொன்னனே உங்களப் பார்த்தா எனக்கு பயம் வருதுன்னு. இதுக்குத் தான்’

 

’சரி. இனிமே என்னப் பாத்து பயப்பிட வேண்டாம். பயத்துக்கான உணர்ச்சிய எடுத்துட்டு என்னப் பார்த்தா என்ன தோணுது?’

 

’ஏன் இத ஏங்கிட்ட கேக்கிறீங்கனு தெரிஞ்சுக்கலாமா?’

 

’பெரிசா ஒன்னும் இல்ல. இதுவரைக்கும் என்ன நாலஞ்சு பேர் லவ் பண்ணியிருக்காங்க. அவங்களாம் என்ன ஆகா ஓகோனு புகழுவாங்க. அதல்லாம் உண்மையா இல்லையானு உன்ன மாதி ஹானஸ்ட்டானவன்கிட்ட தான் கேக்கனும்னு நினைக்கிறேன்’

 

‘மேம் நீங்க ஏன் இவ்ளோ தெரிஞ்சிக்க முயற்சி பண்றீங்கனு தெரில. நீங்க ரொம்ப அழகா தான் இருக்கீங்க. அத எப்டி டிஸ்க்ரைப் பண்றதுன்லாம் எனக்கு தெரில. அதான் உண்மை’

 

‘ஓ.கே. லெட் மீ டிஸ்க்ரைப் யூ. தென் யூ கேன். உன்னப் பத்தி சொல்லனும்னா. யூ ஆர் அ கில்லர். தெரிஞ்சு பேசிறையா தெரியாம பேசுறியானு தெரியல ஆனா நீ பேசுறது பொண்ணுங்கள அப்படியே இம்ப்ரஸ் பண்ணிடும். அதுவும் எதப் பாத்தாலும் கிறுக்கனாட்டம் மூஞ்சில எந்த ரியாக்‌ஷனுமே இல்லாம திரிவ பாரு. அது தான் உன்னோட ஹைலைட். மத்தபடி உங்கிட்ட சிக்ஸ்பேக் இல்லாம இருக்கலாம் இல்ல பாத்தவொடனே பத்திக்கிற மாதிரியான ஹாட்னஸ் இல்லாம இருக்கலாம். பட் யூ ஆர் ஹேண்ட்ஸம். சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட நீ கேர் எடுத்துக்குவ பாரு அத தான் பொண்ணுங்க நிறைய எதிர்பாப்பாங்க. அப்பறம் குழந்த மாதிரி சில ரியாக்‌ஷன் உன் மூஞ்சில அப்பப்ப தெரியும். யூ வில் ஆக்ட் சோ க்யூட். இப்ப சொல்லு என்னப் பத்தி’

 

’உங்கள இப்படி சொல்லனும்னா. திரும்பவும் சொல்றேன். பாத்தவுடனே பயம் தான் வரும். எப்ப என்ன செய்விங்களோனு பக்பக்னு இருக்கும். ஒரே வார்த்தைல சொல்லனும்னா உங்களுக்கு எங்கப்பா மாதி குணம். அதாவது நான் யாரப்பாத்தும் பயப்பட மாட்டேன். அந்த உணர்ச்சி எப்ப வரும்னா எம்மேல ரொம்ப அன்பா இருக்கேன்னு சொல்லிட்டு அதிகமாக உரிமை எடுத்துக்கிடும் போது.’

 

‘ஐயோ. வேற எதுவுமே உனக்கு தோனலையாடா?’

 

‘இல்லையே’

 

‘சரி வேற பொண்ணுங்கள பாத்து ஏதாவது தோனிருக்கா?’

 

’ஆமா. நிறைய தோனிருக்கு.’

 

‘எந்த மாதிரி?’

 

‘சிலர பாத்தா அழகா தோனிருக்கு. மனசு ஒரு அஞ்சு நிமிஷம் அப்டி இப்டி ஆடீட்டு வந்திருக்கு. என்னைய நிறைய  கஷ்டப்படுத்தின எங்க ப்ரின்ஸிபால் மேம பார்த்த எனக்கு உண்மையிலேயே பயம் வராது பரிதாபம் தான் வரும். இருந்தாலும் அவங்க மூக்க பார்த்தா எனக்கு ரொம்ப பிடிக்கும். இவ்ளோ அழகான மூக்க வச்சுக்கிட்டு ஏன் இவங்க இவ்ளோ கோபப்படுறாங்கனு நினைப்பேன்’

 

‘தும் முஜே மார் ரஹே ஹை.’

 

‘மாஃப் கரோ’

 

’எனக்கு வயசு தான் உன்னவிட கொஞ்சம் அதிகம். அது ஒன்னும் பெரிய பிரச்சனை இல்ல.’

 

‘எதுக்கு பிரச்சனை இல்லை?’

 

‘மாரேஜ் பண்ணிக்க.’

 

‘கல்யாணமா. என்ன மேம் இது?’

 

‘இல்ல பயப்படாத. நான் சொல்றேன். உன்ன ஒரு வருஷத்துக்கு முன்னாடி பாத்திருந்தா தூக்கிட்டு போயாவது கல்யாணம் செஞ்சிருப்பேன். பட் இப்ப டூ லேட் எனக்கு ஏற்கனவே மாப்ள பாத்தாசு. அடுத்த வாரம் எனக்கு என்கேஜ்மெண்ட். லேகின் ஐ லவ் யூ. லவ் டஸிண்ட் ரெக்கொயர் பொஸஷன்’

 

‘என்ன சொன்னீங்க?’

 

‘லவ் டஸிண்ட் ரெக்கொயர் எனி பொஸஷன். காதல்ல காதலிக்கிற பொருள நமக்கு சொந்தமாக்கிக்கனும்னு அவசியம் இல்லை.’

 

’நான் ஒன்னு கேக்கவா?’

 

‘கேளு’

 

’எங்க இந்தத் தத்துவத்த புடிச்சீங்க?’

 

‘அதுவா முக்கியம். நான் இங்க எவ்ளோ ஃபீல் பண்ணி என் மனசில இருக்கிறத சொல்லிட்டிருக்கேன்.’

 

’அது தான் முக்கியம். ப்ளீஸ் சொல்லுங்க. இப்படி ஒரு தத்துவம் எப்படி உங்களுக்கு கெடச்சது. நிச்சயம் நீங்களா யோசிச்சிருக்க வாய்ப்பில்ல.’

 

’டோண்ட் மோக் மீ.’

 

‘ஐம் ஸீரியஸ். ப்ளீஸ். போலோ’

 

என்று ஹஸன் வந்து ஸ்மிர்திக்கு கீழ் வேலைக்குச் சேர்ந்தானோ அன்றே ஆரம்பித்துவிட்டது. ஸ்மிர்தி செய்வதெல்லாம் காதலி காதலனிடம் நடந்து கொள்வதைப் போல் தான் தோன்றும். ஹஸன் சற்று விலகிச் சென்றாலும் விடமாட்டாள். துரத்திக் கொண்டு வருவாள். அவன் மீது எப்போதும் அதிகாரம் இருக்கும். தனக்கு கீழ் வேலை செய்கிறான் என்ற அதிகாரம் இல்லை. அவன் மீது இருக்கும் அக்கரையினால், அன்பினால், காதலினால். அவளுக்கு அவனை பார்த்தவுடன் பிடித்திருக்க வேண்டும். அவளுக்குள் என்ன உணர்வுகள் எழுந்திருக்கும் என்றெல்லாம் அவனால் உணர்ந்து கொள்ளமுடியவில்லை. உணரும் மனப்பக்குவமும் காதல் உணர்வும் அவனிடம் இல்லை. காதல் என்பது அவனைப் பொறுத்தவரை இச்சை.

 

இச்சை, கிரியை, ஞானம். இந்திய மெய்யியலாளர்கள் சக்திகளை இவ்வாறு வகைப்படுத்திருக்கிறார்கள். இச்சை என்றால் பெண்ணாசை, பொன்னாசை, மண்ணாசை என அனைத்து ஆசைப்படுதலும். க்ரியை என்றால் படைப்புத்திறன். ஞானம் என்றால் ஞானம். இச்சையை அடக்கினால் க்ரியை அதிகரிக்கும். க்ரியை அதிகரிக்க அதிகரிக்க ஞானம் வெளிப்படும். விவேகானந்தர் இவற்றை விளக்கி ஞானத்தை அடையும் யோகங்களை அறிமுகப்படுத்தும் விதமும் அலாதியானது என்பது அவன் கருத்து. இன்னும் ’ஆசை’களை அடக்கும் கலைக்காகவே பிறந்த கௌத்தமரது போதனைக்குள் அவன் இறங்கவில்லை.

 

‘சொல்லுங்க. யார் சொன்னது?’

 

’மேரா பாப்’

 

‘அப்பாவா? உங்கப்பா பேரென்ன மேம்?’

 

’ஆதிநாத் ஜெய்ன். எதுக்கு?’

 

ஹஸன் தத்துவங்களினால் வளர்க்கப்பட்டவன். தத்துவங்களால் மேம்படுத்தப்பட்டவன். தத்துவங்களினூடே பயனிப்பவன். தத்துவங்கள் போதும் அவனை இழுக்க.துரும்பு கிடைத்தாலும் விடமாட்டான். ததுவங்கள் அவனுக்கு வாழ்கையை வாழக் கற்றுக்கொடுத்தன. தத்துங்கள் இல்லாமல் அவனால் ஒரு நொடி கூட உயிர் வாழ இயலாது. தான் போன போக்கில் அவனால் போக முடியாது. தான் போன போக்கில் போவதற்காக இந்த மனிதனை இயற்கை பரிணாமிக்கவில்லை என்று அவன் நம்பினான். தன் போக்கில், தன் இச்சையின் போக்கில் போனவர்களின் நிலையையும் கொள்கை, தத்துவங்களின் பின்னே போனவர்களின் நிலையையும் அவனுக்கு வரலாறு காட்டியுள்ளது.

 

கொள்கைகளும் தத்துவங்களும் கடவுளிடம் கூட்டிச் செல்வதை அவன் நம்பவில்லை. மாறாக பரிணாமத்தினால் மனிதனுடனேயே வந்த அந்த மிருக குணங்களைக் களைவதே ஒவ்வொரு மனிதனுக்கும் தலையாய வேலை எனக் கூறிவந்தான். மனிதன் என்று பொறாமை, பகைமை, இச்சை, தன்னலம் போன்ற மிருக குணங்களை வென்று தான் யாரென உணர்கிறானோ அன்று பரிணாமத்தின் வேலை முடிந்தது. தன்னை யாரென தனக்கே இயற்கை காட்டிவிட்டால் அதன் வேலை முடிந்தது. இது தான் ஹஸனது தத்துவம்.

 

 

பத்தாம் வகுப்பில் கடவுளை நம்பாமல் பரிட்சை எழுதிய பாவம் அவனைப் பின் தொடர்ந்தது. பொதுத் தேர்வு முடிவு அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்தது. இறுதியில் அவன் 92% மதிப்பெண்கள் பெற்றிருந்தான். பள்ளித் தேர்வுகளில் அவன் 60% எட்டுவதே பேரதிசயம். தேர்வு முடிவு வந்த தினத்தன்று பள்ளிக்குச் சென்றான். அனைவரும் அவனை ஆச்சரியம் பொருந்திய கண்களில் பார்த்தனர். ஒளி அவன் மீது படர்ந்திருந்தது. ஒளியில் நுழைபவனை உலகம் எப்படிப் பார்க்கிறது என்பதை முதன்முறை உணர்ந்தான்.

 

வாழ்க்கையில் மகிழ்ச்சி, நிம்மதி என்பது அனைத்தும் ஒளியில் கிடைக்கக் கூடியது. ஒளி என்பது தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவது. தேர்வில் நல்ல மதிப்பெண் பெற முதலில் நல்ல மன ஆரோக்கியம் இருக்க வேண்டும். நல்ல மன ஆரோக்கியம் இருக்க கொள்கைகளும் தியானமும் அவசியம். கடவுள் தேவையில்லை. ஆக, தியானத்தையும் தத்துவங்களையும் கொள்கைகளையும் கொண்டு வாழ்வில் வெற்றி பெறலாம். வெற்றி என்பதே ஒளி. மனதை வெளிப்படுத்தாமல் உள்ளுக்குள்ளேயே பூட்டி வைத்தால் போதும் இந்த உலகம் நம்மைக் கொடுமை செய்யாது. ஒரு முடிவுக்கு வந்திருந்தான்.

 

பத்தாம் வகுப்புக்குப் பிறகு பதினொன்று பணிரெண்டாம் வகுப்பைத் தங்கள் பள்ளியிலேயே படிக்க வேண்டும் என பிரின்ஸிபால் அவனது தந்தையை வற்புறுத்தினார். அவனுக்கோ வியப்பு. மூன்று நான்கு மாதங்களுக்கு முன் இதே வாய் தான் அவனை வெளியில் அனுப்ப முனைந்தது. முழு இருளில் பிடித்து தள்ளியது. தற்போது ஒளியைப் பாருங்கள் என்னவெல்லாம் செய்கிறதென.

 

அவனது தந்தை அவனிடமே பொறுப்பை ஒப்படைத்தார். இந்தப் பள்ளியில் தொடரலாம் இல்லை வேறு பள்ளி பார்த்துக் கொள்ளலாம். அவன் யோசிக்கவெல்லாம் இல்லை. வெளிப்படையாகச் சொன்னான், இந்தப் பள்ளி தனக்கு ஒத்துவராதென. முடிந்தது. வழக்கம் போல் மேற்கொண்டு யாரும் எதுவும் பேசத் துணியவில்லை.

 

அங்கு மீண்டும் படிக்க முடியாது என சொல்லிவிட்டானே தவிர அடுத்து எங்கு சேரப்போகிறோம் என்றெல்லாம் அவனுக்குத் தெரியவில்லை. வெளியே வந்துவிடு போதும். வந்துவிட்டான். பின், எப்படியோ நாமக்கல்லில் ஒரு பள்ளியில் போய் சேர்ந்தான். பள்ளி விடுதியின் வாழ்கை புதுவித சுதந்திரத்தைத் தந்தது. அவனைப் பொறுத்த வரை இத்தனை நாளாய் அனுபவித்ததில் இருந்து விடுதலை அளித்த பள்ளி இது.

 

அப்பள்ளிக்கு வந்ததும் வராததுமாக அவனைக் கவர்ந்த விஷயம் நூலகம். அவன் அதுவரைக் கண்டிராத பல புத்தகங்கள் அங்கு இருந்தன. ஒரே நேரத்தில் நான்கைந்து புத்தகங்கள் எடுக்க முடிந்தது. வாரா வாரம் போய் லைப்ரேரியனிடம் காட்டிவிட்டு போகவேண்டும். வீட்டில் இருப்பதை விட அருமையான முறை. அவ்வளவு தான். இரண்டாவது ப்ரேயர். ஆம் இந்தப் பள்ளியில் அஸ்ம்ப்ளி, ப்ரேயர் என்றெல்லாம் ஒன்று கிடையவே கிடையாது. ஆண்டுக்கொன்று அம்மாவசைகொன்று என்று கூடக் கிடையாது. கடவுளை நம்பச் சொல்லி நச்சரிக்கும் வேலையும் கிடையாது. இது போக கம்யூனிஸ்ட் சித்தாந்தம் வேறு ஆசிரிய மாணவர்களிடையே தெரியும்.

 

கம்யூனிஸத்திற்கு பள்ளியில் என்ன அவசியம்? இருந்தது. இதற்கெல்லாம்  முதலாளித்துவ பள்ளி நிர்வாகம் தான் காரணம். முதாலாளித்துவம் என்றால் உங்க வீட்டு எங்க வீட்டு அளவிற்கு அல்ல உலைகையே முழுங்கும் அளவிற்கு. ஒரே ஒரு உதாரணம். அப்பள்ளியில் 95% மேல் மதிப்பெண் இருந்தால் படிப்புக்காலமாகிய இரண்டு வருடமும் விடுதி மற்றும் பள்ளிக் கட்டணம் கிடையாது. முற்றிலும் இலவசம். 95% முதல் 90% வரை இருப்பவர்களுக்கு பள்ளிக் கட்டணம் இல்லை, விடுதிக் கட்டணம் மட்டும் கட்டவேண்டும். 90% முதல் 80% வரை இருப்பவர்கள் முழு பள்ளிக் கட்டணத்தையும் விடுதிக் கட்டணத்தையும் செலுத்த வேண்டும். அதற்கும் கீழே இருப்பவர்களுக்கு பள்ளிக் கட்டணம், விடுதிக் கட்டணம் மட்டும் போதாது, கல்லூரிகளைப் போல் டொனேஷன் கொடுக்க வேண்டும். இது இரு வருடக் கட்டணத்தைவிட இருமடங்கு இருக்கும். மதிப்பெண் குறையக் குறைய இந்த டொனேஷனும் எகிறும். ’என்னங்க இது காலேஜ் மாதிரி டொனேஷனெல்லாம் கேக்கிறீங்கனு’ கேட்டால் ’நீங்க எங்கிட்ட டொனேஷன் கட்டுங்க. உங்க பிள்ளைகள நாங்க காலேஜ்ல டொனேஷனே இல்லாம சேர்ற அளவுக்கு மார்க் எடுக்க வைக்கிறோம் என நியாயமாக ஒரு பதில் அந்தப் பள்ளி நிர்வாகிகளிடமிருந்து வந்து விழும். ஆம் முதலில் அந்த டைரக்டர் என அழைக்கப்படும் நிர்வாகிகளின் வரலாற்றைச் சற்று பார்த்துவிடுவோம்.

 

நாமக்கல் என்றவுடன் தமிழ்நாட்டில் முதலில் நினைவுக்கு வருவது முட்டையும் கோழியும் தான். இது போக இன்னொன்று இருக்கிறது. கொஞ்சம் செய்திகளை கருத்துடன் கவனிப்பவர்கள் எளிதாகக் கண்டு கொள்வர். அது லாரி. ஆம் முட்டை, கோழி, லாரி. இது தான் நாமக்கல்லின் பிரதான தொழில். இந்த லாரி தொழிலில் பெரிய ஆளாய் இருப்பவர்களுக்கு உள்ளூர்  கட்டப்பஞ்சாயத்து வாய்ப்புகளும் இலவசமாய் வந்து சேரும். இவர்களை மனதில் ஒரு ஓரமாக வைத்துக் கொள்ளுங்கள்.

 

நாமக்கல்லில் தொன்னூறுகளின் துவக்கத்தில் சில அரசுப் பள்ளிகளில் வேலை செய்த ஆசிரியர்களுக்கு திடீரென ஒரு ஆசை துவங்கியது. அந்த ஆசைக்கு அடிப்படை அவர்கள் வேலை செய்யும் பள்ளிகள் எடுத்த மதிப்பெண்கள் தான். அதாவது நாமக்கல்லின் சில அரசுப் பள்ளிகள் தங்கள் பள்ளியில் வேலை செய்த திறமையான ஆசிரியர்களின் துணையால் பொதுத்தேர்வில் மாநில அளவில் முக்கிய இடங்களை கைப்பற்றியிருந்தன. அதுவும் தொடர்ச்சியாக இந்த நிகழ்வு வருடா வருடம் நிகழ்ந்து கொண்டே இருந்தது. இந்த சமயத்தையும் சந்தையில் நல்ல மதிப்பெண் எடுக்க வைக்கும் ஆசியர்களுக்கு இருந்த வாய்ப்பையும் பயன்படுத்தி மேற்கண்ட பள்ளி ஆசிரியர்கள் தனித்தனியாக தங்கள் வீட்டில் ட்யூஷன் எடுக்க ஆரம்பித்தனர். பிறகு கூட்டாக சேர்ந்து தனியாக இடம் பிடித்து ட்யூஷன் செண்டர் வைத்து பாடம் எடுக்க ஆரம்பித்தனர். தற்போது இவர்களிடம் படித்த மாணவர்களும் சிறந்த மதிப்பெண்கள் எடுக்க ஆரம்பித்தனர். புதிதாய் ஒரு தொழிலுக்கான அச்சாரம் அமைக்கப்பட்டது.

 

இந்த நேரத்தில் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் ஒரு செய்தி மீண்டும் மீண்டும் மக்களால் மக்களுக்காக மக்கள் மத்தியில் திணிக்கப்பட்டது. பிள்ளைகள் படிக்கவைத்தால் அவர்கள் கை நிறைய சம்பாதிப்பார்கள் என. இது அப்படியே பரிணமித்து பிள்ளைகளை இஞ்சினியரிங் அல்லது டாக்டர் படிக்கவைத்தால் அவர்கள் கை நிறைய சம்பாதிப்பார்கள். பொறியியல் அல்லது மருத்துவக் கல்லூரியில் சேர்க்க எவ்வளவு பாடுபட்டாலும் பரவாயில்லை எனும் மனநிலை உண்டானது. நல்ல மதிப்பெண்கள் இருந்தால் தான் எளிதாக இருக்கும் என்பதை உணர்ந்து சிலர் தங்கள் பிள்ளைகளை இத்தகைய ட்யூஷனில் சேர்க்கத் துவங்கினர். கல்வியில் ஒரு வியாபார யுக்தி இறுதியாக கண்டடையப்பட்டது. பெரும் பெரும் நகரங்கள் துவங்கி பட்டி தொட்டி வரை இந்தியாவின் மிகப்பெரிய இனமாகிய நடுத்தர மக்கள் தங்கள் பிள்ளைகள் மேல் தங்களால் முடியாத கனவுகளை எல்லாம் கட்டி களத்தில் இறக்கிவிட்டனர். தங்களைப் போல் தங்கள் குழந்தையும் பணத்திற்குத் திண்டாடும் அவல ஒளியற்ற நிலையில் இருக்க கூடாது என்பதே அவர்கள் ஆதங்கமாக இருந்தது.

 

இது தானே தொழில் முனைதல். தேவை இருக்கிறது. பூர்த்தி செய். பணத்தை அள்ளு. முடிந்தது. ட்யூஷன் செண்டர்களில் லாரிகள் முதலீடு செய்யத் துவங்கியது. லாரிகளின் பெரும் பணத்தால் ட்யூஷன் செண்டர்கள் பெரும் பள்ளிகளாய் இதுவரை தமிழ்நாடே கண்டிராத அளவில் விஷ்வரூபம் எடுத்தன. கிராமங்களில் பெருமளவு நிலம் வாங்கப்பட்டு பள்ளிகள் எழும்பின. உள்ளே என்ன நடக்கிறது என வெளியே தெரியாத அளவிற்கு அனாந்தரக் காடுகளில் பள்ளிகள் அமைந்தன. இதனால் பல கிராமங்கள் பயனடைந்தன. பள்ளிக்குள் கீழ்மட்ட பணிகளை செய்ய கிராமங்கள் ஆள் அனுப்பின. பள்ளிகள் பங்குச் சந்தைகளாயின. லாரிக்கு இத்தனை சதவிகித பங்கு என்றும் ஆசிரியர் ஒருவருக்கு இவ்வளவு பங்கு என்றும் கூறி முதலீட்டையும் உழைப்பையும் கொண்டு பங்கு பிரிக்கப்பட்டது. ட்யூஷன் ஆசிரியர்கள் டைரக்டர்கள் ஆயினர்.

 

காலையில் அவசர அவசரமாக எழுந்து மனைவியை கடிந்து பிள்ளைகளிடம் எரிந்துவிழுந்து எதையாவது டிபன் பாக்ஸில் அடைத்துக் கொண்டு ஏதாவது பஸ்ஸைப் பிடித்து வேலை செய்யும் பள்ளிக்குச் சென்று மாணவர்களைக் கத்தி மேய்த்து படிக்க வைத்து சோர்வாகி அங்கேயே ஒரு தூக்கத்தை போட்டுவிட்டு கொண்டுவந்த பையை தூசிதட்டி எடுத்து அரைத்தூக்கத்துடன் வீட்டிற்கு சென்று விடைத்தாள்களை மனம் போன போக்கில் திருத்தி ட்யூஷன் எதுவும் இருந்தால் எடுத்துவிட்டுக் காய்ந்த வயிற்றுடன் அப்படியே மல்லாக்கப் படுத்துத் தூங்கும் ஒளியற்ற வாழ்க்கைக்குப் பதில் அதிகாலை பத்துப் பதினோறு மணிக்கு பொறுமையாக எழுந்து பல்லிடித்துவிட்டு பன்னீரில் கொப்பளித்துவிட்டு  ஜாலியாக ஏதாவது பெரிய ஹோட்டலில் பகல்-மதிய உணவை அருந்திவிட்டு பந்தாவாக பென்ஸ் காரில் பள்ளிப்பக்கம் சென்று நாலைந்து ஒளியற்றவர்களை உருட்டி மிரட்டிவிட்டு மிடுக்காக வறுத்த முந்திரிகளை நொறுக்கிக் கொண்டே பவனி வந்துவிட்டு பள்ளியில் இருக்கும் தன் சொகுசு அறையில் மிதமான ஏசியுடன் ஒரு குட்டித் தூக்கத்தை போட்டுவிட்டு ஆறு மணிவாக்கில் எழுந்து குளியல் போட்டுவிட்டு ட்ராக் பேண்ட் டீசர்ட் ஷட்டில் ராக்கட்டுடன் ஒளிவுற்றவர்களுடன் விளையாடிவிட்டு முடிந்தால் சிறிது தூரம் நடை போய்விட்டு பீட்சா பர்கர் என எதையாவது ஸ்னாக்ஸாக உள்ளே தள்ளிவிட்டு குடும்பத்துடன் டீவி பார்த்துவிட்டு ஒன்பது மணி போல் கணக்குகளை எல்லாம் முடித்துவிட்டு நண்பர்களுடன் ஒளியில் ஆடிவிட்டு குடித்துவிட்டுத் தடுமாறிய நிலையில் வந்து பானை வயிற்றுடன் உலகக் கவலைகளை எல்லாம் மறந்துவிட்டு சுபிட்சமாக உறங்கும் ஒளிவுற்ற வாழ்க்கை இவர்கள் வசமானது.

 

இவர்களுக்குக் கீழ் தான் அனைவரும். மாணவர்கள், ஆசிரியர்கள் யாராகிலும். இந்த முதலாளித்துவத்திற்கு எதிராக அவ்வப்போது சில கிளர்ச்சிகள் எழும். அவற்றை  ஒரு படை கொண்டு அடக்கி வைப்பர். முதலாளித்துவத்தின் முதுகெழும்பான காவல் படைக்கு நிகரான ஒரு படை அப்பள்ளியில் இயங்கி வந்தது. பி.டி படை. உடற்பயிற்சி ஆசிரியர்கள் படை. உடற் பயிற்சியோ விளையாட்டோ இல்லாத பள்ளியில் நான்கு மாணவனுக்கு ஒரு பி.டி என்ற வீதத்தில் அவர்கள் சேர்க்கப்பட்டனர். தங்கும் விடுதி, உணவு விடுதி, பள்ளிக்குச் செல்லும் சாலை, பள்ளி, வகுப்பு, கழிப்பறை, நிற்குமிடம், தும்முமிடம் என அனைத்து இடத்திலும் காவலர்களாய் காட்சியளிப்பர் இந்த பி.டிக்கள். இவர்களுடைய தலையாய வேலை சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவது.

 

இப்பள்ளியில் சட்டம் ஒழுங்கு என்றால் என்ன?

 

அந்தப் பள்ளியில் பெண்களும் படித்தனர். அவர்களுக்குத் தனி விடுதி, தனி உணவகம், படிக்க தனி இடம். பாகிஸ்தான் இந்தியப் பிரிவினைக் கோடுகளைப் போல் சதுர வடிவிலான அப்பள்ளி சரி பாதியாக பிரிக்கப்பட்டிருக்கும். இப்பக்கம் ஆண்கள், அப்பக்கம் பெண்கள். நடுவில் கதவுகளையுடைய பலகைகள் கொண்டு மூடப்பட்டிருக்கும். அக்கதவுகளுக்கு அருகில் பி.டி பாதுகாப்பு பலமாக இருக்கும். இருபக்கமும் பாடமெடுக்கும் ஆசிரியர்கள் மட்டுமே உள்ளே வெளியே செல்ல அனுமதிக்கப்படுவர். யாராவது அந்தப் பக்கம் எட்டிப்பார்த்தாலே சட்டம் ஒழுங்கை குழைத்த குற்றத்திற்காக தண்டனை அளிக்கப்படும். அதே போல் விடுதியில் செல்போன், எஃப்.எம் போன்றவற்றை உபயோகிக்கத் தடை இருந்தது. வாரம் ஒருமுறை யாருக்கும் தெரியாமல் அதிரடி சோதனை நடைபெறும். செல்போன், எஃப் எம் அல்ல நோக்கம். அதிரடி சோதனையின் நோக்கம் நீலப்புத்தகம், வீட்டிலிருந்து கொண்டுவரும் திண்பண்டங்களைக் குறிவைத்தே இருக்கும்.

 

அதே போல், விடுதி மாணவர்களின் நேர நிர்வாகத்தையும் பி.டி படையே பார்த்துக் கொள்ளும். காலை ஐந்து மணிக்கு மணியோசையுடன் அனைவர் அறைக் கதவுகளும் தட்டப்படும். மாணவர்கள் தங்கியிருக்கும் ஐந்து அறைக்கு அடுத்த அறை பி.டிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் ஒதுக்கப்பட்டிருக்கும். ஆறு மணிக்கு ஸ்டடி ஹாலுக்குச் செல்ல வேண்டும். எட்டு மணிக்கு அது முடியும். பின்னர் குளித்தோ குளிக்கமலோ கிளம்பி ரேசன் கடையைவிட பலமடங்கு நீளமான உணவக வரிசையில் நின்று தின்றோ தின்னாமலோ ஒன்பது மணிக்குள் பள்ளிக்குள் இருக்க வேண்டும். பள்ளி ஒன்றரைக்கு முடியும். மீண்டும் இரண்டு மணிக்குள் மதிய உணவை முடித்தோ முடிக்காமலோ திரும்ப வேண்டும். பள்ளி நான்கு மணிக்கு நிறைவடையும். மீண்டும் நாலறைக்கு ஸ்டடி ஹாலுக்குச் செல்ல வேண்டும். ஸ்டடி பத்து மணிக்கு முடியும். இடையில் ஒரு மணி நேரம் இரவு உணவு இடைவேளை. இரவு பத்து முதல் காலை ஐந்து வரை தூங்கிக் கொள்பவர்கள் கொள்ளலாம். இந்த நேர நிர்வாகம் பிசுபிசுக்காமல் வேலை செய்ய பி.டிக்கள் பெரிதும் பாடுபட்டனர். தங்கள் உயிரைக் கொண்டு காத்தனர்.

 

அப்பள்ளியில் படிக்கும் எந்த மாணவரைக் கேட்டாலும் கண்ணீரும் கம்பலையுடன் ‘இது ஸ்கூல் இல்லங்க ஜெயில்’ என பதில் கூறுவான். ஆனால் ஹஸனிடம் கேட்டால் ’இது தான் சார் ஸ்கூலு’ என்பான். ஏன்?

 

ஹஸன் வந்த நாளன்றே பள்ளிக்கு பழகிவிட்டான். காலையில் ஐந்து மணிக்கு எழுந்து குளித்துவிட்டு பிரணாயானம், தியானம் என ஒரு மணி நேரத்தை செலவிடுவான். பின்னர் ஆறு மணிக்கு அனைவருடனும் சேர்ந்து ஸ்டடி ஹாலுக்கு கையில் பாடம் தவிர்த்த நூலகத்தில் எடுத்த ஏதாவததொரு புத்தகத்துடன் சென்று சேர்வான். காலையிலேயே குளித்துவிட்டதால் எந்தத் தொந்தரவோ வரிசையோ இல்லாமல் காலை உணவை முடித்துவிட்டுப் பள்ளி வளாகத்திற்குள் சென்று விடுவான். அங்கு சில சீண்டப்படாத மரங்கள் இருக்கும். அதற்குக் கீழே பெரிய பெரிய கொட்டைகள் இருக்கும். அவற்றைப் பொறுக்கிகொள்வான். கொட்டைகளை பொறுமையாக உட்கார்ந்து உடைத்து உள்ளே இருக்கும் பாதாம் பருப்புகளை எடுப்பதற்கும் பள்ளி துவங்குவதற்கும் நேரம் சரியாக இருக்கும். பின் பாடத்தை கவனிப்பதைப் போல் ஏதாவது பாவனை செய்வான். பிறகு மதிய உணவு இடைவேளைக்கு உணவகத்திற்கு செல்வான். தமிழகத்தின் மதிய உணவென்பதை ஹஸன் ஏனோ வெறுத்துவந்தான். அதனால் தட்டு நிறைய தயிரை ஊற்றி ஐந்தே நிமிடத்தில் வேலையை முடித்துவிட்டு பள்ளி திரும்பி ஒரு குட்டித் தூக்கம் போடுவான். நான்கு மணிக்கு பள்ளி முடிந்ததும் முகம் கை கால்களை நன்கு கழுவிவிட்டு கிளம்பி ஸ்டடி ஹாலுக்குச் சென்று விடுவான். சிறு தூக்கம். பின்னர் கொண்டு வந்த புத்தகங்களைப் படிப்பான். இரவு உணவு இடைவேளை வந்துவிடும். உண்டபின் நேரே ஸ்டடி ஹாலுக்கு வந்து புத்தகத்தைப் பார்த்தபடியே உட்கார்ந்த நிலையில் உறங்கிவிடுவான். ஸ்டடி முடிந்ததும் கிளம்பிச் சென்று விடுதியிலும் உறங்கிவிடுவான். இப்படிப்பட்ட வாழ்க்கை வாழக் கசக்குமா? என்ன?

 

இங்கு தான் கம்யூனிஸத்தின் அறிமுகம் கிடைத்தது. புத்தகங்கள் வாயிலாகவும் சில ஆசிரியர்கள் மூலமாகவும். மார்க்ஸ், லெனின், சே குவாரா, மாவோ, காஸ்ட்ரோ என வாழ்க்கை வரலாறுகளின் மூலம் உந்தப்பட்டான். மேற்கண்ட கடிகாரச் சுழற்சி இல்லாத ஞாயிற்றுக் கிழமைகளில் இது பற்றியான கூட்டம் ரகசியமாக நடக்கும். கடந்தவாரம் பள்ளியில் நிகழ்ந்தவையும் நிர்வாகிகளின் போக்கும் அலசப்படும். தேவைப்படும் இடத்தில் நடவடிக்கைகள் எடுக்கவும் முடிவு செய்யப்படும். நெடு விடுமுறை தினங்களில் வீட்டிற்குச் செல்வதற்குப் பதில் தோழர்கள் அனைவரும் சேர்ந்து அவர்கள் பள்ளி அமைந்திருந்த கிராமத்தின் தோழர்களுடன் களப்பணியில் ஈடுபடுவர். இங்கு ஆசிரியர், விவசாயி, மாணவன், பணக்காரன், ஏழை என்ற பாகுபாடு கிடையாது. ஏற்றத்தாழ்விலும் பொருள் கொள்வதிலும் நம்பிக்கையற்ற எல்லோரும் எல்லோருக்கும் தோழர்களே.

 

 

’வெய்ட் ஹியர். நான் உள்ள போய் பர்மிஷன் வாங்கிட்டு வந்திடறேன்’

 

ஹஸன் ஜெய்ன் மந்திருக்கு வெளியே நின்று கொண்டிருந்தான். ஸ்வெதெம்பர சமணர்களின் கோவில். ’காதல்ல காதலிக்கிற பொருள நமக்கு சொந்தமாக்கிக்கனும்னு அவசியம் இல்லை’ என ஸ்மிர்தி கூறியதில் இருந்தே அவன் முடிவு செய்துவிட்டான். இந்த தத்துவத்திற்கு பின்னே இருக்கும் ஆசாமியை  நேரில் கண்டு விளக்கம் பெறவேண்டுமென. ஐந்தாறு வருடமாய் அவனுள் இரையின்றிக் கிடந்த தத்துவவாதிக்கு கொடூரமாக பசியெடுக்க ஆரம்பித்தது.

 

விசாரித்ததில் ஸ்மிர்தியின் தந்தை ஜெய்ன் தர்மத்தில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவர் என்று தெரிய வந்தது. ஸ்மிர்திக்கு திருமணம் நிச்சயமாக இருந்தது. அந்த நிகழ்விற்கு தான் அவன் ஜெய்ப்பூர் வந்திருந்தான். ஆதிநாத் ஜெய்ன் வர இன்னும் இரண்டு மணி நேரம் ஆகும் என்பதால் தன்னை ஜெய்ன் மந்திருக்கு கூட்டிச் செல்லும்படி ஸ்மிர்தியை நச்சரித்து அங்கு சென்று சேர்ந்திருந்தான். இன்று இந்த மதம் என்ன சொல்கிறதென்று தெரிந்து கொள்ள தீர்மானித்திருந்தான்.

 

ஜெய்ப்பூர். பார்த்தோரை வசீகரிக்கும் ஊர். மஹாராஜா மான்சிங்கால் நிர்மாணிக்கப்பட்ட ஊர். வார்த்தைகளால் அவ்வளவு எளிதில் வருணிக்க முடியாது. இங்கே வந்தால் ஹஸனுக்கு முதலில் நினைவுக்கு வருவது பிங்க் சிட்டியின் முடிவில் இருக்கும் அந்தக் கடையின் ஐஸ்க்ரீம் லஸ்ஸி தான். அடிக்கும் வெயிலுக்கு மிகவும் இதமாக இருக்கும். பிங்க் சிட்டியின் வடிவமைப்பில் தாஜ்மஹாலைப் போல் ஒரு உன்னதம் தென்படும். ஆம் தாஜ்மஹாலை எத்தனை முறை பார்த்தாலும் அந்த உன்னதம் வெளிப்படும். டெல்லி செங்கோட்டையிலும் அவ்வுன்னதம் பிரதிபலிக்கும். கைப்பிடி அபினை அரைத்து ஒயினில் இட்டு குடிக்கும் மஹா குடிகார ஷாஜகானின் எல்லா படைப்பும் அப்படித்தான். உன்னதம் மிகுந்தவை. பார்த்தவுடன் மதியை மயங்கவைக்கக் கூடியவை. ஒளி நிரம்பியவை. எப்படி யோசித்தார் என்றே தெரியவில்லை. மனிதன் வாழ்ந்திருக்கிறார்.

 

’பர்மிஷன் க்ராண்டட் ஆவ்’

 

வெள்ளைப் பளிங்கு தளம். நம்மைப் போல் உடையணிந்து அமர்ந்திருக்கும் கூட்டத்திற்கு பலகை ஒன்றில் ஏதோ பாடம் எடுத்துக் கொண்டிருக்கிறார் ஒருவர். இது எதிலுமே ஈடுபடாமல் மந்திரை சுத்தம் செய்து கொண்டும், கண்ணைமூடி ஏதோ முணுமுணுத்துக் கொண்டும் வாயை வெள்ளைத் துணியால் ஒரு விதமாக மூடி வெள்ளை உடை உடுத்தி முக்காடிட்டிடுந்தத பெண்கள் சிலர் இருந்தனர். ஜெய்ன் தர்மத்தில் தங்களை இணைத்துக் கொண்ட இவர்களை ’சாத்வி’ என அழைக்கிறார்கள். ஸ்மிர்தி ஹஸனை அவ்வாறு தரையில் அமர்ந்து துணிபோன்ற ஒன்றில் மரக் குச்சியால் குறுக்கும் நெடுக்குமாய் கோடிட்டுக் கொண்டிருந்த வயதான சாத்வி ஒருவரிடம் கொண்டு போய் விட்டாள். அவர் இவர்களை அமரச் சொன்னார். ஸ்மிர்தி ’அவங்கள தொடக்கூடாது’ என ஹஸன் காதில் கிசுகிசுத்தாள்.

 

‘போலோ. ஆப் கா நாம்?’ சாத்வி தொடங்கினார்.

 

‘முஹம்மத் ஹஸன்’

 

’அச்சா. ஹஸன் பாய். என்ன சந்தேகம் உங்களுக்கு?’

 

‘க்யா ஹை ஜெய்ன் தர்ம்? சுருக்கமா சொல்ல முடியுமா?’

 

‘அச்சா. ஜெய்ன் கா தர்ம். இப்படி கிள்ளினா வலிக்குமா வலிக்காதா?’ தன் கையை கிள்ளிக் காண்பித்தார்.

 

‘வலிக்கும்’

 

‘ஏன்?’

 

’ஏன்னா. வலிய உணரக்கூடிய ரிஸப்ட்டார்ஸ் மூளைக்கு சிக்னல் கொடுக்கும். மூளை பதிலுக்கு ’இப்படி செய்ய அனுமதிக்காதனு’ வலியை குடுத்து எச்சரிக்கும்’

 

’டீக் ஹை. அப்டினா கிள்ளாமலேயே மனசு ஏன் வலிக்குது?’

 

‘ம். இச்சா. நினைக்கிறேன். நீங்களே சொல்லுங்களேன்’

 

‘பில்குல் சஹி. மனசு வலிக்க காரணம் ஆசை, வாஸ்னா, இச்சா, சாஹ், தமன்னா, அனுபவ்.’

 

‘ஆமாம்.’

 

’ஆசை இருந்ததுனா இந்த உலகத்தோட எல்லா துன்பங்களும் நம்ம தாக்கும் இல்லையா?’

 

‘ஆமாம்’

’ஆசை தான் நம்மள எல்லா துன்பத்துக்கும் கூட்டீட்டு போது. ஆசை தான் பாவம் செய்ய வைக்குது. பொருள் மீதான ஆசை நம்ம குறுக்கு வழில போய் சம்பாதிச்சு பாவத்த வளர்க்க வைக்கிது. பெண் மீதான ஆசை நம்மோட மனச ஊசலாடச் செய்யுது அறிவ மழுங்கடிக்கிது. மண் மீதான ஆசை அப்பாவி மக்கள பகடையா பயன்படுத்த சொல்லுது. ருசி மீதான ஆசை பல உயிர்களை கொன்னு தின்னு பாவம் செய்ய வைக்கிது. அப்ப ஆசை தான் எல்லா துன்பத்துக்கும் காரணம்.’

 

‘ஆமா’

 

’நமக்கும் தீங்கு விளைவிக்காத பிற உயிர்களுக்கு தீங்கு விளைவிக்காத ஒரு வாழ்கையை வாழ்வதுக்கு கத்துக்குடுக்கும் தர்மம் தான் ஜெய்ன் தர்ம்.’

 

‘அதாவது துறவறம் மாதிரி சொல்றீங்களா?’

 

’ஆமாம். துறவறம் தான். வாழ்க்கைல உள்ள எல்லாப் பற்றையும் விலக்கிட்டு மேற்கொண்டு பாவம் செய்யாம தவிர்த்திக்கிற வாழ்க்கைக்குள்ள போறது தான் ஜெய்ன் கா தர்ம்.’

 

‘அதெப்படி. பாவங்களை செய்யாமல் இருக்கிறது. அந்த வழிமுறைய கொஞ்சம் சொல்லுங்க’

 

’அஹிம்சா, சத்யா, அஸ்தீயா, ப்ரம்மச்சரியா, அப்பரிக்ரஹா. அதாவது அஹிம்சை, சத்யம், களவாமை, பிரம்மச்சரியம், பற்றின்மை. இதன் மூலமா நாம இந்த பிறவா நிலையை அடையலாம்’

 

‘ஜென்மங்களப் பத்தி பேசறீங்களா?’

 

‘ஆமா. உங்களோட பாவத்த பொறுத்து அடுத்ததடுத்து வேற வேற பிறவிவில வேற வேற உயிரா பெறந்துகிட்டே இருப்பீங்க?’

 

’அத நம்புறீங்களா?’

 

’ஆமாம். அடுத்த பிறவி எடுக்காம கடவுளாயிடறது தான் மோட்சம். நிர்வாணம் எல்லாம்.’

 

‘சரி இதையே தானே ஹிந்துக்களும் சொல்றாங்க. எதுக்கு தனியா ஜெய்ன் தர்ம்?’

 

’பஹூத் அச்சா சவால் ஹை பாய். மொதல்ல ஹிந்து தர்ம்னா என்ன?’

 

‘ம்ம். நீங்க சொல்றது எல்லாம் தான். கர்மா, யோகா, தியானா, புணர்ஜென்மம்’

 

‘யார் சொன்னா?’

 

‘ஹிந்தூஸ் சொல்றாங்க’

 

’ஹிந்தூஸ்னா?’

 

‘ஸ்வாமிஜீஸ்’

 

‘ஒன்னு தெரியுமா? இன்னைக்கு ஹிந்து தர்ம்னு சொல்லப்படுற தர்ம் உண்மையிலேயே பத்து நூற்றாண்டுக்கு முன்னாடி இருந்த ஹிந்து தர்ம் இல்ல. காலப் போக்கில மாறினது. உண்மைய சொல்லனும்னா ஹிந்து தர்ம்னா என்னனு சரியா யாராலயும் சொல்ல முடியாது. ஜெய்ன் கா தர்ம், புத் கா தர்ம்னு இருக்கிற ஸர்மண தர்ம்கிட்டே இருந்து ஹிந்து தர்ம் நிறைய கடன் வாங்கி இருக்கு’

 

’எப்டிப்பட்ட கடன்?’

 

‘இன்னிக்கு ப்ராஹ்மின்ஸ் அசைவம் சாப்பிடாததே ஜெய்ன் தர்ம் உண்டு பண்ணின தாக்கம் தான்’

 

‘அப்டியா?’

 

‘ஹான். யஞ்னா கேள்விப்பட்டிருக்கிங்களா?’

 

‘யஞ்னா?’

 

‘யாகா. பலி. அஸ்வமேதக யாகா. கோமேதக யாகா. அதாவது நாம செஞ்ச பாவத்த போக்க அக்னி மூலமா கடவுளுக்கு பலி குடுக்கிறது. அது மூலமா நம்ம பாவத்த போக்கிக்கிறது. இது முக்கால்வாசி மதத்தில இருக்கு. ஈஸா கா தர்ம் ஜீஸசையே பலி கொடுக்குது. இஸ்லாம்ல இப்ராஹிம் தன்னோட பையன பலி கொடுக்கிறாரு. இதெப்படி சரிப்படும். நாம செஞ்ச தப்புக்கு அப்பாவி விலங்க பலி குடுத்தா என்ன ஆகும். நம்ம கர்மா இன்னும் கொடூரமா ஆயிடாது?’

 

‘ஆமாம்’ ஹஸன் ஒன்றை கவனித்தான். அவனிடம் சாத்வி அதிகமான உருது வார்த்தைகளை பயன்படுத்தினார். பொதுவாக சமஸ்கிருதத்தில் சொல்லப்படும் சொற்களைக் கூட உருதுவில் மாற்றி பயன்படுத்தினார். மானவ், மானவ்த்தா என மனிதனையும் மனித நேயத்தையும் குறிக்கப் பயன்படும் சமஸ்கிருதச் சொல்லுக்குப் பதிலாக இன்ஸான், இன்ஸானியாத் எனவும் பூவை ஃபூல் என சொல்லாமல் குல் என்றும், இயேசுவை யெஷு என்று கூறாமல் ஈஸா என்றும் கூறினார். ஒருவேளை அவர் ஹஸன் என்றவுடன் முஸ்லிமாக எண்ணியிருக்க வேண்டும். உருதுவை அவனது தாய் மொழியாக நினைத்திருக்க வேண்டும். அதனால் அவனுக்கு புரிகிற மொழியில் பேச முனைந்திருக்க வேண்டும்.

 

‘வேதங்கள ஸ்ருதினு சொல்வாங்க. வேதங்கள் சொல்றபடி நடக்கிறங்க தான் வேதாந்திகள். இந்த வேதங்கள் வரதுக்கு முன்னாடி இருந்தே ஸ்ரமண தர்ம்னு ஒன்னு இருந்தது. வேதாந்தா தான் இன்னிக்கிருக்கிற ஹிந்து தர்ம்மோட தாத்தா. ஸ்ரமண தர்ம்ம ஏத்துக்கிட்டவங்க வேதாந்தா சொல்ற மாதிரி பலிகளையோ இல்ல பிறப்பால உயர்ந்தவன் தாழ்ந்தவனு சொல்றதையோ ஏத்துக்க மாட்டாங்க. தான் செஞ்ச பாவத்த தியானம் மூலமாவும், அன்பு மூலமாவும் தீர்த்து நிர்வாண நிலைக்கு போறத சொல்றது தான் ஸ்ரமண தர்ம். ஸ்ரமண தர்ம்குள்ள தான் ஜெய்னிஸமும் புத்திஸமும் வருது.’

 

‘நல்லா இருக்கே. நீங்க மத்த மதங்கள பத்தி என்ன சொல்றீங்க?’

 

’ஒரு மனுசன் நிர்வாணமாக மதங்கள் தேவையே இல்ல. அவன் தேர்ந்தெடுக்கிற வழிதான் எல்லாத்துக்கும் காரணம். அத தான் எல்லா மதமும் போதிக்கிறது. இடையில நிறைய புதுமைகள் புகுந்து அந்த பாதைய அழிக்கிது. அப்டிப்பட்ட காலத்தில எல்லாம் ஒரு மஹான் வந்து எல்லாத்தையும் திரும்ப சரியாக்கிறார். என்னப்பொறுத்தவர அப்படி வந்தவர் தான் மஹாவீர், புத்தா, ஈஸா, முஹம்மத் சாப் எல்லாம். யார் வேணாலும் அந்த மோட்ஷத்தை அடைய முடியும். ஆனா அந்த வழி என்னனு ஈஸியா தெரிஞ்சா இன்னும் நல்லா இருக்கும். அதுக்குத் தான் ஜெய்ன் கா தர்ம். ஜெய்ன்ன்ற வார்த்த ஜன் அல்லது ஜின் அப்டீன்ற வார்த்தையில இருந்து வந்தது. ஜன் அப்டீனா மக்கள். மக்கள் நல்ல நிலைக்கு போறதெப்படீனு சொல்றது தான் ஜெய்ன் தர்ம். இல்ல ஜின் அப்டீனா ஜீத்னா. ஆட்கொள்ளுதல். மனச ஆட்கொள்றதுனு சொல்லலாம்.’

 

‘அப்டியா அப்ப மஹாவீர்கு முன்னாடியே பல ஞானிகள் வந்திருப்பாங்கள்ள?’

 

‘ஆமாம். மஹாவீர் இருபத்தி நாலாவது தீர்த்தங்கரா. ரிஷபதேவ் தான் முதல் தீர்த்தங்கரா. ஜெய்ன் தர்ம் இந்த இருபத்தி நாலு தீர்த்தங்ராவ தான் நம்புது. மஹாவீர் தான் கடைசி தீர்த்தங்கர்.’

’ஓ. புத்தர் பத்தி என்ன சொல்றீங்க’

 

‘புத் கா தர்ம்மும் ஸ்ரமண தர்ம் தான். தமிழ்ல நீங்க ஜெய்ன் கா தர்ம்ம சமணம்னு சொல்வீங்க. உங்க திருவள்ளுவர் ஸ்ரமண தர்ம்ல இருந்ததா தமிழ் நாட்ல இருக்கிற ஜெய்ன் லோக் சொல்வாங்க. பிராமானியத்திலயும் வேதாந்தத்திலையும் நம்பிக்கையில்லாத கௌத்தம சித்தார்தா மொதல்ல வந்து சேர்ந்தது ஜெய்ன் தர்ம்ல தான். அதுக்குப் பின்னாடி ஜெய்ன் தர்ம்ல இருக்கிற கடுமையான நோன்பு, தவத்தையெல்லாம் பார்த்து பயந்து அவராவே நிர்வாணத்துக்கு ஒரு பாதைய வகுத்துக்கிட்டாரு. அதுதான் புத் கா தர்ம். புத் கா தர்ம் ஜெய்ன் தர்ம் மாதி ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருக்காது.’

 

‘ஜெய்ன் தர்ம் கடவுள் பத்தி என்ன சொல்றது?’

 

‘நீங்க நிர்வாணத்த அடஞ்சா நீங்க தான் கடவுள்னு சொல்லுது’

 

‘அஹம் ப்ரம்மாஸ்மி மாதிரியா?’

 

‘ஆமாம். ஜெய்ன் தர்ம்ல மூர்த்தீய அதாவது சிலைகள வச்சு பூஜா பன்றதுக்கெல்லாம் அனுமதி இல்ல. அதே மாதிரி தீர்த்த யாத்ராவும் இல்ல. இதெல்லாம் பின்னாடி வேதாந் தர்ம்ல இருந்து எடுத்துக்கிட்டது.’

 

’இன்னொரு கேள்வி. உங்கள்ல ஏன் பிரிவுகளெல்லாம் வந்தது. திகம்பரா, ஸ்வதம்பரா போல’

 

‘ஜெய்ன்ல ஸ்வதம்பர்ன்றது ஒரு ஸ்டேஜ். திகம்பர்ரது இன்னொரு ஸ்டேஜ் அவ்ளோ தான். சண்டை சச்சரவு எல்லாம் மக்களா உருவாக்கிக்கிட்டது’

 

‘மக்கள்ன்னா’

 

‘மக்கள்.’

 

‘அதாவது ஜெய்ன்ஸ்’

 

‘ஸ்மிர்தி மாதிரி ஜெய்ன் தர்ம்ம ப்ராக்டிஸ் பண்ணாத ஜெய்ன் லோக்’

 

‘ப்ராக்டிஸ் பண்ணாதவங்கள எப்டி ஜெய்ன்னு கூப்பிடறது?’

 

‘ஹான் பேட்டா. ஹம் ஜெய்னியோ நஹி’ மிக அமைதியான ஒரு ஆண் குரல் முதுகிற்கு பின்னே ஒலித்தது.

 

‘நமஸ்தே ஜீ’ என சாத்வியை நோக்கி சொல்லிக் கொண்டு ஒருவர் ஹஸனது முதுகில் தட்டிக்கொண்டு வந்தமர்ந்தார்.

 

‘ஆமாம் நான் உண்மையிலயே தான் சொல்றேன். நாம யாருமே பிறந்ததால ஜெய்ன் கா தர்ம்ம ஃபாலோ பன்றவங்களா ஆகிட மாட்டோம். வீ நீட் டு ப்ராக்டிஸ். ஆம் ஐ  ரைட் ஸ்மிர்தி’

 

ஹஸனை கொண்டு வந்து விட்டுவிட்டு ஏதோ சிந்தனையில் மூழ்கிப்போயிருந்த ஸ்மிர்தி, தன் தந்தையின் குரலைக் கேட்டவுடன் விழித்துக் கொண்டாள்.

 

’மே ஹூ ஆதிநாத் ஜெய்ன், ஸ்மிர்தி கா பாப். ஹஸன் உன்னப் பத்தி எல்லாத்தையும் ஸ்மிர்தி முழுசா சொன்னா. மாஃப் கரோ கொஞ்சம் லேட் ஆயிட்டது’

 

அடுத்த நாட்களை அவருடன் கழித்தான் ஹஸன். அவரைப் பற்றியும் சமணம் பற்றியும் பௌத்தம் பற்றியும் தெரிந்துகொண்டான். வாழ்க்கையில் ஜெய்ன் சொல்லும் தர்மங்களை பின்பற்றுவது மிகவும் கடினமானது என உண்ர்ந்தான். ஆனாலும் அதன் கொள்கைகளில் அவனுக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. சமணம் கடினம் என எளிதான கொள்கையொன்றை நிறுவிய புத்தரது தர்மத்தையும், வாழ்க்கையையும் படித்தான். அன்று புத்தருக்கு எளிதாகப்பட்ட வழியை இன்று நடைமுறைப்படுத்துவது அவ்வளவு எளிதான வேலை இல்லை என புரிந்து கொண்டான். இதற்கும் மேல் தன் மகளுக்கு ஸ்மிர்தி என பெயரிட்ட காரணத்தையும் அறிந்து கொண்டான்.

 

‘காதல்ல காதலிக்கிற பொருள நமக்கு சொந்தமாக்கிக்கனும்னு அவசியம் இல்லை’. காதல் பற்றிய நினைவுகள் இருப்பதே நமக்கு பெரிய சொந்தம். இதனால் தான் காதலில் தோல்வியுற்றவர்கள் தான் காதலித்தவரின் பெயரை தன் குழந்தைக்கு பெயர் சூட்டுகின்றனர். இதற்கு மதம்கூட குறுக்கே நிற்பதில்லை. சமணர்களும் தங்கள் குழந்தைக்கு தாங்கள் நம்ப மறுக்கும் ஸ்மிர்திகளைக் கூட பெயராய் சூட்டிவர். குழந்தையை அதன் போக்கில் வளரவிட்டு அழகு பார்ப்பர்.

 

 

 

‘இல்ல இஸ்லாம்ல என்ன இருக்குனு மாறினீங்க?’

 

ஹஸனும் ஜோஆனும் காரசாமரான விவாதத்தில் இருந்தனர். ஹஸனுக்கு, ஜோஆனின் இந்த மாறுதலுக்கு பின் இருக்கும் காரணத்தை அறியும் ஆர்வம் அதிகமாக இருந்தது.

 

‘நான் சொல்றதுக்கு முன்னாடி. நீ சொல்லு. இஸ்லாம்னா உன்ன பொறுத்த வரைக்கும் என்ன?’

 

’நான் வெளிப்படையா சொல்றேன். எனக்கு இஸ்லாம் பத்தி எதுவும் பேச பிடிக்காது. காரணம் நான் அதை அடிப்படையில இருந்து வெறுக்கிறேன்’

 

‘ஏன் வெறுக்கிற. மே ஐ நோ தி ரீஸன்?’

 

‘ஆஃப் கோர்ஸ். இட்ஸ் ப்ரொமோட்டிங் டெரரிஸம். இஸிட் நாட்?’

 

‘டெரரிஸமா. ஹஸன். டூ யூ நோ ஒன் திங். டெரரிஸம் ஹாஸ் நோ ரிலிஜியன்.’

 

‘பட். நீங்க ந்யூஸ் எல்லாம் பாருங்க. என்ன நடக்குதுன்னு. திஸ் பீப்பிள் ஆர் ரெஸ்பான்ஸிபில். தெயர் தியரி கில்ஸ்’

 

‘நீ முஸ்லிம் கிடையாது, சரியா ஹஸன்’

 

‘ஆமாம். ஆம் அன் எதிஸ்ட்.’

 

’சரி. நீ இஸ்லாம தீவரவாதத்தோட மதமா சொல்ற. உன் சொந்தக் காரங்க யாரும் தீவிரவாதியா மாறிட்டாங்களா? ‘

 

‘இல்ல.’

 

’இல்ல உன்னகிட்ட பழகின யாரும்?’

 

‘இல்ல’

 

‘அப்பறம் ஏன் அப்டி சொல்ற?’

 

’மேம். நீங்க கொஞ்சம் என்ன நடக்குதுனு பாருங்க. 9/11, 27/11, லண்டன் சப்வேன்னு ஏகப்பட்ட இன்ஸிடண்ட்ஸ். நான் சொல்றது புரியும். நான் சின்ன வயசில இருந்து இதுக்காக எவ்ளோ கஷ்டப்பட்டிருக்கேன்னு எனக்கு தான் தெரியும்’

 

‘இதெல்லாம் டெரரிஸ்ம்னு நான் ஒத்துக்கிறேன். ஆனா இதுக்கெல்லாம் இஸ்லாம் தான் காரணம்னு சொன்னா ஒத்துக்கமாட்டேன்’

 

‘ஏன்? இந்த இன்ஸிடண்ட்ஸ்ல எல்லாம் ஈடுபட்டவங்களோட பேர கொஞ்சம் பாருங்க. எல்லாம் முஸ்லிம்ஸ்.’

 

‘ஓகே. ஐ வில் ஆஸ்க் யூ சம்திங். நீங்களும் தான் ஹஸன்னு முஸ்லிம் பேர் வச்சிருக்கீங்க. நீங்க செய்ற தப்புக்கெல்லாம் இஸ்லாம தப்பு சொல்ல முடியுமா?’

 

‘ஆனா அவுங்கள மாதிரி நான் என்ன முஸ்லிமா சொல்லிக்கிறது கிடையாதே?’

 

’அவுங்க தன்னை முஸ்லிம்னு சொல்லிக்கிறதால அவங்க முஸ்லிம் ஆகிடுவாங்களா?  இஸ்லாம் சொல்றபடி இல்லாட்டி எப்படி முஸ்லிமாகிறது?’

 

’எஸ். பட் தே ஸே ஸோ.’

 

‘ஹாவ் யூ எவர் ரெட் குர்ஆன்? நேர்மையா சொல்லு. குர்ஆன எப்பவாச்சும் படிச்சிருக்கியா?’

 

‘இல்ல தொட்டதே கிடையாது. எனக்கு அரபி வாசிக்க தெரியாது’

 

‘நான் குர்ஆன தமிழ்ல படிச்சிருக்கீயானு கேக்கிறேன்.’

 

‘இல்ல. பார்த்திருக்கிறேன். தட்ஸ் ஆல்’

 

’படிச்சுப்பார் தெரியும். இஸ்லாம் சொல்லுதா இல்ல இவங்களா சொல்றாங்களானு’

 

‘குர்ஆன்ல ஜிஹாத் பத்தி எதுவும் இல்லனு சொல்ல வறீங்களா?’

 

’இல்ல. ஜிஹாத் பத்தி குர்ஆன் பேசுது. ஆனா அதுக்கு நீ வச்சிருக்கிற அர்த்தம் தான் வேற. எங்க ’ஜிஹாத்’கான மீனிங் சொல்லு?’

 

‘இதென்ன. எனக்கு தெரியாதா? ஜிஹாத்னா புனிதப்போர்னு அர்த்தம்.’

 

’இஸிட்? யார் சொன்னா? ஜிஹாத்னா புனிதப்போர்னு?’

 

‘எவ்ரிபடி. ஐ ஹாவ் ஆல்வேஸ் ஹெர்ட் இட். ஈவன் ஃப்ரம் மை ஹிஸ்டரி மேம்.’

 

‘குட். பட் ஜிஹாத்னா புனிதப் போர்னு அர்த்தம் இல்லை’

 

‘பின்ன?’

 

‘Struggle, Strive, Protest, போராட்டம், கடும் உழைப்பு, எதிரிப்பு, ஆட்சேபம்னு அர்த்தம்.’

 

‘எதுக்கான போராட்டம்? போருக்கும் இதுக்கும் என்ன வித்தியாசம்? எல்லாம் ஒன்னு தான் மேம்.’

 

’போருக்கும் போரட்டத்துக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு’

 

‘எப்டி?’

 

’இப்ப உனக்கும் இன்னொருத்தருக்கும் ஆகலைனு வச்சுக்கோ. ஏதோ கருத்து வேறுபாடு. அவர எதிர்த்து போராடறது உன் உரிமை இல்லையா? போராட்டம்னா உன்னோட ஆட்சேபத்த வெளிப்படுத்திறது. போய் போட்டு தள்றதில்ல.’

 

‘இது தான் அர்த்தம்னு சொல்ல வறீங்களா?’

 

‘சொல்லவெல்லாம் வேண்டாம். அது தான் ஜிஹாத்தோட அர்த்தம்.’

 

‘…..’

 

’இந்த உலகத்தின் மிகப் பெரிய ஜிஹாத் என்பது ஒருவன் தன் மனதை எதிர்த்து ஜிஹாத் செய்வது தான்னு நபி சொல்லியிருக்கார்.’

 

’அதாவது போரடறது எல்லாமே ஜிஹாத் தான்?’

 

‘ஆமாம். கெட்ட அரசனை எதிர்த்து மக்கள் செய்வது போல. ’

 

’புரட்சி, ரெவல்யூஷன்’

 

‘யெஸ் ரெவொல்யூஷன் ரெகொயர்ஸ் ப்ரொட்டெஸ்ட். ரெவல்யூஷன் ரெகொயர் ஜிஹாத். ரெவல்யூஷம் மே சம்டைம் ரெகொயர் வார். புரட்சிக்கு சில சமயம் போர்களும் அவசியம்’

 

‘கொடூரமான முதலாளியை எதிர்த்து தொழிலாளிகள் செய்வது, தகப்பனின் தவறை எதிர்த்து மகன் செய்வது, தன்னுள் உள்ள கெடுதியை எதிர்த்து தானே செய்வது’

 

‘ஆஃப் கோர்ஸ்’

 

 

 

‘இன்னிககு நைட் யாரும் மெஸ்ஸுக்கு சாப்பிட போக வேண்டாம்’

 

ஹஸன் பனிரெண்டாம் வகுப்புக்குள் சென்ற போது பி.டிக்களின் அராஜகம் தலைதூக்கி இருந்தது. முறையான காரணம் எதுவும் இன்றியே பல மாணவர்கள் தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டனர். பி.டிக்களுக்கு பிடிக்காதவர்கள்  என்ற கணக்கில் எல்லாம் தண்டனை இல்லை. அவர்களைப் பொறுத்த வரை தங்கள் மீதான பயம் மாணவர்களுக்கு எப்போதும் மனதில் இருக்க வேண்டும். அதனால் அவ்வப்போது இப்படிப்பட்ட வேட்டைகள். இவ்வேட்டைகளின் பலனாக பலரும் காம்ரேட்டுகளாயினர். புரட்சி ஒன்று உள்ளே புகைந்து கொண்டிருந்தது. இது நிர்வாகத்திற்கும் தெரியாமல் இல்லை.

 

பள்ளி நிர்வாகிகள் தேர்ந்த முதலாளிகளைப் போலவே செயல்பட்டனர். அடித்து ஒடுக்க பி.டி படை இருந்தது போலவே, ஒரு ரகசிய ஒற்றர் படையும் இருந்தது. சில ஆசிரியர்களும், மாணவர்களும் ஒற்றர்களாய் செயல்பட்டனர். மிக எளிதில் கண்டுகொள்ள இயலாத அளவிற்கு மிகவும் எச்சரிக்கை உணர்வுடன் மாணவர்களினூடே அலைந்தனர். இவர்கள் வாயிலாக மாணவர்களின் ஒவ்வொரு அடியும் மிகத் தீவிரமாக கண்காணிக்கப்பட்டது. எதிர்க்கத் துணியும் அனைவரும் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டனர்.

 

இதில் ஹஸன் மிகவும் சிக்கலானவன். வெளிப்படையாக இருப்பதன் எதிர்மறை வெளிப்பாட்டை அவனது கடந்த காலத்தின் ஊடாக அறிந்திருந்ததால் அவனால் மறைந்து வாழ முடிந்தது. மனதை மறைத்து வாழ முடிந்தது. கூட்டம் கூட்டி நான்கு பேர் முன்னனியில் தலைவனாக இருப்பதில் அவனுக்கு நம்பிக்கை இல்லை. தனியாக இருந்து கொள்கைகளை விளக்கி விடைதருவதே அவனுக்கு விருப்பம். அச்சூழலில் பொருத்தமாகப்பட்டது. மூளை எப்போதும் திரை மறைவுக்குப் பின் தான் இருக்க வேண்டும். வெளியே தெரிந்தால் பல்வேறு மட்டங்களில் தேவையற்ற சோதனைகளை சந்திக்க வேண்டிவரும்.

 

அன்றைய தினம். ஒரு பெரும் பிரச்சனை ஓடிக்கொண்டிருந்தது. விடுதியில் தன்னை சில பி.டிக்களே வன்புணர்ச்சியில் ஈடுபடுத்துவதாக ஒருவன் நிர்வாகிகளிடம் புகார் கூறினான். அதனை என்னவென்று கவனிக்குமாறு பி.டிக்களுக்கு உத்தரவு பறந்தது. பிடிக்கள் அந்தப் பையனை பிடித்து லேசாக அப்ப்டி இப்படி அடிக்க அவன் இறந்து போனான். என்ன செய்ய?

 

அதனை நிர்வாகம் ஜோடனை செய்து படிப்பில் தோல்வியுற்றதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டான் என மாற்றியது. மாணவர்கள் மத்தியில் தீ பற்றிக்கொண்டது. விளக்கம் கோரினர். ஒடுக்கம் பதிலாய் தரப்பட்டது. 144 தடைச் சட்டத்தைப் போல் ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டது. பிரச்சனை சீராகும் வரை மாணவர்கள் விடுதியை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டது. சற்று தொலைவில் இருந்த உணவு விடுதி வரை சென்று வர மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.

 

தோழர்கள் பலர் ஒன்று கூடி மேற்கண்ட முடிவிற்கு வந்தனர். அன்று இரவு உணவை புறக்கணிப்பதென. திட்டம் அது மட்டுமல்ல என்பது ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும்.

 

மாணவர்களின் கோபத்தை குறைக்க நிர்வாகம் இரண்டு நாட்களாக விருந்து போல் உணவு படைத்து மாணவர்களின் கவனத்தை தன்னால் முயன்ற அளவில் சிதறடிக்கப் பார்த்தது. மணி ஏழானது. எட்டானது. ஒன்பதானது. மாணவர்கள் யாரும் வெளியே வரவில்லை. உணவின் மனம் விடுதியில் பசிக்காதவருக்கும் பசிக்க வைத்தது. பசியும் உதாசீணமும் மாணவர்களின் கோபத்தை முறுக்கிவிட்டது.

 

உணவு விடுதியில் இருந்து செய்தி டைரக்டர்களிடம் சென்றது. டைரக்டர்கள் பி.டிக்களை கைகாட்டினர். ஒன்பது மணிவரை பொறுத்துப் பார்த்த பி.டிகள் விடுதிக்குள் உணவுக்கு வருமாறு நுழைந்து அறிவித்தனர். வெளியே யாரும் வரவேண்டாம் என்றும் தனியாக யாரும் சென்று மாணவர்கள் சார்பாக பேச வேண்டாம் என்றும் ஏற்கனவே மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

 

எவ்வளவு மசிந்து பேசியும் வெளியே வராதது கண்ட பி.டிக்கள் சினத்தின் உச்சிக்கே சென்றனர். விடுதிக்கதவுகளை திறந்து கொண்டு அறைகளுக்குள் நுழைந்தனர். மாணவர்களை கன்முன் தெரியாமல் தாக்கினர். மாணவர்கள் அலறிக்கொண்டு அறைகளைவிட்டு வெளியேறி உணவு விடுதிக்குள் நுழைந்தனர். அமைதியாக அமர்ந்து உணவருந்தினர். நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக பி.டிக்கள் எண்ணினர். திட்டம் செயல்படுத்தப்பட்டது.

 

தகவல் தெரிந்த உணவு விடுதியினுள் இருந்த தோழர்கள் தங்கள் அருகில் இருந்தவர்களிடம் அடுத்த கட்ட திட்டத்தை கூறினர்.

 

‘இங்க பாருங்க ஃப்ரண்ட்ஸ். நம்ம ஸ்ட்ரெந்த் பி.டிக்களவிட அதிகம். இப்ப நமக்கு வேண்டியதெல்லாம் ஒற்றுமை அவ்ளோதான். சரியா?. எல்லாரும் ஒரு முடிவுக்கு வர வேண்டிய நிலைமையில இருக்கோம். சரியா? கையில இருக்க ப்ளேட் போதும் நாம இன்னிக்கு இந்த நிலைமைய கையில எடுக்க. என்ன? எல்லாரும் தயாரா இருங்க. ஒரு ப்ளேட் பறக்கும். பறந்து போய் ஒரு பி.டி முகரைய ஒடைக்கும். அதுதான் நம்ம சிக்னல். ஃபாலோ தெம். கவனமா இருங்க. நம்ம குறி பிடி தான் ஓ.கே.’

 

சலசலப்பு அடங்கியது. வயிறு முட்ட தின்றுவிட்டு சாதித்துவிட்ட ஒளியுடன் அந்த பி.டி கையில் ஒரு வாழைப் பழத்துடன்  சென்றார். எல்லோரையும் பார்த்து ஒரு ஏளணப் புன்னகையை உதிர்த்தபடி, வாழைப்பழத் தோலை உரித்துக் கொண்டிருந்தார். அவர் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. ஒரு தட்டு அவரை நோக்கி சீறி வந்தது. குனிந்து கொண்டார். தட்டு பின்னால் இருந்த மற்றொரு பி.டியின் தலையை பதம் பார்த்தது. அவர்கள் சுதாரிப்பதற்கு முன் மாணவர்கள் எழுந்தனர். தட்டு மழை சராமாரியாக பொழிந்தது. அங்கு அது நடந்து கொண்டிருக்கும் போதே ஒரு மாணவர்குழு அடுக்களையினுள் புகுந்து கத்தி, அறிவாள்மனை, கரண்டி என அனைத்து பொருட்களையும் கைப்பற்றிக்கொண்டது.

 

என்ன நடக்கிறது என அறிந்து கொள்ளும் முன் பி.டிக்களை மாணவர்கள் சுற்றிவளைத்துக் கொண்டனர். பைகளில் இருக்கும் பொருட்களை கீழே போட்டுவிட்டு கையை பின்னால் வைத்து கட்டியவாறு தரையில் முதுகுப்புற படுக்கும்படி அறிவுரை வழங்கப்பட்டது. முதலில் எதிர்த்த பி.டிக்களுக்கு சுளீர் சுளீர் என விழுந்தது. அனைவரும் அவ்வாறே செய்தனர். பின்னர், ஒரு குழு மாணவர்கள் விடுதிக்குள் சென்று ’டை’களை எடுத்து வந்தனர். டையைக் கொண்டு பி.டிக்கள் அனைவர் கையும் பிணைக்கப்பட்டது. அனைவரும் விடுத்திக்குள் தள்ளப்பட்டனர். ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்ள இயலாமல் எல்லோரும் தனித்தனி அறையில் சிறை தள்ளப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர். நம்பிக்கைக்குரிய விடுதியில் தங்கிய ஆசிரியர்களும் விடுதி ஊழியர்களும் பள்ளி ஊழியர்களும் மாணவர்களுடன் இணைக்கப்பட்டனர். பிறருக்கு விடுதிக்குள்ளே சிறை. பள்ளியில் இருந்து வெளியே செல்லும் தொலைத் தொடர்பு இணைப்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டன. அலைபேசிகள் அனைத்தையும் வழக்கமாக பள்ளி பயன்படுத்திய ஜாமர் கருவியை வைத்தே செயல் இழக்கச் செய்தனர். மாணவியர் விடுதியை பூட்டி அவர்களுக்கு ஏதும் ஏற்படாவண்னம் சில ஆசிரியர்களே காவலில் நிறுத்தப்பட்டனர். புரட்சி அடுத்த கட்டத்தை நோக்கி நடந்தது.

 

அடுத்து, நிர்வாகிகள் அறை. நிர்வாகிகளான டைரக்டர்கள் பத்து பேரும் இரவு எட்டு முதல் ஒன்பது வரை பள்ளியின் நிர்வாகிகள் அறையிலேயே இருப்பர். அன்று சில பிரச்சனை இருந்ததால், பத்து மணிவரை அங்கே தான் கும்மாளமிட்டுக் கொண்டு இருந்தனர். தண்ணி கரை புரண்டு ஓடிக்கொண்டிருந்தது. எல்லாம் நடந்து கொண்டிருக்கும் போதே ஒரு குழு இந்த அறையை சுற்றி வளைத்தது. நிதானமாக அறைக்கதவை நெருங்கியது. கதவைத் தட்டியது. கதவு திறந்தது. குழு உள்ளே புகுந்தது. அனைவரும் சுதாரிப்பதற்குள் சிறைபிடிக்கப்பட்டனர்.  இது தான் ஒரு புரட்சியில் மிக முக்கியமான வேலை. சுதாரிப்பு. நிர்வாகிகள் உளறினர். ஏதேதோ திட்டித் தீர்த்தனர். ஒருவர் வெளியே வர மறுத்தார். தரதரவென இழுத்து வரப்பட்டார். அனைவரும் விடுதி அறைகளில் அடைக்கப்பட்டனர். பள்ளியில் ஆயுதம் தாங்கிய செக்யூரிட்டிகள் குறைவு. இரண்டே இரண்டு பேர் தான். மிக எளிதாக புரட்சி நடந்து முடிந்திருந்தது. இரண்டு துப்பாக்கிகளும் என்.எஸ்.எஸ் கேடட்களிடம் கொடுக்கப்பட்டது. பள்ளி தற்போது மாணவர் புரட்சி படையுடன். ஆனால் புரட்சி இன்னும் ஓயவில்லை. இனிதான் ஆரம்பிக்கவே இருக்கிறது.

 

மிகவும் துல்லியமாக திட்டங்கள். நிறை குறைகளை துல்லியமாக கணித்து காய் நகர்த்தும் திட்டம். நிச்சயம் மாணவர்களால் இயலாது. ஆனால் உண்மை என்ன வென்றால் இது முழுக்க முழுக்க மாணவர்களின் திட்டம். ஹஸனது திட்டம். திட்டத்தின் நோக்கம் பள்ளியில் நடப்பதை வெளி உலகிற்கு தெரியப்படுத்துவது. கற்பனையிலேயே கட்டிவிட்டான். திட்டத்திற்கு உயிரூட்ட தோழர்கள். முடிந்தது.

 

பள்ளியை இப்படி கட்டுக்குள் விடியும் வரை மட்டுமே வைக்க முடியும். அதற்குள் புரட்சியின் நோக்கம் முழுமையடைய வேண்டும். இது தான் நோக்கம். விடிவதற்கு சற்று நேரம் இருந்தது. மாணவர்கள் அனைவரும் அழைக்கப்பட்டு திடலில் அமர வைக்கப்பட்டனர். அனைவரும் சில நிமிடங்கள் அமைதியாய் மனதை ஒரு நிலைப்படுத்தினர். பின்னர் தோழர்கள் தங்களது திட்டத்தை மாணவர்களுக்கு தெளிவாக விளக்கினர். படை கிளம்பியது.

 

பள்ளியை அப்படியே விட்டுவிட்டு. பள்ளிக்கு வெளியே சென்றனர். பள்ளி, முக்கிய சாலையில் இருந்து இரண்டு கி.மீ தொலைவில் இருந்தது. பேரணியாக கையில் செய்திப் பலகைகளுடன் சென்ற மாணவர்கள் இறுதியாக சாலையை மறித்து அமர்ந்தனர். அமர்ந்து சில நிமிடங்களில் ஊடகங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களும் வந்து சேர்ந்தனர். போலிஸ் குவிந்தது. பள்ளிக்குள் நடக்கும் அனைத்தும் தெளிவு படுத்தப்பட்டன. அரசின் கவனத்திற்கு சென்றது. தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டது. அந்த மாணவனின் மரணத்துடன் தொடர்புடைய பி.டிக்கள் அனைவரும் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர். மேலும் பலரும் அவமானம் தாங்காமல் வெளியேறினர். நீதிமன்றம் தலையிட்டது. தண்டனை கிடைத்தது. இரண்டு நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டனர். இப்படிப்பட்ட பெரும் பள்ளிகள் மீதான அரசின் கண்காணிப்பும் பலமாகியது. நிலைமை சீரானது. புரட்சியில் பங்கு கொண்ட மாணவர்களுக்கு இறுதிவரை தனியாக மரியாதை அளிக்கப்பட்டது. ஹஸனுக்கு பள்ளிப்படிப்பும் முடிந்து கோயும்புத்தூரில் ஒரு பொறியியல் கல்லூரியில் சேர்ந்தான்.