Browsed by
Category: சிறுகதை

தலைவலி (சிறுகதை)

தலைவலி (சிறுகதை)

லைவலி

பாபா பகுர்தீன்
அன்றுகாலைஎழுந்ததில்இருந்தேதலைவலி. கடந்தசிலநாட்களாகமயக்கம்போல்தென்பட்டஏதோஓர்விசித்திரநோய்தற்போதுதலைவலியாய்தலையெடுத்திருப்பதைமட்டும்தெளிவாகஉணரமுடிந்தது.
நான்எப்பொழுதும்அப்படித்தான். உடல்நிலைசரியில்லைஎன்றால்நேரேமருத்துவரிடம்போய்நிற்கும்பழக்கம்பிறந்ததில்இருந்துகிடையாது. காய்ச்சல்வந்தால்குளுரும்நீரில்குளித்துவிட்டுநேரேசென்றுநாலைந்துஐஸ்க்ரீம்களைவிழுங்கிவிட்டுவரும்மிகச்சிலரில்நானும்ஒருவன். இந்தத்தலைவலிஎன்னைஎன்னசெய்துவிடும்?.
அலட்சியம்மேலோங்கவலியும்மேலோங்கிதொல்லைகொடுத்தது. என்னசெய்யலாம்இப்போது?
கண்ணைமூடு. தூங்கிவிடுவோம்.
ம்ஹூம். யோசனைசெய். உனக்கானஅனைத்துபதிலும்உனக்குள்ளேயேஉறங்கிக்கிடக்கிறது.’
ஏதோஒருபெரியமனிதர்சொன்னசொல்லைமனம்வெளியிட்டுக்காட்டியது.
உள்ளுரபயணம்மேற்கொள். எல்லாத்துன்பத்திற்கும்மனம்தான்காரணம். ஆம்இந்தத்தலைவலிக்கும்.
ஐயாதயவுசெய்துஆளைவிட்டுவிடுநான்தலைவலிக்கானகாரணத்தைசிந்திக்கிறேன்எனகெஞ்சிக்கூத்தாடிதத்துவம்பேசிக்கொண்டிருந்தமனதைஒருசமன்பாட்டுக்குகொண்டுவந்துவிட்டுசிந்திக்கத்துவங்கினேன். இரண்டுநாட்களுக்குமுன்னால்நிகழ்ந்தசிலநிகழ்வுகள்நினைவுக்குவந்தன. ஒருவேளைஅவற்றால்தான்இருக்குமோ? எனசிந்திக்க, மனம்பதிவுகளைதுலக்கத்துவங்கியது.
இரண்டுநாட்களுக்குமுன்.
வாங்கவாங்க. உங்களஎங்கலாம்தேடுறது. நாங்கஒருநிகழ்ச்சிநடத்தப்போறோம். தேடல்ன்றபேரில. ஏற்கனவேசொல்லிருக்கேனே. அதுக்குநாங்கஎடுத்திருக்கவீடீயோக்ளிப்ஸுக்குகொஞ்சம்டயலாக், ஸ்க்ரிப்ட்எல்லாம்எழுதித்தறனும். அதான்கூப்பிட்டேன்.’
அதுக்கென்ன. க்ளிப்ஸபோட்டுகாட்டுங்க. எழுதிடுவோம். நான்என்னமோபெரிசாபயந்துக்கிட்டேன்
பயங்கரமானஎஃபக்டுகளுடன்விருதுகள்வல்லியநிறபிண்ணனியில்தோன்றும்படியானவீடியோக்ளிப்ஒன்றுஓடியது.
யாருக்குங்க. விருதுகுடுக்கப்போறிங்க? தேடல்ன்றதுஏதோதொழில்முனையும்இளைஞர்களுக்கானநிகழ்ச்சினுதானசொன்னிங்க?’
ஆமாம். இந்தப்ரோகிராம்லஏற்கனவேபிஸினஸ்லஇறங்கிஜெயிச்சவங்களுக்குஅவார்ட்கொடுக்கப்போறோம். இப்புடிசெய்றதுயூத்ஸுக்குஒருஎன்கரேஜ்மெண்டாஇருக்கும்னுநெனைக்கிறோம்.’
ரைட்ரைட். அப்பஇந்தவீடியோநீங்கவிருதுகொடுக்கறதுக்குமுன்னாடிபோடுவிங்க. புதியதலைமுறைதமிழன்விருதுகள்மாதிரி
கரெக்ட். நீங்கஇப்பஇதுக்குவொர்டிங்ஸ்கொடுக்கனும்
வொர்டிங்ஸ்எப்புடிஇருக்கனும்? கவிதைமாதியாஇல்லசும்மாகேட்சியாவா?’
கவிதை
.கே
மணிசரியாகபத்தைத்தொட்டிருந்தது. நான்யோசிக்கஅவர்எடிட்டிங்வேலையைதொடர்ந்துகொண்டிருந்தார். லேஸ், சாக்லேட்எனஅரைமணிநேரஅரவைக்குப்பின்ஒருகவிதை அகப்பட்டது.
பார்பிறழும்அந்நிமிடம்
சார்பொடியும்அத்தருணம்
தோன்றும்இஃது
நின்உறங்கும்புதைதிறன்சுட்டி
நாம்அறியாநம்மைஇனம்காட்டும். தேடல்
எப்டிங்கஇருக்கு?’
என்னங்கஇதுஒன்னுமேபுரியல. கொஞ்சம்எக்ஸ்ப்ளைன்ப்ளீஸ்
அதாவதுஇந்தகவிதைதேடல்னாஎன்னஎப்புடிஇருக்கும்னுஉணர்த்துரவகையிலஇருக்கு.’
சரி
எல்லாருக்கும்வாழ்க்கையிலஒருநிமிஷம்வரும். அந்தநிமிஷம்நாமநமக்குனுகற்பனசெஞ்சுவச்சிருக்கஉலகத்ததலகீழாதிருப்பிடும். அதுக்குத்தான்பார்பிறழும்அந்நிமிடம்.
அதேமாதிஅந்தநிமிஷம்நாமசார்ந்திருக்கஎல்லாதையும்எல்லாரையும்பொய்னுகாட்டிஉண்மையஒடைக்கும். அதுக்குதான்சார்புஉடையும்அத்தருணம்.
உங்களுக்குள்ளதூங்கிக்கிட்டிருக்கபுதஞ்சுகிடக்கிறசக்தியஎழுப்பிவிட்டு, உங்களுக்கேநீங்கயார்னுஅடையாளம்காட்டும். இதத்தான்இங்கசொல்லவந்தேன்.’
ம். இதுநல்லாருக்கே. அப்ப்டியேயூஸ்பண்ணிக்குவோம்
ரைட்பாத்துக்கங்க. நான்கெளம்புறேன்?’
என்னகெளம்புறிங்களா?’
அப்புறம்?’
இன்னும்பத்துபதினஞ்சுக்ளிப்ஸ்பாக்கிஇருக்கு
இப்பஎன்ன. காலைலசெய்வோம். மணிவேறபத்துக்குமேலஆச்சு
ஏங்கஏங்கப்ளீஸ்ங்க. நாளைக்குகாலைலரெக்கார்டிங். இன்னைக்குநைட்குள்ளஎல்லாத்தையும்முடிச்சாகனும்.’
அதுக்கு?’
இங்கயேதங்கிடுங்களேன். முடிச்சுட்டுகாலைலபோலாம்
இப்பஎன்னமுடியாதுனாநீங்கவிடவாபோறிங்க. இருக்கேன்.’
தலாஷ், மைகாட்எனஹிந்திபடங்களின்தயவால்தூக்கம்விரட்டப்பட்டுவிடியவிடியவேலைமுடிந்தது.
மறுநாள்காலைகல்லூரியில்,
நன்றாகஉறங்கிக்கொண்டிருக்கையில்டேய்எந்திரிஎனஅருகில்அமர்ந்திருக்கும்நண்பன்தட்டியதைத்தொடர்ந்து மாணவர்களின்ஒருமித்தகுரலில்குட்மார்னிங்ஒலித்தது.
கண்ணைத்திறந்துபார்க்கையில்குட்மார்னிங்ஆல். சிட்டவுன்எனகூறிக்கொண்டேபேராசிரியர்உள்ளேவருவதுபுலப்பட்டது. நாம்தூங்கிக்கொண்டிருப்பதுவகுப்பறையில்எனநிதானித்துக்கொள்ளஒருநிமிடம்பிடித்தது.
வகுப்புதுவங்கியது. உள்ளேநுழைந்தஆசிரியர்எதுவும்பேசவில்லை. கரும்பலகைப்பக்கம்திரும்பிஏதோஎழுதஆரம்பித்தவர், பத்துநிமிடம்கழித்துதான்திரும்பினார். அவர்விலகபலகைபல்வேறுபடங்களுடன்கூடியஆல்ஃபாக்களாலும், பீட்டாக்களாலும், காமாக்களாலும்நிரம்பிவழிந்தது.
இன்னைக்குநாமபாக்கப்போறதுஜெனரேட்டர். .கேஎனவழக்கமானநடையில்ஆசிரியர்ஆரம்பித்தார்.
டேய்நான்போனதடவக்ளாஸ்க்குவந்தப்பஇதேசப்ஜெக்ட்தானேஓடிச்சு?’ எனபக்கத்தில்கேட்க
ஆமா. நேத்துக்ளாஸ்க்குதான்நீவந்தைலஎனபதில்வந்துவிழுந்தது.
. ஆமாமாநேத்துவந்ததுக்குள்ளஇன்னைக்குவந்துட்டமேஎனப்பெருமிதத்துடன்வகுப்பைக்கவனிக்கலானேன்.
.சிஜெனரேட்டர்முடிந்துஃப்ளம்மிங்லாக்கள்முடியஆங்கிலவகுப்புதொடங்கியது. அப்துல்கலாமோஆர்.கேநாரயணனோதெரியவில்லை. ராவெல்லாம்விழித்தகண்களின்ஷட்டரைமூடச்சொல்லிமூளைஉத்தரவிடமெல்லவும்முடியாமல்விழுங்கவும்முடியாமல்ஓர்அரைமயக்கநிலையில்மீதிவகுப்புகள்சென்றன. உணவுஇடைவேளையின்போதுகூடஉணவில்நாட்டமில்லைஎன்றால்அதன்வீரியத்தைப்பார்த்துக்கொள்ளுங்களேன்.
ஒருவழியாககல்லூரிமுடிந்துமற்றவேலைகளைஎல்லாம்முடித்துவீடுதிரும்பமாலைஐந்தானது. தூக்கமின்மையும்களைப்பும்பாடாய்ப்படுத்தஉடனேகண்ணயற்வதற்கானவேலையில்இறங்கினேன். இணையதளத்தைஇரண்டுநாட்களாகதொடாததுநினைவுக்குவரகணினிதிறக்கப்பட்டது. அனைவரையும்போல்ஃபேஸ்புக்கைகடந்துமின்னஞ்சல்ஏதும்வந்துள்ளதா? எனஒருடேபைதிறக்க, புதிதாகஒருஅஞ்சல்என்பார்வைக்காககாத்துக்கிடந்தது.
இதுதான்இன்றையதலைமுறைஇணையத்திற்குகட்டுண்டுகிடப்பதன்முதன்மைக்காரணம். தினமும்பலரிடமும்அடிபட்டுஉதைபட்டுவருபவனிடம்உனக்கும்மனமுண்டு, அதனைப்பகிரவும்இடமுண்டுஎனஆறுதல்கூறிஇடமளித்துஉங்கள்கட்டளைக்காககாத்திருக்கிறேன்எனமீண்டும்அலாவுதீன்பூதமாய்நம்முன்பவ்யமாய்நிற்கும்அதேதன்மைதான். அதேஅடிமைத்தன்மைதான். தனக்கும்ஒருஅடிமைஇருப்பதால்ஒவ்வொருவரும்தன்னைஅரசானகப்பாவித்துவாழும்அந்ததன்மையைத்தருவதால்தான். உண்மையில்இணையம்நமக்குஅடிமையாஇல்லைநாம்இணையத்திற்குஅடிமையாஎன்றுஒருவன்சிந்திக்கத்துவங்கினால், அவன்அவ்விடத்தில்ஒருமிகப்பெரியவியாபாரயுக்தியைகண்டடைந்துவிட்டான்என்றுபொருள். சரிகதைக்குவருவோம்.
Poems எனும்தலைப்பில்கிட்டத்தட்டநாற்பதுஇணைப்புகளுடன்கூடியஒருமின்னஞ்சல். நண்பனிடம்இருந்து.
காலையில்இருந்துகளைப்படைந்தவனுக்குகவிதைஎன்றவுடன்புத்துணர்வுபிறந்தது. மிகஆர்வத்துடன்பதிவிறக்கம்செய்துகோப்பைத்திறந்தேன். முதல்கவிதையேஆளைஅடித்துதுவைத்துப்போட்டது. யாம்பெற்றஇன்பம்பெருகஇவ்வையகம்எனும்கோட்பாட்டின்படிவாழ்வதால்இதைஉங்களிடம்பகிராமல்என்னால்இருக்கமுடியவில்லை.
AVOID CIGARETTE
Cigarette destroys the nervous system of the body,
Nicotine chemical is mixed in it,
It spreads throughout the lungs
Activities of the body will be stopped
First destroys the stomach and lungs,
Destroys energy and gives laziness.


Increases the calf and throat infection
It gives palpitation,
Blood pressure cannot be managed properly
If you have smoking habit,
Stop immediately and save your life
Everything is possible for everybody.
GLOSSARY:-
Nicotine – the poisonous chemical substance in tobacco Palpitation – rapid or irregular beating of your heart caused by fear or excitement.
By,
Thambi, Bsc OOO, XYZ College, XYZ, www.facebook/thambi887, thambi887@gmail.com, 8542146321
என்ன. எப்படியுள்ளது. எனக்கும்ஒன்றும்விளங்கவில்லை. உடனேநண்பனைதொலைபேசியில்தொடர்புகொண்டேன்.
டேய்யாருடாஅந்ததம்பி? என்னடாஅனுப்பிவச்சிருக்க?’
அதுநம்மஜூனியர்டா. கவிதைஎழுதிருக்கேன்னுசொல்லிஎனக்குஅனுப்பிவச்சான். நான்அப்டியேஉனக்குஅனுப்பிவச்சேன்.’
அப்பநீவாசிக்கல
ம்ஹூம்.’
இணைப்பைத்துண்டித்தேன்.
என்னால்இனிதூங்கஇயலாது. அந்ததம்பியிடம்பேசியேஆகவேண்டும். ஒவ்வொருகவிதையின்இறுதியிலும்இருந்ததம்பியின்பயோடேட்டாவைசற்றுபார்த்தபின்அவனதுஃபேஸ்புக்ஐடிக்குச்சென்றேன்.
தம்பிநீங்கள்அனுப்பியுள்ளதைதயவுசெய்துபடித்துப்பாருங்கள்எனஒருமெசேஜ்அனுப்பினேன். ஒரேநொடியில்தம்பியிடமிருந்துஒருப்ரண்ட்ரெக்வஸ்ட்டும்அதனைத்தொடர்ந்துமறுமொழியும்வந்தது.’
ஏணேநல்லாஇல்லையா?’
அப்டிஇல்லதம்பி. இதஎந்தவகையிலகவிதைனுசொல்றது?’
இல்லணேஎங்கஇங்கிஷ்சார்தான்கவிதைனாசிம்பிளாவும்இருக்கலாம்னுசொன்னாரு
கவிதைசிம்பிளாஇருக்கலாம்தான். ஆனாஇதுலகவிதைக்குரியஎதுவும்இல்ல
இல்லணேஅவருதான்சொன்னாரு. நான்இதுமாதி400 கவிதைஎழுதிஇருக்கேன். இதுஎல்லாத்தையும்தொகுத்துபுக்காகொண்டுவரனும். அதான்அண்ணேஉங்ககிட்டஅனுப்புறேனுசொன்னாரு. முடியாதுனாஒன்னுமில்லனே. நான்வேறயாரையாவதுபாத்துக்கிறேன்.’
நான்முடியாதுன்னுசொல்லல, இதநீயேபடிச்சுபாருபுரியும்னுசொல்றேன். புரியுதா
எதிரிலிருந்துபதிலேதுமில்லை. சற்றுநேரத்தில்தம்பிஆஃப்லைன்சென்றான். சற்றுநேரத்தில்அவனதுசுவற்றுக்குஎன்னால்செல்லமுடியவில்லை. தம்பிஎன்னைப்ளாக்செய்துவிட்டதுபுரிந்தது.
சோர்வுதலைவலியாகபரிணமித்தஇடம்இதுதான். அதோடுதூங்கிவிட்டேன். எழுந்தும்தலைவலிமாறவில்லை. அதிகரித்துக்கொண்டேசென்றது. இதேநிலைதான்இன்றும். தாங்கமுடியாதவலி. காலையில்இருந்தேஜீஅழைத்துக்கொண்டேஇருந்ததால்அவர்கடைக்குக்கிளம்பினேன்.
என்னங்கரொம்படல்லாஇருக்கீங்கஜீயின்குரல்அக்கரைஇக்கரைஎனஎல்லாக்கரையோடும்வரவேற்றது.
ஒன்னுமில்லைங்கஜீ. ரெண்டுநாளஒரேதலவலி.’
என்னஏதுனுடாக்டரபோய்பாக்கவேண்டியதுதானே?’
அடப்போங்கஜீ. நாமஎன்னைக்குபோனோம். காலைலஇருந்துதலவலிவந்ததுக்கானகாரணத்ததான்யோசிசிட்டுஇருந்தேன்.’ எனநடந்தவற்றைக்கூறினேன்.
பலமாகசிரித்தவர்ஆமாஉங்ககண்ணாடிஎங்க?’ என்றார்.
அதுஒடஞ்சுபோச்சு. பாக்குறதுலபெருசாஏதும்பிரச்சனைஇல்லாததாலஅப்புடியேவிட்டுட்டேன்.’
எத்தினநாளாகண்ணாடிபோடல
மூனுநாளா
அதான்தலவலிக்குது
சும்மாகிடந்தமனம்மீண்டும்எழுந்துகொண்டுதத்துவஜெபத்தைதுவங்கியது. ஜீயும்தொடர்ந்தார்.
நீங்கதூங்காமஇருக்கிறதுஒன்னும்புதுசில்லயே. கண்ணாடிபோடலைனாஅப்டிதான்தலவலிக்கும்
பலமணிநேரம்யோசித்துவைத்ததலைவலிக்கானகாரணத்தைஜீயுடனானஒருநிமிடஉரையாடல்உடைத்தெறிந்துவிட்டது. இறுதியில்,
ஆமாங்கஜீ. வெவெரம்தெரிஞ்சநாள்லஇருந்துகண்ணாடிபோடறநீங்கசொன்னாஎல்லாம்சரியாத்தான்இருக்கும்.’ எனஒப்புக்கொண்டேன்.
அடுத்து, கண்ணாடிபோடவேண்டும்எனதிட்டத்தைமாற்றினேன். கண்ணாடிபோடவேண்டும்என்றமுடிவுமட்டுமே, அதற்காகடாக்டரிடம்எல்லாம்போகமுடியாது. கண்ணாடியின்பவர்தெரிந்தால்போதும்நாமேசென்றுஏதாவதுஆப்டிகல்ஸில்கண்ணாடிவாங்கிவிடவேண்டியதுதான். உடைந்தகண்ணாடியைவைத்துஏதாவதுபரிசோதனைசெய்துநமதுபவரைநாமேதெரிந்துகொள்வோம்எனும்தீர்மானத்தோடுவீட்டைநோக்கிநடையைக்கட்டினேன்.
சராமாரியாகஅலமாரியைக்கிளைத்தும்பவருக்கானதுருப்புச்சீட்டுஏதும்சிக்கவில்லை. பரிசோதனைக்காகவன்கொடுமைசெய்யப்பட்டமெழுகுவர்த்திகளும்பல்புகளும்ஆடிகளும்ஏன்என்கண்களும்கூடகையைவிரித்தன. பிறகு,
எதுக்கிருக்கிறதுநம்அடிமை. இணையத்தில்Online Eye Power Test’ எனடைப்செய்துதுலாவினேன். ஓரிரண்டுஉருப்படியானதளங்கள்வசமாகமாட்டின.
முதலில்என்கணினியின்திரைஅளவைக்கேட்டன. பின்னர்திரையிலிருந்துஒன்றரைமீட்டர்விலகிஉட்காருமாறுகூறின. அப்படியேசெய்தேன். பின்னர்கண்மருத்துவரைப்போல்ஒருகண்ணைமூடிக்கொண்டுசிலஎழுத்துக்களைவாசிக்கச்சொல்லின. இறுதியில் முடிவுவந்ததுL: -1.5; R: -0.5. மறுநிமிடம்ஜீயைதொடர்புகொண்டேன். கண்ணாடிவாங்கப்போவோம்வாருங்கள்என்றேன். அவரும்வீட்டுக்குவந்தார்.
எந்தடாக்டர்கிட்டபோனிங்க
எல்லாம்நம்மடாக்டர்தாங்க.ஜீ
யாருங்க? நம்மூர்லதான்கண் டாக்டர்யாருமில்லையே?’
நாமதாஜீடாக்டர்
விளையாடாதீங்க. இதெல்லாம்டாக்டர்கிட்டதான்பாக்கணும். பவர்மாறுனாபிரச்சனையாயிடும். எனக்குத்தெரிஞ்சுஒருத்தருக்குகண்ணுதெரியாமபோய்டிச்சு. அதாவதுபரவாயில்ல. இன்னொருத்தருக்குபவர் மாத்தி கண்ணாடி போட்டதால மாறுகண்வந்திடிச்சு.’
நான்இதற்குமேல்ஒன்றும்பேசவிரும்பவில்லை.
எந்தடாக்டர்கிட்டபோலாம்?’
டாக்டர்அஞ்சுமணிக்குதான்வருவாரு
சார்வரஆறுமணியாகும்
டாக்டர்ட்யூட்டிமுடிச்சுவரஆறரையாகும்
ஆர்வக்கோளாறில்மூன்றரைக்கேபோய்நின்றதுதவறாகிவிட்டது. சரிநேரத்தைக்கடத்தஇந்தஊரில்எத்தனைகண்மருத்துவமனைஇருக்கும்எனசுற்றிப்பார்த்துவிடுவோம்எனதீர்மானமானது. ஒவ்வொருஇடத்திலும்ஒவ்வொருநேரம்சொன்னார்கள். இறுதியாகஆரம்பித்தஐந்துமணிஆஸ்பத்திரிக்கேவந்துசேர்ந்தோம்.
எந்தசெய்யு?’ டாக்டர் மலையாளி.
படிக்கிறேன்
ஞான்அதகேக்கில்லா. சரீரத்துக்குஎந்துனுகேட்டு
ரெண்டுநாளாகண்ணாடிபோடாததாலதலவலிக்குது
அவர்எதுவும்பேசவில்லை. எல்லோரும்செய்வதைப்போல்ஒருகருவியில்எட்டிப்பார்க்கச்செய்தார். பலூன்கள்தெரிந்தது. பின்னர்சிறுத்துவரும்எழுத்துக்களைபடிக்கச்சொன்னார். இறுதியில்ஒருபேப்பரில்எனக்குதெரிந்திடாதபடிL -1.5; R -0.5 எனஎழுதினார். ஆன்லைன்பரிசோதனையின்துல்லியத்தைநினைத்துநான்வியந்தேன். பிறகு, நர்சிடம் சைகை காடினார். எனக்கான சோதனை முடிந்தது என உணர்ந்தேன்.
டாக்டர் போல் இரண்டு வசனத்தை பேசாமல் டீவி பார்க்கக்கூடாது, வெளிச்சம் குறைவா படிக்கக் கூடாது, டீ காபி குடிக்கக்கூடாது என நூற்றுக்கும் மேற்பட்ட வசனங்களை பேசினார் அந்த நர்ஸ். ஆனால் டாக்டருக்கும் இவருக்கும் ஒரு ஒற்றுமை, என்னை எதுவும் பேச அனுமதிக்காமல் அவர்களே ஒருமுடிவுக்கு வந்திருந்தனர்.
டாக்டர் ஃபீஸ் முன்னூறு. மருந்து மாத்தர ஒரு நூறு. கண்ணாடி ஹால்ஃப் ஃப்ரேமா குடுத்துருவோம். பில்லக்காட்டி கையோட வாங்கிட்டுபோயிடுங்க. அது ஒரு எழுநூறு, ஆக மொத்தம் ஆயிரத்திநூறு’
மாத்தர எல்லாம் எனக்கு வேணாம். கண்ணாடி வெளிய வாங்கிக்கிறேன். இந்தாங்க’ என்று முந்நூறு ரூபாயை நீட்டினேன்.
என்ன நீங்க. அதெல்லம் முடியாது. இங்க தான் எல்லாம் வாங்கியாகனும். இல்லனா உங்க மேல கம்ப்ளைண்ட் பண்ண வேண்டி வரும்’
இந்திய சடட்த்தின் அழகு எங்கே இருக்கிறது தெரியுமா. இங்குதான். கம்ப்ளைண்ட் பண்ணப்பட வேண்டியவனே கன்ப்ளைண்ட் கொடுத்து நம்மை மிரட்டும் அந்த இடத்தில் தான்.
வேறு வழியே இல்லை. ஏண்டா இந்த ஆஸ்பத்திரிக்கு வந்தனு மனசுக்குள்ளயே திட்டிக்கிட்டு ரெண்டு ஆயிரம் ரூபாய் நோட்டை நீட்டினேன்’
சில்லரயா நூறு ரூபா இல்லையா’
இல்ல’
சரி மேல போய் டெஸ்ட் எடுத்துட்டு அவுங்க்கிட்டயே சேஞ்ச் கேட்டு வாங்கிட்டுவாங்க’
டெஸ்ட்டா?’
ஆமா ப்ளட் டெஸ்ட், யூரின் டெஸ்ட், சளி டெஸ்ட் எல்லாம்.’
எதுக்கு?’
என்ன நீங்க கேள்வியா கேக்குறிங்க. எல்லாம் உங்க நல்லதுக்கு தான். போங்க மொதல்ல’
மேல சென்றவுடன் என் இரத்தத்துக்காகவே காத்துக்கிடந்த காட்டேரி போல் ஒரு நர்ஸ் பெரிய ஊசியை வைத்து உறுஞ்சி ஒரு டப்பாவைக் கையில் கொடுத்து அதில் சிறுநீர் நிரப்பி வருமாறு கழிப்பறையை நோக்கி கைகாட்டியது.
மொத்தம் முன்னூறு’.
ஆயிரத்தைக் கையில் கொடுத்தேன். மீதிச் சில்லரை கொடுத்தது.
இன்னும் ரெண்டு நாள் கழிச்சு வந்து ரிசல்ட வாங்கி டாக்டர்கிட்ட காமிச்சுட்டு போங்க’
எதுக்கு. இன்னைக்கு புடுங்கினது பத்தலையா’ என முனுமுனுத்தேன்.
படியில் மேலிருந்து கீழே இறங்கும் போது ஜீயிடம் ‘ஜீ கீழ போனதும் குனிஞ்சு பேசாம நடங்க. யாரையும் பாக்காதிங்க’ என சொல்லிக்கொண்டே வந்தேன். கீழே வந்தவுடன் என் கைபேசியை எடுத்து சைலண்ட்டில் போட்டுவிட்டு காதில் வைத்தேன்.
ம். சொல்லுங்க. கேக்குது. ஹலோ. உங்களுக்கு கேக்கலையா. இதோ இருங்க வெளிய வரேன்.’ என பேசிக்கொண்டே ஜீயுடன் வெளியேறினேன். பின்னால் திரும்பி பார்க்காமல் ஓட்டமும் நடையுமாக அந்த மருத்துவமனை இருந்த திக்கைவிட்டு வெளியேறினோம்.
என்ன்ங்க நீங்கபாட்டுக்க வெளிய வந்துட்டீங்க’
அப்பறம் இருந்து ஆயிரத்தி நூற குடுத்துட்டு வர சொல்றிங்களா? யூரினுக்குப் பதிலா தண்ணிய செக் பண்ணப்போறவனுங்களுக்கு முன்னூறே அதிகம். இதில என் ரத்தத்த வேற உருஞ்சிட்டானுக’
ஓ அதான் டாய்லட்குள்ள போனவொடன வெளியேறிட்டிங்களா?. டெஸ்ட் பண்ணாம மொதல்லயே ஓடி வந்திருக்கலாம்ல’
அது தர்மம் இல்ல ஜீ. எதோ நமக்கு ஐ பவர் சொன்னதுக்கு ஒரு முன்னூறு’
யூ ஆர் க்ரேட் (சிறுகதை)

யூ ஆர் க்ரேட் (சிறுகதை)

யூ ஆர் க்ரேட்
     பாபா பகுர்தீன்
டாக்டர் எப்ப வருவாங்க?’
இன்னும் ஒரு மணிநேரம் ஆகும்’. கேள்வி முடியும் முன்பே எரிச்சலுடன் அந்த நர்ஸிடம் இருந்து பதில் வந்தது.
ஒருமணி நேரமா?’ என் வாய் பிளந்தது.
இந்த பல்சர் 150cc வந்ததில் இருந்து இப்படித்தான். மாதத்திற்கு ஒருமுறையாவது விழுந்தெழுவது அண்ணனுக்கு வழக்கம் ஆகிவிட்டது. அப்படி அடிபடும் போதெல்லாம் வீட்டிற்குச் சொல்வதற்கு முன் என்னிடம் சொல்லிவிடுவது இயல்பு. அதே முறையில் இன்று மதுரையிலிருந்து தூக்குக்குடி செல்லும் பைபாஸில் அருப்புக்கோட்டை அருகே விழுந்துகிடப்பதாக தகவல் சொன்னான். கூட்டம் கிளப்புவது அவனுக்கு பிடிக்காது. அதனால் தனியொருவனாக கிளம்பி சில பேருந்துகள் மாறி ஒருவழியாக அவ்விடத்திற்குச் சென்று சேர்ந்தேன்.
இம்முறை சற்று கோரமான அடி. முகம் தேய்ந்து பல்லுடைந்து உடல் அரைத்து மிக கோரமான அடி. ஏதோ வில்லனை சண்டையிட்டு தன் காதலிக்காக காத்திருப்பவனைப் போல சில பாகங்கள் நெளிந்த வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு ரத்தம்சொட்ட அதன் மேல் உதடு வீங்கியவனாக வீற்றிருந்தான். அவன் முகத்தில் வலியின் ரேகை சற்றும் தெரியவில்லை. அடிபட்ட கையுடன் அதே வண்டியை மதிய வெயில் கொளுத்த மீண்டும் கிளப்பிக் கொண்டு மருத்துவரை பார்க்க அருப்புக்கோட்டை வந்துவிட்டோம். அங்கிங்கு விசாரித்ததில் நல்ல மருத்துவர் என ஒருவர் கைகாட்டப்பட்டர்.
முதலுதவி செய்யப்பட்டது. ஒன்னும் பெரிய பிரச்சனை இல்லை என்றும். மருத்துவர் வந்த பிறகு சிகிச்சையை ஆரம்பிக்கலாம் என்றும் ஒரு கட்டிலில் அண்ணன் படுக்கவைக்கப்பட்டான். மருத்துவர் வர இன்னும் ஒரு மணிநேரம் என்ன செய்வது. ஒரு மணி நேரம் சும்மா இருப்பது பைத்தியம் பிடிக்க வைத்துவிடும். எனவே ஊர்சுற்ற கிளம்பிவிட்டேன். நான் கிளம்ப சரியாக செல் மணியடித்தது.
அப்பா காலிங்.
யார்ரா?’
அப்பா
என்னது. அவருக்கு எப்டிடா தெரிஞ்சது?’
தெரியலைசும்மா கூடா கூப்பிடலாம். நாமலா உளறீர கூடாது என நினைத்துக்கொண்டு ஹலோஎன்றேன்.
எங்கடா இருக்கஅப்பாவின் குரலில் பதட்டம் இல்லை. அப்படியென்றால் அண்ணன் விழுந்தது தெரியாது. அப்பாடா என பெருமூச்சு விட்டபடி காலேஜ்லப்பாஎன்றேன். அண்ணனுக்கு சைகை செய்தேன். அவன் முகமும் மலர்ந்தது.
ஓ அப்டியா. உங்கிட்ட ட்க்‌ஷ்னரி, என்சைக்ளோபீடியா எல்லாம் இருக்கா?’
என்னடா இது  எல்.கே.ஜில இருந்து எப்படிடா படிக்கிறனு கேட்கக் கூட நேரமில்லாத அப்பாவா இதெல்லாம் கேட்கிறார் என குழம்பிய நிலையில் எதுக்கு கேக்குறீங்கஎன்றேன்.
இல்ல ஒரு அக்காஎன தொடங்கியவர் இரு ஒரு நிமிஷம்எனக் கூறி இன்னொருவரிடம் மொபைலை கொடுத்தார். ‘குட் ஈவ்னிங். திஸ் இஸ் ரம்யா. எம்.பி.ஏ படிச்சிட்டிருக்கேன். ஒரு ப்ராஜக்ட் விசயமா இங்க வந்திருக்கேன்.’
ம். சொல்லுங்க
அப்பா சொன்னாரு. நீங்க பி.ஏ ஹிஸ்டரி படிச்சிட்டிருக்கதா. யூ ஆர் க்ரேட். அப்பறம் ஸ்டடீஸ் எல்லாம் எப்படி போய்ட்டிருக்கு
பி.. ஹிஸ்டரி படிக்கும் ஒருவனை க்ரேட் சொன்னதை நினைத்து நொந்து ம்சொன்னேன்.
நான் அடுத்த மாசம் எம்.பி.ஏ முடிக்கிறேன். ஆக்ஸ்ஃபோர்ட்ல ப்ளேஸ்மெண்ட். அதனால் இப்ப ஆக்ஸ்ஃபோர்ட் எனக்கு ஒரு ப்ராஜக்ட் அசைன் பண்ணியிருக்காங்க. அந்த ப்ராஜக்ட் படி நான் 18,000 ரூபாய் மதிப்புள்ள புக்ஸ்அ நல்லா படிக்கிற ஸ்டூடென்ஸ்க்கு ஃப்ரீயா கொடுக்கனும். இன்னைக்கு உங்க ஸ்டோர்க்கு யதார்த்தமா வந்தேன். அப்பாவைப் பார்தேன். உங்களைப் பத்தி சொன்னாங்க. யூ ஆர் க்ரேட். நல்லா படிப்பீங்கனு சொன்னாங்க. உங்களுக்கு எங்க ஆக்ஸ்ஃபோர்ட் யுனிவர்சிடி ப்ரஸ்ல இருந்து 18,000 மதிப்புள்ள புக்ஸ்அ ஃப்ரீயா தரோம் ஓகே.’
‘……..…….’ நான் பேசவில்லை.
உங்களுக்கு இவ்ளோ காஸ்ட்லியான புக்ஸ் தறோம் ஒரு தாங்க்ஸ் கூட இல்லையா?’
.கே தாங்க்ஸ்
.கே கூல். தென் நீங்க எங்க ஆக்ஸ்ஃபோர்ட் க்ளப்ல சேரலாமே?. ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும். ஒன்லி 1000 ருபீஸ் ஃபார் எண்ட்ரீ. 18,000 வொர்த்துள்ள புக்ஸ் உங்களுக்கு வருசா வருசம் ஃப்ரீயா தருவோம். ஆக்சுவலி இப்ப நீங்க இந்த க்ளப்ல சேர்ந்தா தான் உங்களுக்கு இந்த புக்ஸ்அ ஃப்ரீயா தர முடியும்
ஒரு நிமிஷம் அப்பாகிட்ட போன குடுங்க’. போன் அப்பவிடம் சென்றது.
அப்பா நான் அந்த க்ளப்ல மெம்பராக விரும்பல. வேணும்னா நீங்க சேர்ந்துக்கங்க என கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்தேன்.
என்னடா சொல்றாரு?’ என்றான் அண்ணன்.
இல்ல. ஏதோ ஆக்ஸ்ஃபோர்ட் யுனிவசர்சிட்டி க்ளப்ஆம். மெம்பர் ஆக சொல்றாங்க. இருக்க புக்க படிக்கிறதுக்குள்ளயே முழி பிதுங்குது. இதுல வருசத்துக்கு 18,000 மதிப்புள்ள புக்ஸ் ஃபீரீயாம். நமக்கிதல்லாம் தேவையா. நல்லா விளஞ்ச மண்டை இருக்கிறவனுங்க சேர்றது. அங்க போயி பெக்க பெக்கனு முழிக்கிறதுக்கு பேசாமா இருந்திடலாம். எம்.பி., ஆக்ஸ்ஃபோர்ட்னு கடுப்புகளை கிளப்பிக்கிட்டு
·          
சில மாதத்திற்குப் பின். இனிதொரு இரவு. தூக்கம் கண்ணைத் தழுவும் நேரம். ராமிடம் இருந்து எஸ்.எம்.எஸ் வந்தது.
‘Tmrw, mrng mtng arapalayam krass roadu’. சிரித்துக் கொண்டே வாசித்தேன். காலையில் ஆரப்பாளையம் க்ராஸ் ரோட்டில் மீட்டிங். என்ன மீட்டிங் ஏன் எதற்கு என்றெல்லாம் கேட்க முடியாது. காலையில் ஆரப்பாளையத்திற்கு செல்ல வேண்டும் அவ்வளவுதான். அதுதான் நண்பனுக்கு அழகு.
·          
மறுநாள் காலை கிளம்பி ஆரப்பாளையம் க்ராஸ் ரோட்டில் உள்ள மணீஸ் பேக்கரியில் ராமை சந்தித்தேன்.
என்னடா மீட்டிங்
மீட்டிங் இல்ல. இன்டர்வ்யூஎன்றான்.
இண்டர்வ்யூவா யாருக்கு?’
எனக்கு தான். நான் படிச்சது போதும்டா. வீட்ல ஒரே பிரச்சனை. அவனுங்க காசுல காலேஜ் கீலேஜ்னு சுத்தீட்டு நான் தண்டச்சோறா அலையுறனாம். மொதல்ல ஒரு வேலையப் பாத்து அவங்ககிட்ட இருந்து வெளியேறனும்டா. அப்புறம் தான் மத்த வேளையெல்லாம்
தம்பி. இன்னும் ஒரு வருசம் தான் இருக்கு. முடிச்சுட்டு வேலை தேடலாம்ல
ஒனக்கு அதெல்லாம் புரியாது. இப்ப என் கூட மட்டும் வா. இந்தா அட்ரஸ் இது எங்க இருக்குனு மட்டும் சொல்லு’. என்று கூறி வாயடைத்த்தான்.
தண்டர் இந்தியா, 2/7, சிவானந்தம் சாலை, ஆரப்பாளையம்’.
சரிவா கண்டுபிடிப்போம்எனக் கூறி சில அடிகள் கடந்தபின் ஒரு கட்டிட்த்தின் மூன்றாம் மாடியில் தென்பட்டது வெளிரிப்போன டிஜிட்டல் தண்டர் இந்தியா போர்டு. இரண்டாம் மாடியில் இருந்த ஒரு வங்கியைக் கடந்து படியேறினோம். அவ்வங்கியின் வாசலில் அமர்ந்திருந்த செக்யூரிட்டி தாத்தா எங்களை ஏற இறங்கப் பார்த்தார். மூன்றாம் மாடியில் தமிழகத்தின் அதிசயத்திலும் அதிசயமான கரண்ட் இருந்தும் முற்றிலும் இருட்டாக இருந்தது. வாசலில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டு ஒரு இளம்பெண் ஏதோ பேசிக் கொண்டிருந்தார். அவர் பேசிமுடித்து வழிவிடட்டும் என சிறிது நேரம் அங்கு காத்திருந்தோம்.
இது தான் தண்டர் இந்தியாவா?’ என்று நான் அவரிடம் கேட்டேன்.
ஆஃப் கோர்ஸ்’. என்று புன்னகைத்தவாறு உள்ளே அழைத்துச் சென்று ரிசப்ஷனில் அமரவைத்தார். அது ஆறு நாற்காலிகள், பல தினசரிகளையும் ஒரு போட்டோ ஆல்பத்தையும் இரண்டு புத்தகங்களையும் தாங்கி நின்ற மேசை, அசையாத மின்விசிறி, ப்ளக் பிடுங்கப்பட்ட எல்.சி.டி டீவியை உள்ளடக்கிய பத்துக்கு பத்து அறை. எங்களுக்கு முன்னரே இருவர் அங்கு காத்திருந்தனர். அவர்களிடம் விசாரித்த பின் அவர்களும் நேர்முகத் தேர்வுக்கு வந்திருந்தது தெரிந்தது.
எல்லாம் எடுத்து வந்திருக்கிறீர்களா? என வினவியவாறு இரண்டு தாளை டுத்து ஒன்றை ராமிடமும் மற்றொன்ரை என்னிடமும் நீட்டினார் எங்களை அமரவைத்த பெண்.
அந்தத் தாள் பெயர், முகவரி இன்ன பிறவற்றைக் கேட்கும் பயோடேட்டா என வாசித்துப்பார்க்கையில் விளங்கியது. நான் எழுந்து நான் இண்டர்வ்யூவிற்கு வரவில்லை என்றும் ராமுடன் வந்தேன் என்றும் தெளிவுபடுத்தி அந்த காகித்தை அவரிடமே திருப்பியளித்தேன். அவர் அதனை வாங்கிக் கொண்டு போய் மேனேஜிங் டைரக்டர் என பலகை இருந்த அரைக்கு முன் இருந்த மேசையில் அமர்ந்தார். அவர்தான் ரிசப்ஷனிஸ்ட் என புரிந்தது. அவரது மேசையில் இருந்த தொலைபேசி ஒலித்தது.
ஒலித்த பேசியை எடுத்து பேசினார்.
ஹலோ தண்டர் இந்தியா என்றார்.
‘………..’ மறுமுனையில் இருப்பவரது குரல் கேட்கவில்லை.
எங்களுக்கு இந்தியால 300 ப்ராஞ்ச்சஸ் இருக்கு. இப்பதான் மதுரையில ஓபன் பண்ணி இருக்கோம். நீங்க இங்க வந்தீங்கனா க்ளியரா சொல்றோம்
’…………..’
எஸ். டுமாரோ மார்னிங் நைன் ஓ க்ளாக் இங்க வந்திருங்க, அட்ரஸ் 2/7, தர்ட் ஃப்ளோர், சிவனந்தம் ரோட், ஆரப்பாளையம்என்று கூறி முடித்தார்.
சரி ஏதோ பெரிய கம்பனி தான் போல என எண்ணியவாறு எதிர் டேபிளில் இருந்த ஆல்பம் ஒன்றை எடுத்து புரட்டலானேன். அதில் கருப்பு கோட் சூட்டுடன் இறுக டைகட்டிய நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் வராத புன்னகையை வரவழைத்து பள்ளிலித்து புகைபடத்துக்கு போஸ் கொடுத்தவாறு ஏதோ ஒரு ஐந்து நட்சத்திரவிடுதி ஒன்றில் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் பிண்ணனியில் க்ரியேட்டிவ் இந்தியா எனும் பேனர் வேறு. குழம்பிய நிலையில் ராமிடம் கேட்க ஆயத்தமானேன்.
இந்த கம்பெனியின் பெயர் தண்டர் இந்தியாவா? க்ரியேட்டிவ் இந்தியாவா?’ என கேட்டபடி அவனிடம் ஆல்பத்தில் இருந்த பெயரை சுட்டினேன்.
தண்டர் இந்தியா தான் என்றான்.
திடீரென்று எஸ், எஸ், எஸ் என்று என் முதுகுப்புறத்தில் இருந்து சத்தம் வந்த்து. என் பின்னால் இருந்த சுவரைத் தட்டிப்பார்த்தேன். தட் தட் ஓசை இது சுவரில்லை கார்ட்போர்ட் என்றது’. எங்களுக்குப் பின்னிருந்த கார்ட்போர்டுக்குப் பின் மீண்டும் யாரோ ஒருவர் ஏதோ புரியாத மொழியில் பேசும் சத்தமும் அதனைத் தொடர்ந்து பலரும் எஸ் எஸ் ஹூர்ர்ரேஹ் ஹூர்ர்ரேஹ்என கோரஸாக கத்துவதும் கேட்டது.
ராம்மூர்த்தி யூ கேன் கோ இன்என ஒருவர் வந்து ராமை எம்.டி. அறைக்குள்ளே அனுப்பி வைத்தார். அவனும் உள்ளே சென்றவுடன் என் பின் மணியடிக்கும் ஓசை கேட்டது. மணியடிக்க மணியடிக்க எஸ் எஸ் எஸ்என்ற கோரஸ் வாய்ஸ் மீண்டும் ஒலித்தது. அதனைத் தொடர்ந்து ஹலோ சார் ஹலோ மேடம், ஹலோ சார் ஹலோ மேடம்என பல ஆண்களும் பெண்களும் அவசர அவசரமாக எதையோ ஒப்பித்தனர். பின் ராணுவ வீரர்கள் அணிவகுத்துச் செல்வதைப் போல் தடார் தடார் என பூட்ஸ்கள் தரையை அடிக்கும் சத்தம் கேட்டது. ராமும் இண்டர்வ்யூ அறையைவிட்டு வெளியே வந்தான்.
மிக்க ஆர்வத்துடன் என்னடா சொன்னாங்கஎன்றேன்.
இது பெரிய மல்ட்டி நேஷனல் கம்ப்பனியாம். இவுங்களுக்கு இந்தியாவுல மட்டும் 300 ப்ராஞ்சஸ் இருக்காம். இப்பதான் மதுரைல கம்பெனி தொடங்கி இருக்காங்களாம். அதானால ஆள் செலக்ட் பண்ணிட்டு இருக்காங்களாம்.’
அப்பறம்
என்ன செலக்ட் பண்ணிட்டாங்க. 25,000 சாலரியுடன் 6 மந்த்ஸ் ட்ரைனிங். அப்பறம் அவுங்க கம்பெனியில பெர்மனெண்ட்டா எம்.டி போஸ்ட். இன்னைக்கில இருந்தே ட்ரைனிங் ஸ்டார்ட் ஆகுது. என் ட்ரைனி வந்தவுடனே கூப்பிடறோம் வெய்ட் பண்ணுங்கனு சொன்னாங்க
நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே எங்களுக்கு முன்பு அங்கு வந்து அமர்ந்திருந்த இருவரும் தாங்களும் ப்ளேஸ் ஆகிவிட்டதாகக் கூறி ராமுடன் கை குலுக்கிக்கொண்டனர்.
எஸ், எஸ், மணியோசை, ஹூர்ர்ரேஹ், ஹலோ சார் ஹலோ மேடம், பூட்ஸ் சத்தம் இப்பொழுது ராம் இருபதாயிரம் மாத சம்பளத்தில் ப்ளேஸ் ஆனது எல்லாம் சேர்ந்து என் தலையை ஒரு சுற்று சுற்றியது.
நிஜமாத்தான் சொல்றியாடா? இந்தக் கம்பெனிய எங்கடா புடிச்ச
நேத்து தினதந்தி வரி விளம்பரத்துல Wanted Ambitious Boys and Girls. Experience, Qualification not Required என இந்தக் கம்பெனியியோட விளம்பரம் வந்திருந்ச்சு
டிகிரி கூட ஒழுங்கா முடிக்காதவனுங்களுக்கு இப்படி எல்லாமா வேலை தாராங்கஎன்று மனதிற்குள் யோசித்துக்கொண்டிருக்கும் பொழுதே ராம் மீண்டும் அழைக்கப்பட்டான்.
சார் நீங்க யாரு?’என்று என்னை நோக்கி ஒரு குரல் கேட்டது.
நல்ல குட்டையான, கட்டையான, கருப்பான கோட்சூட் அணிந்த ஒரு உருவம் தன் கூலிங் க்ளாஸை அட்ஜஸ்ட் செய்தபடி என்னை வெறித்து நின்று கொண்டிருந்தது.
நான் ராம் கூட வந்தேன்
ஓ அப்டியா. இப்ப ராம் ட்ரைனிங் எடுக்கப் போறாங்க. ஈவ்னிங் சிக்ஸ் ஓ க்ளாக் வந்தீங்கனா பிக் அப் பண்ணிக்கலாம்.’
ரைட். ராம் அப்ப இத முடிச்சிட்டு காலேஜ் வந்திடுஎன கூறி அங்கிருந்து வெளியேறி கிட்டத்தட்ட பித்துப் பிடித்தவனைப்போல் அங்கிருந்து நகர்ந்து கல்லூரி வந்து சேர்ந்தேன்.
·          
இன்னும் கொஞ்ச காலத்தில் எங்கள் கல்லூரி மதுரையின் லால் பாக் அல்லது கப்பன் பாக் ஆவது மட்டும் உறுதி. கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்டிருந்த ஸ்டோன் பெஞ்ச்சில் படுத்து சற்று நேரம் ஓய்வெடுக்கலாம் என கண்மூடினேன். கணவில் எஸ், எஸ், மணியோசை, ஹூர்ர்ரேஹ், ஹலோ சார் ஹலோ மேடம், பூட்ஸ் சத்தம், ராம் எல்லாம் சேர்ந்து என் தலையை மீண்டும் ஒரு சுற்று சுற்றியது. திடீரென்று ராமின் முகம் தெரிந்தது. எழுந்திரிக்கச் சொன்னது. கண்ணை இறுக்க மூடினாலும் திரும்பத் திரும்ப அந்த குரல் என்னை எழுப்பியது. இறுதியில் எந்திரிடாஎன்ற குரலுடன் கூடிய சுளீரென்று கன்னத்தில் விழுந்த அறை என்னை எழுந்து உட்காரவைத்தது.
ராம் தான். ராமே தான். மணி இரண்டு. ஆறு மணிக்கு தானே இவன் வர வேண்டும் இப்போதே வந்துவிட்டான் என்ற எண்ணம் மேலோங்குவதற்கு முன் கேட்டுவிட்டேன். ‘என்னடா இப்பவே வந்துட்ட, ட்ரைனிங் முடிஞ்சதா?’
முடியல. பாதிலயே ஓடி வந்துட்டேன்
ஏண்டா?’
அது ஒரு பெரிய கதை
கதையா?’ நான் தயாராகி விட்டேன். ‘என்னடா ஆச்சு
எங்க ட்ரைனி வந்துட்டாங்கனதும். நீ கிளம்பினயா?’
ஆமா
அதுக்கப்புறம் ட்ரைனிங் ஆரம்பிச்சது. நம்ம கூட ஒக்காந்திருந்த ரெண்டு பேரோடா நானும் எம்.டி ரூம்ல இருந்து இன்னொரு ரூம்கு போனோம். அங்க அந்த ஆல்பத்தில இருந்தமாதிரி கருப்பு கோட் சூட்டோடு நிறைய பேர் இருந்தாங்க. அவுங்களோடு நாங்ளும் நிக்கவைக்கப்பட்டோம். எங்க ட்ரைனி எங்க முன்னாடி நின்னாரு. கையில ஒர் மணி வேற.’
மேல சொல்லு
அதோட அந்த மணிய அடிச்சபடி ஏதேதோ புரியாத பாஷையில கத்தினாரு. எல்லாரும் எஸ் எஸ், ஹூர்ர்ரேனு கத்திக்கிட்டே தரையை பூட்ஸ் காலால ஒதச்சாங்க. அப்பறம் என்னன்னமோ கூத்து நடந்துச்சு. இதெல்லாம் எங்க ப்ரொஃபெஷனால ஏற்படும் ப்ரஷரை குறைக்கவாம்
ம். அப்பறம்’. என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை.
அப்பறம் இம்பல்ஸ்னு ஐடி கார்ட் தொங்கவிட்டுகிட்டு கருப்பு சூட்காரங்க நாலு பேர் கையில பெரிய சூட்கேசுடன் எங்க கூட வந்தாங்க. நாங்க அப்டியே எறங்கி ரோட்டுக்கு வந்தோம். அவுங்க பண்றத கவனமா கவனிக்கச் சொன்னாங்க. ஒரு வீட்ட தட்டுனாங்க.’
ம்
மை டமில் நய் ஜான்த்தாஎனக் கூறிக்கொண்டு அந்த வீட்டிலிருந்த பெண் கதவை அடைத்துக் கொண்டார். அப்புறம் இன்னொரு வீட்டுக்கு போனோம் அவுங்க நாங்க சொல்றத பொறுமையா கேட்டுட்டு வீட்ல ஆள் இல்லனு சொல்லி எங்களை விரட்டி விட்டுட்டாங்க
ஆமா அப்படி என்ன தான் சொன்னீங்க
யூ ஆர் க்ரேட். அப்பறம் ஸ்டடீஸ் எல்லாம் எப்படி போய்ட்டிருக்கு. நான் அடுத்த மாசம் எம்.பி.ஏ முடிக்கிறேன். ஆக்ஸ்ஃபோர்ட்ல ப்ளேஸ்மெண்ட். அதனால் இப்ப ஆக்ஸ்ஃபோர்ட் எனக்கு ஒரு ப்ராஜக்ட் அசைன் பண்ணியிருக்காங்க. அந்த ப்ராஜக்ட் படி நான் 18,000 ரூபாய் மதிப்புள்ள புக்ஸ்அ நல்லா படிக்கிற ஸ்டூடென்ஸ்க்கு ஃப்ரீயா கொடுக்கனும். இன்னைக்கு உங்க வீட்டுக்கு யதார்த்தமா வந்தேன். உங்களைப் பத்தி பக்கத்தில சொன்னாங்க. யூ ஆர் க்ரேட். நல்லா படிப்பீங்கனு சொன்னாங்க. உங்களுக்கு எங்க ஆக்ஸ்ஃபோர்ட் யுனிவர்சிடி ப்ரஸ்ல இருந்து 18,000 மதிப்புள்ள புக்ஸ்அ ஃப்ரீயா தரோம் ஓகே. தென் நீங்க எங்க ஆக்ஸ்ஃபோர்ட் க்ளப்ல சேரலாமே?. ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும். ஒன்லி 1000 ருபீஸ் ஃபார் எண்ட்ரீ. 18,000 வொர்த்துள்ள புக்ஸ் உங்களுக்கு வருசா வருசம் ஃப்ரீயா தருவோம். ஆக்சுவலி இப்ப நீங்க இந்த க்ளப்ல சேர்ந்தா தான் உங்களுக்கு இந்த புக்ஸ்அ ஃப்ரீயா தர முடியும்
·          
விதி வலியது (சிறுகதை)

விதி வலியது (சிறுகதை)

விதி வலியதுநேற்றே ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன்.

செய்தித் தாளில் எல்.எல்.ஆர் பற்றி படித்த நேற்றே ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன், இன்று எப்படியேனும் எல்.எல்.ஆர் எடுத்துவிட வேண்டும் என்று.

பைக் ஓட்டவேண்டும் என்பது இளைஞர்களுக்கு மீசை முளைக்கத் துவங்கும் காலற்கு முன்பே முளைவிடும் ஆசை, எப்படி பெண் குழந்தைகளுக்கு தலைமயிர் உதிக்கும் முன்பே மல்லிகையின் மீது ஆசை உதிக்கிறதோ அதைப்போல. பைக் ஓட்டி ஃபிகரை மடக்கும் கதாநாயகர்கள் இருக்கும் வரையும், மல்லிகைப்பூவை வைத்தே மனதை கொள்ளையடிக்கும் கதாநாயகிகள் உலாவரும் வரையும் இந்த மோகத்தை அணைவைத்தெல்லாம் அடைக்க முடியாது, ’பைக் ஓட்டவேண்டும்என்பது கிட்டத்தட்ட ஜனநாயகக் கடமைகளுள் ஒன்றோடொன்றாய் கலந்துவிட்ட இச்சமூகத்தில். இப்படி இருக்கும் சூழலில் நான் மட்டும் என்ன விதிவிலக்கா? ஜோதியில் கலந்தால் தானே உற்சவம்.

கால் எட்டா எட்டாம் வகுப்பிலேயே பைக் ஓட்டக் கற்றுக்கொண்டு விட்டாலும், லைசன்ஸ் என்று ஒன்று வாங்கவேண்டுமே என்று என்றும் நிதானித்து யோசித்ததில்லை. பக்கத்து தெரு சகா வீட்டிற்கும், தெரு முக்குக் கடைக்கும் மட்டுமே வண்டியை ஓட்டிச் சென்ற காலம் அது. மின்னல் வேகத்தில் தெருக்களைக் கடப்பதால் கிடைக்கும் வசவுகளை மட்டுமே வண்டி ஓட்டுவதின் விபரீதமாய் நான் அறிந்து வைத்திருந்த காலம். இப்படி இருக்கையில் தான் அந்த நாளும் வந்தது.


மே மாதம். பத்தாம் வகுப்பு விடுமுறை ஆரம்பித்திருந்த சமயம். தினமும் காலை நான்கு மணிக்கு படிக்க எழுந்து பதினோரு மணிக்கு படுக்கப் போகும் அந்த ஏகாந்த நாட்களை விட்டு மனம் மீண்டுவிட்டாலும், உடல் இன்னும் மீண்டுவர மறுத்துக்கொண்டிருந்தது. விளைவு. போர் போர் பெரும் போர். போர் அமாம் அந்த சலிப்பு கழுதை தான். என்ன செய்யலாம். வேறென்ன, நண்பர்கள் நால்வர் சேர்ந்து திட்டம் தீட்டினோம்.

வீ அர் கோயிங் டு அழகர் கோவில்”, திட்டம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. கழுதை கெட்டால் குட்டிச்சுவறு, வேறெங்கு செல்ல மதுரை வாலிபர்களின் ஒரே மெரினா அழகர் கோயில் தானே. மறுநாள் காலை அனைவரும் வீட்டில் ஏதாவது கப்சா விட்டுவிட்டு கோரிப்பாளையம் பெட்ரோல் பங்கில் தனித்தனியே குழுமிவிட வேண்டும். அங்கிருந்து அமர்களமாய்க் கிளம்பி அழகர் கோயில் சென்றுவிட வேண்டியது தான் பாக்கி.

மறுநாள் காலை ஆளுக்கொரு வண்டியை எடுத்துக்கொண்டு கூடிவிட்டோம் பெட்ரோல் பங்கில். சன் கிளாஸ், ஹேர் ஜெல் என அனைத்து மேக்அப்பகளுடன் அழகர்கோவில் பயணம் இனிதே துவங்கியது. முதல் கியர், இரண்டாம் கியர், மூன்றாம் கியர்.

இன்னும் நான்காம் கியரைக்கூட கடந்திருக்கவில்லை. தமுக்கத்தில் ஒருவர் எங்கள் படையை கை மறைத்தார். வெள்ளைச் சட்டை. காக்கி பேண்ட். கக்கத்தில் கயிற்றில் கட்டி தொங்கவிடப்பட்ட ஒரு விசில். நெஞ்சில் அ.சுப்புராஜ், போக்குவரத்து காவலர் என்ற பேட்ஜ் வேறு.

எங்க தம்பி போரீங்க

அழகர் கோயிலுக்குனே, போன வாரம் தான் டெண்த் முடிச்சோம். அதான் அப்டியே சம்மர் லீவை கழிக்கச் செல்கிறோம்

சரி எப்படி வேணும்னாலும் கழிங்க, முதல்ல லைசென்ஸை எடுங்க

எதுக்குண்ணே லைஸென்ஸ், அதான் நாங்களெல்லாம், எவ்வளோ அழகா வண்டிய ஓட்டீட்டு வந்தோம்னு பாத்தீங்கள்ள

அப்படியா தம்பி வண்டியைக் கொஞ்சம் ஓரம் கட்டுங்க, ஐயா வந்தன்ன ஓட்டிக்காட்டீட்டு கெளம்பலாம்

ஓகே, ஷூயூர். நாங்க வெய்ட் பன்றோம். அவரையும் பாத்துட்டு போறோம்
கரை ஒதுங்கி நின்ற நாங்கள் நின்றோம் நின்றோம் இரண்டு மணிநேரம் கால்கடுக்க நின்றோம் சுப்பு ராஜின் கடைக்கண் தரிசனம்கூட எங்களுக்கு கிட்டவில்லை. இறுதியாக எங்கள் வண்டியை 
போக்குவரத்து வாகனத்தில் ஏற்றும் போது தான் புரிந்தது, சுப்பு ஏதோ தப்பு செய்கிறார் என்று.

அண்ணே ஏண்ணே எங்க வண்டியை தூக்கிறீங்க?”

லைஸன்ஸ், ஆர்.சி எதுவும் இல்ல. வயசும் பதினாறத் தாண்டாது. உங்களுக்கெல்லாம் பைக் அதுவும் அழகர் கோயிலுக்கு. எப்டிறா உங்க வீட்ல அனுப்புறாங்க. ஸ்டேசன் வாங்க உங்க அப்பா அம்மாவை வரவழச்சு பேசிக்கிறேன்

அனைவரது அப்பாவும் அம்மாவும் காவல் நிலையத்திற்கு தங்கள் சுற்றம் சகிதம் வருகை புரிந்தனர். இனி என்ன நடந்தது என்று சொல்லவா வேண்டும். டமால் டுமீல் தான். அந்த நிகழ்வுக்கு பிறகு பெற்றோரின் திட்டில் சம்மர் வெக்கேஷன் சராமாரியான வேகத்தில் சரிந்து முடிந்தது.

நீங்கள் கேக்கலாம், இன்றைக்கு சிறுகுழந்தைக்கு கூட தெரியும் லைஸன்ஸ் இல்லையென்றால் போலிஸ் பிடிக்கும் என. இதற்கு ஏதோதொ பதில் சொல்லி குட்டையை குழப்ப வேண்டாம் என்று நினைக்கிறேன். ஒரே கூற்றுஅந்த காலகட்டத்தில் எங்களுக்கு லைஸன்ஸ் பற்றியெல்லாம் அவ்வளவு விழிப்புணர்வு கிடையாது”. ஏனென்றால் அது லைஸன்ஸ் சரிபார்ப்பு தொடங்கியிருந்த காலம். இன்னும் கேக்காதீங்க குழப்பிடுவேன்.

அன்று முதல் எப்படியாவது ஒரு லைஸன்ஸ் எடுத்தே தீரவேண்டும் என்று தீராவேட்கை கொண்டேன். ஆனால் அதற்கான காலம் தான் கைகூடவில்லை. தொடர்ந்து வந்த ப்ளஸ் ஒண்ணும், ப்ளஸ் டூவும், குறைந்த வயதும் என்னை எதுவும் சிந்திக்கவிடாமல் செய்தன. அப்பொழுது விட்ட காலம் இப்பொழுது கிட்டியுள்ளது. பண்ணிரெண்டாம் வகுப்பு விடுமுறையில்.

விடுமுறை தொடங்கிய தினமே லைஸன்ஸ் எடுப்பதற்கான வேலைகளில் இறங்கிவிட்டேன். முதலில் எல்.எல்.ஆர் போடவேண்டும். பிறகு ஆறு மாதத்திற்குள் எட்டு போட்டும் இன்ன பிற வித்தைகளைக் காட்டியும் லைஸன்ஸை எப்படியாவது வாங்கி விடவேண்டும். இந்த சமயத்தில் தான் செய்தித்தாளில் அந்த செய்தியைப் படித்தேன். எல்.எல்.ஆர் போடுவது எப்படி? எனும் தலைப்பில் எம்.டி. உதயமூர்த்தி எழுதியிருந்த அருமையான கட்டுரை.

முதலில் தமிழ்நாடு அரசு இணையதளத்தில் பதிந்து, அவர்கள் வரச்சொல்லும் நாளில் இணையதளத்திலிருந்து சில ஆவணங்களை பதிவிறக்கம் செய்துகொண்டு அவர்களது அலுவலகத்திற்குச் செல்ல வேண்டும். ஒரு நூற்றைம்பது ரூபாயை கவுண்டரில் கட்டினால், தீர்ந்த்து வேலை. எல்.எல்.ஆர் காண்டம் இனிதே நிறைவடைந்து விடும். அந்தக் கட்டுரையை வாசிக்க வாசிக்க இன்பத் தேன் வந்து பாய்ந்தது என் காதில். இவ்வளவு எளிதான காரியத்தை இவ்வளவு நாள் செய்யாமல் விட்டுவிட்டோமே. உடனே காரியத்தில் குதித்தேன். இணையதளத்தில் அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு டான் டான் என விடையளித்தேன். நான் அளித்த தகவல்களைக் கொண்டு அவர்களே ஒரு படிவத்தை நிரப்பி என்னை நோகாமல் பதிவிறக்கம் செய்து மறுநாள் மாட்டுத்தாவணி விரைவுப்போக்குவரத்துக் கழக அலுவகத்திற்கு வரச்சொன்னார்கள்.

பொழுதும் புலர்ந்தது. விடியற் காலை பத்து மணி. வேகவேகமாய்க் கிளம்பிஇனிமேல் உன்னைச் சீண்டமாட்டேன்என சூளுரைத்து மாட்டுத்தாவணி செல்லும் பேருந்தில் ஏறினேன். சரியாக பதினோறு மணிக்கு போக்குவரத்து அலுவகத்தில் இருந்தேன்.

பெருத்திரளான கூட்டம் அங்கு கூடியிருந்தது. அங்கு இங்கு மோதி, நான்கைந்து பேர்களிடம் விசாரித்து பணம் கட்டும் அறையை அடைந்தேன். நூற்றம்பது ரூபாயை அங்கு கட்டி ரசீது பெற்றுக்கொண்டபின், ஆவணங்களையும் படிவத்தையும் ரசீதையும் அவர்கள் சொல்லும் முறையில் அடுக்கி மேல் மாடி அறையில் அமர்ந்திருந்த போலிஸ்கார அம்மாவிடம் எடுத்துச் சென்றேன்.

வில்லாபுரமா

ஆமாம், மேடம்

வயசென்ன?”

பதினெட்டு

ஊனம் ஏதும் இருக்கா?”

அதெல்லாம் இல்ல மேடம்

நான் கொடுத்த ஆவணங்களை சரிபார்த்துகொண்டே கேள்விக்கணைகளைத் தொடுத்தார்.

சரி அங்கிருந்து நடந்துவா”, என எதிரில் இருந்த கதவிலிருந்து நடந்து வரச்சொன்னார். நானும் அழகிப் போட்டியில் நடந்து வருவதைப்போல் ஒய்யாரமாய் ரேம்வாக் செய்தேன்.

ம், எல்லாம் சரியா இருக்கு, ஒரே ஒரு ஆவணம் மட்டும் மிஸ்ஸிங். யோவ்301 என்ன ஏதுனு பாருஎன்று மற்றொரு ஏட்டைக் கைகாட்டினார். அவரும் என்னை அடுத்த அறைக்கு வருமாறு சைகை செய்தார். சென்றேன்.

கொடிவீர்ர் தின நன்கொடை ரூ.100 என அச்சடிக்கப்பட்டிருந்த ரசீதை என்னிடம் நீட்டி நூறு ரூபாயை லபக்கிக்கொண்டனர். மீண்டும் அந்த காவல்கார அம்மாவிடம் சென்றேன். அந்த நன்கொடை ரசீதை மட்டும் என்னிடம் கொடுத்துவிட்டு, “ஆவணங்கள் எல்லாம் சரியாக இருக்கின்றது, கீழே சென்று இந்த ரசீதைக் காட்டி புகைப்படம் எடுத்துக்கொள்ளவும்என்றார்.

கீழ்தளத்தில் போக்குவரத்துக் குறியீடுகளும், விதிமுறைகளும் சுவற்றில் படங்களாய் மாட்டப்பட்டிருந்த அறை என்னை அன்புடன் வரவேற்றது. ரசீதை நீட்டி கணினிக் கேமராவில் ஒரு க்ளிக் எடுத்துக்கொண்டேன். எல்லாம் முடிந்தது. மாலை ஆறுமணிக்கு வந்து எல்.எல்.ஆரை வாங்கிகொண்டு போகச் சொன்னனர். ஏற்கனவே மணி நான்கு. இன்னும் இரண்டு மணிநேரம் இங்கேயே எங்காவது பொழுதைக்கழித்தால் அலைச்சல் மிச்சம் என எண்ணிக்கொண்டேன். நினைத்து முடிப்பதற்குள் செல்போன் மணியடித்தது. அர்ஜுன் காலிங்.

என்னடா மச்சி எங்கிருக்க

மாட்டுத்தாவணிலடா

எதுக்குடா அங்க போன

எல்.எல்.ஆர் எடுக்கத் தான்

ம். கலக்கு. கைல எவ்ளோ வச்சிருக்க மாப்ள?”

ஆயிரத்துல 250போக மீதி

அங்கையே இருடா நான் வரேன், பார்ட்டி ஓ.கே

அதெல்லாம் இப்ப வேணாம்டா, நாளப்பின்ன பாக்கலாம்

அதெல்லாம் அப்பறம் பேசிக்கலாம், அப்புடியே காலாற நடந்து 100அடி ரோடு டோமினோஸ் 
வந்துடு. வச்சுரேன்

என் பேச்சை துளியும் அவன் கேட்கவில்லையென்றாலும் அந்த ஐடியா எனக்கு சரியாகப்பட்டது. இரண்டு மணிநேரம் பொழுதும் போகும், சந்தோசத்தை வெளிப்படுத்த பார்ட்டியும் கூட. போனை வைத்து பத்தே நிமிடத்தில் அர்ஜுன் ஆஜராகிவிட்டான். டோமினோஸை ஒருவழி செய்துவிட்டு வெளியேறினோம். ஆறு. இருவருமாய் மீண்டும் போக்குவரத்து அலுவலகத்தை அடைந்தோம்.

மணிகண்டன்

அரவிந்தன்

ஜேம்ஸ்

கருப்பாய் கணமாய் ஒருவர் ஒவ்வொரு பெயராய் தன் கணீர்க்குரலில் வாசித்துக் கொண்டிருந்தார். அனைவரும் அமைதியாய் அங்கு போடப்பட்டிருந்த பெஞ்சில் வரிசையாய் அமர்ந்திருந்தனர். பெயர்வந்தவர்கள் எழுந்து சென்று கையெப்பமிட்டு தங்கள் எல்.எல்.ஆரை வாங்கிச் சென்றனர். பார்ப்பதற்கு திருத்தப்பட்ட தேர்வு விடைத்தாள்களை ஆசிரியர் வினியோகிக்கும் வகுப்பறை போல் இருந்த்து. துவக்கத்தில் ஐந்து பெஞ்ச் நிரம்பியிருந்த கூட்டம் ஐந்தானது. ஐந்தும் இரண்டானது. அந்த இருவர் நானும் என் நண்பனும்.

இன்னும் வரலையா உங்களுக்கு, பேர் என்ன தம்பி?” என்றார் அந்த கருத்தவர். என் பெயரைச் சொன்னேன். ”எந்த ஏரியா?” என்றார். ”வில்லாபுரம்என்றேன். என்னமோ எனக்காகவே காத்துக்கொண்டிருந்தவர் போல் விரிந்த கண்களுடன் வாய் திறந்தார்.

என்ன தம்பி வில்லாபுரத்திற்கான ஆர்.டி.ஓ ஆஃபிஸ் பெரியார்லைல இருக்கு. நீங்க இங்க வந்து அப்ளிகேஷன் போட்டிருகீங்க

அண்ணே நான் வரலை, உங்க வெப்சைட் தான் இங்க கூட்டீட்டு வந்துச்சு. நான் என்ன பன்றது

ஆமால, இப்ப எல்லாம் வெப்சைட் தானே

என்னணே இது வரிஞ்சு வரிஞ்சு அந்த போலிஸ் மேடம் அப்ளிகேசனை சரி பார்த்தாங்களே, அப்ப கூட சொல்லி இருக்கலாமே. சரி இப்ப என்ன பன்னலாம்

இருங்க தம்பி நான் ஆஃபிஸர் ஸார்கிட்ட கேட்டிட்டு வரேன்”, என்று சொல்லிவிட்டு எலிப்பொந்து போன்ற ஒரு அறைக்குள் நுழைந்தார். இனி என்ன தார் வேண்டிக்கிடக்கிறது. தான். நுழைந்தான்.

சிறிது நேரத்தில் வெளியில் வந்து, “சார் உங்கள உள்ள வரச் சொல்றாருஎன்றான்.

அப்பொந்துக்குள் நானும் நுழைந்தேன். ஒரு சிறிய நாற்காலி, அதில் ஒரு பெரிய உருவம் படைத்த ஆஃபிஸர், அவர்முன் ஒரு மேசை அதில் சில கோப்புகளும் பல திண்பண்டங்களும் இரைந்து கிடந்தன. நான் சென்ற பொழுது வடையை மென்று டீயை உள்ளிறக்கிக் கொண்டிருந்தார்.


சார் நான் லேனர்ஸ் லைஸன்ஸுக்கு இண்டர்நெட்டில் அப்ளய் செய்தேன். அது இந்த ஆர்.டீ.ஓ ஆஃபிஸுக்கு வரச்சொல்லியது. நானும் வந்து பணமெல்லாம் கட்டி, ஆவணங்கள் எல்லாம் சரிபார்த்து, சாயங்காலம் ஆறு மணிக்கு வந்து எல்.எல்.ஆர் வாங்கிக்கோனு சொல்லிஇப்ப வந்து கேட்டா உங்களுக்கு இந்த ஆஃபிஸ் இல்ல அப்ட்டீங்றாங்க என்ன செய்யலாம் சார்


இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த அந்த ஓபீஸர் இஞ்சி விழுங்கிய குரங்கைப்போல் ஒரு முழி முழித்தார். பின்னர் வயிற்றையும் தொண்டையையும் தடவிக்கொடுத்தார். பின்னர் அடிவயிற்றிலிருந்துஏவ்என பதிலளித்தார்


– ஏ.பி.தீன்

குறிப்பு: இது 100% உண்மை கலக்காதமுற்றிலும் தூய
கற்பனைக் கதை

ஏ.பி (சிறுகதை )

ஏ.பி (சிறுகதை )

ஏ.பி

மணி எட்டரையாச்சு, எழுந்து குளிச்சு கிளம்ப லேட்டாயிடும் எழுதிரிப்பா
மாலதியின் குரல் சரவணனின் கனவைக் கலைத்தது. இது தினமும் மாலதிக்கும் சரவணனுக்கும் இடையே நடக்கும் காலை விழிப்புப் போராட்டம்.
தன் கிராமத்துப் பள்ளிக்கூடத்தில் படிப்புத் தொழிலில் குதித்து மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தத்தளித்து தியாகராசர் கல்லூரியில் கணக்கராக கரை ஒதுங்கி கடந்த இருபது ஆண்டுகளாய் மதுரையில் குப்பை கொட்டும் ஜீவாத்மாதான் இந்த சரவணன். மதுரையில், தான் பெரிய பெரிய படிப்பெல்லாம் படித்து பெரிய உத்தியோகத்தில் இருப்பதாக சரவணன் தன் சொந்த ஊரில் விரித்த வதந்தி வலையில் முதலில் விழுந்தவர் கயல்விழியின் தந்தை மேஜர் கணேசன் தி கிரேட். விளைவு, சரவணன் M.Com வெட்ஸ் கயல்விழி B.A B.Ed. அன்றிலிருந்து இன்றுவரை சரவணனின் பிழைப்பு கயல்விழி டீச்சரை வைத்தும் அவளது தந்தையை வைத்தும் ஏதோ ஓடிக்கொண்டிருக்கின்றது. அவனது அரும்பு மீசை முறுக்கு மீசையாக மலர்ந்த பருவத்தில் தான் கயல்விழி வயிற்றில் மாலதி பூத்தாள்.
மாலதி, வயது ஒன்பது. சரவணன்-கயல்விழி தம்பதியினரின் மகள். ஒரே மகள். படிப்பது சொக்கிகுளம் கேந்ரவித்யாலயாவில் நான்காம் வகுப்பு. கிண்டர்ஜாய், சோட்டா பீம், நெய்ல் பாலிஸ், கே.எஃப்.ஸி என பிடித்தனவற்றைக் காட்டிலும் மேத்தமடிக்ஸ் மேம், டமில் மொழி, பக்கத்து வீட்டு குள்ள கிரி, அப்பாவின் ஆக்ஸ் டியோட்ரண்ட் ஸ்பிரே என அவளுக்கு பிடிக்காதவை தான் ஏராளம்.
தன் மேஜர் மாமா அளித்த சீதன மொபெட்டில் தான் தினமும் சரவணன் அலுவலகத்திற்குச் செல்வான். போகிற வழியில் மாலதியை அவளது பள்ளியில் இறக்கிவிட்டுச் செல்வது வழக்கம். அதேபோல், மாலையில் சரவணன் அலுவல் முடிந்து திரும்புவதற்கும் மாலதி ஸ்கேடிங் கிளாஸ் முடிந்து திரும்புவதற்கும் சரியாக இருக்கும். இவ்வாறாக சரவணனும் மாலதியும் ஒன்றாக வீட்டைவிட்டுக் கிளம்பி ஒன்றாக வீட்டுக்கு வருவர். தான் வேலை செய்யும் லீ சாட்லியர் பள்ளி வீட்டருகே இருப்பதனால் கயல்விழி இந்த ஆட்டதில் கலந்து கொள்வதில்லை.
மணி எட்டரையாச்சு, நான் கிளம்பிட்டேன் எழுதிரிப்பா”, மீண்டும் மாலதியின் குரல்  சரவணனை எழுந்து உட்காரச் செய்தது.
மடமடவென எழுந்தான். தீர்க்க வேண்டிய கடன்களை தீர்த்தான். தலையை துவட்டிக்கொண்டே அவசர அவசரமாக இட்லியை பிசைந்து உண்டான். இல்லை அமுக்கினான். காற்றில் பறந்து கொண்டே உடைகளை மாட்டினான். இரண்டு தட்டு தட்டி மொபட்டை கிளப்பினான். இதோ கிளம்பிவிட்டான்.
தன் தந்தையின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் இருங்கப்பா, இதோ வந்துட்டேன் என்று அம்மா ஊட்டிவிட்ட கடைசி வாய் இட்லியை வேண்டாவெறுப்பாக தண்ணீர் கொண்டு விழுங்கிவிட்டு ஓடிவந்து வாகனத்தில் தொற்றிக்கொண்டாள் மாலதி.
அம்மா ஸீயூ பய் பய்என்ற ஓசையுடன் வண்டி அப்பார்ட்மெண்ட் வாசலைத் தாண்டி எதிரில் இருந்த இண்டியன் ஆயில் பெட்ரோல் பல்க்கில் நின்றது. வயிற்றை நிரப்பியது. மீண்டும் அங்கிருந்து ஏப்பம் விட்டபடி கிளம்பியது, வழியில் பார்ப்பவர்களுக்கெல்லாம் மாலதியின் கை அசைந்து அசைந்து டாட்டா காட்டியதையும் கவனித்துக்கொண்டே.
காக்கிச் சட்டை பயத்தால் வெறிச்சோடிய ரேஸ் கோர்ஸ் காவல்நிலையம், ஸ்பீக்கர் சத்தத்தின் கோரப்பிடியில் தள்ளாடிய பி.டி.ஆர் திருமண மண்டபம், குடியிருப்புக் கட்டிடங்களின் நெரிசலின் ஊடே வளைந்து செல்லும் ராம்மூர்த்தி சாலை ஆகியவற்றை மாலதி ரசித்துக்கொண்டிருக்கையிலேயே பயணம் முடிந்தது. அவளது பள்ளி வந்தது.
சரவணன் வண்டியை ஓரமாக நிறுத்தினான். பள்ளிக்கு அருகில் இருந்த கடையில் கிண்டர் ஜாய் ஒன்றை வாங்கி மாலதிக்கு கொடுத்தான். அவள் அதை ஆவளுடன் வாங்கி தன் பேக்கிற்குள் பதுக்கி வைத்துக்கொண்டு,
“அப்பா, ஒன் ருபி சேஞ்ச் இருக்காஎன்றாள்.
“எதுக்குக்குமா?என்றான் சரவணன்.
“தட்ஸ் நன் ஆஃப் யுவர் பிஸினஸ், குடுனா குடு
“சரி, இந்தாங்க மேடம்”, என இரண்டு ஒரு ரூபாய் நாணயங்களை அவளிடம் கொடுத்துவிட்டு வாட்ச் மேனுக்கு ஒரு வணக்கத்தை போட்டுவிட்டு அங்கிருந்த தன் வண்டியை எடுத்துக்கொண்டு அலுவலகத்திற்கு கிளம்பினான் பய் மாலுஎன்றபடி.
ள்ளிக்குள் நுழைந்தவுடன் முதல் வேலையாக ஸ்டேஷனரி ஸ்டோர்ஸ் அருகே இருந்த எடை மிஷினுக்குச் சென்றாள். நேற்று அறிவியல் வகுப்பில், ஒன்பது வயது பெண் குழந்தை 28.5 கிலோ இருக்கவேண்டும் என்று மேடம் சொன்னதை சோதித்துப் பார்ப்பதற்காக. சுகாதாரப் பணியாளர்கள் விரைந்து தங்கள் பணியை செய்துகொண்டிருந்தனர். ஒரு ரூபாயை திணித்தவுடன் மிஷினில் இருந்த மிக்கி மவுஸ் செயல்படத் தொடங்கியது. 31kgsஎன பிரிண்ட் செய்யப்பட்ட காகிதம் வெளியில் வந்தது. சிறிது நேரம் அதனையே உற்றுப்பார்த்துக் கொண்டிருந்த மாலதி உடல் வெயிட் போட்டுவிட்டது இனிமேல் டயட்டில் இருக்கவேண்டும் என்ற முடிவுடன் மிஷினைவிட்டு கீழிறங்கினாள். அருகில் துப்பரவு பணியளார் ஒருவரின் மூன்று வயது மகன் நின்றிருந்ததைக் கண்டாள்.
“அக்கா, இது என்னது”, என்று மிஷினை தடவிக்கொண்டே கேட்டான்.
“உன் வெய்ட் சொல்லும் மிஷின், ஒரு ஒன் ருபி காய்ன் கொடுத்தா ஜீனியஸ் மிக்கி உன்னோட வெய்ட்ட சொல்லிடும், உனக்கும் இதுல வெய்ட் செக் பண்ண ஆசையா இருக்கா?”, என்றாள் இரட்டை ஜடைகள் குதிக்க.
ம்
அவனை மிஷின்மேல் ஏற்றிவிட்டாள். தன்னிடமிருந்த மற்றொரு ஒற்றை ரூபாய் காசைச் சொருகி மிக்கியுடன் ஏதோ உரையாடிவிட்டு 13 கிலோ என பொறிக்கப்பட்ட சீட்டை அவனிடம் நீட்டினாள்.
“உன் ஏஜ் என்ன
“தெரியாதுக்கா
நீ எத்தினாவது ஸ்டாண்டர்ட் படிக்கிற
“படிக்கலை
“ஓ.கே லீவ் இட், நீ என் ஹிப் சைஸ் தான் இருக்கிற, ஸோ, 24/2=14-4=10 கிலோ, உன் வயசுக்கு நீ ஓவர் வெய்ட். டைலி சாப்பிட்றத குறைக்கனும். டயட்ல இருக்கனும். இல்லைனா குண்டாயிடுவ. சரியா?என்று அவனை ஒரு உலுப்பு உலுப்பி தன் மனதை தேத்திக்கொண்டாள்.
தம்பி, வா போலாம் வேலை முடிஞ்சிருச்சு”, அந்தப் பையனின் தாயின் குரல்.
சரிக்கா  என்று அவனும் பலமாக மண்டையை ஒரு ஆட்டிவிட்டு தாயின் குரல் வந்த திசை நோக்கி ஓடினான்.
தியாகராசர் கல்லூரி, அலுவலகம்.
கம்ப்யூட்டரில் கார்ட் கேம் விளையாடும் மும்முராமான பணியில் சரவணன்.
குட் மார்னிங் சரவணன்”,  திருமதி லதாவின் குரல்.
“குட் மார்னிங் மேடம்”, டக்கென கேம் ஸ்க்ரீனை மினிமைஸ் செய்தான்
“பிரின்ஸிபல் உங்களை பார்க்கனும்னு வரச் சொன்னார்
“எதுக்கு மேடம்?
“தெரியல, போய் பாருங்க
“தெரிஞ்சாலும் சொல்லிருவ பாரு”, என்று மனதிற்க்குள் திட்டிக்கொண்டே தன் சீட்டை விட்டு எழுந்தான்.
தினமும் கேம் விளையாடுவது தெரிந்து விட்டதோ, இல்லை நேற்று மாலை அலுவலகத்திற்குள் புகைத்தது கசிந்துவிட்டதோ, இருக்காதே மற்றவர்களுக்குத் தெரியாமல் தானே செய்தேன். வேறென்னவாய் இருக்கும்.மனதில் எழுந்த சிந்தனைகளை அடக்க இயலாமல் மே ஐ கமின் சர்என்றபடி கல்லூரித் தலைமையாசிரியரின் முன் போய் நின்றான்.
“சரவணன், ஸ்டூடண்ட்ஸுக்கு செமெஸ்டர் எக்ஸாம் நெருங்கிட்டது. இந்த நேரத்தில அட்டெண்டன்ஸ் கமிட்டி ராஜா வேற ஓ.டி.ல கரூர் போய் இருக்காரு. அதனால, நீங்க என்ன பண்றீங்க அட்டெண்டன்ஸ் லேக்கா இருக்கும் ஸ்டூடன்ஸை லிஸ்ட் எடுத்து இன்னிக்கே அவங்களுக்கு வார்னிங் கொடுத்திடுங்கஎன்று நழுவாமல் ஒரு வேலையை திணித்தார்.
ஓ.கே சர், ஐ வில் டூ இட்”, என்று அவர் முன் பவ்யமாய் கூறிவிட்டு வெளியில் பல்லைக் கடித்துக்கொண்டு வந்தான் சரவணன்.
வருகை குறைந்த மாணவர்களின் பட்டியல் எடுப்பதற்குள் மதிய உணவு இடைவேளை வந்துவிட்டது. உணவை ஒத்திவைத்துவிட்டு மாணவர்களுக்கு தகவல் அனுப்ப அலுவலக பையனை அழைத்தான். தகவல் தீ போல் பரவியது. சரியாக, மாலை நான்கு மணிக்கு குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்ட மாணவர்கள் அனைவரும் சரவணன் முன் அணிவகுத்து நின்றனர். பிறர் மேல் இருக்கும் வெறியை அவர்கள் மேல் கக்கி தனக்கிடப்பட்ட வேலையை செவ்வனே செய்து முடித்தான் சரவணன்.
மணி ஐந்தரையானது. இன்னும் அரைமணி நேரத்தில் கிளம்பினால் மாலதியை கூட்டிக்கொண்டு வீடு திரும்ப சரியாக இருக்கும் என்றெண்ணிக் கொண்டிருக்கையிலேயே அவனது செல்போனுக்கு அழைப்பொன்று வந்தது.
“ஹலோ
“ஹலோ சார் நான் மாலதியின் கிளாஸ் டீச்சர் பேசறேன்
“ம், சொல்லுங்க மேம். நேத்தே மாலதி சொன்னா, பேங்லூர்ல ஏதோ ஸ்டேட் லெவல் ஸ்கேடிங் காம்ப்படீஸன் இருக்கு உங்க விருப்பம் கேக்க எங்க மேம் போன் பன்னுவாங்கனு
“இப்ப அதுக்காக நான் உங்கள கூப்பிடல சார். மாலதி காலைல ஸ்கூலுக்கு வந்த்திலிருந்தே டல்லா இருந்தா. ஸ்கேடிங் பண்ணிட்டிருந்தப்ப திடீர்னு மயங்கி விழுந்துட்டா, மூக்கில அடிபட்டு பிளீடிங் ஆகிருச்சு. இப்பதான் ஹாஸ்பிடல் கொண்டு போய்ட்டு இருக்கோம். வேறொன்னும் இல்லை. கொஞ்சம் வந்திருங்க
சரவணனின் குரல்வளையைக் ஏதோ கவ்வியது போல் வார்த்தைகள் வெளிவர மறுத்தன.
“ …………………….. வந்துடறேன் மேம். கொஞ்சம் பாத்துக்கங்கஎன்று கூறி இணைப்பைத் துண்டித்தான்.
கயல்விழியிடம் என்ன சொல்வது. ஏதும் சொல்லவேண்டாம். இது சின்ன காயம் தானே. டீச்சர் வேறு மயக்கம் என்கிறாரே. ஏதாவது பெரிதா இருக்குமோ. சேச்சே அப்படியெல்லாம் ஒன்னும் இருக்காது. ஹாஸ்பிடலுக்குச் சென்று பேசாமல் மாலதியின் காயத்திற்கு மருந்து போட்டுக்கொண்ட பின் வீட்டிற்குச் சென்று ஆற அமர அவளிடம் தெரிவிப்போம். இல்லைனா டென்ஷன் ஆகிடுவாஎன மனசுக்குள்ளேயே திட்டம் தீட்டிக்கொண்டு ஹாஸ்பிடலை அடைந்தான்.
“பேர் மாலதி, ஒன்பது வயது. மூக்கில் அடிபட்டு இங்க தான் அடமிட் பண்ணியிருக்கதா சொன்னாங்கஎன்றான் ரிஷப்னிஸ்ட்டிடம்.
இப்படியே போய் ரைட் கட் பண்ணிங்கனா ஸ்டைர்ஸ் வரும் அதுக்கு ஆப்போஸிட்ல இருக்கும் ஐ.சி.யூ ல தான் அட்மிட் பண்ணியிருக்காங்க. போய் பாருங்க.
சரவணனுக்கு ஐ.சி.யூஎன்ற வார்த்தை தூக்கிவாரிப் போட்டது. சிந்தனை ஸ்தம்பித்த நிலையில் அங்கிருந்து நகர்ந்தான்.
நேரே போய் வலப்பக்கம் வளைந்தான். அங்கிருந்த படிக்கட்டில் மாலதியின் ஆசிரியை அமர்ந்திருந்ததைக் கண்டான். அவர் சொன்ன எதுவும் இவன் காதில் விழவில்லை. எதிரே ஐ.சி.யூ. கதவைத் திறந்தான். உள்ளே கயல்விழி அழுதுகொண்டு நின்றிருந்தாள், சத்தம் போடாதீர்கள் என்று நர்ஸ் கூறுவதை செவிமடுக்காமல்.
“நீங்க தான் இந்தக் குழந்தையின் அப்பாவாகையில் ஒரு ரெக்கார்ட் ஃபைலுடன் நின்ற அந்த நர்ஸ் கேட்டாள்.
“அவர் தான்”, கயல்விழியின் குரல். சரவணனுக்கு தகவல் தெரிவிக்கும் முன்பே கயல்விழிக்கு டீச்சர் செய்தி அறிவித்துவிட்டார்.
“டாக்டர் உங்கள வரச் சொன்னார் போய் பாருங்கஎன்று கூறி அந்த ஃபைலை அவனிடம் கைமாற்றினாள்.
டாக்டர் ராஜேஸ் குமார் M.B.B.S, M.D, M.S என ஏகப்பட்ட டிகிரிகளுடன் ஒரு போர்ட் தென்பட்டது. தட்டினான் திறக்கப்பட்டது. உள்ளே வழுக்கைத் தலையுடன் தீர்க்கமான பார்வையுடன் முகத்தில் புன்னகை தவழ ஒரு உருவம் தென்பட்டது. ஃபைலை அவரிடம் நீட்டினான்.
மிஸ்டர் சரவணன், மாலதியின் ஃபாதர், ரைட்?”,  மூக்குக்கண்ணாடியை சரி செய்தவண்ணம் கேட்டார்.
“எஸ் டாக்டர்
“என் பையனும் உங்க பொண்ணு கூடத்தான் படிக்கிறான். ஏதோ டயட்ல இருக்கதா மாலதி சொன்னானு என் பையன் சொன்னான். இப்பதான் அவுங்க கிளாஸ் டீச்சர்கிட்ட பேசினேன். இன்னைக்கு மதியம் மாலதி எதுவும் சாப்பிடலைனு பசங்க சொன்னதா சொன்னாங்க. சாப்பிடாம ஸ்கேடிங் பண்ணதுல மயங்கி கிழே விழுந்துட்டானும் அதனால் மூக்குல அடிபட்டதாகவும் சொன்னாங்க. அதனால, முதலில் பிளீடிங் நிக்க மருந்து கொடுத்தேன். ஆனால், பிளீடிங் நிக்கவே இல்ல. ஸோ, பிளட் ஸாம்பிள் எடுத்து லேப் டெஸ்டுக்கு அனுப்பினேன். ஹீமோபிலியானு ரிசல்ட் வந்தது
“ஹீமோபிலியானா….
“சாதரணமா எல்லாருக்கும் அடிபட்டு ரத்தம் வெளியேறினா கொஞ்ச நேரத்திலயே உறைஞ்சி ரத்தம் கசியிறது நின்னுடும். ஆனா ஹீமோபிலிக் பேஷண்ட்ஸுக்கு உறையாது. ரத்தம் உறையும் ஃபாக்டர்ரில் குறைபாடு இருந்தா இப்படி ஆகும். ரத்தம் நிக்காம வெளியேறிட்டே இருக்கும். இப்ப மாலதிக்கும் அதே நோய் தான். நிறைய ரத்தம் வெளியேறிடுச்சு. இப்ப  அர்ஜெண்ட்டா நாலு யூனிட் ஏ.பி. நெகடிவ் ரத்தம் தேவை. இது அரிய வகை ரத்தமும் கூட. எங்ககிட்ட இருந்த ஒரு யூனிட் ரத்தத்த தான் இப்ப ஏத்திகிட்டிருக்கோம். பிளீடிங் ஸ்டாப் ஆக ஃபாக்டர் இஞ்செக்ஸன் போட்டிருக்கேன். பிளீடிங் எப்ப ஸ்டாப் ஆகும்னு சொல்ல முடியாது. ஸ்டாப் ஆகிற வரைக்கும் ரத்தம் ஏத்திக்கிட்டே தான் இருக்கனும். நாங்க எல்லா பிளட் பாங்குகளிடமும் தெரிவித்துவிட்டோம். உங்களுக்கு தெரிந்தவர்களிடமும் கேட்டுப்பாருங்கள். மற்றது இறைவன் கையில்
இன்னும் ஏதேதோ சொன்னார். பேசிவிட்டு வெளிவரும் போது சரியாக இரவு ஒன்பது மணி. யாரிடம் குருதி யாசிப்பது என தீவிரமாக யோசித்தான் சரவணன். இறுதியில் அன்று மாலை அட்டெண்டன்ஸ் குறைபாட்டிற்காக தன் முன் ஆஜரான விவேக்கின் முகம் ஞாபகம் வந்தது. ஒருமுறை ஏ நெகெடிவ் ரத்தம் அவசரமாக தேவைப்படுகிறது என்று சரவணனை ரத்தம் கொடுக்கச்சொல்லி விவேக் வற்புறுத்திய நிகழ்வு ஞாபகம் வந்தது. முடியாது என்று மறுத்த கணமும் நினைவிற்கு வந்தது. மனம் மாறினால் அழைக்கவும் என்று அவன் கொடுத்த விசிடிங் கார்டும் பையில் இருந்தது. அன்று கொடுக்க மறுத்துவிட்டு இன்று கேட்டால் தருவானா என்ற ஐயம் மேலோங்கிய நிலையில் அவனது எண்ணிற்கு அழைப்பு விடுத்தார்.

“ஹலோ விவேக் இருக்காரா
“நான் விவேக் தான் பேசறேன். நீங்க
ஆஃபிஸ் சரவணன் தம்பி
“சொல்லுங்க சார். ஏன் இந்த நேரத்தில போன்?
“அது ஒன்னும் இல்லை தம்பி. அர்ஜெண்ட்டா ஏ.பி. நெகெடிவ் ரத்தம் தேவைப்படுது
“அப்படியா சார், யாருக்கு, எங்க, என்ன டைப்னு உடனே எனக்கு எஸ்.எம்.எஸ் பண்ணுங்க சார். ஆள் கிடச்ச நிமிஷத்தில நான் அங்க வரேன்
சரி தம்பி என அழைப்பை முடக்கினான். தனது சுயநலவாதத்தை நினைத்து நொந்துகொண்டான். கை நடுங்க டைப் செய்து எஸ்.எம்.எஸ் அணுப்பினான். நடப்பது நடக்கட்டும் என நேரே மாலதியின் அருகே போய் அமர்ந்து கொண்டான்.
போர்வையில் படுத்துத்துறங்கும் பூனைக்குட்டியின் துயில் கலைந்துவிடாமல் நாசுக்காக படுக்கையைவிட்டு வெளியேறினான் விவேக். கைபேசியில் சரவணன் அனுப்பியிருந்த குறுஞ்செய்தியை தன் நண்பர்கள் அனைவருடனும் பகிர்ந்து கொண்டான். ஃபேஸ்புக்கில் தன் ஸ்டேடஸை “அவசரமாக ஏ.பி.நெகெடிவ் ரத்தம் தேவைஎன அப்டேட் செய்தான். தன் டையரியில் ஏ.பி.நெகெடிவ் என குறித்து வைத்திருந்த நபர்களுக்கு போன் செய்ய ஆயத்தமானான்.
அர்ஜுனிலிருந்து ஆரம்பித்தான்.
“அர்ஜுன், நாங்கள் மதுரைக் குருதி வழங்கி குழுவிலிருந்து பேசுகிறோம். அவசரமாக ஏ.பி.நெகெடிவ் ரத்தம் தேவை. கொஞ்சம் தர முடியுமா
“சாரிங்க, நேத்துதான் ஒருத்தவருக்குத் தந்தேன். வேறு யாரிடமாவது கேளுங்க”,  என்று கூறி மழுப்பினான்.
இல்லைங்க இப்பதான் ஜிம்கு போக ஆரம்பிச்சிருக்கேன். இந்த நேரத்தில ரத்தம் கொடுத்தா பாடி ஏறாதுனு மாஸ்டர் சொல்லிருக்கார்
“நாளைக்கு எனக்கு கல்யாணம். அக்ட்சுவலி ஐம் வெரி வெரி சாரி ஃபார் தி இன்கன்வீனியன்ஸ்
அவன் இப்பதான் வெளிய போனான். நான் அவன் ஃப்ரண்ட் வெங்கி. காலைல போன் பண்ணுங்க
“நான் கொஞ்சம் மப்புல இருக்கேன் பரவாயில்லையா
“எவ்ளோ தருவீங்க பிரதர்
என்ன ரத்தமா. ஸாரி ராங் நம்பர்
அடுத்தடுத்த நபர்களும் ஏதேதோ சாக்கு போக்கு சொல்லி முடியாது என்றனர். மணி ஏற்கனவே பத்தை கடந்து விட்டது. கடைசியாக தன் வகுப்புத்தோழன் மூர்த்திக்கு டயல் செய்தான். மூர்த்திக்கு தன் கிராமத்திலிருந்து மதுரைக்கு வர குறைந்தது ஒரு மணி நேரம் பிடிக்கும் என்பதாலும் அங்கிருந்து மதுரைக்கு வர எட்டு மணிக்கு மேல் போக்குவரத்து வசதி இல்லை என்பதாலும் தான் அவனை அழைக்க விவேக்கிற்கு தயக்கம்.
கோயில் திண்னை. வாலிபர்களின் படுக்கை. அமைதி எங்கும் பேரமைதி. போன் ஒலித்தது. அமைதியை குலைத்தது.
“டேய் மூர்த்தி. நான் விவேக் பேசரேண்டா. நம்ம ஆஃபிஸ் சரவணன் சார் மகளுக்கு அர்ஜெண்ட்டா ஏ.பி.நெகெடிவ் ரத்தம் தேவைப்படுதுடா
“அவன் மகளா. பாவம். என்ன பாடு படுத்தினானோ. அன்னைக்கு அவசரம்னு ரத்தம் கேட்டப்ப உதவுனானா. இவன் ரத்தம் குடுத்திருந்தா அந்த பையன் பொழசிருப்பான். போய் ஒங்க வேலைய பாருங்கடானு நம்மள தானே திட்னான். பக்கா சுயநலவாதி. அனுபவிக்கட்டும். எல்லாம் அவனவனுக்கு வந்தா தான்டா தெரியும். நீ தூங்கு டா அவனுக்கெல்லாம் கரிசனை காட்டிகிட்டு இருக்காமஎன்று பதில் வந்த்து மறுமுனையிலிருந்து.
“அந்தாள பலிவாங்கிற நேரமில்லடா இது. அவனே திருந்திட்டான். மன்னிகலைனா நாம மனுஷன் இல்ல. பக்கத்துல யார்டையாவது பைக் இருக்கா?
“ராமு வாத்தியார் வச்சிருக்கார்டா
அவசரம்னு கேட்டா தருவார்ல?
“தருவார் தருவார்
“சரி. வாங்கிட்டு எங்க வீடு வந்து சேரு
பீப் பீப் பீப்  மறுமுனையில்.
மூர்த்தி தங்களுடன் தூங்கிய ராமு வாத்தியார் மகனை எழுப்பினான். விஷயத்தை தெரிவித்தான். சாவியை வாங்கினான். மதுரையை நோக்கி முடுக்கினான். சரியாக
பண்ணிரெண்டு மணி பேய்கள் நடமாடும் நேரம். மதுரையின் மனித நடமாட்டம் சற்றும்  குறையவில்லை. விவேக் வீட்டின் முன் நின்றது மூர்த்தியின் வண்டி. இருவரும் செல்ல தயாராயினர்.
“ஐம் சாரி மிஸ்டர் சரவணன், ரத்தம் தீரப்போகிறது. எங்களால் முயன்ற அளவு தேடிவிட்டோம். கிடைக்கவில்லை.
சரவணன் கையை பிசைந்துகொண்டு நின்றார். மீண்டும் விவேக்கை கூப்பிடலாமா வேண்டாமா என்று யோசித்துக்கொண்டிருந்தார்.
அதற்குள், விவேக் மூர்த்தியுடன் வந்து நின்றான். வேகவேகமக மூர்த்தி ரத்த தானம் அளிக்கும் அறைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். ஒரு யூனிட் ரத்தம் எடுக்கப்பட்டது. மாலதிக்கு செலுத்தப்பட்டது. மூர்த்தியும் விவேக்கும் அங்கேயே காத்திருந்தனர். சற்று நேரத்திலேயே பத்தாயிரம் பில்லுடன் உபரியாக நான்கு யூனிட் ரத்தம் குருதி வங்கியிலிருந்து வந்தது. மாலதிக்கு ஆபத்தேதும் இல்லை என அனைவரும் நம்பிக்கொண்டிருந்தனர்.
அதிகாலை இரண்டடித்தது. மாலதியின் ரத்தக்கசிவு நிக்கவில்லை, ஃபாக்டர் இஞ்செக்‌ஷன்  வேலை செய்யவில்லை என மருத்துவர் கையை கசக்கிக்கொண்டு வந்தார். இரத்தம் தொடர்ந்து வெளியேறியதால் சிறிது சிறிதாக சுயநினைவை இழந்தாள். மூச்சுவிட சிரமப்பட்டாள். கண்கள் இருண்டன, சுற்றியுள்ளவர்களின் அழுகைச் சத்தத்துடன்.
          ஏ.பி.தீன்