யூ ஆர் க்ரேட் (சிறுகதை)

யூ ஆர் க்ரேட் (சிறுகதை)

யூ ஆர் க்ரேட்
     பாபா பகுர்தீன்
டாக்டர் எப்ப வருவாங்க?’
இன்னும் ஒரு மணிநேரம் ஆகும்’. கேள்வி முடியும் முன்பே எரிச்சலுடன் அந்த நர்ஸிடம் இருந்து பதில் வந்தது.
ஒருமணி நேரமா?’ என் வாய் பிளந்தது.
இந்த பல்சர் 150cc வந்ததில் இருந்து இப்படித்தான். மாதத்திற்கு ஒருமுறையாவது விழுந்தெழுவது அண்ணனுக்கு வழக்கம் ஆகிவிட்டது. அப்படி அடிபடும் போதெல்லாம் வீட்டிற்குச் சொல்வதற்கு முன் என்னிடம் சொல்லிவிடுவது இயல்பு. அதே முறையில் இன்று மதுரையிலிருந்து தூக்குக்குடி செல்லும் பைபாஸில் அருப்புக்கோட்டை அருகே விழுந்துகிடப்பதாக தகவல் சொன்னான். கூட்டம் கிளப்புவது அவனுக்கு பிடிக்காது. அதனால் தனியொருவனாக கிளம்பி சில பேருந்துகள் மாறி ஒருவழியாக அவ்விடத்திற்குச் சென்று சேர்ந்தேன்.
இம்முறை சற்று கோரமான அடி. முகம் தேய்ந்து பல்லுடைந்து உடல் அரைத்து மிக கோரமான அடி. ஏதோ வில்லனை சண்டையிட்டு தன் காதலிக்காக காத்திருப்பவனைப் போல சில பாகங்கள் நெளிந்த வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு ரத்தம்சொட்ட அதன் மேல் உதடு வீங்கியவனாக வீற்றிருந்தான். அவன் முகத்தில் வலியின் ரேகை சற்றும் தெரியவில்லை. அடிபட்ட கையுடன் அதே வண்டியை மதிய வெயில் கொளுத்த மீண்டும் கிளப்பிக் கொண்டு மருத்துவரை பார்க்க அருப்புக்கோட்டை வந்துவிட்டோம். அங்கிங்கு விசாரித்ததில் நல்ல மருத்துவர் என ஒருவர் கைகாட்டப்பட்டர்.
முதலுதவி செய்யப்பட்டது. ஒன்னும் பெரிய பிரச்சனை இல்லை என்றும். மருத்துவர் வந்த பிறகு சிகிச்சையை ஆரம்பிக்கலாம் என்றும் ஒரு கட்டிலில் அண்ணன் படுக்கவைக்கப்பட்டான். மருத்துவர் வர இன்னும் ஒரு மணிநேரம் என்ன செய்வது. ஒரு மணி நேரம் சும்மா இருப்பது பைத்தியம் பிடிக்க வைத்துவிடும். எனவே ஊர்சுற்ற கிளம்பிவிட்டேன். நான் கிளம்ப சரியாக செல் மணியடித்தது.
அப்பா காலிங்.
யார்ரா?’
அப்பா
என்னது. அவருக்கு எப்டிடா தெரிஞ்சது?’
தெரியலைசும்மா கூடா கூப்பிடலாம். நாமலா உளறீர கூடாது என நினைத்துக்கொண்டு ஹலோஎன்றேன்.
எங்கடா இருக்கஅப்பாவின் குரலில் பதட்டம் இல்லை. அப்படியென்றால் அண்ணன் விழுந்தது தெரியாது. அப்பாடா என பெருமூச்சு விட்டபடி காலேஜ்லப்பாஎன்றேன். அண்ணனுக்கு சைகை செய்தேன். அவன் முகமும் மலர்ந்தது.
ஓ அப்டியா. உங்கிட்ட ட்க்‌ஷ்னரி, என்சைக்ளோபீடியா எல்லாம் இருக்கா?’
என்னடா இது  எல்.கே.ஜில இருந்து எப்படிடா படிக்கிறனு கேட்கக் கூட நேரமில்லாத அப்பாவா இதெல்லாம் கேட்கிறார் என குழம்பிய நிலையில் எதுக்கு கேக்குறீங்கஎன்றேன்.
இல்ல ஒரு அக்காஎன தொடங்கியவர் இரு ஒரு நிமிஷம்எனக் கூறி இன்னொருவரிடம் மொபைலை கொடுத்தார். ‘குட் ஈவ்னிங். திஸ் இஸ் ரம்யா. எம்.பி.ஏ படிச்சிட்டிருக்கேன். ஒரு ப்ராஜக்ட் விசயமா இங்க வந்திருக்கேன்.’
ம். சொல்லுங்க
அப்பா சொன்னாரு. நீங்க பி.ஏ ஹிஸ்டரி படிச்சிட்டிருக்கதா. யூ ஆர் க்ரேட். அப்பறம் ஸ்டடீஸ் எல்லாம் எப்படி போய்ட்டிருக்கு
பி.. ஹிஸ்டரி படிக்கும் ஒருவனை க்ரேட் சொன்னதை நினைத்து நொந்து ம்சொன்னேன்.
நான் அடுத்த மாசம் எம்.பி.ஏ முடிக்கிறேன். ஆக்ஸ்ஃபோர்ட்ல ப்ளேஸ்மெண்ட். அதனால் இப்ப ஆக்ஸ்ஃபோர்ட் எனக்கு ஒரு ப்ராஜக்ட் அசைன் பண்ணியிருக்காங்க. அந்த ப்ராஜக்ட் படி நான் 18,000 ரூபாய் மதிப்புள்ள புக்ஸ்அ நல்லா படிக்கிற ஸ்டூடென்ஸ்க்கு ஃப்ரீயா கொடுக்கனும். இன்னைக்கு உங்க ஸ்டோர்க்கு யதார்த்தமா வந்தேன். அப்பாவைப் பார்தேன். உங்களைப் பத்தி சொன்னாங்க. யூ ஆர் க்ரேட். நல்லா படிப்பீங்கனு சொன்னாங்க. உங்களுக்கு எங்க ஆக்ஸ்ஃபோர்ட் யுனிவர்சிடி ப்ரஸ்ல இருந்து 18,000 மதிப்புள்ள புக்ஸ்அ ஃப்ரீயா தரோம் ஓகே.’
‘……..…….’ நான் பேசவில்லை.
உங்களுக்கு இவ்ளோ காஸ்ட்லியான புக்ஸ் தறோம் ஒரு தாங்க்ஸ் கூட இல்லையா?’
.கே தாங்க்ஸ்
.கே கூல். தென் நீங்க எங்க ஆக்ஸ்ஃபோர்ட் க்ளப்ல சேரலாமே?. ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும். ஒன்லி 1000 ருபீஸ் ஃபார் எண்ட்ரீ. 18,000 வொர்த்துள்ள புக்ஸ் உங்களுக்கு வருசா வருசம் ஃப்ரீயா தருவோம். ஆக்சுவலி இப்ப நீங்க இந்த க்ளப்ல சேர்ந்தா தான் உங்களுக்கு இந்த புக்ஸ்அ ஃப்ரீயா தர முடியும்
ஒரு நிமிஷம் அப்பாகிட்ட போன குடுங்க’. போன் அப்பவிடம் சென்றது.
அப்பா நான் அந்த க்ளப்ல மெம்பராக விரும்பல. வேணும்னா நீங்க சேர்ந்துக்கங்க என கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்தேன்.
என்னடா சொல்றாரு?’ என்றான் அண்ணன்.
இல்ல. ஏதோ ஆக்ஸ்ஃபோர்ட் யுனிவசர்சிட்டி க்ளப்ஆம். மெம்பர் ஆக சொல்றாங்க. இருக்க புக்க படிக்கிறதுக்குள்ளயே முழி பிதுங்குது. இதுல வருசத்துக்கு 18,000 மதிப்புள்ள புக்ஸ் ஃபீரீயாம். நமக்கிதல்லாம் தேவையா. நல்லா விளஞ்ச மண்டை இருக்கிறவனுங்க சேர்றது. அங்க போயி பெக்க பெக்கனு முழிக்கிறதுக்கு பேசாமா இருந்திடலாம். எம்.பி., ஆக்ஸ்ஃபோர்ட்னு கடுப்புகளை கிளப்பிக்கிட்டு
·          
சில மாதத்திற்குப் பின். இனிதொரு இரவு. தூக்கம் கண்ணைத் தழுவும் நேரம். ராமிடம் இருந்து எஸ்.எம்.எஸ் வந்தது.
‘Tmrw, mrng mtng arapalayam krass roadu’. சிரித்துக் கொண்டே வாசித்தேன். காலையில் ஆரப்பாளையம் க்ராஸ் ரோட்டில் மீட்டிங். என்ன மீட்டிங் ஏன் எதற்கு என்றெல்லாம் கேட்க முடியாது. காலையில் ஆரப்பாளையத்திற்கு செல்ல வேண்டும் அவ்வளவுதான். அதுதான் நண்பனுக்கு அழகு.
·          
மறுநாள் காலை கிளம்பி ஆரப்பாளையம் க்ராஸ் ரோட்டில் உள்ள மணீஸ் பேக்கரியில் ராமை சந்தித்தேன்.
என்னடா மீட்டிங்
மீட்டிங் இல்ல. இன்டர்வ்யூஎன்றான்.
இண்டர்வ்யூவா யாருக்கு?’
எனக்கு தான். நான் படிச்சது போதும்டா. வீட்ல ஒரே பிரச்சனை. அவனுங்க காசுல காலேஜ் கீலேஜ்னு சுத்தீட்டு நான் தண்டச்சோறா அலையுறனாம். மொதல்ல ஒரு வேலையப் பாத்து அவங்ககிட்ட இருந்து வெளியேறனும்டா. அப்புறம் தான் மத்த வேளையெல்லாம்
தம்பி. இன்னும் ஒரு வருசம் தான் இருக்கு. முடிச்சுட்டு வேலை தேடலாம்ல
ஒனக்கு அதெல்லாம் புரியாது. இப்ப என் கூட மட்டும் வா. இந்தா அட்ரஸ் இது எங்க இருக்குனு மட்டும் சொல்லு’. என்று கூறி வாயடைத்த்தான்.
தண்டர் இந்தியா, 2/7, சிவானந்தம் சாலை, ஆரப்பாளையம்’.
சரிவா கண்டுபிடிப்போம்எனக் கூறி சில அடிகள் கடந்தபின் ஒரு கட்டிட்த்தின் மூன்றாம் மாடியில் தென்பட்டது வெளிரிப்போன டிஜிட்டல் தண்டர் இந்தியா போர்டு. இரண்டாம் மாடியில் இருந்த ஒரு வங்கியைக் கடந்து படியேறினோம். அவ்வங்கியின் வாசலில் அமர்ந்திருந்த செக்யூரிட்டி தாத்தா எங்களை ஏற இறங்கப் பார்த்தார். மூன்றாம் மாடியில் தமிழகத்தின் அதிசயத்திலும் அதிசயமான கரண்ட் இருந்தும் முற்றிலும் இருட்டாக இருந்தது. வாசலில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டு ஒரு இளம்பெண் ஏதோ பேசிக் கொண்டிருந்தார். அவர் பேசிமுடித்து வழிவிடட்டும் என சிறிது நேரம் அங்கு காத்திருந்தோம்.
இது தான் தண்டர் இந்தியாவா?’ என்று நான் அவரிடம் கேட்டேன்.
ஆஃப் கோர்ஸ்’. என்று புன்னகைத்தவாறு உள்ளே அழைத்துச் சென்று ரிசப்ஷனில் அமரவைத்தார். அது ஆறு நாற்காலிகள், பல தினசரிகளையும் ஒரு போட்டோ ஆல்பத்தையும் இரண்டு புத்தகங்களையும் தாங்கி நின்ற மேசை, அசையாத மின்விசிறி, ப்ளக் பிடுங்கப்பட்ட எல்.சி.டி டீவியை உள்ளடக்கிய பத்துக்கு பத்து அறை. எங்களுக்கு முன்னரே இருவர் அங்கு காத்திருந்தனர். அவர்களிடம் விசாரித்த பின் அவர்களும் நேர்முகத் தேர்வுக்கு வந்திருந்தது தெரிந்தது.
எல்லாம் எடுத்து வந்திருக்கிறீர்களா? என வினவியவாறு இரண்டு தாளை டுத்து ஒன்றை ராமிடமும் மற்றொன்ரை என்னிடமும் நீட்டினார் எங்களை அமரவைத்த பெண்.
அந்தத் தாள் பெயர், முகவரி இன்ன பிறவற்றைக் கேட்கும் பயோடேட்டா என வாசித்துப்பார்க்கையில் விளங்கியது. நான் எழுந்து நான் இண்டர்வ்யூவிற்கு வரவில்லை என்றும் ராமுடன் வந்தேன் என்றும் தெளிவுபடுத்தி அந்த காகித்தை அவரிடமே திருப்பியளித்தேன். அவர் அதனை வாங்கிக் கொண்டு போய் மேனேஜிங் டைரக்டர் என பலகை இருந்த அரைக்கு முன் இருந்த மேசையில் அமர்ந்தார். அவர்தான் ரிசப்ஷனிஸ்ட் என புரிந்தது. அவரது மேசையில் இருந்த தொலைபேசி ஒலித்தது.
ஒலித்த பேசியை எடுத்து பேசினார்.
ஹலோ தண்டர் இந்தியா என்றார்.
‘………..’ மறுமுனையில் இருப்பவரது குரல் கேட்கவில்லை.
எங்களுக்கு இந்தியால 300 ப்ராஞ்ச்சஸ் இருக்கு. இப்பதான் மதுரையில ஓபன் பண்ணி இருக்கோம். நீங்க இங்க வந்தீங்கனா க்ளியரா சொல்றோம்
’…………..’
எஸ். டுமாரோ மார்னிங் நைன் ஓ க்ளாக் இங்க வந்திருங்க, அட்ரஸ் 2/7, தர்ட் ஃப்ளோர், சிவனந்தம் ரோட், ஆரப்பாளையம்என்று கூறி முடித்தார்.
சரி ஏதோ பெரிய கம்பனி தான் போல என எண்ணியவாறு எதிர் டேபிளில் இருந்த ஆல்பம் ஒன்றை எடுத்து புரட்டலானேன். அதில் கருப்பு கோட் சூட்டுடன் இறுக டைகட்டிய நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் வராத புன்னகையை வரவழைத்து பள்ளிலித்து புகைபடத்துக்கு போஸ் கொடுத்தவாறு ஏதோ ஒரு ஐந்து நட்சத்திரவிடுதி ஒன்றில் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் பிண்ணனியில் க்ரியேட்டிவ் இந்தியா எனும் பேனர் வேறு. குழம்பிய நிலையில் ராமிடம் கேட்க ஆயத்தமானேன்.
இந்த கம்பெனியின் பெயர் தண்டர் இந்தியாவா? க்ரியேட்டிவ் இந்தியாவா?’ என கேட்டபடி அவனிடம் ஆல்பத்தில் இருந்த பெயரை சுட்டினேன்.
தண்டர் இந்தியா தான் என்றான்.
திடீரென்று எஸ், எஸ், எஸ் என்று என் முதுகுப்புறத்தில் இருந்து சத்தம் வந்த்து. என் பின்னால் இருந்த சுவரைத் தட்டிப்பார்த்தேன். தட் தட் ஓசை இது சுவரில்லை கார்ட்போர்ட் என்றது’. எங்களுக்குப் பின்னிருந்த கார்ட்போர்டுக்குப் பின் மீண்டும் யாரோ ஒருவர் ஏதோ புரியாத மொழியில் பேசும் சத்தமும் அதனைத் தொடர்ந்து பலரும் எஸ் எஸ் ஹூர்ர்ரேஹ் ஹூர்ர்ரேஹ்என கோரஸாக கத்துவதும் கேட்டது.
ராம்மூர்த்தி யூ கேன் கோ இன்என ஒருவர் வந்து ராமை எம்.டி. அறைக்குள்ளே அனுப்பி வைத்தார். அவனும் உள்ளே சென்றவுடன் என் பின் மணியடிக்கும் ஓசை கேட்டது. மணியடிக்க மணியடிக்க எஸ் எஸ் எஸ்என்ற கோரஸ் வாய்ஸ் மீண்டும் ஒலித்தது. அதனைத் தொடர்ந்து ஹலோ சார் ஹலோ மேடம், ஹலோ சார் ஹலோ மேடம்என பல ஆண்களும் பெண்களும் அவசர அவசரமாக எதையோ ஒப்பித்தனர். பின் ராணுவ வீரர்கள் அணிவகுத்துச் செல்வதைப் போல் தடார் தடார் என பூட்ஸ்கள் தரையை அடிக்கும் சத்தம் கேட்டது. ராமும் இண்டர்வ்யூ அறையைவிட்டு வெளியே வந்தான்.
மிக்க ஆர்வத்துடன் என்னடா சொன்னாங்கஎன்றேன்.
இது பெரிய மல்ட்டி நேஷனல் கம்ப்பனியாம். இவுங்களுக்கு இந்தியாவுல மட்டும் 300 ப்ராஞ்சஸ் இருக்காம். இப்பதான் மதுரைல கம்பெனி தொடங்கி இருக்காங்களாம். அதானால ஆள் செலக்ட் பண்ணிட்டு இருக்காங்களாம்.’
அப்பறம்
என்ன செலக்ட் பண்ணிட்டாங்க. 25,000 சாலரியுடன் 6 மந்த்ஸ் ட்ரைனிங். அப்பறம் அவுங்க கம்பெனியில பெர்மனெண்ட்டா எம்.டி போஸ்ட். இன்னைக்கில இருந்தே ட்ரைனிங் ஸ்டார்ட் ஆகுது. என் ட்ரைனி வந்தவுடனே கூப்பிடறோம் வெய்ட் பண்ணுங்கனு சொன்னாங்க
நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே எங்களுக்கு முன்பு அங்கு வந்து அமர்ந்திருந்த இருவரும் தாங்களும் ப்ளேஸ் ஆகிவிட்டதாகக் கூறி ராமுடன் கை குலுக்கிக்கொண்டனர்.
எஸ், எஸ், மணியோசை, ஹூர்ர்ரேஹ், ஹலோ சார் ஹலோ மேடம், பூட்ஸ் சத்தம் இப்பொழுது ராம் இருபதாயிரம் மாத சம்பளத்தில் ப்ளேஸ் ஆனது எல்லாம் சேர்ந்து என் தலையை ஒரு சுற்று சுற்றியது.
நிஜமாத்தான் சொல்றியாடா? இந்தக் கம்பெனிய எங்கடா புடிச்ச
நேத்து தினதந்தி வரி விளம்பரத்துல Wanted Ambitious Boys and Girls. Experience, Qualification not Required என இந்தக் கம்பெனியியோட விளம்பரம் வந்திருந்ச்சு
டிகிரி கூட ஒழுங்கா முடிக்காதவனுங்களுக்கு இப்படி எல்லாமா வேலை தாராங்கஎன்று மனதிற்குள் யோசித்துக்கொண்டிருக்கும் பொழுதே ராம் மீண்டும் அழைக்கப்பட்டான்.
சார் நீங்க யாரு?’என்று என்னை நோக்கி ஒரு குரல் கேட்டது.
நல்ல குட்டையான, கட்டையான, கருப்பான கோட்சூட் அணிந்த ஒரு உருவம் தன் கூலிங் க்ளாஸை அட்ஜஸ்ட் செய்தபடி என்னை வெறித்து நின்று கொண்டிருந்தது.
நான் ராம் கூட வந்தேன்
ஓ அப்டியா. இப்ப ராம் ட்ரைனிங் எடுக்கப் போறாங்க. ஈவ்னிங் சிக்ஸ் ஓ க்ளாக் வந்தீங்கனா பிக் அப் பண்ணிக்கலாம்.’
ரைட். ராம் அப்ப இத முடிச்சிட்டு காலேஜ் வந்திடுஎன கூறி அங்கிருந்து வெளியேறி கிட்டத்தட்ட பித்துப் பிடித்தவனைப்போல் அங்கிருந்து நகர்ந்து கல்லூரி வந்து சேர்ந்தேன்.
·          
இன்னும் கொஞ்ச காலத்தில் எங்கள் கல்லூரி மதுரையின் லால் பாக் அல்லது கப்பன் பாக் ஆவது மட்டும் உறுதி. கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்டிருந்த ஸ்டோன் பெஞ்ச்சில் படுத்து சற்று நேரம் ஓய்வெடுக்கலாம் என கண்மூடினேன். கணவில் எஸ், எஸ், மணியோசை, ஹூர்ர்ரேஹ், ஹலோ சார் ஹலோ மேடம், பூட்ஸ் சத்தம், ராம் எல்லாம் சேர்ந்து என் தலையை மீண்டும் ஒரு சுற்று சுற்றியது. திடீரென்று ராமின் முகம் தெரிந்தது. எழுந்திரிக்கச் சொன்னது. கண்ணை இறுக்க மூடினாலும் திரும்பத் திரும்ப அந்த குரல் என்னை எழுப்பியது. இறுதியில் எந்திரிடாஎன்ற குரலுடன் கூடிய சுளீரென்று கன்னத்தில் விழுந்த அறை என்னை எழுந்து உட்காரவைத்தது.
ராம் தான். ராமே தான். மணி இரண்டு. ஆறு மணிக்கு தானே இவன் வர வேண்டும் இப்போதே வந்துவிட்டான் என்ற எண்ணம் மேலோங்குவதற்கு முன் கேட்டுவிட்டேன். ‘என்னடா இப்பவே வந்துட்ட, ட்ரைனிங் முடிஞ்சதா?’
முடியல. பாதிலயே ஓடி வந்துட்டேன்
ஏண்டா?’
அது ஒரு பெரிய கதை
கதையா?’ நான் தயாராகி விட்டேன். ‘என்னடா ஆச்சு
எங்க ட்ரைனி வந்துட்டாங்கனதும். நீ கிளம்பினயா?’
ஆமா
அதுக்கப்புறம் ட்ரைனிங் ஆரம்பிச்சது. நம்ம கூட ஒக்காந்திருந்த ரெண்டு பேரோடா நானும் எம்.டி ரூம்ல இருந்து இன்னொரு ரூம்கு போனோம். அங்க அந்த ஆல்பத்தில இருந்தமாதிரி கருப்பு கோட் சூட்டோடு நிறைய பேர் இருந்தாங்க. அவுங்களோடு நாங்ளும் நிக்கவைக்கப்பட்டோம். எங்க ட்ரைனி எங்க முன்னாடி நின்னாரு. கையில ஒர் மணி வேற.’
மேல சொல்லு
அதோட அந்த மணிய அடிச்சபடி ஏதேதோ புரியாத பாஷையில கத்தினாரு. எல்லாரும் எஸ் எஸ், ஹூர்ர்ரேனு கத்திக்கிட்டே தரையை பூட்ஸ் காலால ஒதச்சாங்க. அப்பறம் என்னன்னமோ கூத்து நடந்துச்சு. இதெல்லாம் எங்க ப்ரொஃபெஷனால ஏற்படும் ப்ரஷரை குறைக்கவாம்
ம். அப்பறம்’. என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை.
அப்பறம் இம்பல்ஸ்னு ஐடி கார்ட் தொங்கவிட்டுகிட்டு கருப்பு சூட்காரங்க நாலு பேர் கையில பெரிய சூட்கேசுடன் எங்க கூட வந்தாங்க. நாங்க அப்டியே எறங்கி ரோட்டுக்கு வந்தோம். அவுங்க பண்றத கவனமா கவனிக்கச் சொன்னாங்க. ஒரு வீட்ட தட்டுனாங்க.’
ம்
மை டமில் நய் ஜான்த்தாஎனக் கூறிக்கொண்டு அந்த வீட்டிலிருந்த பெண் கதவை அடைத்துக் கொண்டார். அப்புறம் இன்னொரு வீட்டுக்கு போனோம் அவுங்க நாங்க சொல்றத பொறுமையா கேட்டுட்டு வீட்ல ஆள் இல்லனு சொல்லி எங்களை விரட்டி விட்டுட்டாங்க
ஆமா அப்படி என்ன தான் சொன்னீங்க
யூ ஆர் க்ரேட். அப்பறம் ஸ்டடீஸ் எல்லாம் எப்படி போய்ட்டிருக்கு. நான் அடுத்த மாசம் எம்.பி.ஏ முடிக்கிறேன். ஆக்ஸ்ஃபோர்ட்ல ப்ளேஸ்மெண்ட். அதனால் இப்ப ஆக்ஸ்ஃபோர்ட் எனக்கு ஒரு ப்ராஜக்ட் அசைன் பண்ணியிருக்காங்க. அந்த ப்ராஜக்ட் படி நான் 18,000 ரூபாய் மதிப்புள்ள புக்ஸ்அ நல்லா படிக்கிற ஸ்டூடென்ஸ்க்கு ஃப்ரீயா கொடுக்கனும். இன்னைக்கு உங்க வீட்டுக்கு யதார்த்தமா வந்தேன். உங்களைப் பத்தி பக்கத்தில சொன்னாங்க. யூ ஆர் க்ரேட். நல்லா படிப்பீங்கனு சொன்னாங்க. உங்களுக்கு எங்க ஆக்ஸ்ஃபோர்ட் யுனிவர்சிடி ப்ரஸ்ல இருந்து 18,000 மதிப்புள்ள புக்ஸ்அ ஃப்ரீயா தரோம் ஓகே. தென் நீங்க எங்க ஆக்ஸ்ஃபோர்ட் க்ளப்ல சேரலாமே?. ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும். ஒன்லி 1000 ருபீஸ் ஃபார் எண்ட்ரீ. 18,000 வொர்த்துள்ள புக்ஸ் உங்களுக்கு வருசா வருசம் ஃப்ரீயா தருவோம். ஆக்சுவலி இப்ப நீங்க இந்த க்ளப்ல சேர்ந்தா தான் உங்களுக்கு இந்த புக்ஸ்அ ஃப்ரீயா தர முடியும்
·          

One thought on “யூ ஆர் க்ரேட் (சிறுகதை)

  1. Some happenings in our life become valuable lessons to lead the remaining span of life and also guidelines to others if we share aptly.
    Thanks Baba Pakurdheen for the short story in jovial manner with value added gist.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *