ஒளி 222 கிராம்: பகுதி 15 இறுதி

ஒளி 222 கிராம்: பகுதி 15 இறுதி

  ’ஹவ் கம் யூ ட்ரீட் ட்ரீம்ஸ் அண்ட் டெஸ்ட்டினி?’ கனவுகளையும் விதியையும் நீங்க எப்படி மதிக்கிறீங்க   ‘ஒன்ஸ் ஆர் பீப்பிள் ஹாட் ட்ரீம் ஆஃப் ஹோம்லேண்ட். நவ் வீ ஹோல்ட் இட். திஸ் இஸ் ஹவ் வீ ட்ரீட் டெஸ்ட்டினீ. டெஸ்ட்டினீ இஸ் ஜஸ்ட் அன் அவுட்கம் ஆஃப் ஆர் ட்ரீம்ஸ்’ எங்களுக்குச் சொந்தமா தாய்நாடு வேணும்றது ஒரு காலத்தில எங்களுக்குக் கனவா இருந்தது. இப்ப நிஜம். இப்படித்தான் நாங்க கனவையும் விதியையும் மதிக்கிறோம். விதின்றது கனவோட வெளிப்பாடு.’   ’ஆனா உங்க கனவு பலபேரோட கனவ குழி தோண்டி பொதச்சிருச்சே’   ‘பொதைக்கவல்லாம் இல்ல. இட்ஸ் மேட்டர் ஆஃப் டைம். காலம் பதில் சொல்லும்’   ‘இது மழுப்பல்….

Read More Read More

ஒளி 222 கிராம்: பகுதி 14

ஒளி 222 கிராம்: பகுதி 14

  ‘ஹஸன் என்ன இது? ஆளே மாறிட்டிங்க? நாமக்கல்ல ஸ்கூல்ல டையக் கழட்டி கயறா மாத்தி செவர் ஏறிக் குதுச்சு வெளிய போயி வாத்துக்கறிய தின்ன கிழிஞ்ச பேண்ட்டோட போன ஹஸனா இது?’   ‘நீங்க வேற ரஞ்சித். உங்களுக்கு வேறெதுவும் நினவிருக்காதா?’   ’ஆமா காம்ரேட். இப்ப எதுக்கு மதுரைக்கு வந்தீங்க?’   ‘உங்கள பாக்குறதுக்குத் தான்னு வச்சுக்கங்களேன்’   ‘இல்ல நீங்க சொல்லித் தான் ஆகனும். துபாய்ல இருந்து திடீர்னு நான் வரேன்னு சொன்னிங்க. நானும் ஏர்போர்ட் வந்துட்டேன். ஏன் எதுக்குனு ஒரு வார்த்த கூட சொல்ல’   ’ரஞ்சித், ப்ளீஸ் எங்கிட்ட அதப்பத்தி கேக்காதீங்க. தலவலினு வச்சுக்கங்களேன். மனசே சரியில்ல’   ‘என்ன உங்களுக்குமா? ரைட் நான் கேக்க…

Read More Read More

ஒளி 222 கிராம்: பகுதி 13

ஒளி 222 கிராம்: பகுதி 13

  ஸபாஹ் அல் ஃகைர்   ஸபாஹ் அந்நூர்   இன்றைய காலை நல்ல காலையாக அமையட்டும் என ‘குட் மார்னிங்’  சொன்னால் உங்கள் காலை ஒளி பொருந்தியதாக அமையட்டும் என மறுமொழி அளிக்கிறார்கள் இந்த ஊர் மக்கள். ஒளியைத் தேடித் தேடித் துவண்ட நெஞ்சங்களுக்குத் தான் ஒளியின் அருமை தெரியும். ஒரு நாள் இங்கு வந்து பாருங்கள் இருளின் கருமை உங்கள் கண்களைக் குருடாக்கும். இந்தக் கட்டுரையில் நான் உங்களுக்கு காஸாவின் அழுகைகளைக் காட்டப் போவதில்லை. இணையத்தில் ஆயிரம் பக்கங்கள் இருக்கின்றன. அதற்குக் கொஞ்சம் நேரம் ஒதுக்கினால் காஸாவின் அழுகுரல் உங்கள் மனதை உலுக்கிவிடும். நான் இங்கே நூரைப் பற்றி பேச வருகிறேன். ஒளியைப் பற்றி.   உலகின் மிகக் கடினமான…

Read More Read More

ஒளி 222 கிராம்: பகுதி 12

ஒளி 222 கிராம்: பகுதி 12

  ’கீஃபக் ஹஸன்’   ‘பார்டன். ஐ டோண்ட் ஸ்பீக் அரபிக்’   ‘இஸிட். யூ வேர் ப்லேப்பரிங் உம்மா’   ‘உம்மா. இல்ல அம்மா. மீன்ஸ் மாம் இன் மை மதர் டங். எனக்கே தெரியல. ஐ வாஸ் அனவேர். மயக்கதில உளறீருப்பேன். டாக்டர்.’   ‘இஸிட். வீ டூ கால் ஆர் மாம் உம்மா. அரபில அம்மாவ உம்மானு கூப்பிடுவோம். அதான் உங்களுக்கு அரபி தெரியுமோனு நினச்சுட்டேன். ஐம் டெரிப்ளி சாரி. வீ கான் டாக் இன் இங்லிஷ்.’   ’ஸ்யூர். எவ்ளோ நேரமா நான் மயக்கமா இருக்கேன்.’   ‘அஞ்சு மணிநேரம். ஃபைவ் ஹார்ஸ் விதவுட் கான்ஸைன்ஸ்.’   ‘அஞ்சு மணிநேரமா? என்ன சொல்றீங்க? அதெப்படி?’   ‘யா….

Read More Read More

ஒளி 222 கிராம்: பகுதி 11

ஒளி 222 கிராம்: பகுதி 11

  ’தலா அல் பத்ரு ஆலைனா. மின்த நிய்யாத்தில் வாதா. வஜபா ஷுக்ரு ஆலைனா. மா தாஆ லில்லாஹி தாஆ’   அதிகாலை நான்கு மணி. லண்டனிலிருந்து ஐந்து மணிநேரத்தில் அந்த இடைநில்லா விமானம் வந்திருந்தது. கைரோ விமான நிலையத்தில் இறங்கி தயாராக நின்ற காரில் ஏறி அமர்ந்தனர்.  நுழைந்ததும் வழக்கம் போல் ஜோஆன் அந்த ட்ரைவருக்கு ஸலாம் சொன்னார். சிரித்த முகத்துடன் உரத்த குரலில் அவரும் பதில் கூறினார். நிசப்தமான அந்த அதிகாலை நேரத்தில் அவர் குரல் கனீரென ஒலித்தது.   ஜோஆனின் ஹிஜாபையும் ஹஸனையும் பார்த்த ஓட்டுனர் ’அஹ்லன் வ மர்ஹபா ஃபீகும் பி மஸ்ர் உம் எல் ஆலம்’அரபியில் கூறினார்.   ’ஸுக்ரன் லக். ஹய்யா பெனா இல…

Read More Read More

ஒளி 222 கிராம்: பகுதி 10

ஒளி 222 கிராம்: பகுதி 10

திடலில் ஒதுங்கிய மூன்று வருட வாழ்க்கையில் செல்வத்தை இழந்தான், சிறிய தந்தையை இழந்தான், அனைத்திற்கும் மணிமுடியாக இதோ அவளையும் இழந்துவிட்டான். இழக்க இனி ஏது? உயிர் தவிர. இவற்றை எல்லாம் விடவா அந்த உயிர் பெரிது? பித்துப் பிடிப்பது என்பது என்ன? எப்படி இருக்கும்? எல்லோருக்கும் வாழ்க்கையில் அந்த சமயம் வரும். இழக்க இனி எதுவுமில்லை உயிர்தவிர என்ற நிலையின் ஊடே பூக்கும் அந்தப் பித்தம். உலகத்தின் எந்த ஈர்ப்புகளுக்கும் அசைந்து கொடுக்காத அந்த பித்தம். வெற்றிகளின் களிப்புகளில் இருந்து விடுதலை அளிக்கும் பித்தம். அப்பித்தத்திற்கு இன்னொரு பலனும் உண்டு. அதைக் கடந்தவர்களால் மட்டுமே அதனை உணர முடியும்.   பலவகையில் சோகம் என்றாலும் ஒரு வகையில் அவனுக்கே தெரியாமல் அந்த நிலை…

Read More Read More

ஒளி 222 கிராம்: பகுதி 9

ஒளி 222 கிராம்: பகுதி 9

‘என்னங்க இது  ஷார்ட்ஸெல்லாம் போட்டு எங்கயோ கெளம்பிட்டிங்க’   ‘ஆமா. நம்ம ஃபார்முக்கு’   ‘வர வர நீங்க சரியில்ல ஹஸன். இப்பலாம் குவாட்டர்ஸ் பக்கமே வரதே கிடையாது. எப்பப்பாரு கம்பெனியே கதியேனு கெடக்கிங்க’   ‘ஆமா பாலா. இது பத்தி நானும் மேனேஜ்மெண்ட்கிட்ட பேசனும்னு நினச்சேன். இங்கயே நமக்கு தேவைக்கு அதிகமான ஃபெஸிலிடீஸ் இருக்கும் போது ஏன் நமக்கு வெளிய வேற குவாட்டஸ் குடுத்திருக்காங்க.தேவையில்லாம எதுக்கு வெட்டிச் செலவு’   ‘பாஸ் உங்களுக்கு குடும்பமும் கிடையாது, கேர்ள்ஃபிரண்ட்ஸுன்னும் யாரும் கிடையாது. அதுனால சாமியார் மாதிரி இங்க காட்டுக்குள்ளயே இருப்பீங்க. நாங்கலாம் அப்டி இல்ல ஊருக்குள்ள தான் ‘பல’ வேலைகள் இருக்கும்.’   ‘தெரிது பாலா’   ‘எதுக்கு ஃபார்ம் பக்கமெல்லாம் போறீங்க….

Read More Read More

ஒளி 222 கிராம்: பகுதி 8

ஒளி 222 கிராம்: பகுதி 8

’இக்ரா’   ‘மா அனா ப்கிரா’   ’இக்ரா’   ‘மா அனா ப்கிரா’   ‘இக்ரக் பிஸ்மி ரப்பிக்கல்லதீ கலக்’   அந்தக் மலைக் குகையின் விளிம்பில் வியர்த்து விறுவிறுத்து எழுந்து நின்றான் அவன். ஒரு நிமிடம் குலையே நடுங்கிவிட்டது. வானத்திற்கும் பூமிக்குமாக ஒரு ராட்ஷத உருவம் எதிரே நின்று கொண்டிருந்தது. ஒளியால் முழுவதும் நிரம்பிய அந்த உருவம். சில நாட்களாக கனவில் தோன்றிக் கலவரப்படுத்திய அந்த உருவம் இன்று நேரில். அதுவும் சில அடி தொலைவில். அவனைப் பார்த்து கூறியது.   ’வாசி’   ’எனக்கு வாசிக்கத் தெரியாது’   ’வாசி’   ‘நான் வாசிக்கத் தெரியாதவன்’   ‘வாசி’   வாசிக்கத் தெரியா ஒருவனிடம் வாசி என்றால் என்ன…

Read More Read More

ஒளி 222 கிராம்: பகுதி 7

ஒளி 222 கிராம்: பகுதி 7

  ’என்ன இவ்வளோ லேட்டா கெளம்பியிருக்கீங்க. சீக்கரம் சீக்கரம்’   ஹஸன் வீட்டிற்கு ஒரே பிள்ளை. எப்போதும் எதிலும் வேகம். அதுவும் எங்காவது ஊர் சுற்ற கிளம்ப வேண்டும் என்றால் அனைவருக்கும் முன் கிளம்பிவிடுவான். தன் ஏழு வயது வரை எப்போதும் சிரிப்புடனே வலம் வருவான். அப்போதெல்லாம் அவனுக்கு வாழ்கையைப் பற்றி தெரியாது. வலியைப் பற்றி தெரியாது. ஒளியைப் பற்றி தெரியாது. எதைப்பற்றியும் தெரியாது. வாழ்க்கை என்பது வீடும் பள்ளியும். துன்பம் என்பது ஹோம்வொர்க். இன்பம் என்பது சுற்றுலா. பணம் என்பது மிட்டாய் வாங்க பயன்படும் ஒரு பொருள். அது எப்படி வருகிறது என்றெல்லாம் தெரியவில்லை. அநேகமாக அந்த மளிகைக் கடையில் இருந்து தான் வர வேண்டும். தினசரி வாழ்வதற்கு பணம் தேவையில்லை….

Read More Read More

ஒளி 222 கிராம்: பகுதி 6

ஒளி 222 கிராம்: பகுதி 6

’திஸ் இஸ் ஜோஆன் ஜோன்ஸ். டிசைனிங்ல இருக்காங்க. ரொம்ப பிரில்லியண்ட் லேடி. ’ பாலா அறிமுகப்படுத்தினான்.   ஜோஆன். முப்பத்தைந்து வயது இருக்கும். பார்த்தாலே தெரிந்துவிடும் தூய ஆங்கில இனம் என. எதிரே ஹிஜாப்புடன் நின்றார்.   ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ ஜோஆன் ஹஸனை நோக்கிக் கூறினார்.   ‘வ அலைக்கும் ஸலாம்’ திணறித் திணறி பதில் கூறினான் ஹஸன். இதுவரை தன் வாழ்நாளில் சில தவிர்க்க இயலாத சமயங்களைத் தவிர இந்தத் தொடரை அவன் பயன்படுத்தியதில்லை. இன்று பயன்படுத்தியதற்கு காரணம், குழப்பம். வெள்ளைக்காரப் பெண்ணொருத்தி இஸ்லாமிய தோரனையில் உடையணிந்து சலாம் வேறு சொல்கிறாள். பாலாவை புதிராகப் பார்த்தான்.   மூவரும் ஹஸனது அறைக்கு அருகே இருந்த பார்க்கில் அமர்ந்திருந்தனர். ஹஸனுக்கு வேலை துவங்கியிருந்தது….

Read More Read More